குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, February 22, 2023

203 - அரசாண்மை என்றால் என்ன (அல்லது) ஏன் லீ க்வான் யூ ஒரு மிகச்சிறந்த தலைவர் ?


அரசாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி. 

சூழல் இதுதான் : 1990'ல் லீ பதவியிலிருந்து விலகி, இரண்டாம் தலைமுறைத் தலைவராக கோ சிங்கையின் பிரதமராகிறார்.

லீ எவ்வாறு செயல்படுபவர், எவ்வாறு செயல்பட்டார் என்பதை உலகம் 30 ஆண்டுகளாக அப்போது கண்டிருந்தது. ஒப்பு நோக்க கோ, எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும், லீ பெயருக்குத்தான் பதவி விலகுகிறார், உண்மையில் ஆளப்போவது அவர்தான் என்ற ஊகங்களும் நிலவிய காலகட்டம். 

அந்த நேரத்தில் சிங்கை தேசியப் பல்கலையில் மாணவர்களிடைய நடைபெற்றது இந்த உரை. 

இந்த உரையில் மூன்று பொருண்மைகளை நான் மிக இரசித்தேன். 

Wednesday, June 8, 2022

198 - ஆதீனங்களின் கதை

மெட்ராசுபேப்பர் (madraspaper.com)  (இணைய) வார இதழுக்காக எழுதிய கட்டுரை. 
முதல் இதழ் வெளிவந்த சூன் 1' 2022 இதழில் ஆதீனங்களின் கதை வெளிவந்தது. 

முக்கியக் குறிப்பு :  இதில் உள்ளது கட்டுரையின் முழுவடிவம். இதழில் வெளிவந்த போது, இதழ் தேவைகளுக்கேற்ப சிறிது சுருக்கப்பட்ட வடிவம் வெளிவந்தது. அது இதழின், இதழாசிரியரின் உரிமையும் கூட. 
கட்டுரை அதன் முழுவடிவில் இங்கு சேமிக்கப்படுகிறது, படிக்கக் கிடைக்கிறது.


தமிழர் சமயம்
இந்தியாவெங்கும் காலங்காலமாக மனித வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கான தத்துவ வழிகாட்டல்கள் நெடுங்காலந்தொட்டே இருக்கின்றன. இவை பொதுவாக ஒவ்வொரு சமய மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்த வழிகாட்டல்கள், வழிகாட்டிகளால் முன்னெடுக்கப் படுகின்றன. கிருத்துவம், இசுலாம் போன்ற பெரு மார்க்கங்களுக்கான வழிகாட்டல்கள் எவ்விதம் உள்ளன என்பது பெரும்பாலும் பரவலாக அறியப்பட்டது; இந்த பெருமதங்கள் அல்லாத மற்றவற்றைப் பொதுவாக இந்து என்று குறிப்பிடும் வழக்கம் இற்றை நாளில் நிலவுகிறது. கவனித்துப் பார்த்தோமானால் இந்த இந்து என்ற பதத்தை இந்து 'சமயம்' என்று தமிழில் குறிப்பிட விழைவார்கள்; இந்து 'மதம்' என்று குறிப்பிடுவது குறைவாக இருக்கும். ஆனால் பண்டைய இந்தியாவில் சமயங்கள் மட்டுமே நிலவின; மதங்கள் இல்லை என்பதையும், இன்று இந்து 'மதமாக' நிலவுவதை, இந்து 'சமயமாக' அறிமுகப் படுத்துவதன் உட்பொருள்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இது நிற்க.

ஆனால் இந்த இந்து என்ற சொல்லாக்கம் ஆங்கிலேயர் வழி வந்தது. அதற்கு முன்னால் இந்தியாவில் பற்பல சமயங்கள் நிலவின. தென்னாட்டைப் பொறுத்தவரை சைவம் என்ற சிவம், வைணவம் என்ற விண்ணவம், காணாதிபத்யம் என்ற கணபதியம், கௌமாரம் என்ற குமரம், சமணம் என்ற செயினம் (இதற்கு ஆசீவகம் என்ற முன்னோடியும் உண்டு) மற்றும் பௌத்தம் என்ற புத்தம் என்ற சமயங்களே நிலவின. இந்த சமயங்களில் சிவமும், குமாரமும் தமிழ்ச் சமயங்களாக பொ.உ.மு மூன்றாம் நூற்றாண்டு வாக்கிலேயே நிலை பெற்று விட்டன என்பதற்கு தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகை இவற்றிலேயே சான்றுகள் உள்ளன. மயில் மீது அமர்ந்த இளையனும் அழகனுமாக முருகன் குறிப்பிடப் படும் அதே நேரத்தில், சிவன் மிக உயர்ந்த நிலையில் வைத்தும் வழங்கப்படும் தெய்வமாகிறான். இந்த இரண்டு ஆரம்பகால இறை வடிவங்கள் பின்னர் நிலங்கள், தினைகள் மூலம் பிரிக்கப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலங்களுக்கு முறையே வேலன், மாலன், இந்திரன், வருணன், கொற்றவை என்று நிலம் சார்ந்த பகுதிகளாகப் பாகுபாடு அடைந்தாலும் சிவன் என்ற தத்துவம் அனைத்திற்கும் உள்ளாய், அனைத்தினும் புறம்பாய் என்று சித்தாந்தம் குறிப்பிடுவது போல எல்லா இடங்களிலும் நிலை பெற்று வளர்ந்து விளங்கியது. இந்த நிலை பொ.உ. மு மூன்றிலிருந்து பொ.உ.பி இரண்டு வரை நிலவியதற்கான இலக்கியச் சான்றுகள் தமிழில் உள்ளன.  

Wednesday, March 10, 2021

197- ஜெயமோகன் - புனைவுக்களியாட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் திரும்பவும் பட்டையைக் கிளப்பும் வேகத்தில் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார். அவரது பக்கத்தில் நாளைக்கு ஒன்று என்று அணி வகுத்திருக்கின்றன சிறுகதைகள்.

எனக்கு அவர் அடிப்படையில் ஒரு இந்துத்தவ வாதியோ என்ற ஐயம் பல நாட்களாக உண்டு. வலதுசாரித்துவமான சிந்தனைகளை மேலோட்டமாகப் பல நேரங்களில் கண்டித்து எழுதியிருந்தாலும், இப்போதைய பாசக அரசையும் சில நேரங்களில் கடுமையாக விமரிசித்திருந்தாலும், அடிப்படையில் அவர் இவை இரண்டுக்கும் ஆதரவான மனிதர் என்பது எனது ஒரு ஐயம். தமிழ் மொழி, தமிழர் பண்பாடு இவற்றில் ஒரு நையாண்டி அல்லது நக்கலை அவ்வப்போதும் அல்லது எப்போதும் வலதுசாரியர்கள் வெளிப்படுத்துவது வழமை; அவரும் அவ்வப்போது இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பது காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஒரு படைப்பாளியாக,

Sunday, January 24, 2021

196 - சிங்கையில் தமிழிசைப் பள்ளி தொடக்கம் !

கடந்த 23 சனவரி 2021 அன்று சிங்கையி்ன் தமிழ் வரலாற்றுப் மரபுடைமைக் கழகத்தின் சார்பில் தமிழிசைப் பள்ளி உருவாக்கப்பட்டு தொடங்கப்பெற்றது. இது தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையத்தோடு அலுவல் பூர்வமாக இணைவு பெற்றது. 

  இந்த தமிழிசைப்பள்ளியில் தமிழில் வாய்ப்பாட்டு இசை வகுப்பு, நாட்டிய வகுப்பு, விணை வகுப்பு, குழலிசை வகுப்பு(புல்லாங்குழல்), வயலின் என்ற பிடில் கருவி போன்ற வாத்திய இசைக் கருவிகளைக்கான பயிற்சி போன்றவற்றைத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு  பயிற்றுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 


இதன் தொடக்கவிழாவும், இணையப் பக்க வெளியீடும்  பேராசிரியர் சுப.திண்ணப்பன் தலைமையில், அவரது தலைமையுரையோடு இனிதே நடந்தன. விழாவில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலையின் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் கோவிந்தசாமி, திருமதி.மீனாட்சி சபாபதி, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் இராச.கலைவாணி, புதுமைத்தேனி மா.அன்பழகன், திரு.தனபால்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

Monday, May 23, 2016

193-வெள்ளையானை - நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நெடுங்கதை அனுபவம்



வெள்ளையானை- நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நெடுங்கதை அனுபவம் !

ஜெமோ எழுதிய வெள்ளையானை என்னும் நெடுங்கதைப் புத்தகத்தை இப்போது(தான்) படித்தேன்.

எய்டன் என்ற அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்துப் படையில் சேர்ந்து காலனிய நாடான இந்தியாவில் மதராசப் பட்டனத்தில் கேப்டன் பொறுப்பில் இருப்பவனுடைய பார்வையில் விரிகிறது கதை. இன்றைக்கும் அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான ஆண்டான் அடிமைத் தனமான மனோபாவம் உச்சத்திலிருந்த 1870 கள்தான் கதைக்களத்தின் காலம்.

மதராசப் பட்டினத்தில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான ஐஸ் ஹவுசில் நிகழும் தொழிலாளர்களின் மீதான கொடுமைகளும், அவர்களின் பனிச் சூழல் நரகநிலையும், தினக்கூலிகளாக எந்தவிதப் பெயரடையாளங்களுமற்று தினப்படி வேலைக்கு வரும் எண்ணிக்கையால் மட்டுமே அமைந்த அவர்கள் வாழ்வியல் கொடூரங்களும், அவர்களை கண்காணிக்கும் இடைநிலை சமூகத்தைச் சேர்ந்த கண்காணிகளிடத்து பஞ்சமர்களான தொழிலாளர்கள் அடையும் விலங்குகளை விடக் கேவலமான வாழ்வு நிலையும் அமைந்த சூழலை, அத்தொழிலாளர்களில் இருவர் தங்கள் நிலை குறித்துப் புகார் செய்ய முயற்சித்ததனால் கடைசியாக் கொன்று, கடலில் வீசப் படுகிற கணவன் மனைவியான இரு தொழிலாளிகள், கேப்டன் எய்டன் கண்ணில் பட்டு அறிமுகமாகும் காட்சியுடன் தொடங்குகிறது இந்த நெடுங்கதை!

ஆட்சி நிகழ்த்தியிருக்கும் அவலம்...1877 காலகட்டம்

Monday, May 16, 2016

192. தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2016 - 1



சட்டமன்றத் தேர்தல் 2016 - வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கும் இந்த தேர்தல் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறும் தேர்தல். எவ்வகையில்?
Image result for election 2016 tamilnadu-images


-திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் தோன்றி,வளர்ந்து வேரூன்றியதற்கான சமூக பொருளாதாரக் காரணங்கள் வலிமையானவையே.ஆனால் திராவிடக் கட்சிகள் முன்வைத்த சமூக நீதி என்ற இலக்கிலிருந்து அவை விலகத் துவங்கிய 80 களில் இருந்து துவங்கிய அக்கட்சிகளின் தார்மீக வீழ்ச்சி அதன் உச்சத்தை அடைந்த காலகட்டம் என்று 2006-2011, 2011-2016 ஐச் சொல்லலாம். திராவிடக் கட்சிகளின் இரு பெரிய வடிவங்களான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இந்தக் காலகட்டங்களில் நடத்திய ஆட்சி அழகைக் கண்டு மொத்தத் தமிழகமும் வெதும்பும் நிலைக்கு வந்துவிட்ட நிலையில் நடக்கும் தேர்தல் இந்தத் தேர்தல்.
Image result for sagayam ias

-இந்த வெதும்பல் நேர்மையாகச் செயல்படும் அதிகாரி என்றறியப் பட்ட ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரான திரு.சகாயம் அவர்களை மாநிலத் தலைமை ஏற்க வரும்படி பெருவாரியானவர்கள் மன்றாடி அழைத்த சூழல்

Tuesday, May 3, 2016

191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்!

சென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் ஒரு முன்னேற வேண்டிய நாட்டின் முறையா என்பதை நாம் கேள்விப் படுத்த வேண்டும்.

அரசாண்மை முறைகளில் தேவையான மாற்றங்கள் கொண்டு வரும் போது குறைந்த பட்சம் சாதாரண மக்கள் இந்த வழக்காடு வட்டத்தில் தங்களுக்குத் தேவையான நிவாரணத்தைப் பெறும் வழிவகைகள் இருக்க வேண்டியது கட்டாயத் தேவை. பெரும் பொருட் செலவும் செய்து விட்டு வழக்கு முறைகளில் நிலைபெற்றிருக்கும் முறையற்ற செயல்களைச் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையிலிருந்து வெளிவந்தே ஆக வேண்டிய அவசியமும் தேவையும் ஒரு சாமானியனுக்கு இருக்கிறது.



சமீபத்தில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி நீதித்துறையைக் காப்பாற்றும் படி ஒரு உணர்ச்சி கரமான வேண்டுதலைப் பிரதமர் முன்னிலையில் வைத்திருந்தார். பிரதமரும் அதற்கு இணக்கமான ஒரு பதிலையும், அந்த வேண்டுகோளைப் பரிவுடன் பரிசீலிப்பதாகவும் பதிலிறுத்திருக்கிறார். இந்த நிலையில் பொது சனமும்  அவர்கள் நோக்கில் வழக்காடும் அமைப்பிலிலிருந்து judicial establishment எதிர்பார்க்கும் குறைந்த பட்ச வழக்காடும் மற்றும் நிவாரண முறைகளைப் பற்றியும் ஒரு உரத்த சிந்தனையை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.

Wednesday, April 20, 2016

190-வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்.

இன்றைய சூழலில் இந்திய தமிழக வழக்காடு மன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது பொதுவாக எவருக்கும் தெரிந்ததே. ஆனால் அரசியல் கட்சி சார்பற்ற, குண்டர்கள் தொடர்பில்லாத, வட்ட,மாவட்டங்களின் அடிப்பொடிகள் துணையில்லாத ஒரு சாதாரணன் தனக்கு ஏதேனும் அநீதி ஏற்பட்டால், தனக்கு நியாயம் வேண்டும் என்று நினைத்தால் செல்ல வேண்டிய இடமாக இருப்பது நீதி மன்றங்களும், காவல் நிலையங்களும்தான். இவற்றில் காவல் நிலையங்கள் ஒரு சராசரி மனிதனின் சுயமரியாதையைக் குலைத்து, அவனது தன்மானத்தைச் சிதைக்கும் குரூர வதை நிலையங்களாகவே பெரும்பாலும் திகழ்கின்றன. உங்களது கல்வி, திறமை, பண்பாடு, அறம் போன்ற எந்த விழுமியங்களுக்கும் அங்கு வேலையில்லை.





Saturday, July 12, 2014

186.தாய்மொழிக் கல்வி மற்றும் மோடி அரசின் முதல் வரவுசெலவுத் திட்டம்

தமிழ் இந்து பத்திரிகையில் அண்மையில் வந்த இந்தக் கட்டுரை நிறையச் சிந்திக்க வைத்தது.

அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, தன் மகளைப் பத்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படிக்க வைத்தவர். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களும் பெற்ற மகளை எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைத்து தான் படித்த அரசுப் பள்ளியிலேயே சேர்த்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இன்றைய தமிழகத்தில் ஓரளவு படித்தவர்களாக இருப்பவர்கள் மற்றும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்து அறியும் போது அனைவரும் சொல்லி வைத்தாற் போல் ஆங்கில மொழி வழித் தனியார் பள்ளியில்தான் தத்தம் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள்.

எனது குழந்தையை தமிழ் வழிக் கல்வி வழியில்தான் படிக்கவைக்க வேண்டும் என்ற முடிவில் நான் இருக்கிறேன். இன்றைய சூழலில் தமிழ் வழிக் கல்வி எனில் அரசுப் பள்ளிகளைத் தவிர வேறு கதி இருப்பதாகத் தெரியவில்லை.

அவை ஏன் தரமற்றவையாகத் இன்றைய பெரும்பான்மை சமூகத்திற்குத் தோற்றம் தருகின்றன என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன்.

(நான் அரசு உதவி பெற்ற தமிழ் வழிக் கல்வி வழிதான் பணிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன்; கல்லூரியிலும் பின்னர் பட்டயக் கணக்காளருக்குப்(சிஏ) படிக்கையிலும் ஆங்கில வழியில் கற்ற எவரையும் விட எனது கல்விப் பயணம் சிறப்புடனும் பெருமையுடனும்தான் நடந்தேறியது. எனது தொழில் முறைக் கல்வியான பட்டயக் கணக்காளர் தேர்வில் மண்டல அளவில் தகுதி கூட என்னால் பெற முடிந்தது.

Wednesday, June 5, 2013

184. பிள்ளை இல்லாக் கலியும் தீர...1

பிள்ளை இல்லா கலியும் தீர...


பிள்ளை இல்லாக் கலி...
 மங்கையர் திலகம் என்ற படத்தில் தொடங்கும் நீல வண்ணக் கண்ணா வாடா என்ற பாடலில் உள்ள ஒரு வரியின் ஒரு பாகம்தான் இந்தத் தலைப்பு.

திருமணத்திற்குப் பிறகு சில மாதங்கள் கழிந்து விட்டாலே, என்ன,விசேடம் ஒன்றும் இல்லையா, எப்போ பெத்துக்கப் போறீங்க ? என்று கேட்பவர்கள் அனேகம்.

Wednesday, November 21, 2012

179.புழுதி அடங்கிய பொழுதில்...


சூப்பர் சிங்கர் இளையர் பருவம் 3

சூப்பர் சிங்கர் பற்றிய என்னுடைய கடந்த பதிவில் இறுதிக்கு யார் வருவார்கள் என்ற என்னுடைய கருத்தைக் கூறியிருந்தேன்.(நான் அந்தப் பதிவை எழுதிய நேரத்தில் அதிரடி நுழைவுச் சுற்று-வைல்ட் கார்ட் ரவுண்ட்- நடந்து கொண்டிருந்தது.).

இறுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களில் பிரகதி,சுகன்யா இருவரும் தேர்வாவார்கள் என்று அனுமானம் செய்தேன்; அடுத்த மூன்று இடங்களை ரக்ஷிதா, கௌதம், அனு, ஆஜித், யாழினி ஆகிய நான்கு பேர்களுள் மூவர் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றும்  எழுதியிருந்தேன். ஆஜித்'ம், யாழினி'யும் டார்க் ஹார்ஸ் வகையில் வருவார்கள் என்றும் எழுதியிருந்தேன்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான அதிரடி சுற்றிலேயே ஆஜித் மற்றும் யாழினியின் கட்டுக்கடங்காத திறன் எல்லைகளை விரித்துப் பிறந்தது; அதிலும் ஆஜித் இரண்டு பாடல்களிலும் பின்னியெடுத்தான். அதைக் கேட்டவுடனேயே அவன் இறுதிச் சுற்றில் கட்டாயம் இருக்கிறான் என்ற நம்பிக்கை வந்தது.

எதிர்பார்த்த படி முதல் இருவரைத் தவிர கௌதம், யாழினி, ஆஜித் மூவரும் பங்கு பெற்ற இறுதிச் சுற்று அணி ஐவரணியாக மாறியது.


Wednesday, October 17, 2012

178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு!!!




தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற்ற காமம் எளிதாகியிருக்கிறது என்றும், இது நகர்ப் புறத்தில் மட்டுமல்ல கிராமங்களில் கூட எஸ்.எம்.எஸ் எனப்படும் செய்திச் சேவை வழி கூட முறையற்ற காமம் பரவ ஏதுவாகியிருக்கிறது என்ற ஒரு பார்வையை, அதன் நீதி அல்லது அநீதி பற்றிய எந்த நிலைப்பாட்டிலும் பட்டுக் கொள்ளாமலும் எந்தக் கருத்தாகத்தையும் முன்வைக்காமலும் 
எழுதப் பட்டிருக்கிறது.

எழுதியவர் தன்னைப் பத்திரிகைகளில் எழுதிப் பரிச்சயம் உள்ளவராகச் சொல்கிறார்; விவரிக்கத் தேவையன்றி இந்தப் பதிவிலும் 'அந்தப் பயிற்சி' தெரிகிறது.பதிவர் எந்தக் கனவில் இருக்கிறார் என்று தெரியவில்லை. கிராமத்தில் அறிமுகமற்ற பெண்ணுக்கு அறியாதவர் ஒருவர் கைத் தொலைபைசியில் அழைத்து, ராங் கால் என்று சொன்னால் கூட முதல் முறை மன்னிப்பார்கள்; இரண்டாம் முறை ஆள்வைத்து விசாரித்து, கம்புடன் வந்து கதவிடிப்பார்கள் !

Monday, August 20, 2012

* * * * * 172. வேருக்கு நீரூற்றி விதைகளைப் பேணுவோம் !



பெரும்பாலும் வாரத்தில் ஆறு நாட்களிலாவது உடற்பயிற்சிக்கோ அல்லது ஓட்டத்திற்கோ செல்வது எனக்கு வழக்கம். கல்லூரியில் படித்த காலத்திலிருந்து தொடரும் இந்த வழக்கம் இடைப்பட்ட காலத்தில் மூன்று நான்கு ஆண்டுகள் மட்டும் வழமையில் இல்லாதிருந்து, இப்போது இரண்டு ஆண்டுகளாக மீண்டும் தொடர்கிறது. இடைப்பட்ட சில ஆண்டுகள் தடைக்கு,அந்த காலகட்டத்தில் நான் இருக்க நேர்ந்த நாடுகளில்,

Saturday, August 18, 2012

* * * * * 167.குறுந்தொகை'கள்-மன்மோகன், What is big deal ?!

சுதந்திர இந்தியாவில் இந்தமுறை பதவியிலிருக்கும் மைய அரசைப்போல் வேறு எந்த அரசின் மீதும்,மைய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகம் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததில்லை என்றே நினைக்கிறேன்.மூன்று ஆண்டு தணிக்கை அறிக்கைகளில் மொத்தமாக கிட்டத்தட்ட எட்டு லட்சம் கோடி ருபாய் அளவில்,அதாவது 8,00,000,000,000 ரூபாய்-

Friday, August 17, 2012

* * * * * 166.மதத்தினால் விளையும் மனச்சிக்கல்கள் !



நண்பர் கோவி.கண்ணன் தனது காலம் பதிவில் பதஞ்சலி பாம்பின் அற்புதம் என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வுப் பதிவு எழுதியிருந்தார்.

இது போன்ற புகைப்படங்களிலிருந்து 'அற்புதங்களை' உருவாக்குபவர்களுக்கு ஒரு விதமான மனத் தடையும், சுய இரக்கமும் இருக்குமோ என்பது என் சந்தேகம்.சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வை, அல்லது உண்மையிலேயே நடக்காத ஒன்றைத் திரித்து, நடந்ததாச் சொல்லி,

Friday, July 27, 2012

148.மக்களின் பங்களிப்புதான் வெற்றியின் ரகசியம்


தி சண்டே இந்தியன் பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன் வந்த குஜராத் முதல்வர் மோடியின் பேட்டி இது.

எனக்குத் தெரிந்து கடந்த 10 வருடங்களில் இவ்வளவு தெளிவாக,வளர்ச்சி-அரசாண்மை-மக்கள் முன்னேற்றம் பற்றி இந்தியாவில் ஒரு முதல்வர் பேட்டி அளித்து நான் படித்ததாக நினைவில்லை.சொல்வது தவறென்றால் என்னைக் குட்டுங்கள்..

உ.பி.யின் அகிலேஷ் யாதவ் பதவியேற்றவுடன் ஒரு பரவலாக இளம் முதல்வர் என்று செய்திகளில் அடிபட்டார்;ஆனால் அவரது செயல்பாடுகளைப் பார்க்கையில்,(20 லட்சம் தொகுதி நிதியில் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு கார், மின்தடைப் பிரச்னையை சரிசெய்ய மந்திரம் இல்லை...)பொங்கிய பாலில் ஊற்றிய நீராக எழுச்சியும் நம்பிக்கையும் அழுந்தி விட்டன.

மோடியின் மீதான விமர்சனங்கள் இன்னமும் இருக்கின்றன;அவை நிழலாக அவரைத் தொடரக் கூடும்.

மோடியைப் பற்றிப் பேசினாலே பலர் அவர் ஒரு பயங்கரவாதி என்ற அளவில் அவரைப் பற்றிய தூற்றல்களை முன் வைக்கின்றனர்.இந்த நேரத்தில் எனக்கு
சிங்கப்பூரின் உருவாக்கத்திற்குக் காரணமானவர் என்று அறியப்படும் சீனீயர் லீ(லீ க்வான் யூ),அவரது மிக சமீபத்திய பேட்டிகளின் தொகுப்பாக வந்திருக்கும் புத்தகத்தில்(ஹார்ட் ட்ரூத்ஸ் ஃபர் சிங்கப்பூர் டு க்ரோ), ஒரு கேள்விக்கு அளித்த பதில் நினைவுக்கு வருகிறது.

ஒரு தலைவர் அன்பானவராக அறியப்படவேண்டுமா,மரியாதைக்குரியவராக அறியப் படவேண்டுமா, அல்லது பயப்படத்தக்கவராக அறியப்படவேண்டுமா என்பது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி.( அவரே மிகவும் மதிக்கப்பட்ட,அச்சத்துடன் பார்க்கப்பட்ட ஒரு தலைவரே!).

லீ அவர்களின் பதில்: அது ஒவ்வொருவரின் தலைமைத்துவத்தைப் பொறுத்தது;ஆனால் நான் மரியாதைக்குரியவராகப் பார்க்கப்பட வேண்டுமா அல்லது அஞ்சப் படத்தக்கவராக அறியப்படவேண்டுமா என்றால்,அஞ்சப்படத்தக்கவராக அறியப்படுவதே அரசாண்மைக்கு நல்லது;அந்தக் கருத்தை நான் ஒரு பொருட்டாக எண்ண மாட்டேன்.

இந்த கான்டெக்ஸ்டில் இதைச் சொல்லியிருப்பதால் என்னை ஒரு பக்கா ஆர்எஸ்எஸ் வாதி என்று முத்திரை குத்தலாம்;ஆனால் முழுக்க முழுக்க நான் பரந்து பட்ட அரசாண்மை,மக்கள் முன்னேற்றம்,சீரான நிர்வாகம் என்ற அளவில் மட்டுமே பார்க்கிறேன்.

மோடியைப் பற்றியும் இதை வித கருத்தாக்கம் நிலவுகிறது.

ஆனால் சந்தேகமின்றி அவர் ஒரு ஊக்கமாக செயல்படும் தலைவர்; பாஜக பிரதமர் வேட்பாளர் அவரே என்று தயக்கமின்றி ஒரு முகமாக அறிவிக்க வேண்டிய நேரம் இது !

நன்றி-தி சண்டே இந்தியன் பத்திரிகைக்கு


‘‘மக்களின் பங்களிப்புதான் வெற்றியின் ரகசியம்’’


பிரியங்கா ராய் | பிப்ரவரி 3, 2012 15:32
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் வருகிறேன்.  மேலும் அது முன்னேறியுள்ளது. உங்களால் எப்படி சாத்தியமானது? ஏதாவது மந்திரக்கோல் வைத்திருக்கிறீர்களா?

மக்களின் பங்கேற்புடன் அரசு நடப்பதுதான் நல்ல நிர்வாகத்தின் ரகசியமாகும். மாநிலத்து மேம்பாட்டுப் பணியை நாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறோம். வளர்ச்சி என்பது அரசின் திட்டமோ, குறிக்கோளோ மட்டுமல்ல. அது மக்களின் இயக்கமாகும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்பதை பரப்புவதற்காகவே சத்பவனா உண்ணாவிரதம் அனுசரிக்கப்பட்டது. வளர்ச்சியில் ஓர் உயரத்தை எட்டுவதற்கு நாம் விரும்புவோமெனில், நமது ஒற்றுமையைக் குலைத்து பிரிவினைக்குத் தூண்டும் வெறுப்பின் விஷத்தை அகற்றவேண்டும். எங்கள் சமூகத்தில் நிலவும் விஷத்தை அகற்ற முடிந்ததால்தான், தற்போது இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இன்று ஒவ்வொரு குஜராத்தியும் மாநில வளர்ச்சிப் பணி தொடர்பாக பெருமை கொண்டுள்ளார். இன்னும் கூடுதலாக வளர்ச்சிக்குப் பங்களிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதே சூழ்நிலையை முழு தேசத்திலும் கொண்டுவராவிட்டால் நாம் வளரமாட்டோம்.
இத்தனை வேகமான வளர்ச்சிக்கு வேறு காரணங்கள் உண்டா? 
நாட்டின் முழு வேளாண்மை வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், 2.4% மட்டுமே. ஆனால் குஜராத் கடந்த பத்து ஆண்டுகளில்  10 சதவிகிதத் துக்கும் மேல் வேளாண்மையில் வளர்ச்சி அடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட குஜராத் வறட்சிக்கும், தண்ணீர் பிரச்னைகளுக்கும் உரிய இடமாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு முறையாவது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் டேங்கர் நீரை நம்பியிருந்தன. தொழில் வளத்தைப் பெருக்குவதற்காக விவசாயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லை. தீவிரமான தொழில் வளர்ச்சிக் கொள்கையோடு வேளாண்மை வளர்ச்சிக்காகவும் ஆற்றலையும் வளங்களையும் செலவிட்டோம். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினோம். குஜராத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் பங்குபெற்றார்கள். மழைநீர் தடுப்பணைகள் கட்டுவதற்கு மக்களிடம் 60 சதவிகிதத்தை அரசு தருவதாகவும், மிச்சம் 40 சதவிகிதத்தை பங்களிக்கும்படியும் கேட்டோம். தொழில்நுட்பத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்தி பயிற்சி அளித்தோம். இதன்மூலம் 6 லட்சம் தடுப்பணைகள் மற்றும் மழைநீர் குளங்கள் கட்டப்பட்டன. இதனால் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. புதிய குளங்களால் ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இன்று குஜராத்தில் கோதுமை, பருத்தி, வாழை, பப்பாளி, கரும்பு, தக்காளி என பலவிதமான பயிர்களைப் பார்க்கமுடியும். சௌராஷ்டிராவின் மிக மோசமான வறட்சி நிலவிய பகுதிகள்கூட வளம்பெற்றுள்ளன. தற்போது விவசாயிகள் தங்கள் பகுதியில் இருக்கும் தடுப்பணையை கவனித்துக்கொள்வதற்கு பயிற்சி பெற்றுள்ளனர். இதுதான் குஜராத் வளர்ச்சியின் ரகசியமாகும். ஒவ்வொரு திட்டத்தையும் நாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறோம். உதாரணத்துக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் குழந்தைகள் சேரும் விகிதம் 60 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது 100 சதவிகிதமாக வளர்ந்துள்ளது. பள்ளியிலிருந்து இடையில் வெளியேறும் குழந்தைகளின் சதவிகிதம் 30 முதல் 40 % இருந்தது. தற்போது 2 சதவிகிதமாக காணப்படுகிறது. ஏனெனில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முடிவு செய்துவிட்டனர்.
நீங்கள் பல்வேறு வகையான உத்சவங்களை நடத்துகிறீர்கள். இதற்குக் காரணம் என்ன?
வெவ்வேறு திட்டங்களை ஆரம்பிக்கும்போது அவற்றை முக்கியமான நிகழ்ச்சிகளாக மாற்றவே உத்சவங்களை நடத்துகிறேன். இவை வெறுமனே கொண்டாட்டம் மட்டும் கிடையாது. கடும்கோடையான ஜூன் மாதத்தில் நடத்தும் க்ருஷி உத்சவ நிகழ்வில் அரசு அதிகாரிகள் தங்களது குளிர்பதன அலுவலக அறைகளை விட்டு வெளியேறி கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளைச் சந்திப்பார்கள். பருவ காலத்திற்கு முன்பு என்னென்ன செய்யவேண்டும் என்று மக்களுக்கு ஆலோசனைகள் கூறுவார்கள். இந்த க்ருஷி மகோத்சவம் முழு மாதமும் நடைபெறும். இதை உண்மையில் வியர்வைத் திருவிழா என்றே சொல்லவேண்டும். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களையும் பங்கேற்க வைக்கிறோம். நல்ல விதைகள், மண், உரங்கள் பற்றி விவசாயிகளிடமிருந்து அந்த மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே நோக்கம். ஆய்வகங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளை வயல்களுக்கு அழைத்துச் செல்கிறேன். இந்த நடைமுறை மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கிறது.

மண்வள அட்டை திட்டம் பற்றி கூறுங்கள்?
இந்தியாவில் மனிதர்களுக்கு ஆரோக்கிய அட்டை இல்லை. ஆனால் குஜராத்தில் மண்ணின் ஆரோக்கியத்துக்கான அட்டை உள்ளது. தனது மண்ணில் எந்தப் பயிர் சிறப்பாக வளரும் என்று விவசாயிக்கு அறிவுறுத்த இத்திட்டம் பயன்படுகிறது. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நான் 10&ஆம் வகுப்பு மற்றும் 11&ஆம் வகுப்பு மாணவர்களின் உதவியை நாடினேன். அவர்களுக்கு மண் ஆய்வு செய்யும் பயிற்சி அளித்தோம். மாநிலத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களும் கோடை காலத்தில் இந்த மாணவர்கள்  ஆய்வு செய்வதற்காக திறந்தே இருந்தன. இதன்மூலம் மாணவர்களுக்கும் கொஞ்சம் வருமானம் கிடைக்கும். ஆய்வகங்களின் தரமும் உயரும். ஒவ்வொரு ஆண்டும் தங்களது மண்ணின் வளம் எவ்வகையில் இருக்கிறது என்பதை விவசாயிகள் தெரிந்துகொள்ள முடியும். இதில் அரசின் பங்களிப்பு எங்கே இருக்கிறது? நாங்கள் இத்திட்டத்தைத் தொடங்கினோமே தவிர, மற்றதெல்லாம் மக்களின் பணிகள்தான். பால் உற்பத்தியை எடுத்துக்கொள்ளுங்கள்.  இந்த ஆண்டு 60 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளோம். இது ஓர் அதிசயமாகும். குஜராத் முழுவதும் கால்நடைகளுக்காக 3000 முகாம்கள் நடத்தியுள்ளோம். ஒரு மாடு இந்த முகாமுக்கு வருவதற்கு இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரமே நடக்கும்படி பார்த்துக்கொண்டோம். கால்நடைகளை தொடர்ந்து இப்படியாக கண்காணிப்பதன் மூலம் அவற்றை அடிக்கடி தாக்கிய 112 வியாதிகளை ஒழித்துள்ளோம். கால்நடைகளுக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை மற்றும் பல் சிகிச்சை கொடுக்கும் ஒரே மாநிலம் குஜராத். இதனால்தான் 60 சதவிகித உற்பத்தி ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் தங்கள் கால்நடைகள் மூலம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்த விவசாயிகள் 1600 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.
உ.பி. மற்றும் பீகாரை ஒப்பிடும்போது குஜராத் மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று சொல்வது வழக்கம். இது சரியல்ல. நாட்டின் எந்தப் பகுதி குடிமகனையும் புண்படுத்தும் விஷயம் இது. ஒவ்வொரு குடிமகனும் திறமை வாய்ந்தவரே. எல்லோரும் நாட்டை நேசிப்பவரே. வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்த ஒப்பீட்டை செய்யக்கூடாது. லால்பகதூர் சாஸ்திரி உணவு தானியங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்று கூறியபோது, பீகார் மற்றும் உ.பி. மக்கள்தான் கடுமையாக உழைத்து தானிய கிடங்குகளை நிரப்பினர். லால்பகதூர் சாஸ்திரியால் முடிந்த விஷயம் மற்றவர்களால் ஏன் முடியவில்லை? அதனால் குடிமக்களை குற்றம் சொல்லவேண்டாம்.
குஜராத்தில் வளர்ச்சிப் பணிகளை எளிதாகச் செய்யமுடியும் என்று கூறுகிறார்களே?
மற்ற தலைவர்கள் பற்றி விமர்சிக்கவோ, எதிர்மறையாகப் பேசவோ நான் விரும்பவில்லை. 10 ஆண்டு முதலமைச்சர் அனுபவத்தில் இந்த நாடு வளர்ச்சி பெறுவதற்கான சிறந்த ஆற்றலுடன் திகழ்கிறது. ஒவ்வொரு மாநிலமும் இந்த வளர்ச்சியைப் பெறமுடியும் என்று என்னால் கூறமுடியும்.
அப்படி என்றால் என்ன மாற்றம் தேவை?
தலைவர்களிடம்தான் மாற்றம் தேவை. அவர்கள் வாக்கு அரசியலிலிருந்து வெளியே வந்து வளர்ச்சி அரசியல் பற்றி சிந்திக்கவேண்டும்.
குஜராத்தைப் போல மற்ற மாநிலங்களிலும் அதே அதிசயங்களை நிகழ்த்தமுடியுமா?
ஒவ்வொரு மாநிலமும் தனி இயல்பைக் கொண்டது. அந்த தனித்துவத்திலிருந்துதான் வளர்ச்சிப் பணிகளைச் செய்யவேண்டும். குஜராத் முதல்வர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. நான் 100 சதவிகிதம் எனது ஆற்றலைத் தந்தேன். இந்தப் பணிகளிலேயே நான் எதிர்காலத்திலும் கவனம் செலுத்துவேன். அதனால் வேறு சிந்தனைகள் எனக்கு இல்லை.
ஏகப்பட்ட பணிகள் உங்களைச் சுற்றியுள்ளன. தூங்குவதற்கு நேரம் கிடைக்கிறதா?
மூன்றரை மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். இது போதாது எனத் தெரியும். மருத்துவர்களும், நண்பர்களும் என்னை எச்சரிக்கிறார்கள். ஆனால் எனது பணிநேரத்தை அதற்குமேல் சுருக்கிக்கொள்ளமுடியாது. ஆரோக்கியமாக இருப்பதற்காக யோகா, பிரணாயாம பயிற்சியை ஒன்று முதல் இரண்டு மணிநேரம் செய்கிறேன்.
ஊழலைப் பொறுத்தவரை உங்களது புத்தாண்டு தீர்மானம் என்ன?
என்னால் முழுமையாக ஊழலை ஒழிக்கமுடியும் என்று தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. ஆனால், நான் ஊழல் செய்யக்கூடாது என்று தீர்மானம் எடுத்தேன். அதன் விளைவை முழு அரசு அமைப்பிலும் காணலாம். கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் எங்கள் மேல் இல்லை.

சிறிய பரப்பளவில் நல்ல நிர்வாகத்தையும் ஒழுங்கையும் எளிதாக அமைத்து விடலாம்;சிங்கப்பூர் மாடலை இந்திய மாநிலங்களுக்குப் பொருத்திப் பேசாதே என்று எனது நண்பர்கள் என்னிடம் அடிக்கடி விவாதங்களிடேயை சொல்வதுண்டு.அதை மறுதளிப்பதற்காற சரியான ஆவணம் மேற்கண்ட பேட்டியும்,மோடியின் செயல்பாடும்...

வெல்டன் மோடி !

Monday, July 2, 2012

145.அமெரிக்கா உடைத்தால் மண்குடம்;மற்றவர் உடைத்தால் பொன்குடம் !


போபாலில் நடந்த விஷ வாயுக் கசிவும் அதைத் தொடர்ந்த தலைமுறைகளைப் பாதிக்கும் சோக விளைவுகளும் நாம் அனைவரும் அறிந்தது.

அந்த விபத்து நடந்த போது முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் போபால் மக்களுக்கு என்ன நடந்தது,அவர்களுக்கான உடனடி உதவிகள் என்ன என்று பார்ப்பதை விட,யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சிஇஓ'வான அமெரிக்கர் வாரன் ஆண்டர்டனை தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்புவதில்தான் குறியாக இருந்தார்.

போபால் மக்கள் அடைந்த பாதிப்புகளுக்கும்,இரண்டு தலைமுறைகள் தாண்டியும் அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதும் நிலத்தடி நீர் விஷநீராக மாறி அதனால் வரும் நோய்த் தொற்றுகளும் கணக்கற்றவை.


இந்தியாவில் போபால் விபத்து நடந்த போது விஷவாயு வெடித்த நாளில் மட்டும் இறந்தவர்கள் 2259, இரண்டு மூன்று வாரங்களில் 3787 பேர் இறந்தார்கள். காயமடைந்தவர்கள் 5,58,127. அந்த பாதிப்பினால் பின்னர் இறந்தவர்கள் எண்ணிக்கை 8000 பேர்.இது தவிர ஊனம் மற்றும் மற்ற உபாதைகள் 38,478 பேரைப் பாதித்தன.

நொடியில் மறித்த குழந்தைகள் !

கால்நடைகள் கொத்துக் கொத்தாக இறந்தன !!

வரிசை வரிசையாக !! 
எண்ணற்ற குழந்தைகளின் பிணங்கள் எண்களால் மட்டுமே அறியப் பட்டன !
எண்களே அடையாளம் !
வீட்டுக்கொருவர் அல்லது இருவர் இறந்திருந்தார்கள் !! 

வீட்டிற்கொரு பிணம் !
















பிணங்கள் வரிசை வரிசையாக விழுந்து கொண்டிருந்தன !!!
தொடர்ந்த மரணங்கள் !












பிபிசி நிறுவனம் தொழிற்சாலைகள் சார்ந்த விபத்ததுகளில் உலக அளவில் மிக அதிகமான
உயிரிழப்பும் பாதிப்பும் ஏற்படுத்திய விபத்துகளில் ஒன்றாக இதை வகைப் படுத்தியது.




இந்த விபத்திற்கு அதிகபட்சமாக எடுக்கப் பட்ட சட்ட நடவடிக்கை என்ன தெரியுமா? யூனியன் கார்பைடு(டவ் கெமிக்கல்ஸ் என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இது இயங்கியது;தோண்டினால் இதில் எவனாவது காங்கிரஸ் அரசியல் வியாதி-சொற்பிழை அல்ல- முக்கியப் பங்குதாரராக இருக்கக் கூடும்) இந்தியாவின் 7 அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு ஒரு லட்சரூபாய்...ஆம் ஜஸ்ட் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மத்தியப் பிரதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது !
அர்ஜூன் சிங்கும் ராசீவும் வழியனுப்பி வைத்த ஆண்டர்சன் !
அதுவே சட்டத்தின் படி அதிக பட்ச அபராதத் தொகை என்று சொன்னது நீதி மன்றம் !!

சிலருக்கு ஆயுள் தண்டனை அளித்தது;அவ்வாறு தண்டனை விதிக்கப் பட்டவர்கள் தீர்ப்பு வருமுன்னேயே இயல்பாக வாழ்ந்து இறந்து போனார்கள் !!!

அவ்வளவுதான் அரசு செய்து கிழித்தது.


இந்நிலையில் அரசு முன்னின்று எதுவும் கிழிக்காத நிலையில் தனிநபர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் மன்ஹாட்டன் மாநிலத்தில் யூனியன் கார்பைடின் மீது வழக்குத் தொடர்ந்தார்.அந்த வழக்கில் வந்திருக்கும் தீர்ப்பு அலாதியான அமெரிக்கத் தீர்ப்பு.போபால் விபத்தின் பின்னால் நடந்த உயிரிழப்பு,சுற்றுச்சூழல் மாசு,நிலத்தடி நீர் மாசு போன்ற எவற்றிற்கும் யூனியன் கார்பைடு நிறுவனம் பொறுப்பல்ல.மத்தியப் பிரதேச மாநில அரசுதான் அவற்றிற்குப் பொறுப்பேற்று நிவாரணம் வழங்க வேண்டும்'என்ற அதி அற்புதமான தீர்ப்பை வழக்கி,வாரன் ஆண்டர்சனோ,யூனியன் கார்பைடு நிறுவனமோ சல்லிக் காசு தரும் அளவுக்குக் கூடக் குற்றமற்றவை என்று சொல்லி விட்டார்கள்.

இது தொடர்பாக இன்றைய தினமணியின் தலையங்கத்தின் ஒரு பகுதி ... முழுத் தலையங்கம் இங்கே இருக்கிறது.

டைம்ஸ் இந்தியாவிலும் இது பற்றிய செய்தி வந்திருக்கிறது. ஒரு முறை இந்தச் செய்திகளைத் தேடிப் படித்து விடுங்கள்;பொறுமையற்றவர்கள் பின்வரும் சில பத்திகளையாவது படிக்கலாம் !

போபால் விஷவாயு விபத்தில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் வாரன் ஆண்டர்சன் அந்த சம்பவத்துக்குப் பொறுப்பல்ல என்று அமெரிக்காவின் மேன்ஹாட்டன் மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, போபால் மக்களுக்காக இழப்பீடு பெற்றுத்தரப் போராடும் அமைப்புகளுக்குப் பெரும் அதிர்ச்சி என்பதோடு, அன்னிய நேரடி முதலீடுகளில் இனிமேலாவது இந்திய அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளது.
 யூனியன் கார்பைடு நிறுவனம் போபாலில் விட்டுச்சென்ற சயனைடு கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து கடந்த இரு தலைமுறைகளுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்று பாதிக்கப்பட்டோர் சார்பில் ஜானகிபாய் சாஷூ என்பவரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. மனுவை இரண்டுமுறை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மூன்றாவது மனுவை ஏற்று விசாரித்த நீதிபதி ஜான் கீனன் அளித்துள்ள தீர்ப்பு, இனிமேல் இந்த வழக்கில் எந்தவிதமான இழப்பீட்டையும், நியாயத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனத்திடம் எதிர்பார்க்க முடியாது என்பதைத் தெளிவாக்குகின்றது.

 ""....யூனியன் கார்பைடு வேறு, யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் வேறு. இந்தியாவில் பல ஆயிரம் பேர்களது மரணத்துக்குக் காரணமான போபால் விஷவாயு விபத்துக்கு யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்தான் பொறுப்பு. யூனியன் கார்பைடு நிறுவனமோ அல்லது அதற்கு அன்றைய தேதியில் தலைவராகப் பொறுப்பு வகித்த வாரன் ஆண்டர்சனோ பொறுப்பல்ல'' என்கிறது மேன்ஹாட்டன் மாகாண நீதிமன்றத் தீர்ப்பு.
 யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் எடுத்த முடிவுகள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு எடுத்த முடிவுகள்தான் என்று வழக்குத் தொடுத்தவர்கள் வாதிட்டதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

பரிசோதிக்கப்படாத புதிய தொழில்நுட்பத்தை போபால் ஆலையில் புகுத்திய வாரன் ஆண்டர்சன், கடும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஆலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுவிழக்கச் செய்ததுதான் விபத்துக்கு அடிப்படைக் காரணம் என்று கூறியதையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

 ""...யூனியன் கார்பைடு நிறுவனம், போபாலில் இருந்த யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்டின் தாய் நிறுவனம் என்பது உண்மையே. ஆனால், இந்திய நிறுவனத்தின் ஒவ்வொரு முடிவுகளிலும் யூனியன் கார்பைடு தலையிட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இந்தத் தொழிற்சாலையை நிறுவுவதற்கான இடத்தைத் தேர்வு செய்தவர் ஆண்டர்சன் அல்ல. மத்தியப் பிரதேச மாநில அரசுதான் இடத்தை வழங்கியது. விபத்துக்குப் பின்னர் மூடப்பட்டுவிட்ட ஆலையில் ஏற்பட்ட நச்சு மாசினை அகற்ற வேண்டிய வேலையும் மாநில அரசையே சாரும்..'' என்கிறது தீர்ப்பு.
 ""யூனியன் கார்பைடு நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அமெரிக்காவில் இருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலையீடு இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லையா? அல்லது அதற்கான ஆவணங்களையும் தகவல் பரிமாற்றங்களையும் இல்லாமல் செய்துவிட்டார்களா? இந்த வழக்கில் இதற்கான ஆவணங்களைக் கைப்பற்ற இந்திய அரசு தவறியது ஏன்?'' - 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கேள்விகளைக் கேட்க வைத்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

இப்போது ஒரு ஃப்ளாஷ் பேக்.


2010'ம் ஆண்டு அமெரிக்கக் கடற்கரையோரமான கல்ஃப் ஆப் மெக்சிகோ பகுதியில் இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் நிறுவனக் கிணறு ஒன்றில் நடந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் பதினொரு பேர் இறந்ததோடு 17 பேர் காயமடைந்தார்கள்.அதோடு எண்ணெய்கிணற்றிலிருந்து வெடிப்பினால் வெறியேறிய எண்ணெய் சுமார் 4200 சதுரமைல்களுக்கு கடல்நீரில் பரவியது.


இந்த விபத்தினால் கடல் உயிரினங்கள் மற்றும் கடல்நீர் மாசு ஏற்பட்டது.மனித இழப்பு என்று பார்த்தால் பதினொரு பேர் மற்றும் காயமடைந்தவர்கள் 18 பேர்,அவ்வளவுதான்.அவர்களும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஊழியர்கள் ! அவர்களுக்கு நிறுவனத்தில் இருந்து நிச்சயம் தனியான இழப்பீடு வழங்கப்பட்டிருக்கும்.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் அப்பகுதி கடல் வாழ் உயிரினங்களில் பல பாதிப்புகள் இருப்பதாகக் கூவினார்கள்.அமெரிக்க நிர்வாகமும் ஒபாமாவும் சேர்ந்து கூவினர்.மீன்களும் திமிங்கிலங்களும் பரிதவிப்பதாகவும் கடல்நீர் எண்ணெய் கலந்து அமெரிக்காவே பாதிக்கப் பட்ட ரேஞ்சில் நாசா விண்கலங்கள் எடுத்த படங்களைப் போட்டு அதகளம் செய்தது அமெரிக்கா.



பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவர் அமெரிக்க செனட்டுக்கு வந்து மன்னிப்புக் கேட்க வைக்க வற்புறுத்தப் பட்டு மன்னிப்புக் கேட்டார்,

அதோடு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகுப்புநிதி உருவாக்கப்பட்டு அதற்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் பணம் கொடுத்தது. அந்த விபத்தின் காரணமாகப் கடற்கரையோரம் வசிப்பவர்கள் அல்லது கடல் சார்ந்த தொழில் முகவர்கள்,தங்களது தொழிலுக்கோ அல்லது உடமைகளுக்கோ அந்த எண்ணெய்க் கசிவின் மூலம் நஷ்டம் ஏற்பட்டதாகக் கருதினால் அந்த நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்போது 2012.

போபால் விஷ வாயு விபத்திற்கு அரசு முனைந்து நின்று அமெரிக்க நிறுவனங்கள்,அமைப்புகள்,நீதிமன்றங்களில் முறையீடு போன்ற நடவடிக்கைகளின் மூலம் இழப்பீடு பெற வேண்டும் என்பது போக, ஒன்றும் நடக்காத விரக்தியில் தனிப்பட்டவர்கள் முயற்சித்து எடுத்த வழக்கில் மன்ஹாட்டன் நீதிமன்றம், போடா போக்கத்த பயல்களா.. என்று சொல்லி ஊற்றி மூடி விட்டது.

போபால் விஷ வாயு விபத்து வரலாற்றில் ஒரு வழியாக கல்லறைக்கு அனுப்பப் பட்டு விட்டது.


எனக்கு எழும் சில கேள்விகள் :

1.அமெரிக்கக் கடற்கரையோரத்தில் நடந்த விபத்தில் 30 பேருக்குள் காயமும் உயிரிழப்பும் நேர்ந்து ஒரு விபத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா குய்யோ முறையோ என்று கத்தி, பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் தலைவரை அமெரிக்காவிற்கு வரவழைத்து மன்னிப்பு வாங்க முடிகிறது. மீன்களும் திமிங்கிலங்களும் தவளைகளும் கடலில் இருந்து எழுந்து வந்து நஷ்ட ஈடு கேட்கும் என்று பிலாக்கணம் படித்து 20 பில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வாங்க முடிகிறது. ஆனால் லட்சக் கணக்கில் மக்கள் மடிந்த ஒரு விபத்து நடந்ததற்கு ஒரு மயிரும் தர மாட்டோம் என்று அதே அமெரிக்கா சொல்கிறது.காங்கிரஸ் கட்சியின் சொம்பு நக்கிகள் அமெரிக்க அதிகாரிகளின் கால்களில் விழுந்து கிடக்கிறார்கள் !
லட்சக் கணக்கில் மடிந்த மக்களின் உயிரிழப்பு ஒரு பொருட்டே அல்ல. என்ன விதமான தலைவர்களை நாம் பெற்றிருக்கிறோம்????

2. அமெரிக்கக் கடற்கரையில் வாழும் மீன்களை விட இந்தியாவில் வாழும் எண்ணற்ற உழைக்கும் மக்கள் பொருட்டற்றவர்களாகப் போனார்களா?

3.நமது தலைவர்கள் இந்தியாவின் குடிமக்களா அல்லது இன்னும் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கக் குடிமக்களாக இருக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. இன்னும் நாம் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கக் காலனி நாடுகளில் ஒன்றாக அவர்களது வைஸ்ராய்களால் ஆளப்படும் மக்களாக இருக்கிறோமா?

4.சாதாரண மனிதனான எனக்கே இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒப்பு நோக்க, எரிச்சலும் கோபமும் மண்டுகிறதே. நமது ஆட்சியாளர்கள் இவற்றைப் பற்றிக் கிஞ்சித்தும் யோசிப்பார்களா மாட்டார்களா?

நாம் சுதந்திர நாட்டின் பிரஜைகளா ? அல்லது இன்னும் மேற்குலத்தின் அடிமை நாடுகளில் ஒன்றா??

நன்றி- தினமணி,சுலேகா,டுடே இதழ் 

Wednesday, May 16, 2012

141.நானும் ரௌவுடிதான் !!!



மதுரை ஆதீன நியமன விவகாரத்தில் ராசசேகரன் ஒவ்வோர் நாளும் அளித்து வரும் பேட்டிகளையும் உதார்களையும் பார்க்கும் போது அந்த நபருக்கு அதிகார வர்க்கத்தின் ஏதோ ஒரு இழையின் அனுக்கமும் நட்பும் இருப்பது தெரிகிறது.

எந்த ஒரு விமர்சனத்திற்கும் பத்து நாள் பத்து நாள் என்று அவர் கூவுவதும் வடிவேலுவின் ரவுசுத் தனம் போல்தான் தெரிகிறதே ஒழிய அவருக்கு ஆன்மிக குறிக்கோள்கள் இருப்பதாகத் தெரிய வில்லை.

ரஞ்சிதா விவகாரத்தில் பெயரும் புகழும் கெட்டுப் போன அவர் தன்னுடைய இருப்பை நிலை நிறுத்தவும் மேலும் நிறுவனப் படுத்தவும் மேற்கொண்ட உத்தியாகவே அவர் மதுரை ஆதீனத்தை மடக்கியதைக் கருத வேண்டியிருக்கிறது.

()

சில ஆதீனங்களுடன் பேசிப் பழகிய அனுபவம் இருப்பதால் அவர்களது குணநலன்கள் பற்றிய அவதானம் எனக்கு உண்டு;மேலும் இயல்பாகவே எவருடன் பேசினாலும் பழகினாலும் அவர்களை அதிகம் நுணுகி அவதானிப்பது எனக்குப் பிடித்த எனது இயல்பு.பொதுவாக தமிழக ஆதீனகர்த்தர்கள் பொது மக்களிடம் அதிகம் புழங்காதவர்கள்;அவர்களை அப்படி வைத்திருப்பதில் ஆதீனத்தில் இரண்டாம் மூன்றாம் நிலையில் இருப்பவர்களுக்கு அனுகூலம் இருப்பதாகவும் நான் உணர்ந்திருக்கிறேன்.இந்த வித நபர்கள் ஆதீனங்களில் மட்டுமல்ல பொதுவாக பெரும் பதவி அல்லது அதிகாரம் அல்லது பொறுப்புகளில் இருப்பவர்களிடம் இப்படிப் பட்ட பல நபர்கள் இருப்பார்கள்.அதாவது பராக்,பராக் சொல்பவர்கள் போல.

இதன் காரணமாகப் சாதாரண பொது மக்களைப் பற்றிய குண இயல்புகளோ அல்லது சாதாரண உலகத்தின் மனித சாமர்த்தியங்கள் பற்றிய அறிவோ அற்றவர்களாத்தான் அவர்கள் இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.அவர்கள் ஆதீனத்தில் சந்திக்கும் பொது மக்களும் கை கட்டி வாய் பொத்தி அவர்களைக் கண்டவுடன் பொத் பொத் என்று காலில் விழுந்து விபூதி பிரசாதம் வாங்கிக் கொண்டு பின் வரும் மக்களாகத்தான் அறிமுகப் படுத்தப் படுவார்கள்.இந்த வித விதிமுறைகள் பராக் பேர்வழிகளால்தான் நடைமுறைப் படுத்தப் படும்.

சில முறை பார்த்த நபர்களைத் திரும்ப பார்க்கும் போது மட்டும் ஆதீன கர்த்தர்கள் சிறிது பேசுவதற்குத் தயாராக இருப்பார்கள்;அந்த சமயங்களில் சாதாரண மக்களில் எவரும் இலக்கிய,நுண்ணறிவு,பல்திறத் திறமைகளுடன் எவரையாவது சந்திக்கும் போதோ அவர்களிடம் விவாதிக்கும் போதோ சாதாரண ஒரு கிராமத்துப் பேர்வழி எவ்விதம் வியப்புத் திகைப்பில் ஆழ்வாரோ,அதற்குக் குறையாமல் ஆதீன கர்த்தர்களின் எதிர்வினை இருக்கும்.

அதிலும் மதுரையின் பழைய ஆதீன கர்த்தர் பொதுவான ஆதீன கர்த்தர்களின் அளவுகோலை எடுக்கும் போது வடிவேலு போன்றதான குணநலன்கள் கொண்டவர்.இந்த சூழலில் அவரை நித்தி போன்ற, தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான சாதாரணர்கள்,நடிகைகள்,தொழில்துறையினர்,திறனாளர்களை ஓயாது சந்தித்துக் கொண்டிருக்கும் கார்பொரேட் சாமியார்கள் எளிதாக தன் கைக்குள் போட்டுக் கொள்வதும் அவர்களை எதிலாவது சிக்க வைத்து மீளாநிலையில் வைப்பதும் மிக எளிதான செயல்.

இந்த நிலையில் தன் உத்தியில் சரியாக இயங்கும் நித்தி ராச்சேகரனின் விரிந்த நோக்கங்கள் மதுரை ஆதீனகர்த்தர் என்ற ரீதீயில் மிக அபாயகரமானவையாக இருக்கும்.ஆதீன மீட்புக் குழுவினர் நினைப்பது போல் அவரை வெளியேற்றும் செயல் எளிதாக இருக்கப் போவதில்லை என நடைபெறும் நிகழ்வுகளும்,நித்தியின் உதார் சவடால்களும் தெரிவிக்கின்றன.

அரசு அல்லது நீதி மன்றங்கள் உறுதியுடன் தலையிட்டு அவரை அடக்க வேண்டும்;நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது அது நடப்பது மிக தூரத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

சைவ ஆத்திகர்கள் மிகவும் கவலைப் பட வேண்டிய விதயம் இது !!!

Monday, April 30, 2012

140-காமம்-நித்தியம்-அவலம் !!

இந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது.

அத்தி பூத்தாற்போல் எப்போதாவது அரசு நல்ல ஒரு முடிவை எடுக்கும் தருணங்கள் வரும்;இது அது போன்ற ஒன்று.ஆனால் இதற்கும் ஒரு எதிர்ப்பு வருகிறது.அதாவது இது குழந்தைகள் உரிமையைக் கெடுப்பதாகக் கூறி ஒரு கூட்டம் இதை எதிர்ப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறார்களுக்கு காமம் பற்றிய கல்வி இருக்க வேண்டும் என்று பரவலாகப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காமம் பற்றிய கல்விக்குப் பதிலாக உடற்கூறு பற்றிய கல்விதான் அவசியம் என்பது எனது புரிதல்.இது பற்றி விளக்கமாக ஏற்கனவே நான் இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன்.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பது சொல்லாடல் மட்டுமல்ல;அனுபவமும் உண்மையும் கூட.டீன் ஏஜ் எனப்படும பதின்ம வயதுகளில் ஏற்படும் உடற்கூறு மாற்றங்களைப் பற்றிய சரியான அறிவுதான் சிறார்களுக்குத் தேவையே தவிர காமம் பற்றிய அறிவியல்|கலை அறிவு தேவையல்ல;அதெல்லாம் இல்லாமலேயே உடலியல் மாற்றங்களால் காமம் தொடர்பான எந்த விதயத்தையும் தீப்பற்றியது போலப் பற்றிக் கொள்ளும் பருவம்,பதின்ம வயதுகளின் பருவம்.

இந்த நேரங்களில் கிடைத்த எந்த வாய்ப்பிலும் காமம் பற்றிய பரிசோதனைகளில் ஈடுபட உடலும் மனமும் துடிக்கின்ற பருவம் இது;இந்த நேரங்களில் சரியான உடலியல் கல்வியோடு,காமத்திலிருந்து விலகி இருப்பதே நல்ல மன,உடல் வளத்திற்கும்,நலத்திற்கும் சரியானது.

திருமணத்திற்கான முன்பான காமம் ஒத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று என்ற ஜல்லியடிகள் பெருத்துப் போனதும்,அதற்கான விளைவுகளைப் பெண்கள் மட்டும் சுமக்கும் அவலங்களும்தான் நடக்கிறது.


முற்போக்கானவை என்றும் காமம் பற்றிய கல்வி அவசியம் என்றும் கூவிய எல்லா நாடுகளிலும் இன்று குழந்தைத் தாய்கள் அதிகமானதும் மன முதிர்ச்சி அடைவதற்கு முன்னால் காமமும்,குழந்தைகளும் பெற்று அதோடு விவாகரத்துகளும் பெற்று வாழ்க்கை வெம்பிய சூழலில் வாழும் வாழ்க்கைதான் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிகிறது.

எனவேதான் பல வாழ்வு நலன் சிறக்க வழிசொல்லும் பல புத்தகங்களும் ஆக்கங்களும் நமக்கு ஓயாது சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில் மேற்கண்ட சட்டத் திருத்தம் மிகத் தேவையானதும் பாராட்ட வேண்டியதுமான ஒன்று.இதை எதிர்ப்பவர்கள் குழந்தை நலன் தொடர்பான குழு என்று டைம்ஸ் செய்திப் பத்திரிக்கையில் தெரிகிறது;முட்டாள்கள் !!

சிங்கப்பூரின் அரசாண்மை பற்றிய எனக்கு மிகுந்த ஆர்வமும்  நுண்பார்வையும் உண்டு;காரணம் சிங்கப்பூரை மறு நிர்மாணம் செய்ய சீனியர் லீ 1950 களின் இறுதியில் முடிவெடுத்த போது,எந்த ஒரு துறையிலும் உலகின் எந்த நாட்டில் அத்துறை மிகச் சிறப்பாக விளங்குகிறதோ அதை மாதிரியாக எடுத்துக் கொண்டு சிங்கப்பூரின் சூழலுக்குத் தகுந்தவாறு அந்த மாதிரியை மாற்றிச் செயல் படுத்தியதாக அவர் எழுதியிருக்கிறார்.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட,முன்னேறிய நாடாக அறியப்படும் சிங்கப்பூரிலும் சில கொள்கைகள் இறுக்கமான சட்டங்களுடன் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.அவற்றில் முக்கியமானவை சட்டரீதியான காமத்திற்கு அனுமதிக்கப் பட்ட வயது 18,மற்றும் குற்றவியலில் சில பெருந்தீங்கான செயல்களுக்கு மரண தண்டனை போன்றவை முக்கியமானவை.சிங்கப்பூருக்கு வரும் பலரும்,'ஆகா,இந்த நாடு அற்புதமாகத் திகழ்கிறது' என்று வியப்பதற்கான கட்டுமானம் இது போன்ற சரியான அரசாண்மையிலும்,தயவு தாட்சன்யமின்றி கடைப்படிக்கப் படும் சட்ட விதிமுறைகளாலும்தான் சாத்தியம் என்பதும் பலர் கண்களுக்குத் தெரிவதில்லை.

இங்கு 18 வயதுக்குட்பட்ட பெண் ஒத்துக் கொண்டு எவருடனாவது உடலுறவு கொண்டால் கூட,சம்பத்தப் பட்ட ஆண்தான் குற்றச் செயல் புரிந்தவராகக் கருதப் பட்டு தண்டிக்கப் படுவார்.இதுவே சரியான பார்வை.

இப்போது ஒரு மாதத்திற்கு முன்னால் கூட சிங்கப்பூரின் புகழ்பெற்ற கட்டுமானத் துறை தொழில் விற்பன்னரின் குடும்பத்தின் வாரிசான ஒரு தொழிலதிபர் இவ்வாறு சிறார்களுடனான காமக் குற்றச் செயலில் பிடிபட்டு வழக்கிற்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்.

இந்தியாவில் இவ்வளவு சமூக ஒழுங்கெல்லாம் எதிர்பார்ப்பது துர்பலம்;ஆனால் பதின்ம வயதுக் காமம் தொடர்பில் சமூக ஒழுங்கு பற்றிய ஆக்கப் பூர்வ சிந்தனையில் முதல் படி இந்த வயது வரம்பு உயர்த்திய செயல்.

அதையும் சீரழிக்க ஒரு கூட்டம் கிளம்புகிறது..எப்படி உருப்படுவோம்?!

()

மதுரை ஆதீனத்திற்கு ரஞ்சிதா புகழ் நித்தியானந்தர் குருவாக நியமிக்கப் பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தச் செய்தி உண்மையெனில்,இது ஆத்திகர்களுக்கும் சைவ சமய அமைப்புகளில் பற்றுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இது ஒரு அவலமான செய்தி.

ஏற்கனவே இருந்த மதுரை ஆதீனத்தின் குருவே ஒரு காமெடிப் பேர்வழி,அந்தக் காமெடிப் பேர்வழி எதற்கு மயங்கி இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது இன்னும் சிறிது காலத்திற்குள் வெளிவரும்.

ஆனால் அதற்குள் சமய,இறைநெறியில் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருக்கும் பலருக்கும் இந்த நியமனம் செருப்படி போல் விழுந்திருக்கிறது..

ஒரு மிகத் தவறான முன்னுதாரமான இதனால் ஏற்படப் போகும் பல விபரீதங்கள் இப்போது எனக்குத் தெரிகின்றன.

நாசமடையும் காலத்தில் புத்தி விபரீதமாக வேலை செய்யும் என்ற சொல்லாடலுக்கு தற்போதைய மதுரை ஆதீனம் பிரமாண்டமான உதாரணம்.

()

அபிஷேக் மனு சிங்வி பற்றிய ஒளிக் காட்சித் துண்டும் அதைப் பற்றிய செய்திகளும் அனைவரும் அறிந்தவைதான்.

ஒரு பெண் வழக்கறிஞர் நீதிபதி பதவி பெறுவதற்காக தன்னை ஒப்புதவித்த காட்சிகள்தான் அவை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதி பதவிக்கு நியமிக்கப் படுபவர்களின் பின்னணியும் அவர்கள் தகுதிக்காக மட்டும்தான் அவர்கள் பதவி உயர்த்தப் படுகிறார்களா என்பன போன்ற விதயங்களில் முக்கியத்துவம் பெற வேண்டிய இந்த விவகாரம் முறைதவறிய காமத்திற்காக மட்டுமே முக்கியத்துவம் பெறுவது வருந்தத் தக்கது.

சந்துரு போன்ற மிகத் திறமையும் நேர்மையும் மிக்க வழக்கறிஞர்கள் கூட பெரிய மனிதர்களின் பரிந்துரை இருந்தால்தான் நீதிபதியாக முடிகிறது என்ற செய்தி நண்பர் பிரபு ராஜதுரை வாக்கில் பத்ரியின் பதிவில் தெரிகிறது.

நாடு அவலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான நிச்சய நிகழ்வுகள் இந்த சிடி விவகாரமும் அதன் பின்னணி நிகழ்வுகளும் !!

()


சுப்ரமணியம் சுவாமிக்கு எவ்வி தொடர்புகள் மூலம் செய்திகள் கிடைக்கிறது என்பது இந்திய அரசியல் சூழலில் வியப்பூட்டும் ஒரு விதயம்.

2ஜி பூதத்தை முதலில் கட்டவிழ்த்தது அவர்தான். இப்போது சிதம்பரத்தின் மகன் நடத்தும் நிறுவனத்திற்கும் 2ஜி யில் நடந்த பண,பங்குப் பரிவர்த்தனைகளுக்கும் உள் தொடர்பு இருக்கிறது என்று வழக்குத் தொடர்ந்திருக்கிறார்..

2ஜி வழக்கு வந்த சமயத்திலேயே திருவாளர் ப திருநள்ளாறுக் கோவிலுக்கெல்லாம் படையெடுத்தது நினைவிருக்கலாம்.. !!

:)





தினமணி மதிக்கு நன்றியுடன்..


Wednesday, April 18, 2012

138.ஒரு தற்கொலை,ஒரு தேர்வு-பல கேள்விகள் !!!




இன்றைய தினசரிகளில் இரு செய்திகள்.

-அண்ணா பல்கலை மாணவி தற்கொலை-காரணம் ஆங்கிலத்தில் பேச அல்லது எழுத வரவில்லை என்பதும்,கல்லூரிப் பருவத் தேர்வுகளில்-செமஸ்டர்- பல பாடத் தாள்களில் தேர்ச்சி பெறாமல் இருந்ததும் என்று முதலில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

-இன்னொரு தினமணி தலையங்கச் செய்தியில் ஒரு பள்ளியின் பொதுத்தேர்வு நடக்கும் போது மாவட்ட ஆட்சியர் தானே மேற்கொண்ட சோதனையில் கல்வி அதிகாரிகளும் கல்வி நிறுவன ஆசிரியர்களும் இணைந்து செய்த தேர்வு மோசடி பற்றிய செய்தி.மாணவர்கள் படும் சிரமத்தைக் கண்டு மனம் நொந்து அவர்களது கேள்வித்தாள்களுக்கான விடைகளை கல்வி நிறுவனமே தயாரித்து தேர்வு அறையில் விநியோகித்து அவர்கள் தேர்ச்சிக்கும்,தங்கள் பிழைப்புக்கும் உதவி செய்து கொண்ட நிகழ்ச்சி;நமக்கு நாமே திட்டத்தின் தேர்ந்த வடிவம்!




இரண்டு செய்திகளிலும் பொதிந்திருக்கும் விதயம் செயலும் விளைவும் எனப்படும் காஸ் அன்ட் எஃபக்ட் தியரி'யின் சான்றுகள்தாம்.

இரண்டாவது செய்தி பற்றியே இன்றைய தினமணியின் தலையங்கம் பேசுகிறது. காலையில் படித்த போது எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது;பள்ளியே முன்னின்று இவ்வாறு செய்யுமா என்ன? என்ற வியப்பால்.

என்னுடைய மனைவியிடம் மிகுந்த ஆச்சரியத்துடன் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட போது,அவர் என்னைப் பிராணியைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு,'இதிலென்ன ஆச்சரியம்,இது பல காலமாக நடப்பது தானே? பின் எப்படி பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி விகிதம் காண்பிப்பது? எங்களுக்குக் கூட எஸ்எஸ்எல்சி தேர்வில் விடைத்தாள் கொடுத்தார்கள்-அதாவது விடைகளை எழுதி-,ஆனால் ப்ளஸ் டூவில் தான் கொடுக்காமல் விட்டு விட்டார்கள்'' என்று என் அறியாமை இருளை அகற்றும் ஞானபானு'வானார்.

அவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகிறது;பள்ளி இருந்த ஊர் ஒரு சாதாரண ஊராட்சி நிலையில் இருந்த ஊர்;தேர்வுநிலைப் பேரூராட்சி என்று பலகாலம் அறிவித்துக் கொண்டிருந்த ஊர்.

கடந்து பத்து,பணிரெண்டு ஆண்டுகளாய் வழக்கமாய் இருந்து வரும் விதயத்தை உடைத்துத் தெரிந்து கொள்ள அந்த மாவட்ட ஆட்சியருக்கும் எனக்கும் இன்றைக்குத்தான் வாய்த்திருக்கிறது! :)

இப்போது இந்த நிமிடத்தில் என்னுடைய தொடக்கக் கல்வி நிலையத்தையும்,தலைமை ஆசிரியர் மாணிக்க வாசகத்தையும் நன்றியுடன் நினைத்தும் மனத்தில் மீண்டும் நிறைத்தும் கொள்கிறேன்;மனித வாழ்வின் தொடக்கமான பள்ளிப் பருவத்தில் விழுமியங்களையும்,ஒழுங்கையும்,திருக்குறளையும்,நன்னெறியையும்,நல்வழியையும்,கொன்றை வேந்தனையும்,ஆத்திசூடியையும் அடித்துப் போதித்தவர்.நான்காகப் பிளந்த மூங்கில் மரச் சட்டத்தை அடிக்க உபயோகித்த மகானுபவர்;பள்ளி முடிந்தும் காலைப் பாடம்,மாலைப் பாடம் என்று பள்ளியிலேயே வைத்து ஆசிரியர்கள் கட்டாயம் அதை நடத்த வேண்டும் என்று வலியுறித்தியவர்;அதன் மூலம் ஆசிரியர்கள் தனியாக பாடவகுப்பு நடத்தி வியாபாரிகளாக மாறுவதைத் தடுத்தவர்;உண்மையான நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவரின் மகன்;பளபளவென்று துடைத்து வைத்திருக்கும் ராலே சைக்கிளில்தான் வருவார்;சைக்கிளை பள்ளிப் படிகளுக்குள் ஏற்றி வருவது கூடத் தெரியாமல் பூனை போன்று வந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் கண்காணித்தவர்;புகைபிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு ஆசிரியர் பள்ளி வளாகத்திலோ, பள்ளி நேரத்திலோ மாணவர்கள் பார்க்கும் வண்ணத்தில் புகை பிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அவரின் பகையை சம்பாதித்தவர்;நீதி போதனை வகுப்புகளைத் தவறாமல் தானே நடத்தியவர்;அந்த வகுப்புகளுக்கு மிகு முக்கியத்துவம் கொடுத்தவர்.

ஐந்து மகன்களைப் பெற்று ஐவரும் வெளிநாடுகளிலும் உள்நாட்டில் நல்ல நிலையில் இருந்தும் ஓய்வு பெற்று விட்ட பள்ளிக்கே செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டு இன்னும் ராலே சைக்கிளில் பள்ளிக்கு ஓடுபவர்;மகன்கள் மற்றும் மனைவியின் அறிவுறுத்தல்களுக்குப் பின்னர் இப்போதுதான் டிவிஎஸ் 50 வாகனத்திற்கு மாறியிருப்பவர்.

படிக்கும் காலங்களில் அவரைப் பார்க்கப் பயமும் சிறிது பிடிக்காமையும் தான் மனதில் எழும்;ஆனால் பள்ளியை விட்டு வெளியேறப் போகும் எட்டாவது வகுப்பிலேயே அவரைப் பற்றிய பயம் மறைந்து மரியாதை தோன்றியது.

வேறு பள்ளி,பள்ளி முடித்து  கல்லூரி என்று பல வித மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்த்ததும், கல்லூரி முடித்து தேசிய அளவிலான தேர்வுகள் என்று கற்றுக் கொள்ளுதலின் பரிமாணங்கள் விரிவடைந்த போது அவற்றை எதிர்கொள்ளும் திண்மை.நுண்ணறிவு,முயற்சி போன்றவற்றை திரு.மாணிக்க வாசகமும் அவரைப் பின்பற்றிய ஆசிரியர் குழாமும், எங்களது 14 வயதுக்குள் அவற்றை விதைத்து விட்டிருக்கிறார்கள் என்று அறிந்தபோதும் அவரது மீதான மரியாதை அன்பும் மதிப்பும் மிக்கதான மரியாதையாக மாறி விட்டிருக்கிறது.

மிகுந்த சுயமரியாதையும் எவருக்கும் நாம் இளைத்ததவரல்ல என்ற மனப்பாங்கும் உடைய நான்(அதை வளர்த்ததில் கூட அவருக்கு ஒரு பங்கிருக்கிறது! :) ),இன்று வரை அவரைப் பார்க்கும் தருணங்களில் அவரை அடிவீழ்ந்து வணங்கி ஆசி பெறுவதைத் மறப்பதில்லை.

மாணவர்களது கல்வி மட்டுமல்ல,கேரக்டர் எனப்படும் தனிமனிதத் தன்மையை செதுக்கி மனிதப் பண்புகளை வளர்ப்பவை கல்வி நிலையங்களும்,ஆசிரியர்களும் என்ற பார்வை தமிழக பள்ளிச் சூழலியலில் கடந்த புத்தாயிரப் பத்தாண்டுகளில் மாறி விட்டிருப்பது கைப் புண்ணாகத் தெரிகிறது.அதோடு ஒழுக்க மீறுதல்களையும் குறுக்கு வழிகளையும் கற்பிக்கும் இடங்களாவும் அவை மாறி விட்டிருக்கின்றன.

இவ்வித குறுக்கு வழிகளில் தேர்ந்து அவற்றைக் கடைசி வரை தீர்க்கமாகப் பயன்படுத்தி,குறுக்கு வழியாளர்களுடனேயே இணைந்து சமூகத்தின் பெரும்பகுதியான மக்கள் மாறி விட்ட சூழ்நிலையில் அவர்கள் சாமர்த்திய சாலிகளாக,வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப் படுகிறார்கள்.

இவ்வித 'சாமர்த்திய சாலிகளான' குறுக்கு வழி விற்பன்னர்கள் பெருகிய ஒரு சமூகத்தில் ஒரு டிஎஸ்பி பெண்ணென்றும் பாராமல் பொது இடத்தில் தான் காக்க வேண்டிய மனிதனைப் பெண்ணை அறைய முடிகிறது;எங்களது பிரதிநிதியாக சட்டசபைக்குப் போ என்று அனுப்பி வைத்த மக்களுக்கு நன்றியுடன் சட்டசபையில் பலான படம் பார்த்து விட்டு கூச்ச நாச்சமின்றி வாழ முடிகிறது; நாடு முன்னேறுவதற்கான தொழில்நுட்பங்களைப் புகுத்தும் செயல்களில் லட்சம் கோடி என்ற கணக்கில் கூசாமல் கையூட்டுப் பெற முடிகிறது;அந்தக் கொள்ளை வெளிப்படும் போது ஏதோ சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப் பட்டது போல சிறை மீண்ட வீரர்களாக திரிய முடிகிறது; ஊழல் பணத்தை உடலெங்கும் அணிகலனாய் மாட்டிக் கொண்டு திருமண ஊர்வலங்கள் நடத்த முடிகிறது;வாய்ப்பு இல்லாத இடத்தில் கூட லஞ்சம் வாங்க முயற்சித்தும்,வாய்ப்பு இருக்கும் இடங்களில் புகுந்து விளையாடியும் வாழ்வில் வெற்றி பெற்ற விற்பன்னர்களாய் வலம் வர முடிகிறது ! தலைவர்களாக அந்தக் கேவல சாமர்த்தியங்களை நிறுவன மயமாக்க முடிகிறது !!! அவர்கள்தான் தலைவர்கள் என்று சாதாரணர்களை நம்ப வைக்க முடிகிறது !!!

தற்கொலை செய்து கொண்ட மாணவி போன்ற சிலர்,அவ்விதக் குறுக்கு வழிகளை சரியாகப் பயன்படுத்த இயலாமலோ அல்லது குறுக்கு வழிகளைச் செயல் படுத்தும் வழியற்றவர்களாவோ இருக்கும் போது தற்கொலையாளர்களாக மாறுகிறார்கள்.

தீர்வு புரையோடிப் போன கல்வி முறைச் செயல்பாட்டிலும்,தனி மனித உன்னதப் பண்புகளை கருவறுத்துவிட்ட தற்காலக் கல்வி முறைகளிலும் இருக்கிறது.

அதை வழிமுறைப் படுத்த செயலூக்கமும்,நியாயப் பண்புகளில் உறுதியான நம்பிக்கை மிகுந்த தலைவரும் தேவை.

எனது முந்தைய பதிவொன்றில்(திறனற்ற செயலும்,செயலற்ற திறனும்) தலைவர்கள் திறனாளர்களாக இருக்க வேண்டுமா அல்லது நேர்மையாளராக இருக்க வேண்டுமா என்ற பொருளை நான் ஏற்கனவே தொட்டிருக்கிறேன்; அந்தக் கேள்வி அனைவருக்கம் வர வேண்டிய தருணம் இது.

தமிழக சூழலில் இன்னும் 20 ஆண்டுத் தூரத்தில் அப்படி எவரும் கண்ணில் தெரியவில்லை;தற்கொலைகளும் சீரழிவும் தொடரும் என்பதில் சந்தேகமும் இல்லை.

பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் !

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...