குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label பலசரக்கு. Show all posts
Showing posts with label பலசரக்கு. Show all posts

Wednesday, January 29, 2014

185.குறுந்'தொகைகள்-28.01.2014

இந்து பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பில் வந்த தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா என்ற இந்தக் கட்டுரை சொல்லும் விதயங்கள் அசத்தலான உண்மை.

இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தை முடிந்த அளவுக்கு அனைவருக்கும் பரப்புவது நமது கடமை.


Saturday, February 16, 2013

181.சில சிந்தனைகள், சில கருத்துகள் - விளைவாக சிறிது மகிழ்ச்சி !

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி:

நடிகர்களே கடைத்தேற்றுவார்கள் !


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-நீவெஒகோ, நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டு தொடரப் போவதாகவும், இந்த முறை நடிகர் பிரகாஷ்ராஜ் நிகழ்ச்சி நடத்துனராக-காம்பியரர்-வரப் போவதாகவும் விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன.


நடிகர் சூர்யா இந்த நிகழ்ச்சியிலிருந்து சட்டென்று விலகிய போது நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதிலிருந்து சிலவற்றை இங்கே மறு பதிப்பு செய்ய ஆசையாய் இருக்கிறது.


Saturday, September 29, 2012

176.குறுந்தொகை'கள்-29.09.2012-சில்லரை- விற்பனை|அரசு|தலைமை|தேசியம் !!!

சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு பற்றிப் பலர் எழுதி விட்டார்கள்.இதில் வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் என்று அறியப் பட்ட பதிவர்கள் அந்தந்த நோக்கிலேயே எழுதியிருக்கிறார்கள்; இதில் வியப்பு இருக்கப் போவதில்லை.(எடுத்துக்காட்டு-பத்ரி சேஷாத்ரி அரசின் இந்த முடிவை வரவேற்று எழுதியிருப்பது மற்றும் வினவு இந்த முடிவை எதிர்த்து எழுதியிருப்பது).


எனக்கு என்னமோ பண்ணுது...சந்திரமுகி!!!

பதிவுலகைப் பொறுத்த வரை பலர் இதைப் பற்றி எழுதியிருந்தாலும், புரூனோ வின் பதிவும் சரியான கருத்தை எடுத்து வைத்தது(சற்று நீளமாக இருந்தாலும்). சுருக்கமாக அவர் சொன்னது, சில்லரை விற்பனையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விதயத்தையும் 1991 ன் பொருளாதார சீர்திருந்தங்களையும் ஒப்பிட்டு, முன்னதை வரவேற்ற பலர் பின்னதை எதிர்ப்பது ஏன்?' என்ற கேள்விக்குப் பதிலாக அவர் சொல்லியிருந்தது: முன்னதில் நாம் பயனாளர்(Service Provider, we provided some service and got benefited); பின்னதில் நாம் வாடிக்கையாளர்.(We are consumers, we consume and pay for the consumption).


Saturday, August 18, 2012

* * * * * 167.குறுந்தொகை'கள்-மன்மோகன், What is big deal ?!

சுதந்திர இந்தியாவில் இந்தமுறை பதவியிலிருக்கும் மைய அரசைப்போல் வேறு எந்த அரசின் மீதும்,மைய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகம் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததில்லை என்றே நினைக்கிறேன்.மூன்று ஆண்டு தணிக்கை அறிக்கைகளில் மொத்தமாக கிட்டத்தட்ட எட்டு லட்சம் கோடி ருபாய் அளவில்,அதாவது 8,00,000,000,000 ரூபாய்-

Friday, April 27, 2012

139.குறுந்'தொகைகள்-27.04.2012


இன்றைய செய்திகளின் படி சச்சின் தெந்துல்கர் மற்றும் ரேகா போன்றோர் மாநிலங்களவையின் உறுப்பினர்களாக நியமிக்கப் படுவார்கள் என்று தெரிகிறது.

இது நியமன உறுப்பினர் பதவி.சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வரும் வழி கூட அல்லாது,மாநிலங்களில் வாரியத்தலைவர்கள் நியமிக்கப்படுவது போல குடியரசுத்தலைவர் நியமனத்தின் படி அமைவது.

மாநிலங்கள் அவையின் நோக்கம்,மக்களவையின் விவாதங்கள் அரசியல் கட்சிகளின் வழிகாட்டுதல் படி மட்டுமே நடக்கும் நேரங்களில்,அறிஞர் குழு ஒன்று அதற்கு மாற்றாக மக்கள் மற்றும் தேச நலன்கருதிச் செயல்பட வேண்டிய தேவை இருக்கும் என்று அரசியல் சட்ட அமைப்பாளர்கள் கருதியதால் நிறுவப் பட்டது.

அது இன்று பல கேலிக் கூத்தான நியமனங்களுக்குப் பயன்படுவது நகைப்புக்கிடமானது.

தெந்துல்கர்,ரேகா போன்றவர்கள் தமது சொந்தத் திறமைகளைப் பயன்படுத்தி அந்தத் துறைகளில் மேல்நிலைக்கு வந்தவர்கள்;அவர்களால் தேச முன்னேற்றதிற்கோ,மக்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கோ ஒரு சிறிதும் பயன்பாடு இல்லை.அவர்களைப் பாராட்டலாம்,வாழ்த்தலாம்,பரிசளிக்கலாம்,பணம் அளிக்கலாம்..

பல திரைப் பதுமைகளை மாநிலங்களைவைக்கு முற்காலத்தில் தேர்ந்தெடுத்தார்கள்;அவர்கள் அவை நடவடிக்கைகளில் என்ன சாதித்தார்கள்,என்ன பங்களித்தார்கள் என்பதை யாராவது தொகுத்தளித்தால் நல்லது.

இப்போது விளையாட்டுத் துறையிலும் இது துவங்கியிருக்கிறது.

தெந்துல்கர் என்னும் மனிதர்,விளையாட்டுத் துறையின் ஐகன் என்ற வகைகளில் அவர் நியமனம் சரியானதாக இருக்கலாம்;அவர் அவைக்கு உறுப்பினர் என்ற வகையில் என்ன நியாயம் செய்வார் என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும் என்று சாரு ஷர்மா சரியாகவே சொன்னார்.

இந்த நியமனம்...சாரி,கொஞ்சம் ஓவர்!

()

ஸ்வீடன் நாட்டின் காவல் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற திரு.லின்ட்ஸ்ராமின் பேட்டிப் புத்தகம் இப்போது வெளிவந்திருக்கிறது.





போஃபர்ஸ் பீரங்கி வர்த்தகத்தில் என்ன நடந்தது என்பதை வெளிக் கொண்டு வந்தது அவரது மனசாட்சி உறுத்தியதால் மட்டுமே;இந்து பத்திரிக்கையின் சித்ராவும் ராமும் அதைக் கையில் வைத்துக் கொண்டு கிட்டத்திட்ட இரண்டு ஆண்டு இந்து பத்திரிகையின் விற்பனையை ஒப்பேற்றினார்கள்.

சித்ரா ஏதோ தானே புலன் விசாரணை செய்து கண்டு பிடித்தது போல பல பில்ட்அப் செய்திகள் கொடுத்தார்;ஆனால் உண்மையில் திரு லின்ட்ஸ்ராம் தானே வலியப் போய் சித்ராவிடம் வேண்டிய ஆவணங்களை அளித்திருக்கிறார்,எப்படியாவது இந்த ஊழலின் செய்தி வெளிவர வேண்டும் என்று கருதியதால் !

அப்படி இருந்தும்,நமது அரசுகளும் சிபிஐயும் 20 ஆண்டுகளாக 250 கோடி ரூபாயைப் பொசுக்கி விட்டு ஸ்வீடன் அரசும் அமைப்புகளும் வலிய வந்து தந்த செய்திகளை அரைக்கண் மூடி,பார்க்காமல் இருந்து விட்டு அந்த வழக்கில் ஒன்றும் பிடுக்க வில்லை.ஆனால் இப்போது தெளிவாக அறிக்கையில் க்வாட்ரோச்சிதான் இடைத்தரகின் பலனாளர் என்றும் அவரைக் காப்பாற்றவும்,இந்திய சட்டத்தின் கரங்களிலிருந்து அவர் தப்பிக்கவும் ராஜீவும் சோனியாவும் எல்லா சாத்தியங்களையும் மீறி உதவினார்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

ஆனால் நாமெல்லாம் எருமைத்தோலர்கள்..எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம்;இரண்டு லட்சம் கோடி ஊழல்களையெல்லாம் வெற்றிகரமாக சீரணித்து சிவநிலையில் ஆழ்த்திருக்கிறோம்;பிசாத்து 64 கோடி ஊழல்,டிப்ஸ் கொடுத்த மாதிரி நினைத்து மறந்து விட்டிருக்கிறோம்..

ஆனால் ஒன்று,64 நடக்கும் போதே நிறுத்தி ஆப்படித்திருந்தால்,2 லட்சம் கோடியைப் பாராமல் தப்பித்திருந்திருப்போம்!

விதி வலியது!

()

ஆசிய நாடுகளில் குறிப்பாக நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் சூரிய ஒளியை மின் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் உத்திகள் நன்றாக உதவக் கூடியவை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெக்ட்ரா காற்றாலை நிறுவன ஆசியத் தலைவரை சந்திக்க நேர்ந்த போது அவர் மாற்று மின்சக்திக்கான வாய்ப்புகள் தொழில் அளவில் ஆசியக் கேந்திரத்தில் பிரமாதமாக இருக்கும் என்று அவரது நிறுவனம் நம்புவதாக முன்னுரைத்தார்.

இந்தியாவில் குஜராத் மாநிலம் அதைப் பெருமளவு சாதித்துக் காட்டியிருக்கிறது;இன்னும் தன்னிறைவுக்கும் உபரியான மின்சக்திக்கும் நர்மதை நதிக் கால்வாய்களில் நீர் மட்டத்திற்கு மேல் சூரிய ஒளி மின்சக்தித் தயாரிப்புத்  தகடுகளைப் பதிக்கும் பணி நடைபெறுவதாகவும் இயலுமானால் நர்மதை நதிப் படுகையின் மேலும் இதைப் பரிசீலித்துப் பார்க்கலாம் என்றும் மோடி விரும்புவதாகச் செய்திகள் வருகின்றன.

எல்லாவித குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் செயல்படும் ஒரு முதல்வராகவும், புதிய பாதைகளை வகுப்பவராகவும் மோடி தெரிகிறார். தமது சூழலுக்கேற்ற வகையில் புதிய திசைகளில் சிந்திப்பவர்கள்தான் எப்போதும் சாதனையாளர்களாக மாறுகிறார்கள் !

பொதுவாக எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்தி செய்யும் ஒரு அரசியல் தலைவர் எங்கும் சாத்தியமில்லை;சிங்கப்பூரின் லீ சீனியரை உள்நாட்டில் திட்டும் பல சிங்கப்பூரர்கள் ஏதாவது ஒரு வேறு ஆசிய நாட்டில் ஒரு வருடம் வசிக்க நேர்ந்தால் திரும்ப வந்து லீ'யின் காலைத் தொட்டுக் கும்பிடுவார்கள் என்பது நிச்சயம் !


மோடி பிரதமாரானால் இந்திய அரசியலிலும் அரசாண்மையிலும் நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது.

இந்திய அரசியலில் வாராது வந்த மாமணி !

()

பதிவுலகில் ஒரு போக்கை சமீப காலமாக அவதானிக்கிறேன்.

எழுதுபவர் பெண்ணாகவோ அல்லது பெண் பெயரிலோ எழுதினால் ஆகா,பிரமாதம்,பேஷ் பேஷ் என்று  வரிசையில் வந்து சொல்வதற்கு ஒரு கூட்டத்தினர் காத்திருப்பது போல் தோன்றுகிறது.

பதிவுலகில் பல அனுபவங்கள் இருந்த போதிலும் கீதா சாம்பசிவம்,காயத்ரி சித்தார்த்,மதுமிதா,செல்வநாயகி,மங்கை,துளசி கோபால்,தமிழ்நதி போன்ற பெண் பதிவர்கள் காத்திரமாகவும்,கருத்துடனும் எழுதிக் கொண்டிப்பதைப் பார்க்கிறேன்.

அவர்களுடைய பதிவுகளில் அச்சுப் பிச்சென்ற பின்னூட்டங்கள் இருக்காது.ஆனால் சில சமீபத்திய பெண் பெயரில் தோன்றும் பதிவுகளில் இவ்வித விசில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதாகத் தோன்றுகிறது.

இது தோற்றப் பிழையா என்று தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.



()



இந்த குறுந்தொகைக்கான நகைச்சுவை ! சிறிது அவலச் சுவை சார்ந்திருந்தால் மன்னிக்கவும் !

:))

மேற்கண்ட பதிவிற்காக பதிவர் காவிரி மைந்தனுக்கும், படங்களுக்காக தினமலர்,என்டிடிவி'க்கு நன்றியுடன்

()

ஒரு பிற்சேர்க்கை..இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த தினமணி மதியின் தெந்துல்கர் நியமனம் தொடர்பான கார்ட்டூன் சொல்ல வேண்டியதை நச்சென்று இதை விட சொல்ல முடியாது.

பத்ரிக்கு சிறப்புப் பார்வை !
:))

Monday, September 13, 2010

123.குறுந்'தொகைகள்-13092010

தலையும் வாலும் ஒன்றா?
இன்றைய தினமணியின் தலையங்கத்தில் ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.காஷ்மீரில் மாநில அரசு கலைக்கப்பட்டு மாநிலம் இராணுவத்தின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு மாநிலத்தின் வன்முறை நிகழ்த்தும் சக்திகள் துடைத்தெடுக்கப்படவேண்டும் என்பதுதான் அது.காட்டுத்தனமான கருத்தாகத் தோன்றும் இது விவாதமேடைக்கு உரியது.

ஆனால் என்னை யோசிக்கவும் விசனிக்கவும் வைத்த வரிகள் இரண்டு இந்தத் தலையங்கத்தில் இருந்தன.

தமிழர்களின் நியாயமான கோரிக்கையை மறுத்து ராசபட்சயவுக்கு ஈழத்தமிழர்களைக் கொன்றழிப்பதற்கு உறுதுணையாக முன்நின்ற இந்திய நடுவன் அரசு ஏன் அநியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் காஷ்மீரில் இருக்கும் பாக் தீவிரவாதிகளைக் கொன்றழிக்க ராணுவத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தக் கூடாது என்று எழுப்பியிருக்கும் கேள்வி.

இந்த லட்சணத்தில் காஷ்மீரில் இருந்த 7 மாவட்டங்களில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற ஃபரூக் அப்துல்லாவின் கோரிக்கையை மன்மோகனும்,ப.சிதம்பரமும் ஆதரித்து விட்டதாகவும் பிரணாப்பும் அந்தோனியும் தீவிரமாக எதிர்ப்பதாலும்தான் ராணுவம் இன்னும் காஷ்மீரில் இருக்கிறது என்ற செய்தியும் வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு தீவிரவாதிகளையும் மதவியலாளர்களையும் சரியாகத் தரம் பிரிப்பதில் காமைலைக் கண் சிக்கல் இருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தத் தலையங்கத்திற்கு வந்திருக்கும் சில கருத்துக்களில் மோடியை காஷ்மீரின் முதல்வராக நியமிக்கலாம் என்று வந்திருக்கும் அதிரடிக் கருத்தும் இருக்கிறது.

பரீட்சித்துப் பார்க்கலாமோ?!

()

உயர்சாதீயம்பிராமனீயம்

பதிவர் டோண்டு ராகவனின் இந்தப் பதிவில் எழுப்பியிருக்கும் அறிவார்ந்த கருத்துக்களை ஒட்டி சில கேள்விகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

அவர் கடையைக் கலகலப்பாக வைத்திருக்க அவ்வப்போது இவ்வித சாதீயபிராம்மணத் துவேஷம் பற்றிய பதிவுகள் எழுதுவது வழமை என்ற பரவலான கருத்தும் பதிவுலகில் இருப்பது ஒரு புறமிருக்க,எழுப்பியிருக்கும் கேள்விகளில் சில சாரமான கேள்விகள் இருக்கின்றன.

பஞ்சகச்சம் எனப்படும் ஆடையும் விபூதியோ அல்லது நாமதாரியாகவோ இருந்தால் வடமாநிலங்களில் பண்டிட்ஜி ஆயியே என்று மதிப்பார்கள் என்றும் சொல்லப்போனால் தமிழகத்தில் மட்டும்தான் முறையற்ற பிராமணர்களின் மீதான நிந்தனை இருக்கிறது என்பதும் ராகவனே குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள்.மேலும் இவற்றிற்கான காரணிகளாக பெரியார் மற்றும் திராவிட அரசியல் கட்சிகள் 40 ஆண்டுகளாக ஊதி வளர்த்த நிந்தனை நெருப்புமே காரணம் என்ற கருத்தும் வந்திருக்கிறது.

எனக்கு அவ்விதம் தோன்றவில்லை.

சாதியக் காரணங்களை முன்னிறுத்தி தன்னை மற்றவரிடமிருந்து உயர்ந்தவர்கள் என்று ஒரு சாரார் சொல்லும் போது அவர்களை அவர்களின் உண்மையான திறன் மற்றும் தகுதிகளுக்காக மட்டுமே மதிக்க முடியும்,பிறந்த சாதிக்காக அல்ல என்று மாமன்னன் இராசராசன் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டிருந்த சமூகச் சீர்திருந்தங்களுக்கு வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

மேலும் 2000 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் போதும் ஆரிய வடவர்களுக்கும் தென்னகத் தமிழர்களுக்கும் மூண்ட யுத்தம் பற்றியும் ஒருவர் மற்றொருவர் ஆதிக்க இடங்களுக்கு உரிமை கொண்டாடக் கூடாது என்று ஏற்பட்ட உடன்படிக்கை பற்றியும் இந்தப் பதிவில் விளக்கியிருக்கிறேன்.

கடந்த 50 ஆண்டுகளுக்குள் பிராமணர்களின் மீதான குறிவைத்த நிந்தனை பெரியார் மற்றும் திராவிடக் கட்சிகள் ஏற்படுத்தியதாக இருக்கலாம்;நமக்கு நினைவு மிகவும் மட்டு,வரலாற்றில் சமீபத்திய நிகழ்வுகள் மட்டுமே சட்டென்று நினைவுக்கு வரும்; எனவே பொதுப்புத்தியில் அந்த நிந்தனை உறைந்து போயிருக்கிறது.

மற்றபடி அவர் நுண்ணறிவியல் தொழில்கல்விக்குச் சேரும் போதே பிராமணர் என்பதை பெருமையுடன் ஒத்துக் கொண்டதாகச் சொல்லும் அதேநேரம், தான் சாதீயக் காரணத்திற்காக பெருமைப்படுபவன் அல்ல என்றும் சொதப்பலாக பதில் அளித்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் நீயா நானாவில் வந்த லாவண்யா என்னும் பெண் உளறிக் கொட்டியதுதான் நினைவில் வருகிறது.

மற்றபடி பார்ப்பனீயம்உயர்சாதீயம் பற்றிய அவரது கருத்தை மாறிவிட்ட இன்றைய சமூக சூழலில் நோக்கும் போது நான் முழுமனதுடன் ஏற்கிறேன்.

மொத்தமாக எல்லா ஈயங்களும் தொலைந்து போகும் போதே சமூக அமைதி நிலவும். அல்லது எல்லா ஈயங்களும் வன்மை பெறும் போதும் கூட அமைதி நிலவலாம்...இப்போது இலங்கையில் நிலவும் 'அமைதி' போல...

()
வலையுலகம்-வரமா,சாபமா?

பதிவர்கள்-நர்சிம்,கேபிள் சங்கர்,அப்துல்லா,வேறு சிலரும் இருக்கலாம்,நினைவில்லை- கலந்து கொண்ட நீயா நானா நேற்றுத்தான் சிங்கையில் ஒளிபரப்பப்பட்டது.
-சாபம் என்று பேசிய ஒருவர் முன்வைத்த,'அதிகம் தேடப்பட்ட சொல் காமம்தான்' என்ற வாதம் எளிதில் செல்லுபடியானது,அதில் உண்மையிருந்ததால்!
-இதிலும் ஒரு பிராமணப் பெண் அவா,இவா என்ற பாஷாதி விதயங்களுடன் உளறிக் கொண்டிருந்தார்,கடைசியில் அவரது தாயும் கோபியும் மடக்கிய கேள்வியில் பரிதாபமாகத் தோன்றினார்.
-அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சுருக்கமான முடிவு;தேவைக்கு தேவையான அளவில் உபயோகிப்பது உபத்திரவம் இல்லாதது.
-நர்சிம் அவ்வப்போது-அல்லது எப்போதும்(!)-கால் மேல் கால் போட்டு நெளிந்தபடி அமர்ந்திருந்தார்,ஒரு வேளை இருக்கையின் மத்தியில் ஆணி இருந்ததோ? (நண்பரே,சும்மா கலாய்ப்பு..no peelings of india)
-இணையம் ஒரு வரம் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை எனது கருத்தாகவும் பதிவு செய்கிறேன்;பங்கு வர்த்தகம்,நிதிச் சந்தைகளில்(ஒரு நாளின் வணிகம் 3 ட்ரில்லியன் டாலர்கள்,அதாவது 1000 பில்லியன்,அதாவது பத்து லட்சம் மில்லியன்,அதாவது...போங்கப்பா,மயக்கம் வருது.. ) ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான சில்லரை வணிகம் போன்ற வாய்ப்புகளுக்கும்,டோண்டு ராகவன்பாடகி சின்மயி போன்றவர்கள் மொழிபெயர்ப்பு போன்ற துறைகளில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருப்பதற்கும் இணையமே மூலம் என்பதை மறுக்கவியலாது.
-சுஜாதா இளமை பற்றி ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார் 'இளமை என்பது ஒளிக்கீற்று போலத் தோன்றி மறையும் அற்புதங்களில் ஒன்று,இதை காதலிக்காகக் காத்திருத்தல்கள் போன்ற அநாவசியமான விதயங்களில் விரயம் செய்ய வேண்டாம்' என்று. அதே போலவே இணையமும்..ஃபேஸ்புக்,மின்னரட்டை போன்ற நேரக் கொல்லிகளின் வழி இணையத்தையும் நேரத்தையும் வீண்டிப்பவர்கள் பாவத்திற்குரியவர்கள்..வேண்டாத பதிவுகளை எழுதி நிரப்பும் நம்மைப் போன்ற பதிவர்களும் இதில் அடங்குவார்களா என்று எவரும் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

Wednesday, August 25, 2010

121.குறுந்'தொகைகள்-25082010

வலைப்பக்கங்களிலிருந்து நீண்ட ஒய்வு எடுத்துக் கொண்டு விட்டதால் இப்போது புத்துணர்ச்சியுடன் மறு வருகை!

()

மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நாடு தழுவிய முறையில் நடத்தலாம் என்ற அரசின் கொள்கை முடிவும்,அதைத் தொடர்ந்த தமிழக அரசின்,நீதிமன்றத் தடையுத்தரவும் இப்போதைய செய்திகள்.இது பற்றிய தினமணியின் இன்றைய தலையங்கத்தில் தமிழகத்தின் தடை உத்தரவு முயற்சியை விமர்சித்து எழுதப்பட்ட தலையங்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் மூன்று.அரசு இதனை எதிர்ப்பதற்காக சொல்லப்படும் காரணங்கள் சொத்தையானதாக இருப்பதாகத் தோன்றுகிறது.
இது பற்றிய விவரமான பதிவை புரூனோ எழுதிக் கொண்டிருக்கக் கூடும்;பார்க்கலாம்.

()

ஒரு சிறு விடுமுறையில் இந்தியா சென்று வந்தேன்.காரணம் ஒரு விநாயகர் கோயில் குடமுழுக்கு.

நாத்திகம் பேசும் நல்லவர்கள் இந்தப் பத்தியை ஒதுக்கி விடலாம்;ஆனால் அவர்களின் விவாதத்திற்கும் ஒரு விடயம் இருப்பதை அவர்கள் இழந்து விடுவார்கள்!

கோயில்(கோயிலா,கோவிலா-கோ+இல்-தலைவன் அரசன் இருக்கும் இடம் என்று பொருள் தரும் கோயில் என்பதே சரி என்பது எனது எண்ணம்!) எனது மூதாதையர்கள் கட்டிய ஒன்று.எனது தாத்தா வழிநடையாகச் சென்ற போது வெள்ளிப் பணப் பை முடிச்சை, தங்கி இளைப்பாறிய கோயிலில் மறந்து விட்டு பயணத்தைத் தொடர்ந்து விட்டதாகவும்,இழந்த பணப்பையை உணர்ந்து மீண்டும் திரும்பி வந்த பார்த்த பொழுதில் பணப் பை முடிச்சு பசுவின் சாணத்தால் மூடப்பட்டு அங்கேயே இருந்ததாகவும்,அதனால் நெகிழந்த தாத்தா,அந்தப் பணம் முழுவதையும் அந்தக் கோயிலின் சீரமைப்புக்குச் செலவு செய்து கட்டியதாகவும் கேள்வி.இப்போது 40 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு குடமுழுக்கு.

விதயம் அதுவல்ல.இந்தக் குடமுழுக்கு எங்கள் குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டுகளில் நடத்தும் இரண்டாவது கோயில் குடமுழுக்கு.முதல் சிவன் கோயில் குடமுழுக்கு ஆகம முறைப்படி சமத்கிருத வழியிலேயே நடந்தது.

பின்னர் எனது திருமணம் நடைபெற்ற போது,தமிழ் முறையில் திருமுறைத் திருமணமாக நடத்தினோம்;இப்போது இந்த விநாயகர் கோவிலின் குடமுழுக்கும் தமிழ்வேதவழி திருமுறைப் பாடல்களால் நிகழ்த்தப் பட்ட குடமுழுக்காக நடத்தப்படவேண்டும் என்ற உறுதி இருந்ததால் அப்படியே நடத்தினோம்.
ஆனால் இதற்காக பலத்த எதிர்ப்பை கோவில் குருக்கள் மற்றும் அவருடைய கூட்டத்தவரால் நாங்கள் சந்திக்க வேண்டி வந்தது;அந்த எதிர்ப்பின் கூர்ப்பு எங்களை எதுவும் செய்து விடுமளவுக்கு இல்லையெனினும்,கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தும்,கோவில் பூசை முறைகளைக் கவனியாதிருந்தும் தனது எதிர்ப்பை மேதமை மிகுந்த குருக்களவர்கள் காட்டி வருகிறார்.

இது தொடர்பாக நடந்த ஊர்க் கூட்டத்தில் எங்களது தரப்பை-அதாவது தமிழ் வழியிலேயே குடமுழுக்கு நடத்தப் பட வேண்டும் என்பதற்கான அழகிய,வலுவான காரணங்களை எடுத்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்த அனுபவத்தில் நான் கண்டு மகிழ்ந்த ஒன்று-கிராம மக்கள் உள சுத்தியோடு வைக்கப் படும் கூற்றுக்களை செவிமடுத்ததோடு மட்டுமல்லாது,தோள் கொடுத்துப் பாராட்டியதும்,துணை நின்றதும் மறக்க இயலா நினைவுகள்.உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றானே, நமது தமிழ்த் தோழன்..அதுதான் பொருள் போலும்!

குருக்கள் தரப்பிலிருந்து அந்த வாதப் பிரதி வாதங்கள் நடந்த நேரங்களில்,நாங்கள் இறைவனின் விந்துவிலிருந்து பிறந்தவர்கள்,நாங்கள் என்ன செய்தாலும்(மது,மாது,மயக்கம்,கொலை...மற்றும் இன்ன பிற)நாங்களே பூசைக் காரியங்களுக்கு உகந்தவர்கள்,வேற்றுப் பிறப்பாளர்கள் இறை பிம்பத்தை அணுகுவதையோ,தமிழ் மொழியில் குடமுழுக்கு நடப்பதையோ அனுமதிக்க முடியாது என்று சண்டித்தனம் செய்தார்கள்.
எங்கள் உறுதியினாலும்,கிராமத்தவர்களின் உறுதுணையினாலும்,பின்னர் நாங்களே தமிழில் குடமுழுக்கு நடத்த ஆட்களை கொணர்கிறோம் என்று முன்வந்தார்கள்; அவர்கள் கொண்டு வரும் நபர்களோ மாலையானால் மயங்கி,சொப்பன வாழ்வை ரசிக்கும் பேர்வழிகள்..எனவே அனைத்தையும் புறந்தள்ளி, தமிழ் முறையில் திருமுறை பதிகங்களின் பிண்ணனியில் குடமுழுக்கு பெரும் எதிர்ப்புகளுக்கிடையில் இனிதாகவே நடந்தேறியது.

மிகுந்த நிம்மதியுடனும் உளத் திருப்தியுடனும் எங்கள் ஊருக்குத் திரும்பிய போது இரவு மணி 9.00.(கோவில் இருக்கும் ஊர் எங்களது ஊரிலிருந்த 20 கிமீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமம்).

மறுநாள் காலை எங்களை வந்து சந்தித்த ஊர்ப் பெரியவர்கள்,என் அம்மாவிடம் சொன்னார்கள்-'அம்மா, தனி ஒரு நபராக நின்று அரும் செயலைச் செய்து விட்டீர்கள்,நேற்றிரவு 10 மணிக்கு துவங்கிய மழை இரவு முழுவதும் அடித்துப் பெய்து அதிகாலைதான் நின்றது.எங்களுக்கு மெத்த மகிழ்ச்சி' !!!

சில விதயங்களில் மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட சக்திகள் செயற்படுகின்றன என்பது உண்மைதானோ?

()

Friday, April 2, 2010

119.குறுந்தொகை'கள்-02042010

பதிவர்களுக்கான சென்னை குழுமம் அல்லது சங்கம் அமைப்பதைப் பற்றிய பலரது பதிவுகள்-நண்பர் பைத்தியக்காரனின் கோபமான,வருத்தமான பதிவு,அதற்கு உ.த வின் எதிர்ப்பதிவு உள்பட-படித்த போது சில எண்ணங்கள் தோன்றியது.

உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்தானே புலவர் தொழில்!
ஆனால் உம்பேச்சு கா..வரைக்கும் போயிருக்கும் போல இருக்கிறது....

முதலில் அப்ஜெக்டிவ் என்ன என்பது முக்கியம்;என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் முக்கியம்.

அதைப்பற்றிய தெளிவு இல்லையென்றால் குழப்பம்தான் மிகும்;இரண்டாவதாக இது அதியமான் சுட்டியிருப்பது போல ஒரு சமூகக் குழுமம் மட்டுமே.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத போதே இந்த வித சந்திப்புகள் மகிழ்வைத் தரும்.

இந்தப் பின்னணி வெண்பூவின் பதிவு மிகவும் யோசிக்க வைத்தது.கேபிள் சங்கர் குழுமப் பதிவு தன்னுடைய ஐடியில் இருந்து உருவாக்கப் பட்டதால் அக்டோபர் 09 காட்டுகிறது என்று சொன்னாரே தவிர ஏன் இத்தனை காலம் ஒன்றும் முன்னெடுப்பு இல்லை;இப்போது என்ன அவசரம் என்பதற்கெல்லாம் பதில் இல்லை.

ஆக்டிவ் ஆன பதிவர்கள் சிலர் அமைப்பு வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார்கள்;அவர்களுக்கான இருக்கும் இயல்பான exuberance காரணமாக இருந்தாலும்,தன் முனைப்பு|முன்னிறுத்தல் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமே.ஆனால் என்ன அப்ஜெக்டிவை மனதில் வைத்து நாம் முயற்சிகளைச் செய்கிறோம் என்பது நர்சிம் சொன்னதைப் போல முக்கியம்.

குறிக்கோள் இலாது கெட்டேன் என்பது வாசகர் வாக்கு!

இதற்கெல்லாம் மேல் ஒரு அமைப்புக்குள் பணப்புழக்கம் வரும் போது அது சார்ந்த பல பிரச்னைகளும் புழுக்கங்களும் கூடவே வரும்;இந்த புழுக்கங்கள் உண்மையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று முனைந்த தன்னுடைய நேரம் முயற்சிகளைத் தரும் சிலருக்கு ஆழ்ந்த மனவருத்தத்தைத் தரும்;இதை பல அமைப்புகளில் பார்த்து அனுபவித்ததால் சொல்கிறேன்.மேலும் அமைப்புகளின் சொத்துக்களை|பணத்தைக் கையாள்வதற்கு சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்ற அளவுக்கு தன் நேர்மை கொண்டவர்கள் அவசியம்;அவர்கள் கண்டறியப் பட்டு விட்டார்களா என்று சராசரி வலைப் பதிவனுக்கு இருக்கும் கேள்விக்கு பதில் வேண்டும்.
எவராவது அரசியல் சார்புரியவர்கள் இப்பொறுப்புக்க வந்தால்,அமைப்பு ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் கூட்டங்கள் சட்டசபை போன்ற அடிபிடிக் கூட்டங்களாக மாறும் சாத்தியங்கள் மிக அதிகம்.

இப்போதைய நிலையில் ரைட்டர்ஸ் கில்ட் போன்ற தரமாக வைக்கப்படும் வலைப்பதிவுக் கருத்துக்களுக்கு கருத்துச் சுதந்திரம் தரும் அல்லது கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அளவுக்கான ஒரு அமைப்பு என்ற அளவில் அக்கருத்து வரவேற்கப்படவேண்டியது;அந்த அமைப்புக்குள் வரும் பதிவர்கள் நாகரிக எழுத்துக்கான உறுதிமொழியைத் தரவேண்டுவதும் அவசியம்.

புத்தகமெல்லாம் வெளியிட்ட ஒரு பிரபள(பிழை அல்ல) பதிவன் மாற்றுக் கருத்தை ஏற்க மனமின்றி,முக்காடு போட்டுக் கொண்டு முட்டுச் சந்தில் மூத்திரம் அடிப்பது போல என்னுடைய பதிவில் முகமற்றுக் கழிந்து விட்டுப் போயிருந்தான்.அவன் போன்ற நபர்கள் அமைப்புக்குள் அல்லது பொறுப்புக்குள் இருந்தால் கதை கந்தலாகி விடும்.

எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சூழலை கற்பனை செய்யுங்கள்-நாளைக்கோ அல்லது அடுத்த மாதமோ கூகுள் குழுமம் பதிவு வைத்திருக்க விரும்புவோர் வருடத்திற்கு 100 அமெரிக்க வெள்ளி செலுத்த வேண்டும் என்று அறிவித்தால் 90 சதவிகிதப் பதிவர்கள்|பதிவுகள் காணாமல் போகும் நிலை வரலாம்!அப்போது இருக்கும் 10 பதிவர்கள் சங்கத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதையும் கடைசி அஜண்டாவாக இப்போதே யோசித்து வைக்கலாம்!!

இப்போதைக்கு தோன்றுவது...போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைங்கப்பா!

()


ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்போதுதான் பார்த்தேன்.

பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல என்று ஒரு பதப் பிரயோகம் எங்கள் பக்கங்களில் சொல்வார்கள்,அதுதான் நினைவுக்கு வந்தது.காறித் துப்ப வேண்டும் போல் இருக்கிறது!

இதைப்பற்றிய கார்க்கியின் பதிவை 200 சதம் ஆதரிக்கிறேன்;வழி மொழிகிறேன்.

ரீமாவின் தொடையை மட்டும் நம்பி 32 கோடி வேஸ்ட்!
இதைப் பற்றி(மேல் வரியைப் பற்றி அல்ல,ஆ.ஒ.பற்றி !) விரிவான பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

()

ஐபிஎல் போட்டிகளைப் பற்றி எழுதாவிட்டால் சாமி கண்ணைக் குத்துமாமே..சச்சின் மற்றும் ஹர்பஜனின் சரவெடிகள் வாண வேடிக்கைகள்!தொடர்ச்சியாக அனைத்துப் போட்டிகளையும் பார்க்கவோ அல்லது செய்திகளைக் கவனிக்கவோ கூட முடியாத அளவுக்கு நேர மேலாண்மைக் குடைச்சல்கள் இருக்கின்றன!

()

சென்னை மயிலையில் ஒரு 1BHK முதல் தள வீடு நல்ல சூழலில் வாடகைக்கு இருக்கிறது-சித்திரக்குளம் அருகில்;கார் நிறுத்த வசதிகள் இல்லை;முற்றிலும் சைவ உணவுப் பழக்கம் உடையவர்கள்(மட்டும்) வரவேற்கப் படுகிறார்கள்.மின்மடலில் தொடர்பு கொண்டால் விவரங்கள் பெற்றுத் தருகிறேன்.


()

இப்போதைய புதிய வரிசை இண்டெல் ப்ராசசர்கள் ஐ வரிசையில் வருகின்றன.இத்தகைய மடிக்கணினிகள் 64 பைட் என்று வருவதாகச் சொல்கிறார்கள்(முந்தையவை 32 பைட் வகை).இந்த வகை கணினிகளில் மைக்ரோசாஃப்டின் 2003 நெட்வொர்க் இயக்கு மென்பொருள்(ஆபரேட்டிங் சிஸ்டம்) சரிவர வேலை செய்யாது என்று ஒரு கணிப்பு சொல்கிறார்கள்.நிபுணர்கள் எவராவது இருந்தால் சிறிது தெளிவித்தால் மகிழ்வேன்.

The requirement is to have MS 2003 network OS to be installed in machines with i-3/5/7 series Intel processors.

Any solution?


******

Friday, January 1, 2010

112.குறுந்தொகை'கள்-01/01/2010

வலைப்பக்கங்களில் இப்போது அதிகம் எழுதித்

தள்ளப்படும் வஸ்துவாக மாறிக் கொண்டிருப்பது

கவிதை.கவிதைகள் என்று எழுதப்பட்டிருக்கும் பல

பத்திகளைப் படிக்கும் போது தொண்டை ஞமஞம

என்று ஒரு புதுவித அவஸ்தை உணர்ச்சி பீறிடும்

வகையான புதுக்கவிதைகள் அதிகம்

எழுதப்படுகின்றன.எந்தவிதமான கவிதை அனுபவமோ,நிகழ்வு

நெகிழ்ச்சியோ விவரிக்காத இவ்வகைப் பத்திகளை

மாய்ந்த மாய்ந்து எழுதும் அன்பர்கள் எல்லாம்

பேருந்து நிலையங்களில் விற்கப்படும் கவிதை

ஊக்கியான குஸ்கான் கவிதை லேகியம் மாதிரி

ஏதாவது வாங்கி மகிழ்ந்திருப்பார்களா என்று

தெரியவில்லை.இவ்வகைக் கவிதைப் பத்திகளை எழுதுவது ஒன்றும் சிரமமான காரியமல்ல;உங்களுக்குப் சிந்தையில் பீறிடும் எண்ணங்களை ஒரு பத்தியாக முதலில் எழுத வேண்டியது,பின்னர் இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு அப்பால் எலிக்குட்டியை வைத்து ஒரு எண்டர்'தட்டு தட்ட வேண்டியது...இவ்வகை முயற்சியை சளைக்காமல் முழுப்பத்திக்கும் நீட்டினால் தீர்ந்தது விஷயம்,கவிதை ரெடி!சமீபத்தில் வலையுலகில் எண்டர் கவிதைகள் என்று ஒரு பதம் வழக்கில் இருக்கிறது;அது இவ்வகைக் கவிதைகளைத்தான் சுட்டுகிறதோ என்று ஒரு சம்சயம் எனக்கிருக்கிறது.

()


விஜய் தொலைக்காட்சியில் வரும் சூப்பர் சிங்கர்/ஜூனியர் நிகழ்ச்சி தவற விடக் கூடாத ஒரு நிகழ்ச்சியாக சமீப காலங்களில் மாறிவருகிறது என்று நான் ஏற்கனவே சில பத்திகளில் சொல்லியிருக்கிறேன்;இந்த நிகழ்ச்சி சமீப நாட்களில் சேர நாட்டுப் பெரும்பான்மையினரால் ஆக்கிரமிக்கப் படுகிறதோ என்று ஒரு நினைவு வருவதை தவிர்க்க இயலவில்லை;நீதிபதிகளில் இருந்து தொகுப்பாளரிலிருந்து,பாடுபவர்கள் வரை பெரும்பான்மையினர்கள் மலையாள நண்பர்களாக இருப்பதன் ரகசியம் அல்லது அல்லது அது அல்லாத தன்மை என்ன என்பது விளங்கவில்லை.

ஆனாலும் சிறு குழந்தைகள் என்னமாய்ப் பாடுகிறார்கள் என்பதை பார்த்தால்தான் நம்ப இயலும் போலிருக்கிறது;ஒரு தொழில்முறை பாடகருக்கிருக்கும் பெர்பெஃக்ஷன் 12 வயது குழந்தைகளின் பாடல்களில் இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது நமது தலைமுறைக்கும் அடுத்த இளைய தலைமுறைக்குமான திறன்/ஊக்கத்தில் இருக்கும் வேறுபாடு வியப்பான மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அதிலும் ஒரு லட்ச ரூபாய்க்காக சிறுவர் சிறுமியர் போட்டியிட்ட சமீபத்திய-இது உண்மையிலேயே ஒரு வாரத்துக்குள்ளான சமீபத்திய'-எபிசோடில் அல்கா மற்றும் ரோஷன் ஆகியோர் பாடிய -அதிலும் கடைசி சுற்றை-சுற்றை பார்க்க/கேட்க வாய்ப்பில்லாதவர்கள் அபாக்கியவான்கள்!

()


சென்ற 2009 மற்றும் ஒரு வருடம் என்ற அளவில் பலருக்கு இருந்தாலும்,இலங்கையில் நடந்த நிகழ்வுகள் மாறாத வடுவாக தமிழர்களின் துயர நினைவில் பதித்துவிட்டுச் சென்ற ஆண்டு.அதிலும் புலிகளின் தலைவர் இறந்திருக்கலாம் எனில் அது எவ்வாறு நடந்தது என்பதை காட்டும் ஒரு ஒளித்துண்டு இணையத்தில் வந்தது.ஒரு மனிதனின் மீதான வன்முறை எவ்வளவு கோரமாக வெளிப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற எண்ணத்தின் எல்லைகளை மீறிய அந்தச் செயல்கள் எந்த ஒரு நாட்டின் ராணுவமும் செய்யக்கூடிய செயல்களல்ல.

ஒட்டியும் வெட்டியும் பல விவாதங்களும்,பல தியரிகளுக்கான புத்தகங்களும் வெளிவரும் இந்த நேரத்தில் ஒரு உண்மை மட்டும் முகத்தில் அறைகிறது;புலிகள் மற்றும் பிரபாகரனின் இருப்பு மறைந்த சூழலில் இலங்கையில் தமிழர்கள் நீரிலிருந்து எடுத்துப் போடப்பட்ட மீன்கள் போல!கழுகுகளோ அல்லது காக்கைகளோ கொத்துவதற்கு எந்த தடையும் இல்லை;அதைத் தட்டிக் கேட்கவும் எந்த நாதியும் இல்லை.

இந்திய தமிழக அரசுகள் ?

தூ வென காறித் துப்பினாலும் சுரணையற்ற பதவி வெறியர்களின் இருப்பு எங்கும் இருப்பது பற்றிய பொருட்படுத்தலில்லாத மக்களும்,மக்களுக்காக அரசு என்பதைப் காற்றில் பறக்க விட்டு விட்டு ஒட்டுக்களை பணத்தை எறிந்து வாங்கி விட முடியும் என்று நம்பும்,நடத்திக் காட்டும் அரசும் வழமையாகி விடுமோ என்ற பயம் வருகிறது.

2009 க்கான இனிமையான மீள்நினைவு எவருக்கும் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.


()


ஜெமோ,மனுஷ்யபுத்திரன்,சாரு தொடர்பான சில நிந்தனை/எதிர் நிந்தனைகள் இணையத்தில் இறைத்து விடப்பட்டிருக்கின்றன.பெரிய மனிதர்களாக வேடம் போடுபவர்களின் சின்னத் தனங்கள் வெளிவரும் போது பொறுக்க முடியாத நாற்றத்தைக் கிளப்பும் என்பதற்கான சான்றுகளே இவை என்று சொல்வதைத் தவிர ஒன்றும் இல்லை.

ஆனால் கவிதைக்கான பார்வை பற்றிய ஜெமோவின் பார்வை பற்றிய ஒரு விளக்கப் பத்தி என்னைக் கவர்ந்தது.கொஞ்சம் புண்-நவீனத்துவமாக இருந்தாலும்!

Monday, November 16, 2009

110.குறுந்' தொகைகள்-161109

இலங்கையில் இந்த வருட மத்தியில் நடந்த கோர மனித இன அழிப்பு இந்த நூற்றாண்டின் மிகப் கொடூரமான மனித அழிவுகளில் -human genocide-முக்கியமானது என்று சொல்லலாம்.இதன் கதாநாயகர்கள் இலங்கையில் மூவர் என்றால் அதற்கு கதை வசனம் எழுதிய தமிழக வசனகர்த்தாவும் தில்லி இயக்குனர்களும் மலையாள டெக்னீஷியன்களும் பேருதவி புரிந்தார்கள்.

திரை விழுந்து பலகாலம் ஆன இப்போது கதாநாயகர்களுக்குள் லாப நட்டக் கணக்கு பற்றிய சண்டை துவங்கியிருக்கிறது;தமிழர்களுக்கான போரு(அழிப்பு)க்குப் பின்னான நிவாரணங்கள் கிடைக்க வேண்டும் என்று அப்பவே சொன்னேன்'வகையான கதைகள் வெளிவருகின்றன.ஆடு நனைகிறது என்று அழுத ஒநாய்க் கதைகள் நினைவுக்கு வருகிறது.

இன்னும் சிறிது காலத்தில் நடைபெற்ற அவலங்கள் பற்றிய மேலும் பல பகீர்த் தகவல்கள் வரலாம்.

எல்லாவற்றிற்கிடையிலும் நவம்பர் 27 ஏதாவது அற்புதம் கொண்டுவருமா என்று ஏக்கங்கள் பல திசைகளில் நிலவுகின்றன;பல விமர்சனங்கள் இருந்த போதிலும் ஒரு மனிதனின் இருப்பும்-காணப்படா தன்மையும் இலங்கைத் தமிழர்களில் தோற்றுவித்திருக்கும் பெரும் மாறுதல்கள் அவலத்திற்கும் வியப்பிற்கும் உரியன.

பாரா எழுதிய ஒரு கட்டுரையில் போல புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மனிதர் என்ற நிலையிலிருந்து ஒரு தத்துவம் என்ற நிலைக்கு மாறி வெகுகாலம் ஆகிவிட்டது'என்பது முற்றிலும் உண்மை.

**********

டெண்டுல்கரின் கிரிக்கெட் உலகின் 20 ஆண்டுகள் எங்கும் கொண்டாடப்படுகின்றன.டெண்டுல்கரின் சாதனைகளை வேறு எவரும் தொடமுடியாதவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் ஆஸ்த்ரேலியத் தொடர் அவர் நினைத்திருந்தால் வெல்லப்பட்டிருக்கலாம் என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
5ஆவது ஆட்டத்தின் 175 ரன்கள் நிச்சயம் ஒரு ஜெம்'மான ஆட்டம்தான்;சொல்லப்போனால் சச்சினின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அது எளிதில் வரும்.ஆனால் அவரால் அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தர முடியவில்லை.

ஒரு 19 ரன்கள்!!!


போட்டி ஆரம்பத்தில் 17000 ஐத் தொட 7 ரன்கள் எடுக்க அவர் செலுத்திய கவனத்தில் பாதியைப் கடைசி 19 ரன்கள் எடுக்கவும் செலுத்தி இருக்கலாம் !

இது உண்மை,பலர் என்னை விமர்சிக்கத் தயாராக இருந்தாலும் !(எங்கேப்பா புரூனோ?)

**********

ஒரு பயிற்சி சோதிடக் கலையின் பல புத்தகங்களுடன் உருட்டிக் கொண்டிருந்த 8 மாத காலம் முடிவுக்கு வந்திருக்கிறது;இனி அவற்றை விசாரத்துக்கு எடுத்துக் கொள்ள உத்தேசம்.

இதற்காகவே ஒரு வலைமனை எப்போதோ தயாராகி விட்டது;ஆனாலும் அதில் ஆரம்பத்தில் போட்ட ஒன்றிரண்டு பதிவுகளைத் தவிர அதைத் தொடவேயில்லை.இனி அதிலும் பதிவுகள் வரும்.

என்னுடைய இந்த 8 மாத காலத் தேடலில் எனக்கு சோதிடக் கலை புரிந்ததோ இல்லையோ,பளிச்சென்று புரிந்த இன்னொரு விதயம்-தமிழில் சோதிடம் பற்றி முழுதாக அறிய நல்ல,படிப்புச் சுவையுடன் கூடிய அதே சமயம் உள்ளுறையில் சொதப்பாத புத்தகம்,இல்லை என்பது.அல்லது அது என் கண்ணில் படவில்லை!

8 மாதம் சோதிடம் படித்து நீ என்ன கண்டாய் என்ற கேள்விக்குப் பதில்:மனிதர்களைப் பற்றிய என்னுடைய புரிதல்களை அது இன்னும் மேம்படுத்தியிருக்கிறது.தவிர்க்க இயலாத சில நிகழ்வுகளை முன்னுணரலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.என்னுடைய முந்தைய பகுத்தறிவும் சில நுண்கலைகளும் பதிவின் சாரத்தில் நம்பிக்கை கூடியிருக்கிறது-thanks to jolly Jumber & Muthuswami.

:-)

*********

மரபணு மாற்றப்பட்ட தாவர விதைகள் பற்றிய ஒரு பதிவு யாரோ எழுதி இருந்தார்கள்.தமிழகத்தில் குறிப்பாக கிராமப் புறங்களில் இதன் தாக்கம் பெரிதாக உணரப்படுகிறது.

காய்கறி பயிரிடும் கிராமப் பெரியவர்கள் பலருடன் அளவளாவும் போது அவர்கள் சொல்வதைக் கேட்டால் பகீரென்கிறது;சாதாரண வகை விதைகள் அதாவது நாட்டுக்காய்கறிகளின் விதைகள்,இப்போது கிடைப்பதில்லையாம்.விதை சேமிப்பாளர்களும் நாட்டுப் புறங்களில் இல்லை.காரணங்கள் பொருளியல் சார்ந்தவை.

கிராமப் புறங்களில் கிடைக்கும் புது வகை தக்காளி கல் குண்டு போல 20 நாட்களுக்குக் கெடாமல் கிடக்கிறது;அதை சமையலில் பயன்படுத்தும் போது 20 நிமிடம் வதக்கினாலும் தக்காளி வதங்குவதில்லை,தோல்தான் சுருங்குகிறது.உணவின் ருசியிலும் தக்காளியின் சுவை தெரிவதில்லை.ரப்பர் துண்டைக் கடித்தது போலத்தான் இருக்கிறது.

கத்திரியிலோ சமைத்த குழம்பில் உரவாடை மூக்கை அடைக்கிறது.பயிரிடும் பெரியவர்கள் சொல்வது:நாட்டுத் தக்காளி தை,மாசி,பங்குணி,சித்திரை போன்ற நான்கு மாதங்களில்தான் நல்ல மகசூல் தரும்;வருடத்தன் மற்ற நேரங்களில் பயிரிட்டால் 4 காய் காய்க்கும் செடியில் 1 காய்தான் காய்க்கும்.ஆனால் நன்றாக விளையும் அந்த 4 மாதங்களில் தக்காளியின்(கொள்முதல்) விலை கிலோ 2 ரூபாய்தான்;பயிரிட்டும் நஷ்டமடைவதை விட வருட முழுதும் நன்றாக விளைச்சல் தரக் கூடிய ரப்பர் தக்காளி-ஆம்,அப்படித்தான் அழைக்கிறார்கள்-மேல்,பயிரிடுவோர் கண்ணீர் வடிக்காமல் இருப்பார்கள்...

விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகளும் அரசும் விதைகளை மேம்படுத்தும் ஆய்வு மற்றும் விவசாயப் பொருள் சேமிப்பு\பாதுகாப்பில் மேம்பாடு போன்ற நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தாவிட்டால் தக்காளியின் சுவை நம் குழந்தைகளுக்கு மறந்து போகலாம் !

********

உன்னைப் போல் ஒருவன் பார்த்தேன்.முன்னரே வெட்னஸ்டே பார்த்திருக்கிறேன்.

தோன்றிய எண்ணம்:கமலின் அடுத்த சொதப்பல்.கூடவே அவரின் தொலைக்காட்சி நேரலையில் நஸ்ருதீனை எள்ளாமல் எள்ளிப் பேசிய பேச்சு வேறு நினைவில் வந்து எரிச்சல்படுத்தியது.

கமல்,do some thing viewable next time!

Monday, November 2, 2009

108.குறுந்'தொகைகள்-1109

ஆண்கள் வெளியே சென்று விட்டு வந்தால் சுகமாகச் சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறார்கள்;பெண்கள் அவர்களைக் கவனித்து,பருக ஏதாவது கொடுத்து ஆசுவாசப்படுத்திய பின்னர்தான் சகஜமாகப் பேச ஆரம்பிப்பார்கள்.


வீட்டில் இருக்கும் பெண்களோ கணவர் வந்தவுடன் சொல்ல ஆயிரம் விதயம் வைத்திருப்பார்கள்;வந்து நுழைந்த மாத்திரத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ள ஆயத்தமாயிருப்பார்கள்.ஆனால் ஆண்கள் காது கொடுத்தால்தானே? மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது முட்டாள் பெட்டியைத் தட்டி விட்டு அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்;இன்னும் சில வீடுகளில் இவற்றைப் பொருட்படுத்தாமல் கணவனிடம் பேச\பகிர்ந்து கொள்ளது துவங்கும்போது செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொள்வதும் உண்டு.


இந்த ஆண்\பெண்களுக்கிடையான இடைவெளியை அதிகப் படுத்தும் முக்கியக் காரணமாகக் கூட பார்க்கப் படுகிறது.சில பெண்கள் என்ன மனுசன் இவன்? என்று சலித்துக் கொள்வதும் நடக்கும்.ஆண்களின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக் காட்டி ஆண்களே பகிரத் தெரியாதவர்கள் என்ற பொதுமைப் படுத்திய நிந்தனையும் இதனால் எழுகிறது.

இதில் எது சரி? ஆண்களின் மேல் எழும் நிந்தனையா அல்லது ஆண்களின் குணமா?

குணாதிசயங்கள் சார்ந்த-behavioral science ஆய்வின் பின்னணி ஒரு சுவையான கோண்த்தை முன்வைக்கிறது.


ஆணின் இந்த குணம் மனித இனத்தின் ஜீன்களில் பொதிந்திருக்கும் செய்தித் தன்மையினால் வருகிறது என்கிறது அப்பார்வை.கற்காலத்தில் குடும்பத்திற்கான வேட்டை உணவைத் தேடி வெளியேறும் ஆண் உயிரி காடு மேடுகளில்,மழை வெயிலில் நனைந்து காய்ந்துதான் தன் உணவைப் பெற வேண்டியிருந்தது;போதுமான உணவு கிடைக்க வில்லையெனில் ஒவர்டைம் செய்தாவது வேட்டையை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.


அடுத்தது வேட்டையைச் சுமந்து தன் இருப்பிடத்திற்கு,பெரும்பாலும் குகைக்குத் திரும்பும் கடமை.இந்த குகைக்குத் திரும்பும் நேரம் பெரும்பாலும் அடர் குளிர் சூழலாயிருக்கும்-கற்காலத்தின் தட்ப வெப்ப நிலையைக் கருதும் போது!


திரும்பும் ஆண் இனம் முதலில் செய்வது நெருப்பை மூட்டி களைப்பும் குளிரும் போக சிறிது நேரம் நெருப்பின் அருகில் உட்கார்ந்து குளிர் காய்வதுதான்.அதற்குப் பிறகுதான் எல்லாமே.

மனிதனின் இந்தக் கற்கால குணம் ஜீன்களில் பதிந்து போயிருப்பதால் தான் இன்றளவிலும் ஏதாவதொன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்காரும் குணம் ஆண்களிடம் இருக்கிறது என்கிறது அந்த ஆய்வுப் பார்வை.


என்ன,நெருப்புக்குப் பதில் முட்டாள் பெட்டி,அவ்வளவுதான் வேறுபாடு.

பெண்களும் தானே வேலைக்குப் போகிறார்கள்?அவர்கள் ஏன் அப்படி வீட்டுக்குள் வந்தவுடன் உட்கார்வதில்லை என்ற கேள்வி எழுகிறதுதானே?

யாராவது பின்னூட்டுவார்கள்,பார்க்கலாம்!


()


பழனி,சபரிமலை போன்ற திருத்தலங்களுக்கு நடந்து போகின்ற பக்தர்கள் பலர்.அதுவும் தை மாத காலத்தில் பழனியை நோக்கிச் செல்லும் எல்லாச் சாலைகளிலும் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது உண்டு;அந்த அளவிற்குப் பலர் நடைப் பயணம் போவார்கள்.

எனக்குத் தெரிந்த மலேசிய நண்பர் ஒருவர் இந்த நடைப் பயணம் போவதற்காகவே விடுப்பு எடுத்துக் கொண்டு இந்தியா செல்வார்.


எனக்கு இந்த வகையான கடின சித்த பக்தி வழிகளில் உடன்பாடு இல்லையாயினும் அவ்வாறு செல்பவர்களின் உணர்வை மதிக்க வேண்டும் என்று தோன்றுவதுண்டு;தேர்ந்த வாசிப்பும் சிந்தனையும் கொண்ட சிலர் கூட இவ்வாறு நடைப் பயணம் போவார்கள்;அவர்களைக் கேட்டார் அதற்கு ஆரோக்கியப் பார்வையில் பதிலளிப்பார்கள்.


இதில் இன்னொரு விதயத்தையும் நான் அவதானித்து நான் வியந்திருக்கிறேன்.இந்துக்கள் மட்டுமின்றி முகமதியர்களும் கூட உடலை வருத்தி உபவாசம் இருக்கும் காலம் இந்த மார்கழி,தை மாத காலமே.ஆண்டின் இந்த காலகட்டத்தில் ஆன்மிகத்தில் கூட எல்லா மதத்தினரும் தேர்ந்து உடலை வருத்திப் பண்படுத்த விழைவதற்கும் ஏதாவது ஜெனிட்டிகல் காரணங்கள் இருக்கக் கூடும் !


யாராவது ஆய்வு நண்பர்கள் இதை விளக்கலாம்!


()


மேற்கண்ட நடையர்களில் பலர் சோர்வை உணராமல் இருக்க பாடிக் கொண்டே செல்வதுண்டு;இதற்காகவே பாதயாத்திரை சிறப்பு ஒலித்தட்டுகள் சென்ற பத்தாண்டுகளில் ஏராளமாக வந்திருக்கின்றன.


இதற்கான வித்து சமீப நூற்றாண்டில் காவடிச் சிந்து வடிவப் பாடல்களால் ஊன்றப்பட்டது.அதிலும் பாடல்களின் எளிமை,பொருண்மை,சந்த நயம் பொருந்திய ஏராளமான பாடல்களை தமிழுக்கு அளித்தவர்களில் சமீப காலத்திய அண்ணாமலை ரெட்டியார் குறிப்பிடத்தக்கவர்.


இவரது பாடல்களை சந்தத்தில் பாடக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்;அம்மாவின் குரலில் பல சிந்துப் பாடல்களை அனுபவித்துக் கேட்ட நினைவு இப்போதும் நிழ்லாடுகிறது;அப்போதெல்லாம் அதை மின்வடிவத்தில் சேகரிக்கும் எண்ணம் தோன்றியதில்லை,இப்போது மிகவும் தோன்றுகிறது...ஆனால் வருடத்தில் அம்மாவைச் சந்திக்கும் நாட்கள் அருகிக் கொண்டிருக்கும் காலம் இது..

எனக்குக் கிடைத்த ரெட்டியாரின் பாடல்களில் ஒன்றின் இசைவடிவம் பின்வரும் ஒலிக் கீற்றில்..கேட்டுப் பாருங்கள்..


நானே ஒரு ஒலிக்கீற்றை பதிவு செய்து வலையேற்றலாம் என்று நினைத்திருந்தேன்...பிழைத்தீர்கள் !



Thursday, April 23, 2009

102-குறுந்'தொகைகள்-26-04-2009




இலங்கைத்தமிழர்களின் இன்னல்கள் உச்சத்தை அடைந்திருக்கும் இந்த வேளையில் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கப்போகும் தேர்தல்கள் கிளர்த்தும் நாடகங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறுகின்றன.

மக்கள் அனைவரும் முட்டாக்**கள் என்று நினைத்துக் கொண்டு அரசியல் வாதிகள் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.தமிழர் தலைவருக்கு மக்களுக்கு எப்படியாவது பல நாடகக் காட்சிகளை நடத்திக் காட்டி தன் 'மக்களை' உயர்த்தும் சாத்தியங்கள் இருக்கிறதா என்று முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்;இன்னும் கழைக்கூட்டாடி மாதிரி குட்டிக் கரணம் அடித்துக் காட்டுவது மட்டும்தான் மிச்சம்,கூடிய விரைவில் அதையும் எதிர் பார்க்கலாம்.

அம்மா ஆயுசு முழுதும் இலங்கையில் கண்ணுக்குத் தெரிந்தார்கள்;இப்போது இலங்கைத் தமிழர்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள்;'புலிகள்' எல்லாம் காற்றில் மறைந்து விட்டார்கள் போலிருக்கிறது....ம்ம்ம்ம்...தேர்தல் எல்லாம் செய்யும் வேலை!

நேற்றுவரை தமிழர் பாதுகாப்புப் புண்ணாக்கு வியாபாரம் செய்தவர்களுக்கு இன்று இரண்டோ அல்லது ஏழோ இடங்கள் எல்லாவற்றையும் மறந்து ஐயாவும் அம்மாவும் தேவ தூதர்களாகத் தெரிகிறார்கள்;இனி தேர்தல் முடிந்து சிலகாலம் வரை இலங்கைத் தமிழர்களை பற்றிய எந்த விவரமும் இவர்கள் வாயில் இருந்து வராது.

பல காரணங்களால் தேசிய அளவில் காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக மாறிப் போய் விடும் என்றிருக்கும் நிலையில் கடந்த இரண்டு மூன்று தேர்தல்களில் கை கொடுக்கும் தமிழகம் கவிழ்த்து விடுமோ என்று பயந்து மீண்டும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு வெளிப்படையாக இலங்கையில் என்ன நடந்தாலும்,எவ்வளவு தமிழர்கள் அழிந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை எனபதை வெளிப்படையாக அறிவித்து விட்டால் நல்லது..ஏதாவது செய்வார்களா என்ற பொய் எதிர்பார்ப்பாவது இல்லாமல் போகும்.

அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் போர்நிறுத்த வேண்டு கோளும் அதற்கான இலங்கையின் எதிர்வினையும் மேலும் கலக்கமளிக்கும் இந்தச் சூழல் அவலத்துடன்,அச்சமூட்டுகிறது.

0 0 0

கோவை செண்ட்ரல் எக்ஸைசில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் கே.ராஜேந்திரன் எழுதிய ஒரு கவிதை,மீண்டும் சுஜாதாவின் கட்டுரைகளில் இருந்து...

மங்கிய வெளிச்சத்தில்
பளபளக்கும் இமைக்காத கண்கள்
வைக்கோல் திணித்த
கன்றுக்குட்டியின் ஒட்டுத்தோல் பார்த்து
மனம் மறுகும்
முரட்டு விரங்களின்
இயந்திர உரசலுக்கு
மெல்லிய நாவின்
ஈர ஸ்பரிசங்களும்
பிஞ்சுப் பற்கடிப்பும்
நினைவில் தேங்கும்
சாட்டைக் கம்பு
நினைவுக்கு வர
அடைத்த துவாரம்
அரை மனதாய்த் திறக்கும்
மார்வலி மரத்து
வெள்ளை ரத்தம் வடிக்கும்

பசு என்னும் தலைப்பில் வந்த இந்தப் புதுக்கவிதை நவீன கவிதையின் பரிமாணங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.பல கவிதைகப் பரிச்சயங்களில் எனக்கு எப்பொழுதும் தோன்றும் 'இன்னும் சிறிது செப்பனிட்டிருக்கலாமோ'என்ற எண்ணம் இக்கவிதைக்கும் ஏற்பட்டது.


(எனக்குத் தோன்றிய)tinkered version

மங்கிய ஒளியில்
வைக்கோல் போர்த்து
அசையா நின்ற ஒட்டுத் தோல் குட்டி;
மெல்லிய நாவின் ஈர ஸ்பரிசமும்
பிஞ்சுப் பற்கடிப்பும்
தேங்கும் நினைவில் மறுகும் மனம்;
சாட்டைக் கம்பு சுழல
முரட்டு விரல்களின்
எந்திர உரசலில்
அடைத்த மடியின் துவாரம்
மார்வலி மரத்துத் திறக்க
வடிகிறது..
வெள்ளை ரத்தம் !

இந்த செப்பம் பல சமயங்களில் நல்ல கவிதையை உன்னதமானதாக மாற்றி விடுகிற சாத்தியங்கள் இருக்கின்றன.
நண்பர் ராஜேந்திரன் இப்போது பதிவெழுதிக் கொண்டிருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது;சினப்பட்டால் மன்னிப்பாராக !


0 0 0

மதுரைக் காரரும் சென்னை(நிதி)க் காரரும் (தேர்தலுக்காக)வெளியிட்ட சொத்து விவரம் ஒரு பதிவில் பார்க்க நேர்ந்தது.அதுவே 30,40 கோடிகளில் இருக்கிறது.
எந்த ஒரு கல்வித் தகுதியோ,தனிப்பட்ட வணிக நிறுவனமோ இல்லாத அன்ப நண்பர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு சொத்து என்று சுதந்திர இந்தியாவில் எவரும் கேட்க மாட்டார்கள் போலிருக்கிறது.
மாதம் முழுதும் நாயாய் உழைத்தும் நம்மால் ஆயுளில் ஒரு கோடி சேர்க்க முடியுமா என்று மலைப்பாயிருக்கிறது...

ம்ஹ்ம்...

வாழ்க இந்தியா,வாழ்க அரசியல்!

0 0 0

விருட்சம் கவிதைகளி'ல் யுவன் எழுதிய பிரவாகத்தில் ஒரு துளி

எனக்குப் பிடிக்கும்
என்றறியாமலே
ஒலியெழுப்புகின்றன
பறவைகள்.
நான் விழித்து
எழாத போதும்
விடிந்து விடுகிறது பொழுது.
கவிதையின் கணமொன்றை
கண்கள் துழாவ
காலடியில் பாய்ந்து மறைகிறது
கணங்கள் பிரவாகம்

நல்ல கவிதை என்பது ஒரு சொந்த உன்னதம்;அதற்கு இது ஒரு உரைகல்.இந்தக் கவிதை நிச்சயமான ஒரு கவிதை அனுபவத்தை சட்டென்று தருகிறது;கடைசி வரியை கணங்களின் பிரவாகம் என்று மாற்றினால் இக்கவிதை இன்னும் கூர்ப்படுவதாக உணர்கிறேன்!

0 0 0

Thursday, March 19, 2009

99.குறுந்'தொகைகள்-19-03-2009

கோககோலா நிறுவனம் சீனாவின் புகழ்பெற்ற பழரச தயாரிப்பு நிறுவனமான ஹூயுவான்-Huiyuan-நிறுவனத்தை சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முயற்சித்தது.


இந்த முயற்சியை சீனாவின் வர்த்தக அமைச்சகம் மோனோபாலி தடைச்சட்டத்தை பிரயோகித்து தடை செய்து விட்டது நேற்றைய செய்திகளின் படி.இது மேற்குலகத்திற்கு முதுகுத்தண்டில் சிலிர்ப்பை ஏற்படுத்திய ஒரு அறிவிப்பு.ஏனெனில் கோக் நிறுவனத்தின் தரப்பில் இந்த தடையை எவரும் எதிர்பார்க்க வில்லை போலிருக்கிறது.


இந்த ஒப்பந்தம் முடிவாகி இருந்தால் சீனாவின் பானங்கள் சந்தையின் 40 சதவீத்தை கோக் நிறுவனம் கட்டுப்படுத்தி இருக்கக்கூடும்.இந்த தடையின் மூலம் சீனா தெளிவான ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது.

கோக், ஹீயுவானை வாங்கி இருந்தால் சீனாவில் பழரச மார்க்கெட்டில் கோக் வைத்ததுதான் சட்டமாக இருக்கும்.அது மட்டுமின்றி கோக் அந்த ஒரு பழரச நிறுவனத்துடன் நின்றிருக்காது.அந்த முயற்சியை அனுமதிக்காததன் மூலம் தன் நாட்டின் குடிகளுக்கு பலவித தேர்வுகளுக்கு வாய்ப்பை நிலைநிறுத்தி இருக்கிறது சீனா.


இதை நிறுவனங்களின் லாபம் தொடர்பான நோக்கில் மட்டுமன்றி மக்களுக்கான தேர்வுகளையும் கருத வேண்டும்;அந்த வகையில் சீனாவின் செயல் மெச்சப்பட்டாலும்,இதே வகையான சீனாவின் அயல்நாட்டு நிறுவன கையகப் படுத்தும் முயற்சிகளிலும் மற்ற நாடுகளும் இதே நிலையையே எடுக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான்.


இதனுடன் இந்தியாவில் 90 களில் கோக் அனுமதிக்கப்பட்ட பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பு நோக்கினால் காணாமல் போய்விட்ட பல பிராண்டுகள் நினைவுக்கு வருகின்றன.


பிரான்ஸின் டாணோன்-Danone-நிறுவனத்தை கையகப்படுத்த கோக் செய்த முயற்சிகளும் இவ்வாறே நிறுத்தப்பட்டதும் நினைவு கொள்ளத் தக்கது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விதயங்களில் திறந்த பொருளாதாரக் கொள்கையின் மத்தியிலும் சீனா எச்சரிக்கையாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இதற்காக அமெரிக்கா கோபப் படலாம்,ஆனால் ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒன்றும் செய்ய இயலாது.சென்ற மாதத்திலேயே அமெரிக்க பணப்பத்திரங்களில் செய்யப்படும் முதலீட்டில் இனி கவனம் வைக்கப் படும் என்று சீனா அறிவித்தது.ஒருவேளை அப்படி நடந்தால் அமெரிக்காவுக்கான ஆப்பு பெரிதாக அடிக்கப் படும் வாய்ப்புகள் இருக்கின்றன;ஏனெனில் ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை-capital flow deficit-இருக்கும் நிலையில்,அமெரிக்கப் பணப் பத்திரங்களில் அதிக அளவில் முதலீடு செய்யும் இரு நாடுகளில் ஒன்றான சீனாவைப் பொருளாதார ரீதியாக பகைத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா,இந்தக் காரணங்களால்தான் ஆசியாவில் ராணுவ ரீதியாக பலமான நாடாக இந்தியா இருப்பது அவசியம் என்று அணு ஆயுத ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவுக்கு உதவுவது போல போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.....


0 0 0


இலங்கை ஜெயராஜ் அவர்களின் கம்ப இராமயாண சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்ததைப் பற்றி பதிவர் கோவி கண்ணன் பதிவிட்டிருந்தார்.கடைசி நாளாயிருப்பினும் நேற்று செல்ல முயன்றும் முடியாது போனது.


கம்பன் கவிகளின் ரசவாதத்தை பலரும் ஆய்ந்து நம் போன்றவர்கள் அருந்தி(வாசித்து) மகிழ வழங்கியிருக்கிறார்கள்.தமிழகத்தில் ஒரு அழகான அறிஞர்கள் வரிசையே இந்த இணையற்ற செயலில் ஈடுபட்டு தாமும் தமிழாய்ந்து மகிழ்ந்து நம்மையும் மகிழ்வித்தார்கள்.


டி.கே.சி,ம.பொ.சி,போன்றவர்கள் தொடங்கிய இந்தப் பாரம்பரியம் பின்னாட்களில் அறிஞர் அ.ச.ஞா அவர்களால் புதிய நிலைகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டது.அவரது பன்முக ஆய்வு நோக்கும்,கவிப் பார்வையும் நிரம்பிய நூல்கள்-சொற்பொழிவுகள்,இன்று நாம் ஒரு தகவல் தொழில் நுட்பத்தில் கடினமான ஒரு ரிப்போர்ட்டை வாடிக்கையாளர் கேட்ட விதம் போல திருப்தியுடன் வடிவமைத்துக் கொடுத்தால் கிடைக்கும் இன்பத்தை அளிக்க வல்லன.


இஸ்மாயில் போன்ற ஜனரஞ்சகமானவர்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் அ.ச.ஞா போன்றவர்களின் முன்னர் சூரியனின் முன்னர் விடி விளக்குப் போலத்தான் தோன்றினார்கள்.


திரு.ஜெயராஜ் அவர்கள் கடல் தாண்டிய நாட்டில் அறிஞர் அ.ச.ஞா அவர்களின் மரபில்-school of thought-வந்தவர்.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய ஒரு புத்தகம் அழியா அழகு என்று நினைக்கிறேன்,கம்பனின் அழகியல் விரிவுரைகளில் ஒரு நல்ல தேர்ந்த முயற்சி.


இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதை அறியும் நண்பர்கள் சிறிது முன்கூட்டியே அறிவித்தால் உபயோகமாயிருக்கும்.


ஒரு அழகிய தமிழ் மாலையைத் தொலைத்த வருத்தம் இன்னும் இருக்கிறது...


0 0 0


நடிகர் ராதாரவி திரும்பவும் திமுக வில் ஐக்கியமாகியிருக்கிறார்...

தூ!!!

Sunday, March 1, 2009

97-குறுந்’தொகைகள் -01032009

ரஹ்மான்-ராஜா சர்ச்சை முன்னவர் ஆஸ்கர் வாங்கியிருக்கும் இந்த நேரத்தில் அதிகமாக எழுப்பப்படுகிறது.
தகுதிகள் என்ற நிலையில் ராஜாவுக்கு நிச்சயமான இசைத்தகுதிகள் இருக்கின்றன.ஆனால் மற்ற வகைகளில்???

ரஹ்மானின் பொதுமுகம்-தனிப்பட்டு எப்படி இருந்தாலும்-மிகவும் பண்பட்ட,சமூக மென்மையான,எவரையும் கடியாத முகம்.அதை அவர் ஒரு மேலாண்மை-management-சார்ந்த விதயமாகக் கூட கடைப்பிடித்திருக்கலாம்.ஆனால் அவரது பொதுமுகம் நட்பானது.ஆனால் ராஜா பல சந்தர்ப்பங்களில் பலரை எரிச்சலடைய வைத்திருக்கிறார்,வெளிப்படையாக...திரையுலகத்திலும்,இசையுலகத்திலும் இதற்கான தரவுகள் நிறையக் கிடைக்கின்றன.கூடவே எவருக்கும் இருக்கக்கூடாத தலைக்கனம்.இதுவும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருப்பதாகப் பலர் சுட்டுகிறார்கள்.இது ராஜாவுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மையால் கூட இருக்கலாம்;ஏன் சொல்கிறேன் என்றால்,பாடகர் பாலுவும் கங்கை அமரனும் கலந்து கொண்ட காபி வித் அனுவில் ஒரு சம்பவத்தை பாலு நினைவு கூர்ந்தார்.அது ஏவிஎம் போன்ற படப்பிடிப்புத் தளங்களில் எவ்வாறு ராஜா ஒரு கட்டமைக்கப்பட்ட ஒளிவட்டத்திற்குள்,சாதாரணமாக வேடிக்கை,சிரிப்பு போன்ற இயல்பு நிலையற்று துறவி,குரு என்ற அளவில் அனைவரும் 2 அடி எட்ட நின்று வணங்க வேண்டிய நிலையில் இருக்க விரும்புவார் என்பதையும்,அதை உடைக்க பாலு ராஜாவை கிச்சு கிச்சு மூட்டி ஏவிஎம்மின் அந்தத் தளமெங்கும் சிரித்து ஓடவிட்டதையும்,இவ்வளவு சிரிப்பையும் உற்சாகத்தையும் ராஜா ஏன் ஒளித்து வைக்கிறார் என்று தான் கேட்டதாகவும் விவரித்தார்.அதைக் கேட்ட கணத்தில் ராஜா என்ற மனிதனின் மனப்பான்மை அவ்வாறான ஒரு ஒளிவட்டத்தை தனக்கு விரும்பி அமைத்துக் கொண்ட ஒன்று என்பது என் துணிபு.

இது ஒரு காரணம்.

இந்த குணத்தின் நீட்சியே மணிரத்னம் மற்றும் பாலசந்தர் போன்ற திறமையாளர்கள் இசைக்கு வேறு நபர்களைத் தேட வேண்டிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்.ரஹ்மானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது,பிறகு அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை! He never turn back !

இரண்டாவது காரணம் முன்னவருக்கு இருந்த தொழில்நுட்பத்தில் மேம்படுத்திக்கொள்ளும் வேட்கை.
ரஹ்மான் அன்றன்றைய புதிய தொழில் நுட்பத்தை எவ்வாறு தான் மேலும் சிறப்பாக தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் ஒரு வேட்கையுடன் இருந்தார் என்பது மிக வெளிப்படை.ரோஜா படத்தின் போது ஒரு சிறிய ஒலிப்பதிவுக் கூடமாக இருந்த அவரது இடம் இப்போது இந்தியாவின் சிறந்த ஒலிப்பதிவுக் கூடங்களில் ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள்.எனவே டெக்னிகல் எக்ஸலென்ஸ் இன்னொரு முக்கியக் காரணம்.ராஜா-இசைஞானி,அவர் இல்லாவிட்டால் எந்தப் படமும் ஓடாது என்று 80 களில் எழுப்பப்பட்ட பிம்பங்களினால் தேங்குநீர் நிலைக்குச் சென்று தன் வீழ்ச்சிக்கு அடிகோலிவிட்டார் என்பது உண்மை.

மூன்றாம் காரணம்-சந்தைப் படுத்துதல்.ரஹ்மான் திரை இசை சாராத இசைத்தட்டுக்கள் மூலம் அடிக்கடி திரை அல்லாத இசை வடிவங்களில் தன் தேர்ச்சியை வெளிப்படுத்தவும் அவற்றின் சந்தைப்படுத்தும் உத்திகளின் மூலம் இசையுலகின் பல சந்து பொந்துகளிலும்-நூக் அன்ட் கார்னர்-தன்னுடைய பெயரின் பரிச்சயத்தையும் இருப்பையும் உறுதி செய்தார்.இது அவருக்கு தமிழ்த்திரையுலகை மீறிய இந்தி மற்றும் உலக அளவில் இசைக்கான பல வாய்ப்புகளை வழங்கியது.ஆனால் ராஜா தமிழ்த்திரையுலகிலேயே தேய்ந்து முடங்கினார்.நத்திங் பட் விண்ட்,ஹவ் டு நேம் இட் மற்றும் திருவாசகம் தவிர வேறு குறிப்பிட்ட முயற்சிகள் இருக்கின்றனவா தெரியவில்லை!

இம்மூன்று காரணிகளிலும் தான் ரஹ்மான் ராஜாவை வென்றார்,ஆஸ்கர் மூலம்;இசையில் அல்ல !

ஆனால் ஒன்று....500 படங்களுக்குப் பிறகு ராஜா அளித்த தளபதி படம் ஒரு புயல் போல வந்த இசை விருந்து.500 படங்களுக்குப் பிறகு ரஹ்மான் எங்கிருக்கிறார் என்று பார்ப்போம்,ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் அளிக்கும் இந்தக் கணத்திலும்!

ரஹ்மான் பற்றிய ஒருமுழுத் தகவல் பதிவு ஷாஜி என்பவர் எழுதி ஜெமோ.தமிழ்ப் படுத்தியது...அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று


0 0 0


வழக்கறிஞர்கள்-காவல்துறை மோதல் சர்ச்சைகயில் மெது மெதுவாக காவல் துறைதான் தவறு செய்தது என்ற விதமான முடிவுக்கச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

தமிழக காவல்துறை மிக யோக்கியமான துறைகளில் ஒன்று;அவர்கள் அனைவரும் புனிதர்கள் என்பது என் கூற்றல்ல.ஆனால் வழக்கறிஞர் என்ற ஒரு காரணத்தால் மட்டுமே அவர்கள் எந்தவிதமான சட்ட,சமுதாய வரைமுறைகளுக்கும் உட்பட்டவர்கள் அல்ல என்ற விதத்தில் நடந்து கொள்வது நல்லதல்ல.

இலங்கைத்தமிழர் நலன்,தாழ்த்தப்பட்டவர் நலன்,நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் விவகாரம் என்ற பலவற்றையும் இதில் இழுத்து விடுவதை ஒரு தேர்ந்த அரசு அனுமதிக்கக் கூடாது.இந்த அனைத்து விதயங்களிலும் இருக்கும் நியாயங்கள் என்பது வேறு;சட்டம் ஒழுங்கு என்பது வேறு.

முந்தைய சாக்குகளைச் சொல்லி,இரண்டாவதை தூக்கி எறிவதை ஒரு சரியான அரசு செய்ய அனுமதிக்கக் கூடாது.


0 0 0


உலகெங்கும் இருக்கும் பொருளியல் மந்தநிலையின் கயாஸ் தியரி விளைவுகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

சிங்கையின் இந்தக் காலாண்டின் பொருளியல் வீழ்ச்சி 16%,அதாவது -16%.இதுவரையிலான வேலை இழப்புகள் 20000 த்தைத் தாண்டிவிட்டன.இந்தியா போன்ற வளரும் தேசத்தில் கூட அதிகமான வேலை இழப்புப் புள்ளிவிவரங்கள் வெளிவருகின்றன.

கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இருள்தான் தெரிகிறது;சுரங்கத்தின் முடிவிலான ஒளி-லைட் அட் த எண்ட் ஆஃப் டனல்-எப்போது வரும் என்று தெரியவில்லை.ஒபாமாவின் கொள்கை சாரந்த முடிவுகள் வேறு சேவைத்துறைகளை மிகவும் பாதிக்கும் சாத்தியங்களும் உண்டு.சேவைத்துறை அளித்த முடுக்கத்தில்-impetus-பந்தா காட்டிக் கொண்டிருந்த இந்தியத் தொழில் துறை என்ன ஆகும்?


0 0 0


முதல்வர் மு.கருணாநிதி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார்.
இந்த நேரத்தில் அவரது கடைநிலை வரை அவர் வேறெந்த உடல் உபாதைகளாலும் சிரமப்படாது,நல்ல உடல் நலத்துடன் இருக்க அவரை வாழ்த்துவோம்.

மருத்துவமனையிலிருந்தே(என நினைக்கிறேன்!) இனியான அவரது உயிர் உங்களுக்கானது,அதாவது மக்களுக்கானது என்ற விதத்தில் ஒரு (அரசியல்) அறிக்கை விட்டிருக்கிறார்.அவருக்கான சிகிச்சை உயிரைப் பாதிக்கும் அளவுக்கான எந்த நோய்க்கும் இல்லை என்பதும்,முதுகுவலிக்கானது என்பதையும் இந்த நேரத்தில் யாரும்,குறிப்பாக கழக மணிகள் நினைவில் கொள்ள மாட்டார்கள்....போகட்டும் அதெல்லாம் விதயமல்ல!

அவர் திரும்ப வரும் வழியில் திமுக கட்சியின் கொடியினைத் தாங்கி எண்ணற்றவர்,சுமார் 1000 பேராவது இருப்பார்கள் என நினைக்கிறேன்-வீதிகளில் அவரது கார் வரும் வழியில் நின்றார்கள்,வழியின் இரு புறங்களிலும்.

எனக்கு எழுந்த சந்தேகம்...

இவர்கள் எல்லாம் யாவர்? அவரது வீட்டில் பார்த்து அவரை நலம் விசாரித்து அளவளாவக் காத்திருந்தாலும் அதைப் புரிந்து கொள்ள முடியும்.அவரைப் பார்த்து ஒருவார்த்தை பேச இயலாத அல்லது நலம் விசாரிக்கவோ இயலாத இந்த தெருக்காத்திருப்பு எதற்கு? அந்த அளவுக்க வேலை வெட்டி இல்லாதவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா என்ன???!!

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...