தமிழ் இந்து பத்திரிகையில் அண்மையில் வந்த இந்தக் கட்டுரை நிறையச் சிந்திக்க வைத்தது.
அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, தன் மகளைப் பத்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படிக்க வைத்தவர். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களும் பெற்ற மகளை எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைத்து தான் படித்த அரசுப் பள்ளியிலேயே சேர்த்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.
இன்றைய தமிழகத்தில் ஓரளவு படித்தவர்களாக இருப்பவர்கள் மற்றும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்து அறியும் போது அனைவரும் சொல்லி வைத்தாற் போல் ஆங்கில மொழி வழித் தனியார் பள்ளியில்தான் தத்தம் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள்.
எனது குழந்தையை தமிழ் வழிக் கல்வி வழியில்தான் படிக்கவைக்க வேண்டும் என்ற முடிவில் நான் இருக்கிறேன். இன்றைய சூழலில் தமிழ் வழிக் கல்வி எனில் அரசுப் பள்ளிகளைத் தவிர வேறு கதி இருப்பதாகத் தெரியவில்லை.
அவை ஏன் தரமற்றவையாகத் இன்றைய பெரும்பான்மை சமூகத்திற்குத் தோற்றம் தருகின்றன என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன்.
(நான் அரசு உதவி பெற்ற தமிழ் வழிக் கல்வி வழிதான் பணிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன்; கல்லூரியிலும் பின்னர் பட்டயக் கணக்காளருக்குப்(சிஏ) படிக்கையிலும் ஆங்கில வழியில் கற்ற எவரையும் விட எனது கல்விப் பயணம் சிறப்புடனும் பெருமையுடனும்தான் நடந்தேறியது. எனது தொழில் முறைக் கல்வியான பட்டயக் கணக்காளர் தேர்வில் மண்டல அளவில் தகுதி கூட என்னால் பெற முடிந்தது.
இப்போது கற்பித்தல், கற்றுக் கொள்ளுதல் போன்ற பலவற்றில் ஏற்பட்டிருக்கும் ஆர்வத்தினால் தாய்மொழியில் தான் குழந்தைகள் படிக்க வைக்கப் படவேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை தாய்மொழி வழிக்கல்வியில் ஆர்வம் உடைய அனைவரும் சிந்திக்க வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது.
( )
பாஜக அரசின் முதல் வரவு செலவுத் திட்டம் அருண் ஜெட்லி மூலம் நிதி நிலை வரைவுத் திட்டமாக பாராளுமன்றத்தில் வைக்கப் பட்டிருக்கிறது.
பொதுவான நோக்கில் கட்டமைப்பு மற்றும் நடுத்தர கீழ்மட்ட மக்களுக்கு பெருமளவும் ஆனால் அரசுக்கு பெரும் சுமையும் தராத வகையில் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மற்றபடி திறனுறு நகரங்கள்( ஸ்மார்ட் சிட்டி) , மாநிலத்துக்கொரு எய்ம்ஸ், மேலும் சில ஜஜடி'க்கள் போன்ற திட்டங்கள் எந்த அளவில் செயல்வடிவம் பெறும் என்பதைப் பொறுத்துத்தான் இந்த நிதிநிலை வரைவுத் திட்டத்தின் வெற்றி அமையும்.
இந்த திட்டங்களை குறையாண்டின் ஒன்பது மாதங்களுக்குள் அவர்கள் செயல்படுத்த வேண்டும் என்பதும் இன்னொரு கட்டுப்பாடு(லிமிடேஷன்).
மோடி அரசின் உண்மையான மதிப்பீடு 2015 ஜனவரியில் தெரிந்து விடும் !
ஹார்ட்பீட் தொண்டு நிறுவனம் செ.சொர்ப்பனந்தல் பதிவு எண் : 321/2009 சார்பில் வெளிவரும் இதயத்துடிப்பு செய்திமடலிற்கு தங்கள் படைப்புகளையும், நன்கொடையும் தந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி : editoridhathudippu@gmail.com. தொடர்பு எண் 9940120341, 9524753459, 949703378,
ReplyDeletewish you a happy new year 2015
ReplyDeleteஉங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
ReplyDeleteஅறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/
தங்கள் அறிமுகத்திற்கு நன்றி திருமதி மனோ..
ReplyDelete