ஆசியாவின் குறிப்பிடத் தக்க அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு.லீ க்வான் யூ அவர்கள் இன்று அதிகாலை 3.18 ல் மறைவு.
ஆசியாவின் நிகரற்ற தலைவர்களில் ஒருவரான அவர் மறைவு சிங்கப்பூருக்கும் ஆசியாவிற்கும் பெரிய இழப்பு என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.
ஆசியாவின் மேலாண்மை தொழில் நுட்பத் திறனாளர்கள் இந்த இழப்பின் வீரியம் என்ன என்பதை அறிவார்கள்.
மிகுந்த துயருடன் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
மதம் மனிதரை ஆட்டி வைக்காமல் இருக்கும் நாடு. அதற்கு இவரே காரணம். மனிதரை அவனவன் விருப்பபடி விட்டால் எது வேண்டுமானாலும் பேசி மக்கள் நிம்மதியை ஒழிப்பார்கள் என்பதை உணர்ந்து சட்டத்தின் துணை கொண்டு கட்டு படுத்தி நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்தினார். கடவுளை விட மக்களுக்கு நல்ல உணவு உடை . உறைவிடம் முக்கியம் என்று உணர்ந்த மாமனிதர்.
ReplyDeleteசிங்கையில் நம் இந்திய மக்கள் கோவில்களில் வீணாக்கும் பல பொருள்களை பார்த்தால் மனம் வருந்தும். விழா நாட்களில் வீணாகும் பாலின் அளவு அவ்வளவு அதிகம். கடவுளே பார்த்தால் கதறி அழுவார். முன்னேறிய இங்கும் கல்லின் மேல் பால் மற்றும் உணவு பொருளை கொட்டி வீண் செய்கிறார்கள். தாய் பால் என்றால் இப்படி செய்வார்களா..?
நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteகடவுளை விட லீ தத்துவங்களை நம்பியவர் என்று தோன்றுகிறது. கன்பூஷியசின் தத்துவங்களில் அவருக்கு நம்பிக்கை இருந்தது தெரிய வருகிறது.
அனைத்திற்கும் மேல் ஒரு குறைந்த பட்ச சமூகத் தேவைகளை ஒரு சமூகம் பெற வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிறுத்தி அரசான்மைத் தத்துவத்தை அணுகியவர். ஒரு அளவில் அதை அடைந்த பிறகு இன்னும் இன்னும் இன்னும் சிறப்பாக என்ற நோக்கில் செயல்பட்டவர்.
இத்தனைக்கும் தனிப்பட்ட அளவில் எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். அவரது வீட்டில் மொண்டு குளிக்கும் தொட்டி போன்ற குளியலறை அமைப்புதான் 2004 வரை இருந்தது என்ற செய்தியைக் கேட்ட போது கண் கலங்கியது; இத்தனைக்கும் இக் கால கட்டத்தில் பல வீடமைப்பு வசதி வீடுகளில் கூட பாத் டப் அமைப்புகள் இருந்தன !
அவர் மறைவின் போது அவர் மகன் சரியாகச் சொன்னபடி இன்னொரு லீ இன்னும் பல பத்தாண்டுகளில் தோன்ற வாய்ப்பில்லை.