குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Wednesday, December 26, 2007

^^^ 36.மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள் !!!

குறிப்பு : இக்கட்டுரை திண்ணை மின்னிதழிலும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.


மாற்றம் மட்டுமே உலகில் மாறாதது என்ற சொலவடை நினைந்து,நினைந்து ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று.
டெக்னாலஜி எனச் சொல்லப்படுகிற அறிவியலின் வளர்ச்சி,வாழ்வில் நமக்கு பல்வேறுவிதமான காரியங்களை எளிதாக்கியிருக்கிறது;
உதாரணமாக
கணினி,
கணிப்பான் – கால்குலேட்டர்-,
கைத்தொலைபேசி
போன்ற உபகரணங்கள் நமக்களித்த சௌகர்யங்கள்(இந்த வார்த்தை தமிழ்தானா???) ஏராளம்.

அதுவும் இப்போதைய,பால்காரர் முதல் பாரவண்டிக்காரர் வரை, நம் அனைவருக்கும் கைத்தொலைபேசியை மறந்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால்,கையொடிந்தது போலாகிவிடுகிறது.(இன்னும் கல்லூரிக் காளைகள்,கன்னிகள் கைத்தொலைபேசி இல்லாமல் வந்துவிடும் நாட்களில் தொடர் கை நடுக்கம் ஏற்பட்டு,கல்லூரியின் அன்றைய நாளில் நிறுத்தப் போராட்டம்-ஸ்ட்ரைக்- நடத்தலாமா என்று யோசிக்கும் அளவுக்கு சென்று விடுவதாகக் கேள்வி!)

இந்த உபகரண சௌகர்யங்கள் ஓசைப்படாமல்,நமது சிற்சில திறமைகளை,ரசனைகளை அழித்துக் கொண்டிருக்கிறது என்பது,நாம் அதிகம் சிந்திக்காத ஒரு கோணம்;

அழகாக எழுதும் கையெழுத்து,
மனக் கணக்காக கூட்டும் கணிதத் திறன்,
காதருகில் பேசுகின்ற சுகம் போன்ற கடிதங்கள்,
ஆகியவை இவற்றில் சில.

என்னுடைய மாமா,மற்றும் கல்லூரிக்காலத்திய நெருங்கிய சகதோழன் சுந்தரவடிவேல் (இன்றைய பதிவர் உலகிலும் அறியப்பட்ட அதே சுந்தரவடிவேல்தான்!) ஆகியோரின் அழகான கையெழுத்தைப் பார்த்து,அவர்களை விஞ்ச வேண்டும் என்ற உத்வேகமே என் கையெழுத்தைப் பெருமளவில் சீர்செய்தது.

ஆனால் இன்றைய நாட்களில் கையெழுத்துக்கள் மறைந்து,அருகி வரும் ஒரு விதயமாகின்றன....

சமீபத்தில் ஆவி.யில் ஒரு இளைஞர் ஒரு லட்சம் அஞ்சலட்டைகள் வாங்கி,மனதில் தோன்றுகின்ற நபர்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள் அனுப்பிக் கொண்டிருகிறார்,கடிதம் எழுதும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டி!
அடுத்ததாக 10 லட்சம் அஞ்சலட்டைகள் அனுப்பப் போகிறாராம் !!!

சமீபத்திய நியூயர்க்கர் இதழில் மும்பை தலைமைதபால் நிலைய வாசலில் ‘கடிதம் எழுதி’யாக வாழ்க்கையைக் கழித்த ஜி.பி.சாவந்த்’ன் படக்காட்சிப் பேட்டி பார்க்க நெகிழ்ச்சியாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மும்பையின் பல அடித்தட்டு மக்களுக்காக 10000’க்கும் மேற்பட்ட கடிதங்களை அவர் எழுதி இருக்கிறாராம்;அவை தாங்கிச் செல்லும் அன்பு,பாசம்,மிரட்சி,வேதனை ஆகிய அனைத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார் அவர்.
அவர் பலருக்கு எழுதித் தரும் கடிதங்களில் பணம் வைத்து அனுப்ப நேரிடும்போது அரக்கு உருக்கி அவர் பெயரிட்ட உலோகஎழுத்துப் பதிப்பால் முத்திரை பதித்து அனுப்புவது வரை அனைத்தையும் பகிர்ந்துகொண்ட அவர்,காதல் கடிதங்களை மட்டும் என் தொழில் வாழ்க்கையில் யாருக்காகவும் எழுத மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

நான் சிறுவனாக பதின்ம வயதுகளில் இருந்த போது எங்கள் பெரியப்பா-அவர் கனரா வங்கியில் முதன்மை மேலாளராகப் பணி செய்தார்,வாழ்வின் சிறு ரசனைகளைப் பேணும் மனிதர்-எழுதும் கடிதங்கள் வரும்போது,சூடான பலகாரங்களுக்கு நடக்கும் சண்டையாய் வீட்டுக்குள்,அதை யார் முதலில் படிப்பது என்ற போட்டி நடக்கும.
அவ்வளவு ரசனையாகக் கடிதங்கள் எழுதும் ஒரு entertainer அவர்.

உதாரணமாக 80 களின் மத்தியில் சென்னையிலிருந்து,கல்கத்தா கிளைக்கு மாற்றலாகி,பிள்ளைகள் படிப்புக்காக குடும்பம் சென்னையிலேயே இருக்க,தனியாகக் கல்கத்தாவுக்குச் சென்ற பின் எழுதிய 15 பக்க முதல் கடிதம் “விமானம் 25000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது;பக்கத்தில் பெண்டாட்டி இல்லையாதலால் தைரியமாக ஏர்ஹோஸ்டஸ் பெண்ணுடன் சிரித்துப் பேச முடிந்தது...” என ஆரம்பித்து தெருவோரம் பீறிடும் தண்ணீர் குழாய்களில் குளிக்கும் மாநகர் வாசிகள்,சவரம் முதல்கொண்டு நடைபாதையில் நடக்கும் காட்சி என மொத்த கல்கத்தாவின் ஒரு ‘அவுட்லுக்கை’ அக்கடிதம் கொடுக்கும்.
ஆரம்ப நாட்களில் என்னுடைய அவதானிப்புகள் கூர்மையடைய அவரின் கடிதங்களும் ஒரு காரணம்.
அவரே நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற மன உந்துதல்கள்,எனது கடிதக் கலையின் நேர்த்திக்கு ஆரம்பக் காரணிகள்.(பின்னால் நான் எழுதிய கடிதங்கள் பல, பெரியப்பா உள்பட,என் உறவினர்கள்,நண்பர்களால் சிலாகிக்கப்பட்டதை இங்கே சொல்ல என் அவையடக்கம் தடுக்கிறது எனச் சொல்லிவைக்கிறேன்!)
இப்போது 2005’ல் கல்கத்தா செல்ல நேர்ந்த போது அவரின் கடிதமெழுதும் திறன் பற்றிய எனது எண்ணம் எனக்கு மேலும் வலுப்பட்டது.

சாவந்த் முத்தாய்ப்பாக சொன்ன செய்தி,கடைசியாக அவர் எழுதிய கடிதம் 3 ஆண்டுகளுக்கு முன் !

மின்மடல்கள்,குறுந்தகவல்கள் பெருகிவிட்ட இக்காலத்திலும்,10 மின்மடல்களுக்கிடையில் ஒரு கடிதமாவது எழுதப் பழகுவோம்....உறவுகளும்,ரசனைகளும் மேம்படும் !

10 comments:

 1. மனதைத்தொடும் பதிவு..நானும் விடுதியில் தங்கியிருந்தபோது, அப்பா எழுதிய கடிதங்களைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்..

  ReplyDelete
 2. வாங்க தங்ஸ்,
  மிகவும் சரி,கடிதங்கள் நினைவின் சுகந்தங்கள் இல்லையா..

  ReplyDelete
 3. //அழகாக எழுதும் கையெழுத்து,
  மனக் கணக்காக கூட்டும் கணிதத் திறன்,
  காதருகில் பேசுகின்ற சுகம் போன்ற கடிதங்கள்,
  ஆகியவை இவற்றில் சில//

  ரொம்ப சரி..........கையெழுத்து நோட்டு புத்தகமே உண்டு முன்னாடியெல்லாம் இப்பொ இருக்கா தெரியவில்லை. நல்ல பதிவு....

  ReplyDelete
 4. ஆமாங்க. இப்பவும் எப்போதாவது மேசையறையைச் சுத்தம் செய்யும்போது கிடைக்கும் கடிதங்களை,
  என்னமோ அவை இப்போதுதான் வந்தன என்ற உணர்வுடன் படிப்பேன்.

  எல்லாம் எங்கள் மாமாவின் கடிதங்கள்தான். அவரும் நாட்டுநடப்பையெல்லாம் நாலுவரி எழுதுவார்.

  ReplyDelete
 5. வாங்க ராதா ஸ்ரீராம்.
  வாங்க துளசி...

  முதலில் கருத்து சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.நன்றி,வருகைக்கும்,கருத்துக்கும்..
  இனி அடிக்கடி பார்க்கலாம்னு நினைக்கிறேன்(நம்புகிறேன் :-) ).

  ராதா,கையெழுத்து நோட்டெல்லாம் அருகி வரும் விதயங்கள்.அம்மா சிறு வயதில் கையெழுத்து நோட்டு எழுத வற்புறுத்துவார்,நான் சிறு வயதுக்கேயுரிய குறும்பில் எப்படியாவது ஏமாற்றுவேன்.
  இத்தனைக்கும் அம்மாவின் கையெழுத்து மிக அழகானது,அதைப் பார்த்து வராத புத்தி,16 வயதில் மற்றவர்களைப் பார்த்து வந்தது.
  என் ஆர்வத்திலேயே 16 வயதுக்கு மேல் கையெழுத்து நோட்டு தேடிப் போனவன் நானாகத்தான் இருக்கும். :-)

  துளசி,ரொம்ப சரிங்க..கடிதங்கள் காலத்தை நினைவுகளின் வாயிலாக மீட்டெடுக்க வல்லவை.

  ReplyDelete
 6. ஐந்து வருடங்களுக்கு பிறகு இதை படிக்க நேர்ந்தாலும், எக்காலத்துக்கும் பொருந்தும் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி குமரன்.

   பொதுவாக சிந்திப்பதால் விளையும் எழுத்தின் ஆயுட்காலம் சிறிது அதிகமே..

   மேம்போக்காக இன்றைய பாட்டிற்கு எழுதுவது என்பதும், எழுதுவதை ரசிப்பதால் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டினால், இந்த விளைவு இருக்கும்.

   நன்றி, முதல் வருகைக்கும்,கருத்துக்கும்.

   Delete
 7. அந்த சிலாகிக்கப்பட்ட கடிதங்களையும் வெளியிட்டு கடித இலக்கியத்துக்கு புத்துயிர் கொடுக்கலாமே சார்! :-)

  ReplyDelete
  Replies
  1. அவற்றின் பாடுபொருள்களில் குடும்ப விதயங்களும் இருப்பதால் ஏற்படும் சிக்கல் தவிர, நிச்சயம் அவை பகிரவும் படிக்கவும் சுவாரசியமானவை!
   சம்பந்தப்பட்டவர்கள் டின் கட்டும் போது யார் காப்பாற்றுவது??
   :))

   Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • Last Post - Dear Readers, It is with great grief that I wish to inform you all of the demise of Kadugu Sir. He was unwell for 2 months, but seemed to be getting bette...
  2 months ago
 • பேஸ்புக் - இங்கே ஒருவரும் வருவதில்லை என்று நினைத்திருந்தேன்..ஆனால் சிலர் இன்னமும் வருகிறீர்கள் போல. மன்னிக்கவும் இங்கே தற்போது பதிவுகள் எழுதுவதில்லை...பேஸ்புக்குக்கு ...
  2 months ago
 • மாபெருங் காவியம் - மௌனி - கிட்டுவின் காரியம் முடிவடைந்துவிட்டது. அவன் எழுத ஆரம்பித்த அந்த “மாபெருங் கவியம்” பூர்த்தியாகி விட்டது. இதற்குப் பிறகு அவனிடம், அவனுடைய இரண்டொரு சிந...
  2 months ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  1 year ago