பார்வை 1
ஆசியாவின் பல நாடுகள் 20 ம் நூற்றாண்டில்தான் சுதந்திரம் பெற்றன.பற்பல மன்னர்கள்,பல சமஸ்தானங்களை ஆண்ட போதிலும் உண்மையில் இந்தியா ஒரு(அல்லது பல) ஸ்வதேசமாகவே பலகாலம் இருந்திருக்கிறது.ஒன்றுபட்ட இந்தியாவை ஓரளவு முழுமையாக ஆண்டவர்கள் முகலாயர்கள்.அதற்குப் பின்பு படிப்படியாக டச்சு,பிரிட்டிஷ் நாடுகளின் ஆதிக்கத்திற்குள் நாம் சுமார் 200 ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்தோம்.இன்றைய இந்தியாவின் ‘ஏழைநாடு’ நிலை பிரிட்டிஷ்,டச்சுக்காரர்கள் நமக்கு அளித்த பரிசும்,நாமாக தருவித்துக் கொண்ட வெடிக்கும் நிலை,மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாலும்தான் !
பழங்கால இந்தியாவை பற்றிய சில தகவல்கள் ஆச்சரியப்படுத்துபவை.
17 ம் நூற்றாண்டு வரை இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் பகுதிகளே உலகின் பெரும் செல்வந்த நாடுகள்.அலெக்சாண்டர் மற்றும் இதர கிரேக்கர்கள் ஹிந்துகுஷ் வழியாக அடைந்த தேசத்தின் செல்வச் செழிப்பை(தங்கம் பெருமளவில் பாத்திரங்கள் வடிவில் உபயோகிக்கப் படுகிறது;அரிய ரத்தின நகைகள் வெகு சாதாரணமாக உபயோகப் படுத்தப் படுகின்றன போன்ற குறிப்புகளால்...) ஐரோப்பா உணர்ந்ததும் மேலும் பல ஐரோப்பியர்கள் கீழை நாடுகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்க வேண்டும்.
அந்த நாட்களில்(17’ம் நூற்றாண்டு வரை) இந்தியாவின் முகலாயர்களும்,சீனாவின் மிங் இனமும் மட்டுமே தெற்கு ஆசியாவின் பெரும் அரசியல் ஆட்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள்.அப்பொதைய உலகின் ஐரோப்பிய தேசங்களுக்கு இந்திய,சீன தேசங்கள் பலமும்,செல்வாக்கும் பெற்ற இரு தேசங்கள் !
மில்டனின் paradise lost ல் ஆக்ராவும்,லாகூரும் கடவுளின் எதிர்கால உன்னத ஆக்கங்களாக ஆடம்’க்கு வருணிக்கப் படுகின்றன.(நம்பத்தான் முடியவில்லை,இல்லையா?)
அந்நாளைய லாகூர்,அந்நாளைய கான்ஸ்டாண்டிநோபிளை விட செல்வத்திலும்,வலிமையிலும் வெகுவாகச் சிறந்திருந்தது.
1498 ல் வாஸ்கோடகாமாவின் கீழை தேசங்களுக்கான கடல் வழி கண்டுபிடிக்கப் பட்ட பின்புதான் ஆரம்பித்தது சனி !
1600 ல் கிழக்கிந்தியக் கம்பெனி துவங்கப் பட்ட போது பிரிட்டனின் ஆண்டு மொத்த பொருளியல்(GDP) உலகின் மொத்த பொருளியலில் 1.8 % மட்டுமே. அப்போதைய இந்தியாவின் பொருளியல்-மூச்சப் பிடித்துக் கொள்ளுங்கள்- 22.5%.
1870 ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் உச்சத்தில் பிரிட்டனின் பொருளியல் 9.1 % ஐ எட்டியபோது,இந்தியா தேர்ட் வேல்ர்ட் நாடாக மாற ஆரம்பித்தது. இன்னும் சொல்லப் போனால் 18’ம் நூற்றாண்டுகளில்தான் பிரிட்டன் ‘ஒப்பு நோக்கிய கொடுக்கல்(Balance of Payment) விகிதத்தில் ஆசியாவை மிஞ்ச முடிந்தது !
(ஆக வைசிராய்களும்,கவர்னர்களும் சுமார் 200 ஆண்டு காலம் இந்தியாவை விடைபெற்றுச் செல்லும் போதெல்லாம் எத்தனை கப்பல்களில் எவ்வளவு ‘எடுத்துக்’ கொண்டு சென்றிருப்பார்கள் என்பதை கற்பனைக்கே விட வேண்டும்.அவ்வளவுக்கும் தாக்குப் பிடித்தே இந்த நிலையில் இன்று இருக்கிறோம்.ஹூம்...ஏன் பிரிட்டிஷ் பவுண்ட் 100 ரூபாயை எட்டாது!)
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சரியான் தொலைநோக்குப் பார்வை உடைய கொள்கைகளும்,தலைவர்களும்,சீரிய பண்புகளையும்,முதன்மைத் தகுதிகளையும் கொண்டவர்கள் மட்டுமே நாட்டை வழி நடத்துபவர்களாக இல்லாது போனதும்,மருந்துக்கும் ஊழல் இருக்கக் கூடாது என்ற கொள்கை இல்லாததுமே இந்தியா மூன்றாம் தர வரிசைக்குப் போன கதையின் அடிநாதம்.
இன்று பிரிட்டனின் முதல் செலவந்தர் லக்ஷ்மி மிட்டல்.பிரிட்டனின் மிகப் பெரிய எஃகு ஆலையான கோரஸ்,இந்திய டாடாவுக்கு சொந்தம் !
வரலாறு திரும்புவது போலத் தோன்றினாலும் மேற்சொன்ன மூன்று காரணங்களும்,கிராமப் பொருளாதாரமும்,நகர் சார்ந்த பொருளாதாரமும் இருவேறு திசைகளில் பயணிப்பதும்,வீங்கி வெடிக்கப் போகும் வெடிகுண்டைப் போன்ற மக்கள்தொகையும் இன்னும் நம்மைக் கீழே இழுக்கும் காரணிகள் !
Acknowledgement: The Last Mughal : The fall of Dynasty,Delhi 1857 written by Willium Dalrymple
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
No comments:
Post a Comment