குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)

Wednesday, April 20, 2016

190-வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்.

இன்றைய சூழலில் இந்திய தமிழக வழக்காடு மன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது பொதுவாக எவருக்கும் தெரிந்ததே. ஆனால் அரசியல் கட்சி சார்பற்ற, குண்டர்கள் தொடர்பில்லாத, வட்ட,மாவட்டங்களின் அடிப்பொடிகள் துணையில்லாத ஒரு சாதாரணன் தனக்கு ஏதேனும் அநீதி ஏற்பட்டால், தனக்கு நியாயம் வேண்டும் என்று நினைத்தால் செல்ல வேண்டிய இடமாக இருப்பது நீதி மன்றங்களும், காவல் நிலையங்களும்தான். இவற்றில் காவல் நிலையங்கள் ஒரு சராசரி மனிதனின் சுயமரியாதையைக் குலைத்து, அவனது தன்மானத்தைச் சிதைக்கும் குரூர வதை நிலையங்களாகவே பெரும்பாலும் திகழ்கின்றன. உங்களது கல்வி, திறமை, பண்பாடு, அறம் போன்ற எந்த விழுமியங்களுக்கும் அங்கு வேலையில்லை.

ஒருவேளை உங்களுக்கு மேற்சொன்னவாறு வட்ட,மாவட்ட அணுக்கங்கள் இருந்தால் ஒருவேளை உங்களுக்கு குண்டூசி முனை அளவு மரியாதை காவல் நிலையங்களில் கிடைக்கலாம்; அதற்கு உங்கள் மூதாதையர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!.
இது இப்படியெனில் வழக்காடு மன்றங்களில் வேறு விதமான வதைகள் நடைபெறும். வழக்காடு மன்றங்களின் நடைமுறைச் சிக்கல்கள். அவை செயல்படும் விதம், அரசு அலுவலர்கள் உங்களை எதிர்கொள்ளும் விதம்(காவல் துறைக்குச் சற்றும் சளைத்தவர்கள் இல்லை இவர்கள், என்ன உங்களை மரியாதையுடன் அலைக்கழிப்பார்கள்!) போன்றவை உங்களைத் தலைசுற்ற வைப்பவை. இப்பிரச்னைகளைச் சரியாக அணுகிய ஒரு திரைப்படம் தமிழன் என்ற விஜய் படம். அதற்காகவோ என்னவோ அப்படம் சரியாக ஓடக் கூடாதவாறு பார்த்துக் கொண்டார்கள் அதிகாரத்திலிருந்தவர்கள்.
வழக்காடு மன்றத்தின் செயல்படும் விதம், வழக்களிஞர்கள் செயல்படும் விதம், மாண்பமை நீதிபதிகள் செயல்படும் விதம் எல்லாம் தலைசுற்ற வைப்பவை. வழகறிஞர் நமது பிரதிநிதியாக, நம்மிடம் கட்டணம் பெற்றுக் கொண்டுதானே வழக்காடுகிறார், அவர் வழக்காளியின் நலனைச் சார்ந்துதானே செயல்பட வேண்டும் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் ஒரு அப்பாவி அப்பாடக்கர்!
மண்டபத்தில் விசாரித்து ஒருவர் நல்ல புகழ்பெற்ற வழக்கறிஞர் என்று முடிவு செய்து நீங்கள் ஒரு வழகறிஞரை நாடினால் முதலில் அவரின் பேட்டிகூட உங்களுக்குக் எடுத்தவுடன் கிடைக்காது. அவரது சிடுசிடு உதவியாளர் ஒருவரைக் காட்டி, அவரிடம் விவரங்கள் தெரிவிக்குமாறு நீங்கள் பனிக்கப் படுவீர்கள். வழக்காடுபவர் வழக்கறிஞர்தானே, அவர்தானே விவரங்களைக் கேட்க வேண்டும் என்று நீங்கள் அப்புராணி சுப்புணியாக யோசிக்கக் கூடாது. எப்படி கோவில்களில் இறைவனின் மீதான வேண்டுதல்கள் அங்கிருக்கும் ஆசாமி 'சாமி' வழியாக மட்டுமே செல்ல முடியுமோ அவ்வாறுதான் இதுவும். ஆசாமி 'சாமி'களை மறுதலித்தால் உங்களது வழக்கு எடுத்தவுடனே கண்ணைக் கட்டும் நிலைக்குச் செல்லும்.
இதற்குப் பிறகு ப்ளைன்ட் எனப்படும் வழக்குத் தொடுப்புக் குறிப்பு-நீங்கள் ஏன் இந்த வழக்காட விரும்புகிறீர்கள் என்ற விவரணையைத் தரும் ஒரு அறிவிக்கை; இதை உங்களது வழக்கறிஞர் தயாரித்து உங்கள் சார்பாக வழக்கைத் தொடுப்பார்- தயாரிப்பதற்குள் உங்களை 39 முறை வந்து பார்க்கச் சொல்வார். நீங்களும் 37.5 முறை வழக்கறிஞரின் சிசிஉ'வையும் ஒன்றரை முறை வழக்கறிஞரையும் சந்தித்து ஒருவழியாக உங்களது ப்ளைன்ட் தயாராகிப் வழக்காடு மன்றப் பதிவாளரிடத்தில் பதிவு செய்யப் பட்டு வழக்கிற்கு எண் ஒதுக்கப்பட்டு வழக்கு ஒருவழியாக உயிர் கொண்டு எழும்! (பெரும்பாலும் உங்கள் உயிரை வதைப்பதற்கு).
இதில் நீங்கள் வழக்குத் தொடுக்கும் ஆசாமி ஏதாவது வட்ட,மாவட்ட,சதுர அணுக்கர் என்றால் நீங்கள் அன்பாக ஆட்டோ அல்லது பாட்டா'ஏந்தியவர் சகிதம் சுற்றி வளைக்கப் பட்டு எச்சரிக்கப் படலாம். அல்லது அடிபடலாம். அதிர்ஷ்டவசமாக உங்கள் 'அன்பான எதிரி'யும் உங்களைப் போலத்தான், வட்ட,சதுர கபடாக்கள் எல்லாம் அவருக்கு அணுக்கமில்லை என்றால் நீங்கள் ஒரு சமநிலை எதிரியையே வழக்காடு மன்றத்தில் எதிர்கொள்கிறீர்கள் என்ற மகிழ்வோடு அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.
வழக்கு நடைபெறும் கட்டம் அடுத்த நிலை- இது சுமார் சாதாரணமாக பதினைந்தாண்டுகள்-ஆம் பதினைந்தாண்டுகள்! அல்லது அசாதாரணமாக 35 அல்லது 50 ஆண்டுகள் கூட நகரலாம். அதுவரை நீங்கள் உங்கள் உயிரையும், நீங்கள் நிரூபிக்க வேண்டிய உண்மையையும் பற்றித் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும். இக்கால கட்டங்களில் வாய்தா என்ற அரும்பெறும் நிகழ்வையும், வழக்கறிஞர் பெருமகனார்கள் அவ்வப்போது நினைவு வந்து சொல்லும் விதிமுறைகளின் கீழ் பல்வேறு விவரச் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கன்றாவி விதிமுறைகளின் கீழ் வரும் சான்றுகளை உங்கள் மேதகு வழக்கறிஞர் ஏன் முன்னுரைக்கக் கூடாது என்று நீங்கள் எண்ணலாம், தப்பில்லை, ஆனால் அப்படி எண்ணினாலும் நீங்கள் ஒரு அப்பாவி அப்பாடக்கர்!
இந்தக் கந்தாயங்கள் எல்லாம் முடிந்து இறுதி நிலை வாதம்புரிய நீதிமன்றப் பதிவாளர் ஒரு தேதி குறிப்பார்! அந்த நாளில் நீங்கள் வழக்காடு மன்றம் சென்று உங்களது வழக்கறிஞரும் உங்களது எதிரியின் வழக்கறிஞரும் அள்ளி வைக்கும் அறிவுச் சுடர் வாதங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். ஆனால் அங்குதான் ஒரு சிக்கலிருக்கிறது. பெரும்பாலும் உங்கள் வழக்கறிஞர் இந்தத் தேதியை உங்களுக்கு அறிவிக்க மாட்டார்; அப்படியே அறிவித்தாலும் 'நீங்க வரவேண்டாம் சார், நான் பார்த்துக் கொள்கிறேன், இது ஆர்க்யூமெண்ட்தான்' என்பார். நீங்களும் நமது வழக்கறிஞர் மனிதப் புனிதர் என்றெண்ணி வாளாவிருந்து விடுவீர்கள்.
இந்தக் கட்டம் கடந்து சுமார் ஒரு வருடத்திற்குள் தீர்ப்பு நாள் என்று ஒரு நாளை அறிவிப்பார் உங்களது வழக்கறிஞர். நீங்களும் மாண்பமை நீதிபதி திரைப்படங்களில் பார்ப்பது போலத் தீர்ப்பை கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு வாசிப்பார் என்று எதிர்பார்த்தீர்கள் என்றாலும் நீங்கள் ஒரு அப்பாவி அப்பாடக்கர்! தீர்ப்பு அன்று வெளியிடப் படாமல் வெளியிடப்படும். நீதிமன்றப் பதிவாளருக்கும் உங்கள் வழக்கறிஞருமே தீர்ப்பு விவரத்தை அறிவார்கள். ஓரிரு வாரங்கள் கழித்து உங்களை அழைத்து, அவரது வழக்காடியதற்கான பணத்தை முதலிலேயே வாங்கிக் கொண்டு தீர்ப்பு விவரத்தையும் நகலையும் உங்களிடம் தருவார்கள்.
தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக இருந்தால், உங்களிடமிருந்து மேலும் சிலபல செலவுகள் காரணம் காட்டி சுமார் 15% ஆவது அதிகப் பணம் உங்களிடம் கேட்கப் படலாம்; உலக அதிசயமாக சிசிஉ' பார்ட்டி அன்று புன்னகை பொலியும் புனிதராகத் திகழ்வார். அவருக்குரிய பங்கைச் செலுத்தாமல் நீங்கள் வழக்கறிஞர் அலுவலகத்தை விட்ட வெளிவந்து விட முடியாது.
ஒருவேளை தீர்ப்பு உங்களுக்குப் பாதகமாக இருந்தால், உங்கள் வழக்கறிஞர், எதிரி வழக்கறிஞர் நீதிபதிக்குப் பணம் கொடுத்து விட்டார், அல்லது நீதிபதி தூங்கிக் கொண்டே தீர்ப்பெழுதி விட்டார் போன்ற ஏதாவது ஒரு புலனாய்வு செய்து கண்டறியப் பட்ட காரணத்தைச் சொல்வார்.(புலனாய்வு செய்து சொல்ல வேண்டாத, உங்களது எதிரியே உங்கள் வழக்கறிஞரைச் சந்தித்து அவரைப் பணத்தால் குளிப்பாட்டும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை நினைவில் வைக்கவும்.)
அவ்வாறு சொல்லும் புலனாய்வுக் காரணங்கள் எல்லாம் நீங்கள் வழக்குத் தொடுக்க முதல் முதலாக வழக்கறிஞரைச் சந்திக்கும் பொழுது 0.000000001% சதவிகித சாத்தியக் கூறாகக் கூட இருக்காது. எப்படி இந்தக் காரணங்கள் ரூம் போட்டு யோசித்துக் கண்டு பிடிக்கப் பட்டன என்ற அப்பாவியாக நீங்கள் யோசித்தாலும் நீங்கள் ஒரு அப்பாவி அப்பாடக்கர்.
நீங்கள் மட்டும் உங்களுக்குக் கிடைக்க மறுத்த,உங்களுக்குத் தெரிந்த உறுதியான நீதியை வானத்தில் அண்ணாந்து பார்த்துக் கொண்டை வயிறெரிந்து நிற்க வேண்டியதுதான்!
இவை எல்லாம் ஏதோ விவரமறியாத, எழுதப் படிக்கத் தெரியாத, ஏழை ஒருவனுக்கு மட்டுமே நடக்கும் என்றெண்ண வேண்டாம். ஒரு நல்லவன், நேர்மையாளன், அப்பாவி என்று பெயரெடுத்த எவருக்கும் அனுதினமும் இந்திய வழக்காடு மன்றங்களில் நடந்து கொண்டிருப்பவையே இவை.
இவற்றிற்கெல்லாம் விடிவென்ன? இந்த வழக்காடு முறைகளை ஒழுங்கு படுத்தி, மேதகு வழக்கறிஞர்களை, மாண்பமை நீதிமான்களை பொறுப்பானவர்களாக்க - அக்கவுண்டபிலிட்டி- என்ன வழி?
சுருக்கமாக கன்ஹாக்களும், சுமாரசாமிகளும் தங்கள் தீர்ப்புப் பார்வை வேறுபடுவதன் காரணத்தைப் பொதுசனங்களுக்கு விளக்க வேண்டிய தார்மீகக் கடமை உள்ளவர்களா இல்லையா? இவர்களைத் தட்டிக் கேட்க ஒரு அமைப்பு வேண்டாமா?

No comments:

Post a Comment

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • கடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...
  6 days ago
 • சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...
  3 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  9 months ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  11 months ago