குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)

Saturday, August 18, 2012

* * * * * 168.நட்பும் குணமும்-நாளொரு பாடல்-14


நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா [போல்
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.


நூல்: மூதுரை

ஆசிரியர்: ஔவையார்
பாடல் எண்: 24

பதம் பிரித்த பாடல்:
நல் தாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தால் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்- கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முது காட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

முக்கிய சொற்கள்:
கயம்- குளம் ; அன்னம்- அன்னப் பறவை ; கற்றார்- கல்வியறிவுடையவர் ; கற்பு- ஒழுக்கம், நெறி, கல்வி(இந்தப் பாடலில் கல்வி என்ற பொருளைச் சுட்டுகிறது) ;
மூர்க்கர்- மூடர் ; முதுகாடு- இடுகாடு, ஊருக்குப் புறத்தே உள்ள காடு

கருத்து:
நல்ல தாமரைப் பூக்கள் நிரம்பியிருக்கும் அழகிய தடாகம் அல்லது குளத்தில் நல்ல அன்னப் பறவை சென்று சேர்ந்து தங்கி இருக்கும்;அது போல கல்வி அறிவு மிக்க நல்லவர்களை கற்றறந்த மக்களே விரும்பி நண்பர்களாகி அளவளாவுவர்.
கல்வியறிவு அற்ற மூடர்களை, மூர்க்கர்களே விரும்பிச் சேர்வர்,அது புறத்தேயுள்ள காட்டில் கிடக்கின்ற பிணத்தைக் காக்கைகள் விரும்பித் தேடுவதைப் போன்றதானது.

டிட்பிட்ஸ்:

 • நல்ல சூழலையும் நல்ல பொழுதுபோக்கையும் விரும்புபவர்கள், கல்வி அறிவு மிக்க, நல்லவர்களோடு பெரும் பாலான நேரத்தைச் செலவு செய்தல் வேண்டும்.கற்றவர்களோடு அளவளாவுவதால் கற்றறிந்தவர்களோடு சேர்ந்து, நமது அறிவும் திறனும் மேம்படும்
 • மூடர்களது கூட்டணியைத் தேடிச் சேர்த்துக் கொண்டால், நமக்கு இருக்கும் இயல்பான திறமைகளும் நாளடைவில் மங்கி, நாமும் முட்டாள்களாக மாறுவோம் என்று அறிவுறுத்தும் பாடல்.
 • Tell me about your friends; I will tell you about you என்பது ஆங்கிலப் பழமொழி. அதற்கான மூலம் இப் பாடலே.
 • நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு என்பது நட்பைப் பற்றிய குறள். அறிவுடையரது தோழமை நிலவு வளர்வது போல சிறு பிறையிலிருந்து முழு நிலவாக வளரும்; மூடர்களது நட்பு முழுநிலவிலிருந்து, அமாவாசைக்குச் செல்வது போல நிறைவிலிருந்து இருளான துன்பத்தைத் தரும் என்று அறிவுடையாரது நட்பை வலியுறுத்துகிறது.


14  | 365

6 comments:

 1. நன்றி ஐயா...

  என் பொண்ணுக்கு சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வந்தது...

  ReplyDelete
 2. || என் பொண்ணுக்கு சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வந்தது... ||

  நல்ல விதயம்..

  பாராட்டுக்கள் நண்பர் தனபாலன்

  ReplyDelete
 3. அவ்வையின் பாடல்கள் எளிமையும் இனிமையும் வாய்ந்தவை.பாலும் தெளிதேனும் என்ற வெண்பா எனக்கு மிகவும் பிடிக்கும்.
  கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தாலும் இதர வரிகள் அறிந்ததில்லை. நல்ல செய்யுளை அழகாக விளக்கியதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பர் முரளிதரன்.

   || கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தாலும் இதர வரிகள் அறிந்ததில்லை. ||

   பெரும்பாலும் ஓரிரு வரிகளைக் கேள்விப்பட்ட பாடல்களை முழுதும் அறிந்து கொள்ளும் போது, அந்தப் பாடல் எழுதப்பட்ட நோக்கமும், பொருளும் தெளிவாக அறிந்து கொள்வோம் என்ற காரணத்தாலேயே, அவ்விதப் பாடல்களைத் தேடிப் போடுகிறேன்..

   நன்றி..

   Delete
 4. வணக்கம்!
  இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
  வாழ்த்துக்கள்!
  ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
  திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
  பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
  படைப்புகள் யாவும்.

  நட்புடன்,
  புதுவை வேலு,
  www.kuzhalinnisai.blogspot.com

  (இன்றைய எனது பதிவு
  "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
  சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
  குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
  படரட்டும்!
  (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

  ReplyDelete
  Replies
  1. சுட்டியதற்கும் வருகைக்கும் நன்றி திரு நம்பி.
   தங்கள் பக்கத்தை அவசியம் பார்க்கிறேன்.
   நன்றி மீண்டும்.

   Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • - அன்புடையீர்! பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு
  4 weeks ago
 • சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...
  1 month ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  7 months ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  10 months ago