குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Wednesday, June 5, 2013

184. பிள்ளை இல்லாக் கலியும் தீர...1

பிள்ளை இல்லா கலியும் தீர...


பிள்ளை இல்லாக் கலி...
 மங்கையர் திலகம் என்ற படத்தில் தொடங்கும் நீல வண்ணக் கண்ணா வாடா என்ற பாடலில் உள்ள ஒரு வரியின் ஒரு பாகம்தான் இந்தத் தலைப்பு.

திருமணத்திற்குப் பிறகு சில மாதங்கள் கழிந்து விட்டாலே, என்ன,விசேடம் ஒன்றும் இல்லையா, எப்போ பெத்துக்கப் போறீங்க ? என்று கேட்பவர்கள் அனேகம்.கேள்விகள்...

மாதங்கள் கழிந்து ஒரிரு வருடங்களாகி விட்டால் விசாரிப்புகள் அதிகப் படும்.

இரண்டு வருடங்கள் கழிந்து விட்டது; இன்னும் குழந்தை இல்லை என்றால் விசாரிப்புகள் குறைந்து பார்வைகளும், புறம் பேசுதலும் அவற்றைத் தொடர்ந்த புறக்கணிப்புகளும் தொடங்கும்.

இதிலும் நமது தகுதி, திறமை, அறிவாற்றல், குடும்ப நிலை, சூழல் இவற்றிற்கு முக்கிய இடம் உண்டு. சமூக நிலையில் இந்த எல்லாவற்றிலும் நாம் சிறந்து விளங்கும் நிலையில் இருந்தால், மேற்கண்ட துன்புறுத்தல்களை
நேரடியாக எதிர் கொள்ளும் துன்பம் இல்லை.ஆனால் அவை மறைமுகமாக உங்களை விரட்டிக் கொண்டே இருக்கும்.

இவை போன்ற 'சமூகத் தகுதிகள்' இல்லாதவர்கள் பாடு திண்டாட்டமே..அவர்கள் எல்லாப் புறக்கணிப்புகளையும்
ஏச்சுகளையும் சமூகத்திலிருந்து எதிர் கொள்வதோடு, குடும்பத்திலிருந்தும் எழும் அழுத்தங்களையும் சமாளிக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள்.


இதனால்தான் குழந்தை பெறுவதை ஒரு பேறு என்று இலக்கியங்கள் சொல்கின்றன. பேறு என்ற சொல்லுக்கு பெறுவது என்பதோடு செல்வம், பரிசு, வாழ்த்து, போன்று 16 பொருள்கள் தமிழில் உண்டு.


குழந்தைப் பேறு !

அவை என்னவெனில்
பெறுகை,
அடையத்தக்கது,
இலாபம்,
வரம்
நன்கொடை
பயன்
தகுதி
மகப்பெறுகை
அளவை
பதினாறு செல்வத்தில் ஒரு வகை
செல்வம்
நல்லூழ்
நிலத்தின் அனுபவக் குறியீடு
இரை
சிருஷ்டி
முடிவு

என்பவை.

குழந்தை என்பதன் முக்கியத்துவம் கருதியே குழந்தை பெறுவதை ஒரு செல்வமாகவும் கருதி குழந்தைப் பேறு என்ற சொல்லாட்சி உண்டானது.

தொழில் பேறு, திருமணப் பேறு போன்ற சொல்லாட்சிகள் தமிழில் இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

அதனால்தான் குழுந்தை இல்லாதவர்கள் நிலையை 'கலி' என்று உருவகித்து இந்தப் பாடல் செல்கிறது. கலி என்ற சொல்லுக்கு துன்பம், வஞ்சம், வலி, கடல் போன்று கையறு நிலையைக் குறிக்கும் பல பொருள் உண்டு.

மேற்சொன்னவாறு நல்ல பேறுகளைப் பெற்றும், குழந்தைப் பேறு இல்லாத நிலையால் ஏற்படும் வலிகளை சிலகாலம் அனுபவத்தவன் என்ற முறையிலும், அவற்றிலிருந்து மீளும் வழிகளை பெரிதும் ஆய்ந்தவன் என்ற வகையிலும் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதியதால் இந்தப் பதிவு..(அல்லது பதிவுத் தொடர்..ஒரு பதிவுக்குள் எழுதி
விட முடியாது என்றே இப்போது தோன்றுகிறது)

()

குழந்தைப் பேறு வாய்க்காதவர்களுக்கான சமூக அழுத்தங்களுக்குள் மென்மேலும் நான் செல்லப் போவதில்லை.அவற்றை அனைவருமே அறிவர். அனைவரும் அறியாத செய்திகள் அல்லது பலர் தவறாக அறிந்து வைத்திருக்கும் செய்திகள் அல்லது நம்பிக்கைகள் இவற்றைப் பற்றி மட்டும் இதில் தொட உத்தேசம்.

குழந்தை இல்லா நிலையில் இருக்கும் பல தம்பதிகளும் அவர்களது குடும்பத்தவரும் முதலில் செய்ய வேண்டிய ஆய்வு, தம்பதிகளின் குடும்ப உடற்கூறியல் ஆய்வு. மரபு வழியாக தம்பதிகளின் ஆண் அல்லது பெண்ணின் குடும்ப மூதாதையர்களுக்கு குழந்தையின்மை இருந்ததா என்பதை முதலில் பார்த்து விடுவது நல்லது. இது எதற்காக உதவும் என்ற கேள்விக்குப் பின்னர் பதிலிறுக்கிறேன்.

பொதுவாக திருமணமாகி, தடையற்ற குடும்ப வாழ்வில் ஈடுபடும் தம்பதியர்களுக்கு ஒரு முழு ஆண்டுகளுக்குள் குழந்தை பிறக்க வில்லை என்றால், அவர்களுக்கு குழந்தையின்மைக்கான அறிகுறிகள் உறுதியாக உள்ளன என்பது தெளிவு. எனவே தடையற்ற முழு ஒரு ஆண்டு குடும்ப வாழ்விற்குப் பிறகும் கருத்தரிப்பு நிகழவில்லை என்றால்
மட்டுமே கவலைப் படத் தொடங்குங்கள். அதுவரை இதைப் பற்றி எண்ணாதிருங்கள்.

கருதிக் கருதி கவலைப் படுவார்.....


கவலைப் படுவது என்பதை ஆய்வு நோக்கில் சொல்லியிருக்கிறேன். வெறும் கவலை உங்களது அமைதியைக் குலைத்து, மனச் சமநிலையைப் பாதித்து, தம்பதிகளின் அன்பைக் குலைக்கும் தன்மை வாய்ந்தது.இதனை எக்காரணம்
பற்றியும் அனுமதிக்காதீர்கள். குறிப்பாக உங்களது சொந்தக் குடும்பத்தினரிடமிருந்து கூட இந்த சமநிலையைப்
பாதிக்கும் வகையிலான அழுத்தங்கள் வரலாம். அவற்றைப் புறம் தள்ளுங்கள். தம்பதிகளுக்கிடையேயான அன்பும், பரஸ்பர நம்பிக்கையும், ஒருவருக்கொருவர் செலுத்தும் அக்கறையும், குழந்தையின்மை நிலையை விரட்டுவதற்கு துணை புரியும் முக்கியமான காரணிகள்.


இவ்வாறான ஒரு வருட முயற்சி தோல்வியில் முடியும் போது, அடுத்து தம்பதிகள் தங்கள் இருவரின் உடலியல் சோதனைகளை முற்றாக எடுத்துக் கொள்ளுங்கள்; தேவைப் படும் சோதனைகளை உங்களது குடும்ப மருத்துவர்
அல்லது ஒரு பெண்கள் உடலியல் மருத்துவர்-கைனகாலஜிஸ்ட்- தர முடியும். கவனிக்கவும், சோதனைகளை மட்டும் முதலில் செய்யுங்கள். சோதனை அறிக்கைகளை எழுதிக் கொடுத்த மருத்துவரிடமும், வேறொரு மருத்துவரிடமும் காண்பித்து அவர்கள் சொல்லும் முடிவுகள்-தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

அவற்றை ஒரு தனியான எழுது புத்தகத்தில் குறித்து வைத்துக் கொண்டு அவற்றை தம்பதிகள் இருவரும் அலசுங்கள். தேவைப்பட்டால் இணையத்திலும் தேடுங்கள். ஒரு மருத்துவர் சொல்லும் ஒரு தீர்வைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றாதீர்கள்.

ஏன் எனக்கு மட்டும் ???

இதற்கு முற்றிலும் மாறான, குடும்பதினர், நண்பர்கள், அறிந்தவர், தெரிந்தவர் சொல்லும் எல்லாவற்றையும் முயற்சிக்காதீர்கள். இவற்றில் குறி கேட்பதிலிருந்து, சாமியாடி பார்ப்பதிலிருந்து, வெற்றிலையில் மை போட்டுப்
பார்ப்பதிலிருந்து, கழுதை மூத்திரம் குடித்துப் பார்ப்பது வரை அனைத்தும் அடங்கும்.

()

முதற்கட்ட சோதனைகள் பெரும்பாலும் பின்வரும் முடிவுகளில் ஒன்றோ அல்லது இரண்டோ அல்லது அனைத்தையுமோ அளிக்கலாம்.

ஆண்களுக்கான சோதனைகள் மற்றும் முடிவுகள்

 1. குறியின் வடிவம், அமைப்பு சார்ந்த குறைபாடுகள்-இர்ரெகுலாரிடி
 2. விந்தணுக்களின் எண்ணிக்கை சார்ந்த குறைபாடுகள்-ஸ்பெர்ம் கௌண்ட்
 3. விந்தணுக்கள் இல்லாத நிலை-நோ ஸ்பெர்ம்
 4. முற்றிலுமான கருவளிக்க இயலா உடற்குறைபாடு-இம்பொடன்சி & இன்பெர்ட்டிலிடி

பெண்களுக்கான சோதனைகள் மற்றும் முடிவுகள்

 1. முறைப்படுத்தப் படாத மாதவிலக்கு
 2. சினைப்பையில் நீர்க் கட்டிகள்
 3. கருமுட்டை உருவாவதில் குறைபாடுகள்
 4. கருமுட்டை போஷாக்கற்று இருத்தல்
 5. கருக்குழாய் அடைப்பு, குறைபாடு
 6. கருமுட்டை சரியாயிருந்தும் கருத்தரிப்பில் குறைபாடு


சோதனைகளின் மூலம் கிடைக்கும் முடிவுகளின் வழி இந்தக் காரணிதான் குறைபாட்டுக்குக் காரணம் என்பதை எளிதில் அனுமாணித்துது விடலாம் என்று மேற்கண்ட வகைப்படுத்தல்களின் மூலம் நம்பினீர்கள் என்றால் நீங்கள் அறிவற்றவர்!

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு 2 மற்றும் 3 மற்றும் பெண்களுக்கு 1,2,4,5 காரணிகள் மிகப் பொதுவாக இருக்கின்றன.இவ்விதமான பல்வகைக் காரணிகளும் சோதனை முடிவுகளில் தெரியும் போது, மருத்துவர்களே குழப்படி செய்து மருந்து எழுதுவார்கள்..உங்களது குழப்பம் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

(மேற்கண்ட குறைபாடுகளில் ஆண்,பெண் ஒழுக்கம் சார்ந்த நிலை மற்றும் அவை தொடர்பான விளைவுகள்\குறைபாடுகளை நான் சேர்க்கவில்லை. இந்தப் பதிவு நல்லொழுக்கத்தோடு குடும்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.)

வேண்டும் நம்பிக்கை..

()


ஆண்களுக்கான குறைபாடுகளைப் பொதுவாகப் பார்க்கும் போது 1 மற்றும் 4 ஆவது வித குறைபாடுகள் அரிதானவை. அவை இருக்கிறது என்று தெரிந்தால் அவற்றைச் சீர் செய்வதும் சிறிது அரிதானதே.இன்னும் நான்காவது குறைபாடு மற்ற மூன்று குறைபாடுகளையும் உள்ளடக்கியதே.

குறியின் வடிவம், மற்றும் உடற்சேர்க்கையின் ஆர்வம், சக்தி, முயற்சியில் எந்தக் குறைபாடும் இல்லாத நிலையில் கூட 2 மற்றும் 3 ம் காரணிகளால் கருத்தரிக்க இயலா ஆண்மைக் குறைபாடு நிகழலாம்.

2,3 ம் வகையான குறைபாடுகள் பொதுவாக நவீன வாழ்க்கை முறையின் காரணமாகவும் காலவழு-பேடர்ன் த்ரூ பீரியட்- வின் காரணமாகவும் நிகழ்கிறது என்று பொதுவான ஆய்வுகள் சொல்கின்றன.

40 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சராசரியான ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை இன்றைய நிலையில் இல்லை. நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த சராசரி 40 ஆண்டுகளுக்கு முன்னால் இல்லை. இது காலவழு. இதனைத் தீர்ப்பது நம் கையில் இல்லை.

இன்றைய வாழ்வு முறையில் நிகழ்ந்த மாற்றங்களினால் நிகழும் குறைபாடுகள் பெரும்பான்மையானவை. காட்டாக தகவல், தொழில் நுட்பத் துறையில் பணி செய்யும் ஆண்களின் எண்ணிக்கை இன்று மிக அதிகம். அவர்களின் பணி முறை மற்றும் பணிப் பளு- வொர்க் ஸ்டைல் மற்றும் வொர்க் ப்ரெஷர் - இரண்டும் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் காலி செய்வதில் முதலிடம் வகிக்கின்றன.

நாளின் நான்கு நாட்கள் பார்ட்டி என்று சரக்கடித்து விட்டு வருவது முன்னதிலும்,நான்கு நாட்கள் வேலையை ஒன்றரை நாளில் முடிக்குமாறு அழுத்தப் படுவது பின்னதிலும் இன்று சராசரியாக நடக்கிறது.நான் சரக்கடிப்பதில்லை என்று சொல்பவர்கள் கூட முறையற்ற நேரத்தில் உண்பது, முறையற்ற உணவை உண்பது போன்றவற்றை எளிதாக அவர்கள் அறியாமல் செய்கிறார்கள்.

கோக், ஃபரஞ்ச ஃரைஸ் போன்ற கொழுப்புக் கொறிப்புகளை ஏராளமாகப் பயன்படுத்துவது, ஐஸ்க்ரீம்கள் போன்றவற்றை அதிகம் வயிற்றுக்குள் தள்ளி வயிறை சாக்கு மற்றும் சீக்கு மூட்டை ஆக்குவது போன்றவையும் முன்னதில் அடங்கும்.

இவை போன்ற பழக்கங்கள் இல்லாத சாதாரணர்களும் விந்தணு எண்ணிக்கைக் குறைபாடால் பாதிக்கப் படலாம். அவற்றிற்கான காரணிகள்..

 1. புரதம் மற்றும் சத்துகள் இல்லாத உணவு
 2. உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை
 3. வழமையற்ற தூங்கிஎழும் பழக்கம்
 4. வேறு குறைபாடுகள் இல்லாவிட்டாலும் பழக்கவழக்கத்தால் நம்மை நாமே கெடுத்துக் கொள்ளும் வழமை.


தொடரும் வைஃபை  சொருகும் ஆப்பை !

கடைசிக் காரணம் பொத்தாம் பொதுவாக எழுதப் பட்டதாகத் தோன்றலாம்; இல்லை என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு சொல்கிறேன். இன்று பலருக்கும் பல்திறன் தொலைபேசி அல்லது மடிக் கணினி இவற்றை கோமணம் அல்லது ஜட்டிக்கு அடுத்த உடலியல் பாகமாக நினைத்து அவற்றோடு ஒரு நாளைக்கு 15 மணி நேரத்திற்கு மேல் உறவாடிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்மார்ட் ஃபோன் எனப்படும் பல்திறன் தொலைபேசி, பழங்கால நோக்கியா 3110 செங்கல் தொலைபேசியை விட பத்து மடங்கு கதிரியக்கத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறியுங்கள்.

மடி குழந்தைக்கா, கணினிக்கா?மடிக்கணினி'யின் தமிழ்ப் பெயரைத் தவறாகப் புரிந்து கொண்டு அதை எப்போதும் மடியின் மீது வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கும் குஞ்சாமணிகள் பலர் உண்டு; அவர்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்றுதான்..இந்தப் பழக்கம் ஒரு வருடம் தொடர்ந்தால் போதும், குஞ்சாமணி, வெந்தமணியாகி எதற்கும் பயனற்றுப் போகும் !

வெந்த மணி !

மடிக்கணினியை மடியில் வைத்து இயக்கும் பழக்கம் உள்ள ஒருவரின் விந்தணுக்கள் ஒரு வருடத்தில் 40 சதம் வரை குறையும் சாத்தியம் இருக்கிறது என்று சொல்கிறது ஒரு அறிக்கை.


- தொடர்வேன்

2 comments:

 1. நெருங்கிய உறவினர் குடும்பத்தில்-பல பிரச்சனைகள், தொல்லைகள் சந்தித்து விட்டு, இப்போது தான் "தத்து" எடுத்துக் கொள்ளலாம் என்கிற முடிவு... ஆனால் சில வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை... அவ்வளவு demand குழந்தை கிடைப்பதற்கு...!

  மடிக்கணினி - நீங்கள் சொல்வது 100% உண்மை... அதை பயன்படுத்துவோர்கள் மட்டும் அல்ல... கை நிறைய-இல்லை இல்லை-கழுத்து வரை சம்பளம் என்று ஒரு நாளைக்கு 16 /18 மணி நேரம் வேலை பார்த்தவர்கள் (IT), இன்று குழந்தைப் பேறுக்கும், உடல் நலத்திற்கும் சம்பாதித்ததை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்....

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பர் தனபாலன்..
   தத்து எடுப்பதிலும் பல சிரமங்கள் இருப்பதாக அறிந்தேன்..ஆனால் மேற்கத்தியர்கள் எளிதாகப் பணத்ததை எறிந்து விட்டு தத்து எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்..

   வட இந்தியாவில் இது ஒரு எம்எல்எம் அளவில் நடந்து கொண்டிருப்பதாகப் படித்தேன்.

   Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • பறக்கும் தட்டு - ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்ட...
  1 week ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  3 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  1 year ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  1 year ago