குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Sunday, December 16, 2007

32.புரியல்லை,தெரிந்தவர்கள் விளக்கவும்.......

ஒரு சரித்திரச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாக எல்லா ஊடகங்களும் வர்ணிக்கும் ஒரு நிகழ்ச்சி,நடக்கும் திமுக கட்சியின் நெல்லை மாநாடு.
இதற்கு சில நாட்களுக்கு முன் சரத்குமார் இது மாதிரி ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.அதற்கு முன் விஜயகாந்த் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.
இம்மாதிரிக் கூட்டங்கள் நடக்கும்போது வெளிவரும் ஏற்பாடுகளுக்கான செலவுகள் பற்றிய செய்திகள் கோடிகளில் இருக்கும்.
இவ்வகை மாநாடுகளுக்கு இயல்பான ஆர்வத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கை,மொத்த கூட்டத்தவரில் நாலில் ஒரு பங்கு கூட இருக்குமா என்பது சந்தேகமே.
இம்மாதிரிக் கூட்டங்களுக்கான் செலவுகள் நாட்டின் பல மாவட்ட்கங்களில் இருந்து நிதியாகப் பெறப் படுகிறது என ஒரு சாரரும்;அரசின் பல நிர்வாக நிலைகளில் முறையற்ற லஞ்சம்,கமிஷன் முதலான வழிகளில் ஈட்டப்படும் பணம் இவ்வகை நிதிவசூல்களாகக் காட்டப்பட்டு கட்சிகளின் அதிகாரப்பூர்வ சொத்துக்களாக (அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் வரி விதிப்புக்கு உட்பட்டவை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்) மாற்றப்படுகின்றன என இன்னொருசாராரும் கூறுவது பொய்யென்று ஒதுக்கிவிட முடியாதது.
இவ்வகை மாநாடுகளினால் பொதுஜனங்களுக்கு என்ன நன்மை விளைகிறது என்று நானும் ரொம்பவும் சிந்தித்துப் பார்த்தேன்....
புரியல்லை,தெரிந்தவர்கள் விளக்கவும்.......

8 comments:

 1. 100 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதில் மக்களுக்கு என்ன நன்மை இருக்கிறதோ..அதை விட அதிகமான நன்மை இது போன்ற மாநாடு நடப்பதிலே இருக்கிறதாக எனக்குப் படுகிறது.
  பேராசிரியர் திராவிட பாடம் பயிற்றுவித்ததை மக்கள் மண்டையிலே ஏற்றினால், கோடி நன்மை....

  ReplyDelete
 2. திராவிட பாடத்தை நடத்ததான் ஊருக்கு ஊர் பணம்கொடுத்து ஒவ்வொரு மாவட்டமும் 25000 பேர்,ஒவ்வொரு ஒன்றியமும் 2000 பேர் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என நிர்பந்திக்கப் படுகிறார்காளா?
  அப்படி வருபவர்கள் அறியும் திராவிடப் பாடம்தான் என்ன?
  இந்த திராவிடபாடம் இவர்கள் நடத்த நாட்டிலுள்ள சிறுவணிகர்கள்,சந்தை போன்ற இடங்களில் பிழைப்பு நடத்தும் சாமானியர்களின் பணம் பிடுங்கப்பட்டுத்தான் திராவிடபாடம் நடத்தவேண்டும் என பெரியாரோ,அண்ணாவோ கூறினார்களோ?
  பெரியார் மதுவிலக்குக்காக தன் பெரும் தென்னந்தோப்பை அழித்தவர்.
  அண்ணாவுக்கோ,அவரது வாரிசுகளுக்கோ இன்று தனியார் டிவி.க்களோ,மாளிகைகளோ,வணிக வளாகங்களோ,சொந்தமாகப் திரைப்படம் எடுக்கும் நிறுவனங்களோ இல்லை.மேலும் பெரியாரின் வாரிசுகளோ அண்ணாவுன் வாரிசுகளோ மாநில வாரியாகவும்,தேசியவாரியாகவும் அதிகார மையங்களை பங்குபோட்டுக் கொள்ளவில்லை,அதற்கான சண்டைகளில் அப்பாவிகளை உயிருடன் எரிப்பதையும்,தங்களுக்கே உழைத்தவர்களை ஆள்வைத்து வெட்டுவதையும்,குண்டெறிந்து கொல்வதையும் முன்னின்று நடத்தவில்லை;
  ஒருவேளை அவர்கள் தமிழினத்தலைவரளவுக்கோ,புரட்சித் தலைவி அளவுக்கோ திராவிடபாடங்களை சரியாகப் படிக்கவில்லயோ என்னவோ !!??????
  தவிர கோவில்களில் குடமுழுக்கு என்பது புதிதாகக் கட்டப்படும் கோவில்களுக்கே இருந்தது என்கின்றன பழந்தமிழ் நூல்கள்.
  தவிரவும் கோவில்களுக்கு செலவுசெய்ய அடித்தட்டு மக்கள் மிரட்டப்பட்டு பணம் வசூல் செய்யப்படுவதில்லை;கோவில் குடமுழுக்குகளினால் பொதுஜனங்கள் அவதிக்குள்ளாவதில்லை.

  ReplyDelete
 3. நல்ல கருத்து சொல்லப்பட்டுள்ளது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இந்த கழகங்கள் திருந்தி நாட்டுக்கு நல்ல வழி என சிந்திக்க வேண்டும், இதையே நானும் பதிந்துள்ளேன்,

  http://vravikumar.blogspot.com/2007/12/blog-post_17.html

  ReplyDelete
 4. ரவிக்குமார்,வருகைக்கும்,கருத்திக்கும் நன்றி.

  ReplyDelete
 5. நல்ல கருத்து. ஆனால், அரசியல் கட்சிகள் மாநாடு நடத்துவது என்பது பெரும்பாலான தேசங்களில் நடப்பதுதான். சிக்கனமான முறையில் திருமணம் செய்துகொள்ள முடியும் என்றாலும்கூட, முடிந்த அளவு செலவு செய்து ஆடம்பரமாகத்தான் நாமெல்லாம் திருமணம் செய்துகொள்கிறோம். அதைத்தான் நமது சுற்றமும், நட்பும் விரும்புகிறது. அதுபோலத் தான் கட்சி மாநாடும். நன்றி.

  http://johnbenedict.blogspot.com/2007/12/blog-post_06.html

  ReplyDelete
 6. நண்பர் ஜான்,வாங்க,என் கருத்து இதனால் மக்களுக்கு அவதியே தவிர,பயன் ஒன்றும் இல்லை என்பதுதான்.
  ஸ்டாலின் பேரன் வரைக்கும் அரசியலை விட மாட்டார்கள் என அறிந்ததுதான்,ரவிக்குமார் உங்கள் பதிவில் சொன்னது போல,இதையெல்லாம் மாற்ற என்ன செய்யனும்னு யோசிக்கனும்.
  ரவிக்குமார் அவரோட பதிவுல இன்னும் அழகா,நானும் இதையெல்லாம் பண்ணேன்,இப்போதான் தெரியுது அதெல்லாம் எவ்வளவு வியர்த்தம்?'அப்படின்னு சொல்றார்.
  மாறுதல்களுக்கான களம் உருவாக வேண்டிய நேரம் இது.

  ReplyDelete
 7. தி.மு.க. மாநாடு நடத்தினால் மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு எழுத வரும் உங்களைப்போன்ற அறிவு ஜீவிகள் அ.தி.மு.க மாநாடு நடத்தினாலோ அல்லது விஜயகாந்த் மாநாடு நடத்தினாலோ வாயை மூடிக்கொண்டு இருப்பது அல்லது இதோ வந்துவிட்டார் ஒரு ரட்சகர் என்கிற மாதிரி எழுதுவதே உங்களைப் போன்ற, நடுநிலையாளன் என்கிற போர்வையில் ஒளிந்து கொண்டு அ.தி.மு.க ஆதரவு (அல்லது தி.மு.க எதிர்ப்பு) பிரச்சாரத்தில் ஈடுபடுவோரின் வேலை.

  ReplyDelete
 8. குட்டி அவர்களே,கருத்துக்கு நன்றி.
  கவனமாகப் படித்தீர்களானால்,நான் திமுக.வைப் பற்றி மட்டும் சொல்லவில்லை என அறிவீர்கள்.
  மற்றபடி நான் எந்தகட்சியின் கொபசெ.வும் அல்ல;அப்படி பாராட்டும் அளவுக்கு ஏதேனும் ஒரு கட்சியாவது செயல்பட்டால்(உண்மையில் அதற்காகத்தான் காத்திருக்கிறோம்) அதை வரவேற்கும் முதல் ஆளாக நான் தான் இருப்பேன்.

  ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • நெப்போலியனின் பேச்சின் வீச்சு! - *முன்குறிப்பு:* பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று மகாகவி பாரதி பாடினார். அதில் வெற்றியும் பெற்றார். பேச்சு திறத்தாலே வையத்தைப் வென்ற...
  6 days ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  2 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  1 year ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  1 year ago