அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321
அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவும் அவை சார்ந்த பிற பழக்கங்களும் நம்மை வந்தடையும் போது அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் பொருள்.
என்னைப் பற்றி
தகுதியால் கணக்காளன்(Chartered Accountant) பணி கணிப்பொறியியலில் தமிழ் வாசகன்,இந்திய நேசன்,பலநாட்டுப் பயணி. கவிதானுபவன்,அழகியல் ரசிகன்,மானுடக் காதலன்! மின்மடல்: ENMADAL@yahoo.com