குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)

Wednesday, August 29, 2007

தேவதைகள் மறையும் பொழுது...


சிறுவயதின் தேவதைக் கதைகள்

உயிர் பெற்றெழுந்தன

உன்னைப் பார்க்கையில்,

உந்தன் வருகையில்....

உன் புன்னகைப் பொழுதுகளில்

எப்படிப் பூக்களின் மணம்?

அவை ஒளியேற்றிய மாலைகள்

நினைவின் வரிசைகளில்,

சுடரும் சுடராய்

உந்தன் இருப்பு...

இமைக்காத பார்வைகளில்

எத்தனை முறை கேட்டிருப்பாய்,

என்ன பார்வை என...

வார்த்தைகள் இல்லா மௌணக் கணங்கள்

எந்தன் பதிலாய்!

விரிந்த விழிகளின் விசாலத்தில்

வானமே வசப்படும் போது

என் மென்மனது எம்மாத்திரம்?

நினைவுச் சருகளில்

ஈர மலர்களாய் தவறிய முத்தங்கள்...

கை கோர்த்த மென்மை மட்டும்

மனதில் சுமையாக.

கன்னம் தொட்டு உச்சி முகப்பேன்

என் கைகளில் நீ இருந்தால்...

என்ன சாபம் எனக்கு மட்டும்,

கைக்கெட்டும் தூரத்தில்

எப்போதும்,

கலையும் ஓவியங்கள் !!!

உதிரம் கண்களில்

உன்னத ஓவியம் கலையும் பொழுதுகளில் !!!

தேவதைகள் எப்போதும் மறைதல் என்ன விதி ??!!!!!
Tuesday, August 28, 2007

விநோத உலகம் !


ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த கலாச்சாரம்,வாழ்க்கைமுறைகளுக்கு ஏற்ப விநோதமான திருவிழாக்கள்,நம்பிக்கைகள்....


சிங்கப்பூரில் ஆகஸ்ட் முழுவதும் பேப்பர்களை எரித்து ( டாலர் வடிவில் அச்சடிக்கப்பட்டவை) எங்கெங்கு நோக்கினும் காற்றில் அலையும் கரித்துகள்களுடன் (குடியிருப்பு வீடுகளின் தரைத்தளம் மற்றும் நடைபாதைகளில் கூட...) clean and green singapore என்பதற்கு பெரிய திருஷ்டி அமைத்து விடுவார்கள் சீன சிங்கப்பூரர்கள்.


இத்தனைக்கும் இவர்கள் எரிப்பதற்காகவே ஒவ்வொரு குடியிருப்பு கட்டடத்திலும் ஒரு எரிகூண்டு அரசால் அமைக்கப்பட்டிருக்கும்,ஆனால் மண்ணின் மைந்தர்கள் வழிநடையில்தான் எரிப்பார்கள் !


அதுபோலவே ஸ்பெயின் தேசத்து புன்யால்(அல்லது பன்யால்) நகரில் (Bunyol), Tomatina என்ற விழா ஆகஸ்டில் கொண்டாடப்படுகிறது.


ஒரு மணி நேர இடைவெளிக்குள் தெருவில் வருவோர் போவெரெல்லாம் சராசரியாக 250 பவுண்ட் தக்காளியை வருவோர் போவோர் மீதெல்லாம் அடித்து(!) கொண்டாடுகிறார்கள்.

சாஸ்(Ketch up) தயாரிக்க எளிதான வழியோ ? Spain Ketch up வாங்கி சாப்பிடுரவங்க யோசிங்கப்பு......

ம்ஹூம்..நம் நாட்டிலும் இந்த கொண்டாட்டம் இருந்தால் நம் அரசியல்வாதிகளை பழி தீர்க்க நல்ல சந்தர்ப்பம் !
With acknowledgment to Time Magazine

Monday, August 27, 2007

60 ஆவது சுதந்திர தினம்- ஒரு மீள்பார்வை 2

பார்வை 1

ஆசியாவின் பல நாடுகள் 20 ம் நூற்றாண்டில்தான் சுதந்திரம் பெற்றன.பற்பல மன்னர்கள்,பல சமஸ்தானங்களை ஆண்ட போதிலும் உண்மையில் இந்தியா ஒரு(அல்லது பல) ஸ்வதேசமாகவே பலகாலம் இருந்திருக்கிறது.ஒன்றுபட்ட இந்தியாவை ஓரளவு முழுமையாக ஆண்டவர்கள் முகலாயர்கள்.அதற்குப் பின்பு படிப்படியாக டச்சு,பிரிட்டிஷ் நாடுகளின் ஆதிக்கத்திற்குள் நாம் சுமார் 200 ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்தோம்.இன்றைய இந்தியாவின் ‘ஏழைநாடு’ நிலை பிரிட்டிஷ்,டச்சுக்காரர்கள் நமக்கு அளித்த பரிசும்,நாமாக தருவித்துக் கொண்ட வெடிக்கும் நிலை,மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாலும்தான் !
பழங்கால இந்தியாவை பற்றிய சில தகவல்கள் ஆச்சரியப்படுத்துபவை.
17 ம் நூற்றாண்டு வரை இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் பகுதிகளே உலகின் பெரும் செல்வந்த நாடுகள்.அலெக்சாண்டர் மற்றும் இதர கிரேக்கர்கள் ஹிந்துகுஷ் வழியாக அடைந்த தேசத்தின் செல்வச் செழிப்பை(தங்கம் பெருமளவில் பாத்திரங்கள் வடிவில் உபயோகிக்கப் படுகிறது;அரிய ரத்தின நகைகள் வெகு சாதாரணமாக உபயோகப் படுத்தப் படுகின்றன போன்ற குறிப்புகளால்...) ஐரோப்பா உணர்ந்ததும் மேலும் பல ஐரோப்பியர்கள் கீழை நாடுகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்க வேண்டும்.
அந்த நாட்களில்(17’ம் நூற்றாண்டு வரை) இந்தியாவின் முகலாயர்களும்,சீனாவின் மிங் இனமும் மட்டுமே தெற்கு ஆசியாவின் பெரும் அரசியல் ஆட்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள்.அப்பொதைய உலகின் ஐரோப்பிய தேசங்களுக்கு இந்திய,சீன தேசங்கள் பலமும்,செல்வாக்கும் பெற்ற இரு தேசங்கள் !
மில்டனின் paradise lost ல் ஆக்ராவும்,லாகூரும் கடவுளின் எதிர்கால உன்னத ஆக்கங்களாக ஆடம்’க்கு வருணிக்கப் படுகின்றன.(நம்பத்தான் முடியவில்லை,இல்லையா?)
அந்நாளைய லாகூர்,அந்நாளைய கான்ஸ்டாண்டிநோபிளை விட செல்வத்திலும்,வலிமையிலும் வெகுவாகச் சிறந்திருந்தது.
1498 ல் வாஸ்கோடகாமாவின் கீழை தேசங்களுக்கான கடல் வழி கண்டுபிடிக்கப் பட்ட பின்புதான் ஆரம்பித்தது சனி !
1600 ல் கிழக்கிந்தியக் கம்பெனி துவங்கப் பட்ட போது பிரிட்டனின் ஆண்டு மொத்த பொருளியல்(GDP) உலகின் மொத்த பொருளியலில் 1.8 % மட்டுமே. அப்போதைய இந்தியாவின் பொருளியல்-மூச்சப் பிடித்துக் கொள்ளுங்கள்- 22.5%.
1870 ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் உச்சத்தில் பிரிட்டனின் பொருளியல் 9.1 % ஐ எட்டியபோது,இந்தியா தேர்ட் வேல்ர்ட் நாடாக மாற ஆரம்பித்தது. இன்னும் சொல்லப் போனால் 18’ம் நூற்றாண்டுகளில்தான் பிரிட்டன் ‘ஒப்பு நோக்கிய கொடுக்கல்(Balance of Payment) விகிதத்தில் ஆசியாவை மிஞ்ச முடிந்தது !
(ஆக வைசிராய்களும்,கவர்னர்களும் சுமார் 200 ஆண்டு காலம் இந்தியாவை விடைபெற்றுச் செல்லும் போதெல்லாம் எத்தனை கப்பல்களில் எவ்வளவு ‘எடுத்துக்’ கொண்டு சென்றிருப்பார்கள் என்பதை கற்பனைக்கே விட வேண்டும்.அவ்வளவுக்கும் தாக்குப் பிடித்தே இந்த நிலையில் இன்று இருக்கிறோம்.ஹூம்...ஏன் பிரிட்டிஷ் பவுண்ட் 100 ரூபாயை எட்டாது!)
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சரியான் தொலைநோக்குப் பார்வை உடைய கொள்கைகளும்,தலைவர்களும்,சீரிய பண்புகளையும்,முதன்மைத் தகுதிகளையும் கொண்டவர்கள் மட்டுமே நாட்டை வழி நடத்துபவர்களாக இல்லாது போனதும்,மருந்துக்கும் ஊழல் இருக்கக் கூடாது என்ற கொள்கை இல்லாததுமே இந்தியா மூன்றாம் தர வரிசைக்குப் போன கதையின் அடிநாதம்.
இன்று பிரிட்டனின் முதல் செலவந்தர் லக்ஷ்மி மிட்டல்.பிரிட்டனின் மிகப் பெரிய எஃகு ஆலையான கோரஸ்,இந்திய டாடாவுக்கு சொந்தம் !
வரலாறு திரும்புவது போலத் தோன்றினாலும் மேற்சொன்ன மூன்று காரணங்களும்,கிராமப் பொருளாதாரமும்,நகர் சார்ந்த பொருளாதாரமும் இருவேறு திசைகளில் பயணிப்பதும்,வீங்கி வெடிக்கப் போகும் வெடிகுண்டைப் போன்ற மக்கள்தொகையும் இன்னும் நம்மைக் கீழே இழுக்கும் காரணிகள் !

Acknowledgement: The Last Mughal : The fall of Dynasty,Delhi 1857 written by Willium Dalrymple

பெல்லி டான்ஸ்-இது புதிய/விரும்பும் வகை

பெல்லி டான்ஸ் என்றவுடன் ஏதோ விவகாரமான நடனம் என்று எண்ணுவதுதான் இயல்பு.(தாய்லாந்து சென்று வந்தவர்களுக்கு ஏதேனும் மலரும் நினைவுகள் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல).ஆனால் இந்த செய்தி சுவாரசியமானது.

கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்படும் நடனம் இந்த லேட்டஸ்ட் பெல்லி டான்ஸ்.(இதை தொப்பை நடனம் என்று தமிழ்ப்படுத்தினால்,படுத்துவது போல இருப்பதால் அப்படியே அழைக்கிறேன்!).
படத்தைப் பார்த்தவுடன் இது கருவுக்கோ குழந்தைக்கோ ஊறு விளைவிக்கும் என்ற எண்ணம்தான் முதலில் வரும்.ஆனால் இல்லை என்கிறார் கிழக்கு வர்ஜீனியா மருத்துவப் பல்கலையின் Dr.Sue Kelly Sayegh.இதை வேகமாக fast pace dance போல செய்யாமல்,மெதுவான,எளிதான அசைவுகளில் மேற்கொள்வது பெல்விக் தசைகளுக்கு பேறுகால நேரத்தின் தேவைகளுக்கு ஏதுவான பயிற்சியாக இருக்கும் என்கிறார்.

பேறுகாலம் நெருங்கும் வரைக்கும் இந்த பெல்லி டான்ஸ் பயிற்சியை மேற்கொண்ட ஒரு பட்டமேற்படிப்பு மாணவி,எந்தவித வலியோ வேதனையோ இன்றி பிரசவித்ததாக சொல்கிறார்.

டைம் வலைத்தளத்தின் செய்தி (27/08/2007), அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்த parental belly dance குறுந்தகடு விற்பனைத்தர வரிசையில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாகச் சொல்கிறது.

Uncle Tom சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பதுதான் கீழை நாட்டினர் பலரின் நம்பிக்கை!
ஆனால் இந்திய யோகமுறைகளின் பயிற்சி பற்றி ஆர்வம் உள்ளவர்கள் யோகாச்சார்யா சுந்தரம் எழுதிய 'யோக சிகிச்சை' புத்தகத்தில் 'கருவுற்ற மகளிருக்கான பயிற்சித் திட்டம்'ஐ ஒருமுறை புரட்டிவிடுங்கள் !

Saturday, August 25, 2007

இது உண்மையெனில் உலகம் எங்கே போகிறது ?

நொறுக்கும் போர் .. வாழ வழியில்லை!உடலை விற்கும் அவலத்தில் ஈராக் விதவைகள்!!
ஆகஸ்ட் 25, 2007 -அபூ ஸாலிஹா
அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது. கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத் தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தைக் காக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின் நடைப்பிணங்கள் நடமாடும் சுடுகாடாய் காட்சியளிக்கும் ஈராக்கில் நிர்க்கதியான பெண்கள் அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புக்கள் பெருமளவு குறைந்து விட்டது. பசியால் துடிக்கும் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற எத்தகைய கடுமையானதொரு வேலையையும் செய்ய, தான் தயாரான போதிலும் வேலை கிடைக்காத ஒரே காரணத்தினால் பிச்சை எடுக்கும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இவருக்குப் பிச்சையிட்டவர்கள் இவரை நடத்திய விதம் மோசமானதாகவே இருந்தது. இவருக்கு வேலை தருவதாகவும் உதவி செய்வதாகவும், போலிவேஷம் போட்டு முன்வந்தவர்கள் மனதில் கீழ்த்தர எண்ணங்களே மிகைத்திருந்தன. சம்பாதித்துக் கொண்டிருந்த கணவர் இறந்த சில வாரங்களிலிலேயே இவரது குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதற்கு ஒரே காரணம் - பசியும் பட்டினியும் என்பதால் செய்வதறியாது மருத்துவர்கள் திருப்பியனுப்பி விட்டனர். நம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் செய்வதறியாது விக்கித்து நின்ற நிலையில் தான் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து கண்களில் நீர் பனிக்க அவர் கூறுகிறார்: ஆரம்பத்தில் இவை என் வாழ்க்கையின் மிகப் பயங்கரமான நாட்களாக இருந்தது. என் குழந்தைகள் பசியின் காரணத்தால் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் என்னால் இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை இறை விசுவாசத்தையும், துடிக்கும் தன்மான உணர்வுகளையும் மீறி மனதில் ஏற்படுத்திய ரணத்தின் காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன். அருகிலுள்ள சந்தைப் பகுதிக்கு சென்றேன். நான் இயற்கையாகவே அழகிய உருவம் கொண்டுள்ளதால் எனக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை. என்னுடன் ஒப்புக்கொண்ட நபருடன் நான் தனியறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடும் என்று அடி மனதில் எழுந்த அச்சத்தினால் அலறி ஓட முயன்றேன். ஆனால், அந்த நபர் என்னை விடவில்லை. பலவந்தப்படுத்தி என் கற்பை சூறையாடிவிட்டார். அவர் வீசி எறிந்த காசைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நேராக கடைக்கு ஓடினேன். அவசரமாக உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன். என் கையில் உணவைப் பார்த்த போது என் குழந்தைகள் சந்தோஷத்தில் கத்திய குரல் என் காதில் இன்னும் ஒலிக்கிறது. பசிக்கொடுமையின் காரணத்தால் நான் கேட்டிருந்த என் குழந்தைகளின் மரண ஓலத்தை விட எனது மானம் எனக்குப் பெரிதாக தெரியவில்லை ... நம்பிக்கையிழந்த ஈராக்கிய விதவைகள்: ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு பெருமளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தில் பொதுமக்கள் அழிந்து வருகின்றனர். கடைவீதியில், பொதுவிடங்களில், பொதுமக்கள் குழுமியிருக்கும் இடங்களில் குண்டு வெடித்துக் கொண்டு இருப்பதனால் தினசரி எழுபது, எண்பது பேர் இறந்தனர் என்ற செய்தி எல்லாம் இப்போது வெகு இயல்பாக, கேட்டுக்கேட்டுப் பழகிப்போன சர்வ சாதாரண செய்தியாய் மாறி வருவதை எவரும் மறுக்க இயலாது. அமெரிக்கப் படை ஈராக்கினுள் கால் வைப்பதற்கு முன்னர் வரை ஈராக்கில் விதவைப் பெண்களுக்கு, குறிப்பாக ஈரான் - ஈராக் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு அப்போதைய ஈராக்கிய அரசு வீடு, இலவசக் கல்வி மற்றும் உதவித் தொகை போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து அதனை முறையாகவும் கொடுத்து வந்திருந்தது. அத்தகைய எவ்வித உதவியும் தற்போதைய பொம்மை அரசு வழங்குவதில்லை என்பதும், கொடுத்து வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.ஓரளவு வசதி வாய்ந்த விதவைகள் இதில் விதிவிலக்காக தப்பித்துக்கொள்கிறார்கள். பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அரசு சாரா அமைப்பான OWFI சமர்ப்பித்துள்ள புள்ளி விபரப்படி, அமெரிக்க அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய விதவைகளில் 15% பெண்கள் தங்களின் குடும்பத்தினருக்காக வேலை தேடிப் போராடி வருவதாகவும், தற்காலிக திருமணமோ, விபச்சாரமோ செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் என்ற பெண்மணி அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈராக்கிய விதவைகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே இதற்கான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே இப்பெண்களின் பரிதாப நிலைமையின் பயங்கரம் முகத்தில் அறைய ஆரம்பித்து விட்டது. எங்களால் விவரிக்க இயலாத அளவிற்கு இப்பிரச்னை பூதாகரமாக உருவாகியிருக்கிறது. ஈராக்கிய தெருக்களில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விதவைகள் வேலை தேடியும், பிச்சை கேட்டும் அலைகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நுழைந்த பிறகு, அங்கே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் அதில் 20% பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்கள் என்றும், NGO நிறுவனம் இத்தகவலை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார். பெரும்பாலான பெண்கள் ஈராக்கிற்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்டும் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டும் இருக்கலாம் என்று OWFI நம்புவதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற தாக்குதலில் கணவர்களை இழந்து பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் (ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மட்டும்) 350,000 பேர் என்றும், நாட்டில் மொத்த விதவைகள் மட்டும் 80 லட்சத்திற்கும் அதிகம் என்றும் ஈராக்கின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தெரிவிக்கிறது. துயரமான வியாபாரம்: விதவைகளாக உள்ள இளம் வயது ஈராக்கிய பெண்கள் நிலை இப்படி எனில் அமெரிக்க அராஜகத்தில் உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் ஏதுமற்று தங்களது மகள்களையே விபச்சாரத்திற்காக சந்தையில் விற்கும் மிகக் கொடூரமான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கொடுமையை எத்தனை பேர் அறிவர்? ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அபூ அஹ்மத் என்பவர் குண்டுவீச்சில் தன் மனைவியை இழந்து தானும் ஊனமுடைந்தவர். தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்கத் திறனற்று, கடும் அவதியுற்று, வெளிநாடுகளிலிருந்து விபச்சாரத்திற்காக பெண்களை விலைக்கு வாங்க வந்திருந்த நபர்களிடம், லினா என்ற தன் சொந்த மகளையே விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். என் மகள் லினாவிற்காக விபச்சார விடுதியினர் கொடுத்த தொகையைக் கொண்டு என் மற்ற மூன்று மகள்களையும் ஒரு மகனையும் ஒரு வேளை உணவாவது சிரமமின்றி உண்ண வைக்க முடியும் என்று அல்ஜஸீரா நிரூபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார். அபூ அஹ்மத்தின் சூழலைக் கண்டு பரிதாபப்பட்டு (?) தாமே அவரை வற்புறுத்தி அணுகி உதவியதாக ஷாதா என்கின்ற விபச்சார விடுதியைச் சேர்ந்த தரகுப்பெண் அல்ஜஸீராவிற்கு பேட்டியளித்துள்ளார். இளம் விதவைகளை இனம் கண்டு அவர்களது ஏழ்மையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி வருவதாகக் கூறும் இவர் இளம் பெண்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு மிக அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படும் பெரும் வியாபாரம் பற்றி விளக்கினார். "ஒருவேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ள இவர்களுக்கு குறைந்தது பத்து அமெரிக்க டாலர் பெற்றுத்தருகிறோம். அதற்காக அப்பெண் குறைந்த பட்சமாக ஒருநாளைக்கு இரண்டு வாடிக்கையாளர்களுடன் 'இருந்தால்' போதும்" என்கிறார் சர்வ சாதாரணமாக. வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பெண்கள்: OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் மேலும் கூறுகையில் லினாவைப் போன்ற அபலைப் பெண்கள் வறுமையின் காரணமாக ஐநூறு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறார்கள். தந்தையை இழந்ததினால் தன் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிப் போன சுஹா எனும் 17 வயது இளம்பெண், தன்னுடைய பெற்ற தாயினாலேயே விபச்சார விடுதியில் விற்கப்பட்டார். சுஹாவிடம் பேட்டி கண்ட அல்ஜஸீராவிடம் அவர் கூறுகையில், தான் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏமாற்றி விற்கப்பட்டதாகவும் சிரியா மற்றும் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் உள்ள பெரும்புள்ளி விலங்குகளுக்கு தினசரி உணவாவதாகவும் கூறியது உருக்கமாக இருந்தது. விபச்சாரக் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு நாள் விடுதியிலிருந்து தப்பித்து ஓடி சிரியாவிலுள்ள ஈராக்கிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறினார். தற்போது தனது அத்தையின் வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருக்கும் சுஹா, சிரியாவின் விபச்சார விடுதியில் இருந்து தான் தப்பித்து ஈராக் திரும்பும் வரை தனக்கு உதவிய ஒரு ஈராக்கிய குடும்பத்திற்கு தான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நினைவுகூர்ந்தார். தன்னைப் போன்றே பலப் பல பெண்கள் இத்துயரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாக்தாத்தின் பெண்ணுரிமைச் சங்கத்தின் (WRA) செய்தித் தொடர்பாளரான மயாதா ஜூஹைர் என்ற பெண் பேசுகையில், ஈராக்கிய அரசு மற்றும் அரசு சாரா (NGO) அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இளம் பெண்களைக் கடத்துவதையும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதையும் தடுக்க முயன்று வருகிறோம். அமெரிக்கப் படையெடுப்பினால் நாசமாகிப் போய் இருக்கும் ஈராக்கில், வறுமையில் நிர்க்கதியாய் நிற்கும் விதவைகளும், இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலான உதவியும் போதுமான அளவிற்கு நிதியுதவியும், மனித வளமும் இல்லாமல் இப்பிரச்னையை எளிதாக தீர்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம். தனது மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்து கொண்டிருப்பதை, தான் நன்கு உணர்வதாகக் கூறுகிறார், தன் கணவரை ஒரு வெடி விபத்தில் இழந்திருக்கும் நிர்மீன் லத்தீஃப் என்ற 27 வயதான விதவைப் பெண். தனது நிலையை எடுத்துக்கூறி பொருளாதார உதவி செய்யுமாறு தனது உறவினர்களை எவ்வளவு வேண்டிக் கொண்டும் பலனின்றிப் போகவே, வேறு வழியே இன்றி விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் கூறியவை: "எனக்குத் தெரிவதெல்லாம் பசியினால் என் கண்முன்னே துடித்து இறந்து கொண்டிருக்கும் என் குழந்தைகள்; என் குழந்தைகள் மட்டுமே!" என்கிறார் வெறித்த பார்வையுடன்.


இந்த செய்தி That’s Tamil (25/08/2007) வலைமனையில் வந்தது.

உடன் எழும் கேள்விகள்:
1.அமெரிக்கா இராக்கில் நுழைந்த போது சதாம் ஒளித்து வைத்திருக்கும் பேரழிவு ஆயுதங்களை தேடப் போகும் சாக்கில் நுழைந்தது;ஒரு டப்பா குண்டு கூட வெளிவரவில்லை.பின் எதற்காக அமெரிக்கா இராக்கில் நுழைந்தது?
2.குர்திஷ் இன மக்களைக் கொன்று குவித்தாதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில்(அது உண்மையாகவே இருந்திருக்கலாம்,சதாம் சத்புத்திரர் என்று கூறுவது என் நோக்கமல்ல)சதாம் ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்துவதுதான் நோக்கம் என்றால்,அதை ஐ.நா.வுக்கோ,உலக நீதிமன்றத்துக்கோ எடுத்துச் சென்றிருக்கலாம்.ஆனால் இப்போது சதாமையும் வெற்றிகரமாக முடித்தாகிவிட்டது!
3.ஏன் இது போன்ற செய்திகள் உலகத்தின் பல நாடுகளின் ஊடகங்களில் வரவேயில்லை?ஊடகங்களைப் பொறுத்த வரை, இராக் பழைய செய்தியாகி விட்டதோ??????? அல்லது இந்த செய்தியே பொய்யா?????
4.ஒரு மூன்றாம் நாட்டில் எந்த முகாந்திரமும் இன்றி அமெரிக்கா நுழைந்து பஞ்சாயத்து செய்வது எந்த அடிப்படையில்?கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்கள் மறு அரங்கேற்றம் செய்யப்படுவது போல தோன்றுகிறது,இம்முறை அமெரிக்காவினால்....

அமெரிக்க பாராளுமன்றமும்,செனட்டர்களும் இந்த செய்திக்கு என்ன எதிர்வினை செய்வார்கள்?

Monday, August 20, 2007

அங்கும்...இங்கும்...

பல சமயங்களில் நாம் எதிர்பார்க்காத நேரங்களில் எதிர்பாராதவற்றை சந்திக்க நேரிடும்;அவை சில சமயம் நல் முத்துக்களாய் அமைவதும் உண்டு.
சில சுவாரசியமான வாசிப்புகள் கூட அவ்வாறு எதிர்பாராமல் நிகழக் கூடும்;அப்படி சமீபத்தில் படித்தது நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படும் இராமலிங்கம் பிள்ளையின் சுய சரிதையான ‘என் வரலாறு’.
உ.வே.சா’வின் ‘என் சரித்திரம்’ அவருக்கு மனவெழுச்சியாக(inspiration) இருந்திருக்கலாம்...

காந்தியின் உளுத்த கோட்பாடுகளை உடும்புப்பிடியாய் பிடித்திருந்த போதிலும்,கவிஞரின் எளிய கவிதை வரிகளின் திறம் ரசிக்கத்தக்கது.

‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது;
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’
போன்ற ‘மனப்பாடப் பகுதி’க் கவிதைகள்தான் நமக்குப் பரிச்சயம்.ஆனால் பாரதியை மிக நெருங்கும் தரத்தில் கவிஞரின் புதுமைப்பெண்’ணின் வடிவம் மிக ரசிக்கவேண்டிய ஒன்று !
அந்தக் கவிதையைப் பாருங்கள்...

“மான் என அவளைச் சொன்னால்
மருளுதல் அவளுக் கில்லை.
மீன்விழி உடையா ளென்றால்
மீனிலே கருமை இல்லை.
தேன்மொழிக் குவமை சொன்னால்
தெவிட்டுதல் தேனுக் குண்டு.
கூன்பிறை நெற்றி என்றால்
குறைமுகம் இருண்டு போகும்.
மறுமணம் மாதர்க்கில்லை
மதலையை விதவை யாக்கி
நறுமணப் பூ வு மின்றி
நல்லஓர் துணியும் இன்றி
உறுமணல் தேரை போல
ஒளர்ந்திருந் தொடுங்கச் செய்யும்
சிறுமனப் பான்மை யேநம்
தேசத்தின் நாசம் என்பாள்
கற்பெனப் பேசு வார்கள்
கற்பினைப் பெண்களே காக்கப்
பற்பல பெண்ணை நாடிப்
பசப்பலாம் ஆண்கள் மட்டும்
அற்புதம் ஆனதாகும்
அநியாயம் இந்த நாட்டின்
நற்பதம் கெடுத்த தென்று
நாளெல்லாம் நைவாள் நங்கை”

இத்தனை எளிய,இனிய கவித்திறம் படைத்திருந்த கவிஞர்
பெரிதும் முயன்றது ஒரு ஓவியனாக வர !
அவரின் சில ஓவிய முயற்சிகள் பெரிதும் பாராட்டப் பட்டதும்,பல சன்மானங்களும் அவருக்கு கிடைத்தன;ஒரு ஆங்கில அதிகாரியின் மகளின் படத்தை அவள் இறந்த பல காலத்திற்குப் பிறகு அப்பெண்ணின்,தேசலான சிறுவயதுப் புகைப்படத்தை வைத்து கவிஞர் வரைந்த ஜீவ ஒளியுடன் கூடிய ஒரு ஓவியம் தன் பெண்ணை உயிரோட்டமாக வர்ணித்ததாக அந்த அதிகாரி மகிழ்ந்து பெரும் பொருள் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

ஆனால் ‘என் வரலாறி’ல் நான் ரசித்த விஷயம் முற்றிலும் வேறானது.

நாமெல்லாம் திருக்குறளை அணுகும் போது உரை தேவைப்பட்டால்,ஓரளவிற்குத் தரமானதாகக் கருதுவது மு.வ’வின் உரை.(வலையபட்டி’யின் பழனியப்பா கல்லூரி’யில் த.ஆசிரியர் திரு.மாணிக்கவாசகம், ’அராஜகமாக’ என்னைப் திருக்குறள் போட்டியில் நுழைத்து,50 அதிகாரங்கள் படித்க வைத்தது மு.வ.வின் உரையை வைத்தே..கல்லூரி என்பதெல்லாம் ஒரு ‘ஜபர்தஸ்துக்கு’,உண்மையில் அங்கு இருந்தது எட்டாம் வகுப்பு வரைக்கும் தான்...ஆயினும் அது my sweet alma matter’களில் ஒன்று !)
மேலும் பண்டிதத்தனம் வேண்டுபவர்கள் என்றும்(இன்றும்) நாடுவது பரிமேலழகர்’ஐ...
கவிஞர் சிறைவாசம் அனுபவித்தபோது திருக்குறளுக்கு அவர் நோக்கில் ஒரு உரை காண முயற்சி செய்திருக்கிறார்.
(அதென்னவோ அக்காலத்தில் சிறைவாசம் இருந்தவர்களெல்லாம் சிறையில் ஏதேனும் உருப்படியாகச் செய்திருக்கிறார்கள்...இப்பொது trend’டே வேறு....’கொல்றாங்க...கொல்றாங்க’ தான்)
கவிஞர் சில குறள்’களுக்கு பரிமேலழகரின் உரையை,அவர் ஆக்கிய உரையோடு விளக்குகிறார். உதாரணமாக
பொருள்செயல் வகை-அதிகாரத்தில்

குன்றேறி யானைபோர் கண்டற்றாற் றன்கைத் தொன்

றுண்டாகச் செய்வான் வினை.


இதற்கு உரை எழுதியவர் யாவர்களும் ( பரிமேலழகர், மணக்குடவர், மு.வ., ஜி.யு.போப், முதல் இன்றைய கருணாநிதி வரை) “தன் காப்பொருளை வைத்து தொழில் செய்பவன் செயல்,குன்றின் மீது ஏறி நின்று யானைப் போரைக் ‘காண்பது’ போல எளிதானது” என்ற பொருளையே தருகின்றனர்.அதாவது செயலாகிய ‘தொழிலு’ம், செயலாகிய ‘காண்பதுவும்’ உவமை உருவகத்தில் வருகின்றன.சிறிது சிந்தித்தால் யானைப்போரைக் ‘காணும்’ செயலும்,தொழில் செய்யும் ‘செயலும்’ ஒன்றுக்கொன்று ஒவ்வாத உவமைகளாகத் தோன்றும்.(எனக்கே சிறுவயதில் ‘கடம்’ அடிக்கும் போது தோன்றியிருக்கிறது, யானைபோரைக் ‘காண்பதற்கும்’ தொழில் செய்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று!)

கவிஞர் தரும் உரை வித்தியாசமானதும்,ஏற்றுக் கொள்ளத்தக்கதுமான உரை...அவர் ‘கண்டற்றால்’ என்பதை ‘காணுதல்’ என்ற செயலாக உருவகப்படுத்தவில்லை;மாறாக ‘அடைதல்’,’ஈடுபடுதல்’ என்று பொருள் கொள்கிறார்.
‘களம் பல கண்டு,படை பல வென்று..’ என்ற சொல்லாடலில் ‘கண்டு’,’காண்’ போன்ற விகுதிகள் ஈடுபடுதல்,அடைதல்,வெற்றி கொள்ளுதல் போன்ற பொருளையே தருகின்றன;அது போன்றே, யானைப் போர் கண்டற்றால் என்பது குன்றின் மீது நின்று யானைப்போரில் ஈடுபடுவது போன்றது,கைப்பொருளைக் கொண்டு தொழில் செய்வது என்பது உரை.
இந்தக் குறளுக்கு எனக்கு கவிஞரின் உரைதான் சரியெனப் படுகிறது !
இது போல சிற்சில முத்துக்கள் ஆங்காங்கே....

Monday, August 13, 2007

60 ஆவது சுதந்திர தினம்- ஒரு மீள்பார்வை 1

நாம் இந்தியாவின் 60 ஆவது சுதந்திர தினத்தை வரும் 15’ஆகஸ்ட் 2007 ல் கொண்டாடப்போகிறோம்.(உண்மையில் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடுகிறோமா என்பது ஒரு விவாதத்திற்கு உரிய கேள்வி.ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வஸந்த் & கோ,வஸந்த் ‘சுதந்திரம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று’ என்கிறார்.அவரைப் பொறுத்த வரை அது ஒரு உருவாக்கப்பட்ட பொருள்,commodity);அரசியல்வாதிகளுக்கு கோட்டையில் கொடி ஏற்றும் ஒரு வைபவம்;அறியாப் பாலகர்களுக்கு பள்ளியில் மிட்டாய் கொடுக்கும் மற்றுமொரு தினம்..எந்த இந்தியக் குடிமகனுக்காவது சுதந்திரம் பற்றி ஒரு பெருமிதமோ,மகிழ்வோ,கொண்டாட்டமோ இருக்குமா???
பெரும் கல்வி கற்ற நாமாவது அப்படி உணருகிறோமா???
உண்மையான நெஞ்சார்ந்த பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.நம்மில் பெரும்பாலானவர்களுக்கு,மேலும் கிடைக்கும் ஒரு விடுமுறை நாள்தான் சுதந்திர தினத்தை நினைவு படுத்தும் கருவி !!!
60 ஆண்டுகளின் சுதந்திரம் இந்தியாவை,இந்தியர்களை என்னவாக ஆக்கியிருக்கிறது?
ஒரு ஒப்பிடாக ஜப்பான் 1945’ல் ஒரு பேரழிவை சந்தித்தது !
3 நாட்கள் இடைவெளியில் இரண்டு அணுகுண்டு தாக்குதல்கள்!!
பெருமளவு மக்களும்,பொருள் சேதமும் ஜப்பானை சீர் குலைத்தன.
இந்தியாவும் ஒரு பேரழிவில் இருந்து 1948 ல் மீண்டது.நாமும் மிகப் பெருமளவு (வரலாற்றில் இல்லாத அல்லது மறைக்கப்பட்ட,மறக்கப்பட்ட) மனித உயிர் இழப்பை சந்தித்தோம்;ஆயினும் நமக்கு பொருள் கட்டமைப்பு சேதம் ( destruction of infrastructure) ஜப்பானின் அளவுக்கு இல்லை.
ஆனால் இன்று இரு தேசங்களையும் ஒப்பு நோக்க முடியாத அளவுக்கு ஜப்பான் முன்னேறியிருக்கிறது..நாம் பின் தங்கி இருக்கிறோம்... நாம் சுதந்திர இந்தியாவில் என்ன சாதித்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால்,வருவது பல வகைகளில் வருத்தமே !
இன்னொரு கவனிக்கத்த ஒப்பீடு சிங்கப்பூர்.சிங்கப்பூர் தனது 42 ஆவது சுத்ந்திர தினத்தை கடந்த ஆகஸ்ட் 9,2007 ல் கொண்டாடியது.
ஆனால் அது உண்மையான கொண்டாட்டம் !
சிங்கப்பூரின் பிரதமர் மகிழ்ச்சியுடன் மக்களுடன் கலந்த நேரம் அது !

மக்களின் பங்கு குறைவானதல்ல! அவர்களின் உற்சாகத்தைப் பாருங்கள் !


சின்னஞ் சிறுவனின் முகத்தில் கூட கொண்டாட்டமும் பெருமிதமும் !
சுதந்திர தின விழா நடந்த அரங்கு நீரில் மிதக்கும் ஒரு பெரும் மேடை;கொண்டாடங்களும் வான வேடிக்கைகளும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன !
இத்தனைக்கும் சிங்கப்பூர் பொருளாதார வளத்தை மட்டும் சாதித்த ஒரு நாடு ! இந்தியாவை போல மிகப் பெரும் பாரம்பரியமோ,இந்தியா உலகிற்கு வழங்கியது போல பெரும் கருத்தாக்கங்களோ,இந்தியாவைப் போன்ற இயற்கை வளங்களோ எதுவும் சிங்கப்பூரில் இல்லை....
ஆனால் ஒரு முன்னேறிய சிங்கப்பூரை உருவாக்குவேன் என்று உள்ளார்ந்து நம்பிய,செயல் வேகம் மிக்க தலைவர்களும், அவர்களின் அறைகூவலுக்கு செவி சாய்க்கும்,நாட்டின் சுதந்திரத்திலும்,முன்னேற்றத்திலும் பெருமைப்படும் மக்களும் கை கோர்த்தார்கள் !
இந்தியாவிலும் மாறுதல்கள் சாத்தியம் என்று மனமார்ந்த நம்பிக்கை கொண்ட எண்ணற்ற இளைஞர்களில் நானும் ஒருவன்!

ஆனால் அதற்கான ஆயத்தங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை,நம்மைப் போன்ற,கல்வி கற்ற,உலகளாவிய பார்வை கொண்ட இந்தியர்கள்,சிந்திக்க வேண்டிய நேரம்,இந்த 60 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரம் !!!


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நன்றி !

1-நாம் என்ன செய்ய முடியும் ?

நண்பர்களே,
எனக்கு மின் கடிதம் (email) மூலம் வந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....


FACTS TO MAKE EVERY Indian PROUD

Q. Who is the GM of Hewlett Packard (hp)?

A. Rajiv Gupta

Q. Who is the creator of Pentium chip (needs no introduction as 90% of the today's computers run on it)?

A. Vinod Dahm

Q. Who is the third richest man on the world?

A. According to the latest report on Fortune Magazine, it is Azim Premji, who is the CEO of Wipro Industries. The Sultan of Brunei is at 6 th position now.

Q. Who is the founder and creator of Hotmail (Hotmail is world's No.1 web based email program)?

A. Sabeer Bhatia

Q. Who is the president of AT & T-Bell Labs (AT & T-Bell Labs is the creator of program languages such as C, C++, Unix to name a few)?

A. Arun Netravalli

Q. Who is the new MTD (Microsoft Testing Director) of Windows 2000, responsible to iron out all initial problems?

A. Sanjay Tejwrika

Q. Who are the Chief Executives of CitiBank, Mckensey & Stanchart?

A. Victor Menezes, Rajat Gupta, and Rana Talwar.We Indians are the wealthiest among all ethnic groups in America, even faring better than the whites and the natives. There are 3.22 millions of Indians in USA (1.5% of population). YET, 38% of doctors in USA are Indians. 12% scientists in USA are Indians. 36% of NASA scientists are Indians. 34% of Microsoft employees are Indians. 28% of IBM employees are Indians. 17% of INTEL scientists are Indians.
13% of XEROX employees are! Indians. Some of the following facts may be known to you. These facts were recently published in a German magazine, which deals with WORLD HISTORY
FACTS ABOUT INDIA.


1. India never invaded any country in her last 1000 years of history.
2. India invented the Number system. Zero was invented by Aryabhatta.
3. The world's first University was established in Takshila in 700BC. More than 10,500 students from all over the world studied more than 60 subjects. The University of Nalanda built in the 4 th century BC was one of the greatest achievements of ancient India in the field of education.
4. According to the Forbes magazine, Sanskrit is the most suitable language for computer software. 5. Ayurveda is the earliest school of medicine known to humans.
6. Although western media portray modern images of India as poverty striken and underdeveloped through political corruption, India was once the richest empire on earth. 7. The art of navigation was born in the river Sindh 5000 years ago. The very word "Navigation" is derived from the Sanskrit word NAVGATIH.
8. The value of pi was first calculated by Budhayana, and he explained the concept of what is now k! nown as the Pythagorean Theorem. British scholars have last year (1999) officially published that Budhayan's works dates to the 6 th Century which is long before the European mathematicians. 9. Algebra, trigonometry and calculus came from India . Quadratic equations were by Sridharacharya in the 11 th Century; the largest numbers the Greeks and the Romans used were 106 whereas Indians used numbers as big as 10 53.
10. According to the Gemmological Institute of America, up until 1896, India was the only source of diamonds to the world. 11. USA based IEEE has proved what has been a century-old suspicion amongst academics that the pioneer of wireless communication was Professor Jagdeesh Bose and not Marconi.
12. The earliest reservoir and dam for irrigation was built in Saurashtra. 13. Chess was invented in India.
14. Sushruta is the father of surgery. 2600 years ago he and health scientists of his time conducted surgeries like cesareans, cataract, fractures and urinary stones. Usage of anaesthesia was well known in ancient India .
15. When many cultures in the world were only nomadic forest dwellers over 5000 years ago, Indians established Harappan culture in Sindhu Valley ( Indus Valley Civilisation).
16. The place value system, the decimal system was developed in India in 100 BC.
Quotes about India .
We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made. Albert Einstein.
India is the cradle of the human race, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend and the great grand mother of tradition. Mark Twain.
If there is one place on the face of earth where all dreams of living men have found a home from the very earliest days when man began the dream of existence, it is India . French scholar Romain Rolland.
India conquered and dominated China culturally for 20 centuries without ever having to send a single soldier across her border. Hu Shih (former Chinese ambassador to USA )
ALL OF THE ABOVE IS JUST THE TIP OF THE ICEBERG, THE LIST COULD BE ENDLESS. BUT, if we don't see even a glimpse of that great India in the India that we see today, it clearly means that we are not working up to our potential; and that if we do, we could once again be an evershining and inspiring country setting a bright path for rest of the world to follow.
I hope you enjoyed it and work towards the welfare of INDIA . Say proudly, I AM AN INDIAN. Please forward this email to all friends….

இதன் சாராம்சம்,நாம் இப்பொழுது உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளில் பங்கு வகிக்கிறோம் அல்லது நிர்வகிக்கிறோம் என்பதே.
எனக்கு தோன்றுகிற தவிர்க்க முடியாத ஒரு கேள்வி,ஏன் இவ்வளவு புத்திசாலிகள் இருக்கின்ற ஒரு தேசம் தன் குடிமக்களை இன்னும் முழுமையாக வறுமைக் கோட்டில் இருந்து மீட்க முடியாமல் இருக்கின்றது ?
வெளி நாடு வாழ் இந்தியர்களான பலர் (இந்த வகை மின் கடிதங்கள் பெரும்பாலும் வெளிநாடு வாழ் இந்தியர்களாலேயே அனுப்பப் படுகின்றன.அல்லது அவர் வெளிநாடுகளை ஒரு முறையாவது போய் பார்த்திருப்பார்,ஏனெனில் அவர்களுக்குத்தான் இந்தியாவுக்கும்,பல வளரும்,வளர்ந்த நாடுகளுக்கும் இருக்கும் மாபெரும் வித்தியாசம் மனதில் உறைக்கும்;அதற்கு ஒரு எதிர் வினையாகவாவது ஒரு மின்மடல் அனுப்பி விட்டு ஆறுதல் கொள்வார்கள்! இந்தியாவிலேயே இருக்கும் அனைவரும் (மெத்தப் படித்தவர்கள் உட்பட) இந்தியாவில் இருக்கின்ற எருமைமாட்டுத் தனத்துக்கு பழகி விட்டார்கள்;அல்லது விரும்பி ஏற்றுக் கொள்ளவே தயாராகி விட்டார்கள்...) இந்த வகையான மின்கடிதங்களை அனுப்புவதிலேயே திருப்தி அடைந்து விடுகின்றோமா? (மின்மடலின் முடிவில் தவறாது ஒரு குறிப்பு இருக்கும்,please forward this to your friends.......என்று) .
இது தவிர நம்மால் ஒன்றுமே செய்ய இயலாதா?
இவ்வளவு கடின உழைப்பும்,தகுதியும்,திறமைகளும் நிரம்பப்பெற்ற ஒரு சமுதாயம் ஏன் வேறு வகையான மாற்றங்களை இந்தியாவில் கொண்டு வர முடியாது?
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
இதற்கு பதில் தேட வேண்டும் என்று நினைப்பவர்களில், நீங்களும் ஒருவராக இருந்தால், சிறிது உலக வரலாற்றை திருப்பிப் பார்ப்போம்.
எங்கெல்லாம் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டனவோ,ஏற்பட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் இதுபோன்ற கேள்விகளை பலர் எழுப்பி இருப்பார்கள்,அவற்றிற்கு விடை தேட முயற்சித்திருப்பார்கள்...
நான் தேடிய விடைகள் 1900 களில் வெளிநாடுகளில் தங்கி (கல்விக்காகவோ,வேலைக்காகவோ..) அவரவர் தேசங்களுக்கு திரும்பி,வியக்கத் தகுந்த மாற்றங்களைக் கொண்டு வந்த சிலரின் (நேரு(Discovery of India) மற்றும் லீ க்வான் யூ(The Singapore Story & From Third World to First))செயல்களிலும்,எண்ணங்களிலும் கிடைப்பதாகத் தோன்றுகின்றன....

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்,நன்றி !

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • - அன்புடையீர்! பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு
  1 month ago
 • சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...
  2 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  8 months ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  10 months ago