குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Wednesday, November 21, 2012

179.புழுதி அடங்கிய பொழுதில்...


சூப்பர் சிங்கர் இளையர் பருவம் 3

சூப்பர் சிங்கர் பற்றிய என்னுடைய கடந்த பதிவில் இறுதிக்கு யார் வருவார்கள் என்ற என்னுடைய கருத்தைக் கூறியிருந்தேன்.(நான் அந்தப் பதிவை எழுதிய நேரத்தில் அதிரடி நுழைவுச் சுற்று-வைல்ட் கார்ட் ரவுண்ட்- நடந்து கொண்டிருந்தது.).

இறுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களில் பிரகதி,சுகன்யா இருவரும் தேர்வாவார்கள் என்று அனுமானம் செய்தேன்; அடுத்த மூன்று இடங்களை ரக்ஷிதா, கௌதம், அனு, ஆஜித், யாழினி ஆகிய நான்கு பேர்களுள் மூவர் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றும்  எழுதியிருந்தேன். ஆஜித்'ம், யாழினி'யும் டார்க் ஹார்ஸ் வகையில் வருவார்கள் என்றும் எழுதியிருந்தேன்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான அதிரடி சுற்றிலேயே ஆஜித் மற்றும் யாழினியின் கட்டுக்கடங்காத திறன் எல்லைகளை விரித்துப் பிறந்தது; அதிலும் ஆஜித் இரண்டு பாடல்களிலும் பின்னியெடுத்தான். அதைக் கேட்டவுடனேயே அவன் இறுதிச் சுற்றில் கட்டாயம் இருக்கிறான் என்ற நம்பிக்கை வந்தது.

எதிர்பார்த்த படி முதல் இருவரைத் தவிர கௌதம், யாழினி, ஆஜித் மூவரும் பங்கு பெற்ற இறுதிச் சுற்று அணி ஐவரணியாக மாறியது.


இறுதிப் போட்டியைப் பொறுத்தவரை சுகன்யா எழுதிய இரண்டு பாடல்களும் சம்பிரதாயமான, பாதுகாப்பான பாடல்கள். பிரகதியின் முதல் பாடல் ஒரு மைல்கல்; இரண்டாவது பாடல் ஜனரஞ்சகமான ஒன்று. யாழினியும், ஆஜித்தும் சிறப்பாகப் பாடினார்கள் என்றாலும், ஆஜித்துக்கு கூடியிருந்த ரசிகர்களின் நாடியைப் பிடித்துப் பாடும் திறன் இருந்தது இறுதிப் போட்டியில் தெரிந்தது,மேலும் இரண்டும் ஜனரஞ்சகமான பாடல்கள். கௌதம் சுமாராகவே பாடினான்.

இறுதிப் போட்டி முடிவுகள் வந்தபோது, பிரகதி முதல் இடமும், ஆஜித் இரண்டாமிடமும் வருவார்கள் என்றெண்ணியிருந்தேன்.மூன்றாம் இடம் எவருக்கு வேண்டுமானாலும் வரும் என்றும்(இறுதிப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கணத்தில்) எண்ணியிருந்தேன்.

ஆயினும் நான் முன் பதிவில் எழுதியிருந்த படி சுகன்யாவிற்கு மூன்றாம் இடம் கூடக் கிடைக்காமல் போனதில் எனக்கு மகிழ்ச்சியே.பிரகதி நியாயமாய் முதல் இடம் பெற்றிருக்க வேண்டியவர்.ஆஜித் இரண்டாம் இடம் மற்றும் யாழினி மூன்றாம் இடம் என்பவை நியாயமானவை.

ஆனால் அந்தக் குட்டிப் பயலுக்கு கிரகங்கள் உச்ச தசையில் இருக்கின்றன!!

உச்ச தசையில் கலக்கியவன்..
தோய்ந்த அமைதி..முதல் பரிசு வாங்கியிருக்கலாம்...


இரண்டாம் இடத்திற்கு இன்னும் நல்ல பரிசாக அறிவித்திருக்கலாம் என்பதைத் தவிர இந்தப் பருவத்தின் போட்டி முடிவுகள் கிட்டத்தட்ட நான் எதிர்பார்த்த வகையில் வந்ததில் என்னுடைய தீர்க்கதரிதனத்தில் என்னுடைய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகரித்திருப்பது எதிர்பாராத ஒரு நிகழ்வு !

()


கீச்சுலக கூப்பாடுகள்


கீச்சுலகில் நடந்த நிகழ்ச்சிகளுக்குப் பாடகி அளித்த புகாரும், அதற்கு நடந்த புயல் வேக நடவடிக்கையும், பதிவுலகிலும் பத்திரிகையுலகிலும் நடந்த நிகழ்வுகளும் அனைவரும் அறிந்தவை.

தொடர்புடைய அத்தனை கீச்சுகளையும் படித்தேன்,அதாவது பொதுவெளியில் தெரிந்த அத்தனை கீச்சுகளையும்! பொதுவெளிக்கு வராத சிலவும் இன்னும் இரண்டு தரப்பிலும், முக்கியமாக பதிவர்கள் தரப்பில் இருக்கும் என்பது என் அனுமானம்.
அந்தப் பெண்ணிற்கு சமூகம் பற்றிய கருத்துக்களைச் சொல்வதற்கு, ஒரு எலிக்குத் தேவையான அளவு மூளை கூட இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அதை எதிர்கொள்வதற்கு என்று அளிக்கப்பட்ட, பொதுவெளியில் தெரிந்த கீச்சுகளில் கருத்தியல் மருந்துக்குக் கூட இல்லை.

மன்மோகன் பார்த்த நிறம் என்ன, யாரை எதற்கு வைத்துக் கொள்வது என்ற வர்ஜா வர்ஜமில்லாமல் எழுதப் பட்டவை, நிச்சயம் திமிர்த்தனத்தினால் எழுந்தவை. அவை நிச்சயம் கருத்தியிலை எதிர் கொள்ளும் வழி அல்ல.

ஆனால் பதிவுலகில் இந்தவழி பரந்து பட்ட பெரும்பான்மைக் குழுமத்தால் எப்பொழுதும் கடைப் பிடிக்கப் பட்டே வந்திருக்கிறது. அதை எதிர்கொண்டவர்கள் மௌனமாக அதைக் கடந்தார்கள் அல்லது பறந்தள்ளினார்கள்.எனக்கே கூட இந்த அனுபவம் இருக்கிறது.(கருத்துச் சுதந்திரத்தை எப்போதும் மதிக்கும் நான் அனானிப் பின்னூட்டத்தை அப்போது அனுமத்திருந்தேன்). 

தமிழ்ப் பதிவுலகச் சூழல் பழகிய பிறகு, சில விதயங்களில் என்னை மாற்றிக் கொண்டும், சில கதவங்களை அடைத்தும் வைக்கப் பழகிக் கொண்டேன்.

இப்போதைய விவகாரங்களுக்கு வருகையில், பதிவர்களின் எதிர்வினையைச் சமாளிக்க வழியறியாத அந்தப் பெண் தன்னுடைய பிரபல அனுகூலத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் தனது அனுகூலத்தைப் பயன்படுத்திய முறை நிச்சயம் தவறானது; அதற்கு வரிந்து கட்டி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், சமூகத்தின் கடைக் கோடியில் இருந்து பாலியில் கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கு எதிராக சுட்டு விரலைக் கூட அசைப்பதில்லை என்பதும் கண்கூடு. 

பதிவர்களுக்கெதிராக எழுந்த இந்த நடவடிக்கையின் சூழல், நடவடிக்கை எடுக்கப் பயன்படுத்திய காரணிகள் ஆகிய அனைத்தும் தவறாக இருப்பினும், பொதுவெளியில் நாராசமாக எழுதியும், அரசியல் அல்லது சாதி அல்லது குழுமப் பின்புலத்தை வைத்துக்கொண்டு எதையும் சமாளிக்கலாம் என்பது போன்ற ஒரு அணுகுமுறைக்கு ஒரு காற்புள்ளி போட்ட வகையில் இது தேவையானது என்றே தோன்றுகிறது.

இதே சூழலில் பாண்டிச் சேரியில் கீச்சு எழுதிய ஒரு அன்பருக்கு எதிராக, வெறும் மின்மடல் அனுப்பி பசி'யின் நடவடிக்கை எடுத்த செயல் இந்த பிரபல,அரசியல்' பின்புல எதேச்சதிகாரத்தின் இன்னொரு முகம்.

இந்திய அரசியல் சூழலில் தூற்றுவோருக்கும், அரசியல் கூன்ஸ்'களுக்கும் மட்டுமே கருத்துச் சுதந்திரமும், காவல்துறையின் பாதுகாப்பும் இருக்கிறது. 

பொதுஜனங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் நாட்களை நகர்த்த வேண்டும் போலிருக்கிறது !


()

2 ஜி மறு ஏலம்

இந்த ஏலத்தை எதிர்பார்த்த வகையில், எதிர்பார்த்த விலையில் முடித்து மகிழ்ச்சி கொண்டாடிக் கொண்டிருக்கிறது மைய அரசு.

இதற்காகவே காத்திருந்தது போல நிதி அமைச்சரிலிருந்து, பாராளுமன்ற சேவகன் வரை சகலரும் மைய அரசுக்காண தணிக்கையாளரை ஒருபிடி பிடித்திருக்கிறார்கள்.

இது எல்லாவற்றிற்கு மத்தியிலும் தன் கருத்தில் மாற்றமில்லை என்று உறுதியாகத் தெரிவித்திருக்கும் தணிக்கையாளர் அலுவலக ஊழியர்களும், தணிக்கையாளரும் பாராட்டுக்குரியவர்கள். 

இந்த சூழலில் அன்றைய தினம் வெளிவந்து இந்து மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கங்கள் நிச்சயம் பாராட்டும் படி இருந்தன.(பல ஆண்டுகளாக இந்து பத்திரிகையையும் அவர்கள் இணையப் பக்கத்தையும் பார்க்காமலேயே இருந்து வந்தேன்; இத்தனைக்கும் இந்து பத்திரிகைக்கு என்னுடைய கல்வி மற்றும் தொழில் துறை முன்னேற்றத்தில் ஒரு  பெரும் பங்கு உண்டு. கிட்டத்திட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து பத்திரிகையின் வாசகனாகவே இருந்த நான், 2000'ங்களின் துவக்கத்தில் அதைப் படிப்பதை நிறுத்தினேன். இப்போது ஆறு மாதங்களாக மீண்டும் துவங்கியிருக்கிறேன்!)

இந்த ஆணையம் எரிசக்தித் துறை அமைச்சையும் ரிலையன்ஸ் குழுமத்திற்கு ஆதரிவு அளிக்கும் வண்ணம் எரிவாயு ஒப்பந்தக் கூறுகளை மாற்றுவதற்கும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கும் இந்த நிலையில், ஆணையத்தின் அதிகாரத்தையும், நடவடிக்கை வேகத்தையும் குறைப்பதற்காக எல்லாவிதமான வேலைகளையும் அரசு செய்யலாம்.

சேஷனின் சூடு தாங்காமல், தேர்தல் ஆணையத்தை மூவர் குழுமக் குழுவாக மாற்றியதைப் போல, தணிக்கையாளர் ஆணையத்தையும் தனிநபர் பொறுப்பிலிருந்து குழுமப் பொறுப்பிற்கு மாற்றுவதற்குச் செய்யும் முயற்சியும் இவற்றில் ஒன்று.

தீதி'யின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒருமனதாக எதிர்க்கட்சிகளால் ஆதரிக்கப் பட்டு, காங்கிரஸ் வீட்டுக்குப் போவது ஒன்றை இப்போது நாட்டுக்கு ஒரு (தற்காலிக)நல்ல வழி !

இது தொடர்பாகவும், சமீபத்திய சூழலிலும் இந்து வின் சுரேந்தர் கலக்கிய சில கருத்துப் படங்கள்..அவற்றை கேலிச் சித்திரம் என்று ஒதுக்கி விட முடியாது..
சரியாசனம்..

வாகனம் பழுதானாலும், பொதி புதிது..

கையைக் கடித்தது எது ?
நன்றி- இந்து பத்திரிகை

()

Quote Corner..


ஒரு வாசகமானாலும் திருவாசகம் !


நன்றி முகநூல் நண்பருக்கு..

6 comments:

 1. ஆஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  கருத்துப் படங்கள் கலக்கல்...

  திருவாசகம் - சிறப்பான வாசகம்...

  tm1

  ReplyDelete
 2. Super singer: என்னன்ன கோல்மால் பண்ணி அந்த AAjith பையனை முதலிடத்துக்கு கொண்டாந்துட்டனுங்க.

  கார்ட்டூன்கள் அருமை அபுதுல் கலாம் வார்த்தை, சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வருக ஜெயதேவ்,
   ||Super singer: என்னன்ன கோல்மால் பண்ணி அந்த AAjith பையனை முதலிடத்துக்கு கொண்டாந்துட்டனுங்க.||

   இல்லை, அவனுக்கு இறுதியில் பாடும் தகுதி நிச்சயம் இருந்தது.. ஆனால் முதலிடம் சற்று அதிகம்..நான் மூன்றாம் இடத்துக்குப் போட்டி போடுவான் என்று நினைத்தேன்.

   ஆனால் இறுதியில் மற்றவர்கள் அனைவரும் பாடியதைக் கேட்ட பிறகு அவனுக்கு இரண்டாம் இடம் கிடைக்கலாம் என்று நினைத்தேன். முதலிடம் சற்று அதிகம்தான்..
   பிரகதிக்கு முதலிடம் கிடைத்திருக்கலாம்..முதல் பாடல் அவ்வளவு அருமை..சொல்லப்போனால் அந்தப் பாடல் தான் மொத்த இறுதிப் போட்டியின் உச்ச ஒளிர்வு-ஹைலைட்.

   கார்ட்டூன்களுக்கு நன்றி இந்து சுரேந்திராவுக்கு :))

   Delete
 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி மதுரைத் தமிழன்..
   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு மகிழ்ச்சியையும் நலனையும் முன்னேற்றத்தையும் நல்க வாழ்த்துகள்.

   Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • நெப்போலியனின் பேச்சின் வீச்சு! - *முன்குறிப்பு:* பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று மகாகவி பாரதி பாடினார். அதில் வெற்றியும் பெற்றார். பேச்சு திறத்தாலே வையத்தைப் வென்ற...
  6 days ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  2 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  1 year ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  1 year ago