குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Saturday, February 16, 2013

181.சில சிந்தனைகள், சில கருத்துகள் - விளைவாக சிறிது மகிழ்ச்சி !

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி:

நடிகர்களே கடைத்தேற்றுவார்கள் !


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-நீவெஒகோ, நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டு தொடரப் போவதாகவும், இந்த முறை நடிகர் பிரகாஷ்ராஜ் நிகழ்ச்சி நடத்துனராக-காம்பியரர்-வரப் போவதாகவும் விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன.


நடிகர் சூர்யா இந்த நிகழ்ச்சியிலிருந்து சட்டென்று விலகிய போது நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதிலிருந்து சிலவற்றை இங்கே மறு பதிப்பு செய்ய ஆசையாய் இருக்கிறது.


இந்த நிகழ்ச்சியை விதொ-விஜய் தொலைக்காட்சி- ஒரு நடிகரை வைத்துத்தான் நடத்தும் என்பதற்கான என்னுடைய கருத்தாக நான் எழுதியிருந்தது..
ஏன் நடிகர்கள்தான் நடத்த வேண்டுமா,மற்ற புகழ் பெற்ற நபர்கள், பொதுச் சேவையில் இருப்பவர்கள் இல்லையா என்று கேட்டால்,நீங்கள் தமிழக சூழலில் வாழத் தகுதியற்றவர்கள்! இன்றைய தமிழகத்தில் நடிகர்கள் கு**வினால்தான் பொழுது விடியும் என்ற அளவில்தான் மாண்புமிக பொது சனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஊடகங்கள் இணைந்து தமிழகத்தின் மேல் திணித்திருக்கும் ஒரு மாயை.தகுதியில் இருந்து தலைவன் வரை அனைத்தும் திரைப்பட நடிகர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்று நோக்கில் ஊடகங்களின் செயல்பாடு இருக்கிறது.
பிரகாஷ்ராஜ் வந்து விட்டார் !!!!

இந்த நிகழ்ச்சியை ஏன் சூர்யாவைத் தெரிவு செய்தார்கள் என்ற பார்வையில் நான் எழுதியிருந்தது....

மற்ற நடிகர்களின் ரசிகர்கள் பொங்கி வந்து ஏன் இருக்காது, தல நடத்தியிருந்தால் பட்டை கிளப்பியிருப்பார்,தளபதி நடத்தியிருந்தால் சரவெடி என்றெல்லாம் உதார் விட்டாலும், இன்றைய நடிகர்களில் தமிழை ஓரளவு சரியாக,அழகாக இல்லாவிட்டாலும் அபத்தமாக இல்லாத அளவில் உச்சரிக்கும், பேசும் இயல்புடைய நடிகர்கள் தமிழக ஊடக சூழலில் கமலகாசன்,பிரகாஷ்ராஜ்,சூர்யா,ஜீவா ஆகிய நால்வர் மட்டுமே முதல் வரிசையில் வருகிறார்கள்.

கமலகாசன் அவருக்கே வெளிச்சமான காரணங்களுக்காக விளம்பரப் படங்களில் கூட நடிப்பவர் அல்ல, எனவே அவர் தொலைக்காட்சி தொடரை நடத்துவதெல்லாம் வாய்ப்பில்லாத ஒன்று. பிரகாஷ்ராஜ் நன்றாகவே செய்வார் என்றுதான் தோன்றுகிறது,ஆனால் இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான நட்சத்திர மதிப்பு அவருக்கு இல்லை என்று தொகா கருதியிருக்கக் கூடும்.இதே காரணத்திற்காகவே ஜீவாவும் புறந்தள்ளப்பட்டு சூர்யா தெரிவு செய்யப்பட்டிருப்பார் என்பது எனது எண்ணம்.


இந்த நடிகர்கள் பட்டியலிலேயே, சூர்யாவை விட்டால் அடுத்த தேர்வு பிரகாஷ்ராஜ் அல்லது ஜீவாதான் எனது எண்ணம் என்று குறிப்பிட்டது போலவே, இப்போது பிரகாஷ்ராஜ் தெரிவு செய்யப் பட்டிருக்கிறார்.

நீவெஒகோ நன்றாக நடந்து கொண்டிருந்து சட்டென்று நிறுத்தப் பட்டாலும் மீண்டும் தொடங்கப் படும் என்று தெரிவித்திருந்தேன்...

அப்பேர்ப்பட்ட குஜராத்திகளுக்குக் கூட பிசினஸ் செண்டிமெண்ட் இருக்கிறது;தந்தையின் முதல் தொழில் என்பதால் இவ்வளவு காலம் அதை இழுத்து ஓட்டிய முகேஷ் போன்றவர் இல்லை முர்டோக். ஸ்டார் குழுமத்தில் ஒத்துவராத தொழில் அல்லது பிரிவை பட்டென்று வெட்டுவார்கள். இங்கிலாந்தில் முர்டோக் வைத்திருந்த ஒரு செய்தித்தாளுக்கு இது சமீபத்தில்(உண்மையிலேயே சமீபத்தில்!) நடந்தது.
அதேதான் நீவெஒகோ'க்கு இப்போது நடந்திருக்கிறது; ஆனால் திரும்பவும் துவக்குவார்கள்,வேறொரு நடிகரை வைத்து !


இந்த விதயம் மட்டுமல்ல, இன்னும் சில பதிவுகளிலும் என்னுடைய ஊகமும் எதிர்பார்ப்பும் பின்னால் பலித்தது, பல சமயங்களில் நடந்திருக்கிறது. இந்த வகையில் எனக்கு மெத்த மகிழ்வே.

()


விஸ்வரூபம் திரைப்படம் பற்றி....

எழுதாவிட்டால் ஏதோ சாபம் விழுந்து விடும் என்ற அளவிற்கு இந்தப் படம் பற்றிப் பலரும் எழுதி விட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் தமிழ் சினிமாவின் மைல்கல் என்றெல்லாம் வகைப் படுத்தும் அளவிலானது அல்ல; இது தரமாக எடுக்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு,மசாலா படம். பட ஆக்கத்திலும், இயக்கத்திலும்,வசனங்களில் இருக்கும் செய்நேர்த்தி தென்னிந்தியாவிற்குப் புதியது.

வெட்டுகள் இல்லாத பதிப்பைப் பார்த்ததால் திரைக்கதையின் போக்கு,படக் கட்டமைப்பு-எடிடிங்- நுணுக்கங்கள் முதலியவற்றை ரசிக்க முடிந்தது.தமிழகத்தில் திரையிடப் பட்டிருக்கும் வெட்டுகளுடன் கூடிய வடிவத்தில் படத்தைப் பார்த்த பலர், இதற்கா இவ்வளவு பில்டப்பு' என்ற அளவுக்கு நொந்து போயிருக்கிறார்கள் என்று தெரிகிறது(தேனம்மை என்ற பதிவரின் பதிவு).ஓரிரு நிமிடங்களை வருகிறதென்றாலும் சில காட்சிகளை எடுத்து விட்டால், திரைக்கதை மற்றும் படக் கட்டமைப்பு பெரிதும் சீர் கெடும் என்பது, இந்த விவகாரத்தில் தெளிவாகத் தெரிகிறது !

இந்தத் தரத்தை இந்தி சினிமாவில் சில பல வருடங்களுக்கு முன்னேயே பன்சாலி போன்றவர்கள் கொண்டு வந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. ப்ளாக் போன்ற திரைப்படங்கள் இன்னும் கண்ணிலேயே நிற்கின்றன.

நடிகர் கமலகாசனுக்கு சுயசாதி,சமயப் பாசம் கண்ணை மறைக்கும் அளவிற்கு இருக்கிறது என்பதை அவர் பல செயல்களின் மூலம் வெளிவந்து கொண்டேயிருக்கிறது.

தசாவதாரத்தில் நடந்தையிராத வைணவப் பெருமாளைக் சைவர்கள் கடலில் தூக்கிப் போட்டார்கள் என்ற பிம்பத்தையும், பெருமாளை கடலுக்குள் வீசியதால்தான் ட்சுனாமியே வந்தது என்ற உருவகத்தையும் வைத்துத்தான் படத்தையை கட்டமைத்திருந்தார்.

கடவுள் என்றால் பெருமாள்தான் என்ற ஐயங்கார் பாசத்தையும் இந்தப் படத்தின் வசனங்களின் மூலம்( we thorw our god into sea!) விதைத்துச் செல்கிறார்.

இவ்வளவு சமயப் பொறாநிலையை மனதில் வைத்துக் கொண்டு, இறை மறுப்பாளர், பகுத்தறிவு வாதி போன்று நிஜ வாழ்விலும் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர்.

தமிழக அரசு தேவையற்ற தடைகளை ஏற்படுத்தி இந்தப் படத்திற்கு எவருமே எதிர்பார்த்திராத விளம்பரத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விட்டது;நடிகர் கமலகாசனே இந்த அளவு விளம்பரம் தன்னுடைய படத்திற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

நண்பர் போல இருந்து கெடுதல் செய்பவர்களைக் குறிக்க அனுகூல சத்ரு என்ற சொற்றடரை விளிப்பார்கள்; இந்தப்  பட விதயத்தில் இதற்கு எதிர்ப்பதமாக சத்ரு அனுகூலம் நடிகர் கமலகாசனுக்கு வாய்த்திருக்கிறது !


()

தமிழ் எழுத்துக்களின் வரிவடிவக் காலம் பற்றி...

தமிழ்ப் பிரமி எழுத்துக்கள் பற்றி எத்தனை தமிழர்களுக்குப் பொதுவான அளவில் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை.

இன்றைய தமிழ் எழுத்துக்களின் எழுத்து வடிவம் இதற்கு முன்பாக வட்டெழுத்து வடிவிலும் அதற்கு முன்பாக பிரமி எழுத்து வடிவிலும் இருந்தது என்பது பொதுவான கூற்று. பிரமி எழுத்து வடிவங்களை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று பிராமனர்கள் என்று தங்களை விளித்துக் கொள்பவர்கள் வெகுகாலமாக ஜல்லியடி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது பல ஆய்வாளர்களால் தக்க சான்றுடன் மறுக்கப் பட்டு வந்திருக்கிறது.

இந்த நோக்கில் முக்கிய சான்றாக திருப்பரங்குன்றம் கோவில் சுனையின் கரையில் பாறையில் தமிழ்ப் பிரமி எழுத்துக்களின் வடிவத்தைக் சென்ற வாரத்தில் தஞ்சைத் தமிழ் பல்கலை ஆய்வு மாணவர்கள் கண்டறிந்தது பற்றிய ஒரு கட்டுரை இந்து பத்திரிகையில் வந்திருக்கிறது.

திருப்பரங்குன்ற
சுனைக்கரையில் தமிழ்ப் பிரமி !

எழுத்து வடிவங்கள் பற்றிய சரியான பார்வைப் படி பிராகிருத மொழி(ஆரியர்களின் பின்னோடி மொழி)யின் குழந்தை அசோக பிரமி(வடமொழி பிரமி) என்றும் அந்தக் கால கட்டத்தில் இருந்த தமிழ் எழுத்துகளின் வடிவம் (கிமு. இரண்டிலிருந்து- கிபி ஐந்தாம் நூற்றாண்டு வரை) பல்லவ பிரமி என்றும் வழங்கப் பட்டது எனவும்; அதற்குப் பின்னர் அசோக பிரமி, பிராகிருதம், சமத்கிருதம் என்றும், தமிழ் மொழி பல்லவ பிரமி, வட்டெழுத்து, பிறகு இன்றைய தமிழ் எழுத்து வடிவம் என்றும் வந்தது என்று சொல்கிறார்கள்.

ஆனால் கிமு நான்காம் நூற்றாண்டு காலம் காட்டும் தொல்காப்பியம், கிமு.ஒன்றிலிருந்து கிபி இரண்டு வரையான திருமந்திரம்-திருக்குறள், கிபி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து மாறாத தொடர்ச்சியுடன் கிபி பதிமூன்றாம் நூற்றாண்டு வரை வரும் எண்ணற்ற பக்தி இலக்கியங்கள் இவற்றைக் கருதும் போது தமிழின் வட்டெழுத்துக் காலம் இன்னும் முன்னோக்கிப் போகும் என்று தோன்றுகிறது.

இது பற்றிய விதயங்களை இன்னும் தேடிப் படிக்க வேண்டும் !!!

- நன்றி இந்து பத்திரிகை மற்றும் நண்பன் தங்கமணிக்கு-இது தொடர்பான சிந்தனையைக் கிளப்பி விட்டதற்கும்

()

சுவரொட்டி மூலை:
மிகவும் பிடித்திருந்தது..முகநூல் நண்பர்களிடமிருந்து !


5 comments:

 1. சுவாரசியமான விவரம். தமிழின் தொன்மையைப் பற்றி இது போல் கல்வெட்டுகள் கண்டெடுக்கப் படும் பொழுது மட்டுமே பெருமையாகப் பேசிக் கொள்கிறோமா? தமிழ் காக்கும் கழகங்கள் என்ன சொல்கின்றன?

  கமல்ஹாசன் பற்றிச் சொன்னதை ஏற்கிறேன். மிகப் பெரிய போலி அவர் என்பது வருந்த வைக்கிறது. கடவுள்/மத விஷயங்களைக் காட்டிலும் அறிவாளுமை விஷயங்களில் போலித்தனமாகச் செயல்படுவதாக நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. || சுவாரசியமான விவரம்.||

   தமிழின் தொன்மையைப் பற்றிய விவரங்களை சுவாரசிமான தகவல்' என்ற அளவில்தான் பார்க்கிறோம்.

   || தமிழின் தொன்மையைப் பற்றி இது போல் கல்வெட்டுகள் கண்டெடுக்கப் படும் பொழுது மட்டுமே பெருமையாகப் பேசிக் கொள்கிறோமா? தமிழ் காக்கும் கழகங்கள் என்ன சொல்கின்றன? ||

   இல்லை. தமிழுக்கான தொன்மை இருக்கிறது என்பதை இயல்பாக உணர்ந்து, இயல்பாகப் பெருமிதப் பட்டு, இயல்பாக மொழியில் சொல்லப்பட்டிருக்கும் உயர்ந்த விதயங்களைத் தேடாத ஒரு சமூகமாக, திரைப்படங்களிலும், நாடகங்களிலும், பெண்ணிச்சை சார்ந்த விதயங்களிலும் அல்லது பணம் தேடும் மூர்க்கத் தனத்திலும் மட்டும் புதைந்து போன சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறி விட்டது.

   இந்த நிலைக்கு தமிழ்ச் சமூகத்தை இறக்கிய காரணிகள் பல இருந்தாலும், கழக'ங்களுக்கும் இந்த 'சாதனை'யில் ஒரு பெரும் பங்கு உண்டு.

   அவர்கள் செய்த சாதனையெல்லாம், மணிப்பிரவாளமாக இருந்த தமிழை இயல்பான தமிழாக பேச்சிலும் எழுத்திலும் மாற்றியது; அந்தச் சாதனையைக் கூறி மட்டுமே 50 ஆண்டுகளை ஓட்டி விட்டார்கள்.

   மற்றைய ஒரு குறிப்பிடத் தக்க பங்களிப்பு சமூக நீதி சார்ந்த விதயங்களில்; ஆனால் அது ஓவர் டோசாகப் போய் விபரீதமான சாதிப் பாகுபாடுகளில் ஆழ்ந்து, மேலும் சமூகப் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது என் பார்வை.

   சமூகத்தின் கடைநிலை மக்களைக் கடைத்தேற்றுவதற்கு, சமூகத்தின் முதல்நிலையில் இருப்பதாகக் கருதப்படும் மக்களை அடக்கி ஒடுக்குவதுதான் வழி என்ற பார்வையும் ஓங்கி எழுந்ததும் அவர்களது சாதனை.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 2. ஒவ்வொரு பதிவுக்கும் தொடர் எண் போடுவதே வித்தியாசமாக இருக்கிறதே வாழ்த்துக்கள்


  nvok எனக்கு தெரிந்து 20 வாரங்கள் மட்டுமே பேசப்பட்டதாகவும் நிகழ்ச்சியின் வெற்றியால் நீட்டிக்கப்பட்டது என்று படித்த ஞாபகம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பர் பிரேம்...

   இருக்கலாம்; ஆனால் சூர்யா நடத்திய விதம் நிச்சயம் இன்னும் நன்றாக இருந்தது என்பது இப்போது நன்கு தெரிகிறது..! :))

   Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • பறக்கும் தட்டு - ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்ட...
  1 week ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  3 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  1 year ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  1 year ago