நண்பர்களே,
திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு.
திருமுறைகளையும் தமிழ் இலக்கியங்களையும் ஓதாமல் விட்டுவிட்டிருக்கும் தமிழ்ச் சமுதாயம் கடந்த சில பத்தாண்டுகளில் அடைந்திருக்கும் சமூக நோக்கிலான வீழ்ச்சி விளக்குதற்கரியது.
நமது தலைமுறையின் இளையர்கள் எவரும் நல்ல தமிழ் அல்ல, சகித்துக் கொள்ளக் கூடிய அளவில் கூடத் தமிழில் பேசும் வழக்கம் கொண்டிருக்க வில்லை என்பதும், இதில் பெரும்பான்மைச் தமிழ்ச் சமூகம் பெருமை கொண்டிருக்கிறது என்பதும் நினைந்து நோக வேண்டிய நிலையாகும்.
இந்த நிலையில் ஒரு சிறு அளவிலான தமிழர்களை தமிழ் மொழியின் வேரான பண்டாரத்தை(புதையல்) நோக்கித் திரும்பியிருப்பது மகிழ வேண்டிய செய்தியாகும்; இந்த குறைந்த விகித நண்பர்கள் தமிழிலக்கியங்கள் மற்றும் திருமுறைகளைப் படித்தறிய முற்படுவதோடு, அவற்றைத் தத்தமது வாரிசுகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.
சமூகத்தையும் சுற்றுப் புறத்தையும் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட மேற்கண்ட சிறிய விகிதத்திலான மக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதே நம்மாலான சிறு கையளிப்பு என்ற எண்ணம் தோன்றியதால் இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முன் வருகிறேன்.
திருவாசகத்தின் நூற்பயனும் ஓதற்பயனும் அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரிந்த விதயமே. ஆ்யினும் எளிதில் கிடைக்கும் எதற்கும் மதிப்பில்லை என்பது எனது வாழ்வனுபவம் எனக்குக் கற்றுத் தந்த பாடம். எனவே இந்த சேவை கட்டண சேவையாகவே அளிக்கப் படப் போகிறது.
ஆகா, சிங்கப்பூரில் பணம் சம்பாதிக்க என்ன நூதனமான வழி என்று வாதிடும் நண்பர்கள் தயவு செய்து விலகவும்; இதன் மூலம் சேர்க்கும் பணம் இந்தப் பக்கத்தில் சொல்லப் பட்டிருக்கும் நோக்கதிற்காகச் செலவு செய்யப் படும் தொகையுடன் சேர்த்துக் கொள்ளப் படும் என்பது ஒரு சிறிய அறிவிப்பு.
இனி : விதிமுறைகள்
வேண்டுபவர்கள் பின்னூட்டத்தில் ஒரு வரி குறிப்பிட்டு விட்டு என்னுடைய மின்மடல் முகவரியில் நிகழ் நாள் விருப்பம், நிகழிடம், தொலைபேசி எண்களைத் தெரிவிக்கலாம். அல்லது 92470888 எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம்.
அன்பும் நன்றியும்.

- திருவாசக முற்றோதல் வேண்டி விரும்பி விண்ணப்பிக்கும் நண்பர்களின் இல்லத்தில் சிங்கையில் மட்டும் வந்து செய்யப்படும்.
- முற்றோதல் ஒரு நபரால், அதாவது என்னால் செய்யப்படும்; தமிழார்வமும், திருமுறைப் பரிச்சயமும் இருந்தால் நீங்களும் சேர்ந்து ஓதலாம்.
- முற்றோதல் நடக்கும் இடமும், சூழலும் அமைதியாக முற்றோதலின் நோக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் இருத்தல் கூடாது.( முற்றோதல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் குழந்தைகள் விளையாடி சத்தமிடுவதும், விருந்துண்பதும், தொலைக்காட்சி பார்ப்பதும் போன்றவை...)
- முற்றோதல் சனிக்கிழமைகளில் மாத்திரம் மட்டுமே செய்யப்படும்,
- இதற்கான கட்டணமாக சிங்கை வெள்ளி 250 ஐ நிர்ணயித்திருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை இது முழுக்க முழுக்க ஒரு தொண்டே எனினும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தின் பயன் நல்ல விதமாக இருக்கட்டும் என்று முடிவு செய்திருப்பதால் இந்த குறைந்த பட்ச நிர்ணயம்.
- இந்தக் கட்டணம் முன்கூட்டியே எனது கணக்கில் புதன்கிழமை மாலைக்குள் செலுத்தப் பட வேண்டும். ( அணுகுபவர்களுக்கு விவரங்கள் அளிக்கப்படும் )
- பணம் செலுத்திய பின், உங்களது இடத்தை அடைந்த பிறகு, உங்களது நோக்கம் பக்தியோ, தமிழோ அன்றிப் பரிகாசம் அல்லது எள்ளல் அல்லது இறைநிந்தனை என்று எனக்குத் தோன்றும் வண்ணம் சூழல் இருந்தால் , முற்றோதலை மறுக்கும் உரிமையை நான் கொண்டிருக்கிறேன். இவ்வாறான, அசாதாரணமான சூழல் ஏற்பட்டால் கூட, நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்குக் திருப்பப் பட மாட்டாது.( இது ஒரு பொறுப்பு மறுப்பு சூழல் அதாவது டிஸ்க்ளெய்மர் என்பதும் எனது நோக்கம் மற்றும் மரியாதைக்கான தேவை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.)
- முற்றோதல் முற்றுப் பெற ஏழு மணி நேரங்கள் ஆகலாம்; இந்த நேரம் முழுதும் ஆர்வத்துடன் அமர்ந்தாவது கேட்கும் விருப்பவமுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
- இதை ஒரு வேள்வியாகக் கருதிச் செய்வதால் முற்றோதல் நடக்கும் முழு நேரமும் உணவோ, பானங்களோ உங்கள் இடத்தில் அருந்துவதற்கில்லை. வருகை தந்த நேரத்திலிருந்து முடிந்து கிளம்பும் நேரம் வரை தேவைப்பட்டால் நீர் மட்டுமே அருந்துவேன்.
- முற்றோதல் நேரம் காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.30 மணிக்குள் நிகழும் படி இருக்கும்.
வேண்டுபவர்கள் பின்னூட்டத்தில் ஒரு வரி குறிப்பிட்டு விட்டு என்னுடைய மின்மடல் முகவரியில் நிகழ் நாள் விருப்பம், நிகழிடம், தொலைபேசி எண்களைத் தெரிவிக்கலாம். அல்லது 92470888 எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம்.
அன்பும் நன்றியும்.
முற்றோதல் என்ற வார்த்தையை உங்கள் தளத்தில் கண்டு அது என்ன என்று தெரிந்து என்னிடம் உள்ள திருவாசகம் புத்தகம் கொண்டு முழுமையாக படித்தேன். எதோ ஒன்று என்னை உந்தி தள்ளியது. ஓரிடத்தில் இருந்து முடியவில்லை.பல முறை எழுந்தும் உட்கார்ந்தும் படித்தேன். 10 சதம் தமிழில் இருந்தாலும் படிக்கச் சிரமமாக இருந்தது.6 மணி நேரத்திற்கும் குறைவாக தேவை பட்டது. பொருள் உணர்ந்து படிக்கவில்லை.அதற்கும் ஒரு நேரம் வரும்.
ReplyDeleteஎனது ஒரு வார்த்தை உங்களைத் திருவாசகம் முற்றோதல் செய்ய வைத்ததை நினைத்து மெத்த மகிழ்ச்சி. பொருள் தெரியாவிட்டாலும் இன்னும் சில முறை முற்றும் படியுங்கள்..அர்த்தம் புரியத் தொடங்கும்; புரியத் தொடங்கும் போது இன்னும் நெகிழ்வீர்கள்;இன்னும் மகிழ்வீர்கள்..
Deleteதிருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார் !!!