குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, May 16, 2012

141.நானும் ரௌவுடிதான் !!!



மதுரை ஆதீன நியமன விவகாரத்தில் ராசசேகரன் ஒவ்வோர் நாளும் அளித்து வரும் பேட்டிகளையும் உதார்களையும் பார்க்கும் போது அந்த நபருக்கு அதிகார வர்க்கத்தின் ஏதோ ஒரு இழையின் அனுக்கமும் நட்பும் இருப்பது தெரிகிறது.

எந்த ஒரு விமர்சனத்திற்கும் பத்து நாள் பத்து நாள் என்று அவர் கூவுவதும் வடிவேலுவின் ரவுசுத் தனம் போல்தான் தெரிகிறதே ஒழிய அவருக்கு ஆன்மிக குறிக்கோள்கள் இருப்பதாகத் தெரிய வில்லை.

ரஞ்சிதா விவகாரத்தில் பெயரும் புகழும் கெட்டுப் போன அவர் தன்னுடைய இருப்பை நிலை நிறுத்தவும் மேலும் நிறுவனப் படுத்தவும் மேற்கொண்ட உத்தியாகவே அவர் மதுரை ஆதீனத்தை மடக்கியதைக் கருத வேண்டியிருக்கிறது.

()

சில ஆதீனங்களுடன் பேசிப் பழகிய அனுபவம் இருப்பதால் அவர்களது குணநலன்கள் பற்றிய அவதானம் எனக்கு உண்டு;மேலும் இயல்பாகவே எவருடன் பேசினாலும் பழகினாலும் அவர்களை அதிகம் நுணுகி அவதானிப்பது எனக்குப் பிடித்த எனது இயல்பு.பொதுவாக தமிழக ஆதீனகர்த்தர்கள் பொது மக்களிடம் அதிகம் புழங்காதவர்கள்;அவர்களை அப்படி வைத்திருப்பதில் ஆதீனத்தில் இரண்டாம் மூன்றாம் நிலையில் இருப்பவர்களுக்கு அனுகூலம் இருப்பதாகவும் நான் உணர்ந்திருக்கிறேன்.இந்த வித நபர்கள் ஆதீனங்களில் மட்டுமல்ல பொதுவாக பெரும் பதவி அல்லது அதிகாரம் அல்லது பொறுப்புகளில் இருப்பவர்களிடம் இப்படிப் பட்ட பல நபர்கள் இருப்பார்கள்.அதாவது பராக்,பராக் சொல்பவர்கள் போல.

இதன் காரணமாகப் சாதாரண பொது மக்களைப் பற்றிய குண இயல்புகளோ அல்லது சாதாரண உலகத்தின் மனித சாமர்த்தியங்கள் பற்றிய அறிவோ அற்றவர்களாத்தான் அவர்கள் இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.அவர்கள் ஆதீனத்தில் சந்திக்கும் பொது மக்களும் கை கட்டி வாய் பொத்தி அவர்களைக் கண்டவுடன் பொத் பொத் என்று காலில் விழுந்து விபூதி பிரசாதம் வாங்கிக் கொண்டு பின் வரும் மக்களாகத்தான் அறிமுகப் படுத்தப் படுவார்கள்.இந்த வித விதிமுறைகள் பராக் பேர்வழிகளால்தான் நடைமுறைப் படுத்தப் படும்.

சில முறை பார்த்த நபர்களைத் திரும்ப பார்க்கும் போது மட்டும் ஆதீன கர்த்தர்கள் சிறிது பேசுவதற்குத் தயாராக இருப்பார்கள்;அந்த சமயங்களில் சாதாரண மக்களில் எவரும் இலக்கிய,நுண்ணறிவு,பல்திறத் திறமைகளுடன் எவரையாவது சந்திக்கும் போதோ அவர்களிடம் விவாதிக்கும் போதோ சாதாரண ஒரு கிராமத்துப் பேர்வழி எவ்விதம் வியப்புத் திகைப்பில் ஆழ்வாரோ,அதற்குக் குறையாமல் ஆதீன கர்த்தர்களின் எதிர்வினை இருக்கும்.

அதிலும் மதுரையின் பழைய ஆதீன கர்த்தர் பொதுவான ஆதீன கர்த்தர்களின் அளவுகோலை எடுக்கும் போது வடிவேலு போன்றதான குணநலன்கள் கொண்டவர்.இந்த சூழலில் அவரை நித்தி போன்ற, தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான சாதாரணர்கள்,நடிகைகள்,தொழில்துறையினர்,திறனாளர்களை ஓயாது சந்தித்துக் கொண்டிருக்கும் கார்பொரேட் சாமியார்கள் எளிதாக தன் கைக்குள் போட்டுக் கொள்வதும் அவர்களை எதிலாவது சிக்க வைத்து மீளாநிலையில் வைப்பதும் மிக எளிதான செயல்.

இந்த நிலையில் தன் உத்தியில் சரியாக இயங்கும் நித்தி ராச்சேகரனின் விரிந்த நோக்கங்கள் மதுரை ஆதீனகர்த்தர் என்ற ரீதீயில் மிக அபாயகரமானவையாக இருக்கும்.ஆதீன மீட்புக் குழுவினர் நினைப்பது போல் அவரை வெளியேற்றும் செயல் எளிதாக இருக்கப் போவதில்லை என நடைபெறும் நிகழ்வுகளும்,நித்தியின் உதார் சவடால்களும் தெரிவிக்கின்றன.

அரசு அல்லது நீதி மன்றங்கள் உறுதியுடன் தலையிட்டு அவரை அடக்க வேண்டும்;நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது அது நடப்பது மிக தூரத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

சைவ ஆத்திகர்கள் மிகவும் கவலைப் பட வேண்டிய விதயம் இது !!!

2 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்
    ஆனால் மதுரை ஆதீனமும் அரசியல் ஈடுபாடு உள்ளவர் போல் தெரிகிறதே

    ReplyDelete
    Replies
    1. மதுரை ஆதீனம் வெளிப்படையாக திமுக ஆதரிப்பாளராக தன்னைக் காட்டிக் கொண்டவர்;கட்சிக் கூட்டங்களில் கூட கலந்து கொண்டார் என்று நினைக்கிறேன்...

      அதனால்தான் ராசசேகரன் அந்த நபரை டார்கெட் செய்து மதுரை ஆதீனத்தைக் கைப்பற்றி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

      இன்னும் திரை விலகவில்லை;இயக்குனரின் முகம் திரை விலகும் போதுதான் தெரியும்..

      நன்றி,வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...