குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Saturday, February 5, 2011

124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை


பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே


இது சம்பந்தர் திருமுறையில் திருவலிவலப் பதிகத்திலிருந்து எடுக்கப் பட்ட ஒரு பாடல்.

பெரும்பாலும் விநாயகர் வணக்கதிற்கு திருமுறையில் தோய்ந்தவர்களுக்கு சட்டென்று நினைவில் வரும் பாடல்.


இதற்கான பொருள் விளக்க வேண்டி எனது தம்பியிடமிருந்து ஒரு மடல் வந்தது.அனைவருக்கும் பயன்படலாம் என்று நினைத்ததால் பதிவாகவும் வருகிறது...முதலில் பாடலைப் பதம் பிரித்துப் பார்க்கலாம்..


பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது

வடி கொடு தனது அடி வழிபடும் அவர் இடர்

கடி கணபதி வர அருளினன், மிகு கொடை

வடிவினர் பயில் வலிவலம் உறை இறையேமுக்கியமான சொற்களுக்கான பொருள்:


பிடி-பெண் யானை

கரி- ஆண் யானை

கடி-விரைவாக

வடிவு-தோற்றம்,அழகு

பயில்-வாழ்கின்ற,வழக்கமாக வைத்திருக்கின்றமொழி,இலக்கிய நயம்:


மிகு கொடை வடிவினர்:


மிகுந்த அளவில் கொடைத் தன்மை கொண்ட அழகிய மாந்தர்கள்

அல்லது மிகுந்த கொடைத் தன்மையையே தம்முடைய அழகை அதிகரிக்கும் என்ற வழக்கத்தை கொண்டிருக்கும்...


மிகு கொடை வடிவினர் பயில் என்பது மிகு கொடை பயில் வடிவினர் என்றும் மாற்றிப் பொருள் கொள்ளத் தக்கது.அதாவது மிகுந்த கொடையை பயில்கின்ற,வழக்கமாக வைத்தருக்கின்ற அழகிய தோற்றப் பொலிவு கொண்ட மக்கள் வாழ்கின்ற வலிவலம் என்றும் பொருள் கொள்ளலாம்.கடி கணபதி


இடர்களைக் கடிகின்றவன் அதாவது இடர்களைப் பயமுறுத்தி வெருட்டி விரட்டுகின்றவன்.


சந்த நயம்:


இதுவல்லாமல் பாடலைப் படித்துப் பழகும் போதும் வேகமான சந்த நடையில் சொல்லிப் பார்க்கும் போதும் திருப்புகழைப் பாடும் உணர்வு வரலாம்.தமிழ் இலக்கியங்களில் சொற் சந்த நயத்தில் பலவற்றையும் விஞ்சி நிற்பது திருப்புகழ்.


சம்பந்தரின் தேவாரமும் திருப்புகழுடன் ஒப்பில் வைக்கத் தக்கது.


இந்தப் பாடலுக்கான பண் வியாழக் குறிஞ்சி என்கிறது திருமுறைத் தொகுப்பு.


திரண்ட பொருள்:


மிகுதியான வள்ளல் தன்மை பொருந்திய மக்கள் வாழ்கின்ற வலிவலத்தில் இருக்கின்ற இறைவன், இறைவி பெண் யானையின் உருவம் கொள்ளவும் தான் ஆண் யானையின் வடிவு கொண்டு,தமது அடியில் பக்தி கொண்டு வணங்கும் அடியவர்களின் இடர்களைக் விரைவாக,வெருட்டியும் களையும் இயல்பு படைத்த கணபதியைத் தோற்றுவித்து அருளினான்.


நன்றி..வாய்ப்புக்கு :))

1 comment:

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • நெப்போலியனின் பேச்சின் வீச்சு! - *முன்குறிப்பு:* பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று மகாகவி பாரதி பாடினார். அதில் வெற்றியும் பெற்றார். பேச்சு திறத்தாலே வையத்தைப் வென்ற...
  6 days ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  2 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  1 year ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  1 year ago