குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, January 24, 2021

196 - சிங்கையில் தமிழிசைப் பள்ளி தொடக்கம் !

கடந்த 23 சனவரி 2021 அன்று சிங்கையி்ன் தமிழ் வரலாற்றுப் மரபுடைமைக் கழகத்தின் சார்பில் தமிழிசைப் பள்ளி உருவாக்கப்பட்டு தொடங்கப்பெற்றது. இது தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையத்தோடு அலுவல் பூர்வமாக இணைவு பெற்றது. 

  இந்த தமிழிசைப்பள்ளியில் தமிழில் வாய்ப்பாட்டு இசை வகுப்பு, நாட்டிய வகுப்பு, விணை வகுப்பு, குழலிசை வகுப்பு(புல்லாங்குழல்), வயலின் என்ற பிடில் கருவி போன்ற வாத்திய இசைக் கருவிகளைக்கான பயிற்சி போன்றவற்றைத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு  பயிற்றுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 


இதன் தொடக்கவிழாவும், இணையப் பக்க வெளியீடும்  பேராசிரியர் சுப.திண்ணப்பன் தலைமையில், அவரது தலைமையுரையோடு இனிதே நடந்தன. விழாவில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலையின் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் கோவிந்தசாமி, திருமதி.மீனாட்சி சபாபதி, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் இராச.கலைவாணி, புதுமைத்தேனி மா.அன்பழகன், திரு.தனபால்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

  இந்தப் பள்ளியின் தோற்ற நோக்கம் பற்றியும் ஆசிரியர்கள் பற்றிய அறிமுகத்தையும் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத் தலைவர் திரு ப.புருசோத்தமன் நிகழ்த்த, வரவேற்புரையை உறுப்பினர் திரு SAM.செந்தில் நிகழ்த்த, நன்றியுரையை உறுப்பினர் திரு கருணாநிதி வழங்கினார்.  மெய்நிகர் விழாவாக அருகி வழி (சூம்) நடந்த இந்த விழாவினை பட்டயக் கணக்கர் திரு முருகுதமிழ் அறிவன் நெறியாண்டு, தொகுத்து வழங்கினார். 

  விழாவில் ஆர்வமுள்ள பெற்றோரும் மற்றோரும் திரளாக இணைந்து விழாவினைச் சிறப்பித்தனர். விழா யூ ட்யூப் வழி இந்தத் தொடுப்பில்  மெய்நிகர் விழியமாக ஒளிபரப்பப் பட்டும், சேமிக்கப்பட்டும் உள்ளது.

No comments:

Post a Comment

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...