குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Monday, December 24, 2007

35-மோடியின் தேர்தல் வெற்றி

மோடியின் வெற்றி குறித்ததான திணமணியின் பின்வரும் தலையங்கம் பெருமளவு ஒத்துக்கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியையும், இன்னும் சிலருக்கு மகிழ்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வராகிறார் என்பதும், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் சிலரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தாலும், குஜராத் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு ஏற்புடைய தீர்ப்பு என்பதால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

தீர்ப்பு தவறாகிவிட்டது என்றும், மக்கள் முட்டாள்கள் என்றும் கூறுபவர்கள் மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றுதான் கூற வேண்டும். தங்களுக்கு சாதகமான தீர்ப்பு தரப்படும்போது வரவேற்பதும், பாதகமான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் சரியான அணுகுமுறையாகாது. குஜராத் மக்களின் நன்மதிப்பை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத்தான் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.

ஒருவகையில் பார்த்தால், தமிழகத்தில் ஜெயலலிதாவால் செய்ய முடியாத சாதனையை, குஜராத்தில் நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அதிமுக, நடிகர் விஜயகாந்தின் தேமுதிக களத்தில் இறங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கும் சாதனையைச் செய்திருக்குமோ என்னவோ?

2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, குஜராத்திலுள்ள 180 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 91 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நரேந்திர மோடியின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கணித்தது அதனால்தான். அதே நிலை தொடர்ந்திருந்தால் நிச்சயமாகக் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால், தனது செல்வாக்குச் சரிவை நரேந்திர மோடி தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது என்றால் அது அரசியலில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் நரேந்திர மோடி என்கிற அரசியல் ராஜதந்திரியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவருக்கு நிகரான செல்வாக்குடைய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதும், நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதும், குஜராத்தியர்களின் சுயமரியாதைக்கு அடையாளமாக நரேந்திர மோடி கருதப்படுகிறார் என்பதும் பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் காரணங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறையும், தேர்தல் யுக்திகளும்தான் நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்கள் என்று சொல்ல வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளை, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதுபோல காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சித்திரித்ததை, குஜராத்திலுள்ள சிறுபான்மையினரே விரும்பவில்லை என்று தெரிகிறது. சிறுபான்மையினரில் 99 சதவீதம் பேர் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர். மற்ற சமுதாயத்தினருடன் இணைந்து வாழ ஆசைப்படுபவர்கள். தங்களுக்குத் தீவிரவாத முலாம் பூசுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், வாக்களிக்காமல் இருந்தவர்கள் ஏராளம் என்று கூறப்படுகிறது.

அது போகட்டும். நரேந்திர மோடியின் வெற்றி தேசிய அளவில் சில நல்ல விஷயங்களுக்கு உதவப் போகிறது. முதலில், நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது. இரண்டாவதாக, மன்மோகன் சிங் அரசு தனது அணுசக்தி ஒப்பந்தப் பிடிவாதத்தைத் தளர்த்தி, ஒப்பந்தத்தை ஒத்திப்போட்டுவிடும். மூன்றாவதாக, ஆட்சியைக் கவிழ்த்தால், பாரதிய ஜனதா மீண்டும் பதவிக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில், இடதுசாரிகள் அரசை மிரட்ட மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஏதோ, ராகுல் காந்தியால் காங்கிரஸ் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய பலத்தைப் பெற்றுவிடும் என்கிற நப்பாசையும், நரேந்திர மோடியின் தயவால் நைத்துப் போய்விட்டது. உத்தரப் பிரதேசத்திலும் சரி, குஜராத்திலும் சரி அவருக்குக் கூடிய கூட்டம் வேடிக்கை பார்க்கத்தான் வந்ததே தவிர வாக்களிக்க அல்ல என்பது தெளிவாகி விட்டது. இனிமேல், பிரியங்காவை முன்னிறுத்தி வேடிக்கை காட்டுவார்கள் என்று நம்பலாம்.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பின்னால் அவரது உழைப்பும், தன்னம்பிக்கையும் தெரிகிறது. அதற்காக அவரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். அதேநேரத்தில், இந்த வெற்றியின் போதைக்கு அவர் அடிமையாகி விடாமல் இருக்க வேண்டும். தான் ஒட்டுமொத்த குஜராத் மக்களின் முதல்வர் என்பதை மறந்துவிடாமல் ஆட்சியில் தொடர சரித்திரத்தின் பக்கங்களை அவர் அடிக்கடி புரட்டிப் பார்ப்பது நல்லது!2002 சம்பவங்களில் ஒரு முதல்வராக,அவரது குறைபாடுகளை இந்த வெற்றி வெளையில் அவர் பகிரங்கமாக ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் அவர் மேலும் ஒரு பன்முகத் தலைவராக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

*******************************************

பிற்சேர்க்கை:ஒரு அர்த்தமுள்ள கேள்வியும்,பொருத்தமான பதிலும்.(இந்தியா டுடே இதழில் ஆசிரியர் கேள்விகளில் இருந்து)

How did the BJP win in Gujarat despite all the opposition from the media?
Prabhu answers: Unfortunately, for both the print and electronic media, the voters in Gujarat were Gujaratis and not mediapersons from outside.

Even the local media was running a campaign against Modi. I hate to admit but the fact is that some of us have lost touch with our own readers and viewers. It is a dangerous trend that voting intentions of media personalities are now being reflected more aggressively in their writing and opinions.

It poses a greater danger to the credibility of the media than that of the politician.

***************************************

Why is the media so anti-Modi when he has brought about development in Gujarat unseen in any other state in the last 60 years?

Prabhu answers: There seems to be a very wide communication gap between Narendra Modi and the English media. Since he doesn't speak English, he isn't in a position to put across his point of view to the English media because of its inherent biases.

Most of the English media, according to Modi, is dominated by those who have not visited a village or understand the real India. Once this communication gap is bridged, Modi may get a better deal from those who think he doesn't belong to their class.

5 comments:

 1. மோடியின் வெற்றி இந்தியாவிற்கு எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அபாயத்தின் பெரும் அறிகுறியே! எனவே மதச்சார்பற்ற சக்திகள் இந்த தேசத்தின் ஒற்றுமை மற்றும் இந்திய மக்கள்ன ஒற்றுமையை காக்கும் பொருட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து மோடித்துச சிந்தனைக்கு ஆணி அடிக்க வேண்டியுள்ளது. பாசிசத்தின் வேர் மிக ஆழமாக குஜராத்தில் வேறுன்றியுள்ளது. இதனை வேறுடன் பிடிங்கியெறிய சுனாமியைப் போல் பெரும் சுறாவளி தேவைப்படுகிறது. அது மக்களின் மகத்தான ஒற்றுமை மீது கட்டப்பட வேண்டும். மதவாதிகளோடு எந்தவிதமான சமரசமும் இன்றி போராடுவதே இதற்கு சிறந்த வழி.

  ReplyDelete
 2. சந்திப்பு முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  எனது நோக்கில் திணமணியின் தலையங்கம் சரியான பார்வையயே முன்வைக்கிறது.
  தவிரவும்,ஒரு மாநில மக்கள் முழுமையும் ஒன்று சேர்ந்து ஒரு பயங்கரவாதியை ஆதரிக்கிறார்களா என்பது சிந்தனைக்குரிய கேள்வி.

  மக்களின் உணர்வுகள் நுண்ணியமானவை,ஒரு கல்யாண படோபடாபம் ஜெ.யின் ஆட்சியை ஒரு இடம் கூட இன்றி வீட்டுக்கு அனுப்பியதே..
  மக்கள் சீர்தூக்கிப் பார்த்துத்தான் முடிவெடுக்கிறார்கள்..

  ReplyDelete
 3. தினமணியின் த்லையங்கம் குறிப்பிட்டது போல,குஜராத்தின் வளர்ச்சியையே மக்கள்,வேறெதையும் விட விரும்புவதாகப் படுகிறது.
  இதன் நுண்ணியத்தை மோடி உண்ர்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
  தேர்தல் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய மோடியின் வார்த்தைகள்:

  Later, speaking to BJP workers and supporters celebrating the poll victory at the party's headquarters in Khanpur, Modi said, "The festival of elections is over, but the festival of progress has begun. I want the gap between rural and urban areas to diminish."

  "By the end of 2008," Modi claimed, "all the 18,000 villages in the state will have all the facilities present in the chief minister's chamber," Modi claimed adding, he will provide IT (Information Technology) connectivity to the rural areas of Gujarat.

  "Gujarat will become the first place in Asia where villages will have IT connectivity", Modi said adding long-distance education, video conferencing facilities will be made available in the state.

  Modi also went on say that his government will work towards improving the plight of the backward and weaker sections of the society. "I do not know whether I will be able to fulfil all this but I assure you that my attempts will be in that direction," he said. "The elections are over and there will be no distinction between any of the 5.5 crore people of Gujarat."

  மக்களின் தேர்வு சரியான காரணங்களுக்கான தேர்வாகவே தோன்றுகிறது.

  ReplyDelete
 4. M.R.Lakshmi NarasimhanDec 27, 2007, 9:11:00 AM

  குஜராத் தேர்தல் குறித்து மேலும் சில கூற்றுகள்:

  1. குஜராத் மக்களின் அரசியல் முதிர்ச்சி - சந்திரபாபு நாயுடு ஆந்திரத்திலும், S. M. கிருஷ்ணா கர்நாடகத்திலும் நல்லாட்சி நடத்தியும் அம்மக்கள் வெற்றுவாத அரசியல்வாதிகளின் பின் மந்தையாய்ப் போனது போலல்லாமல், கலர் டிவி மோகத்தில் தமிழ் மக்கள் சந்தையில் விலை போனது போலல்லாமல், உண்மையான வளர்ச்சி, உண்மையான நெடுநோக்கை அங்கீகரித்து குஜராத் மக்கள் மோடியைத் தேர்வு செய்தது மோடிக்கு மாத்திரம் கிடைத்த பெருமையல்ல, குஜராத் மக்களின் முதிர்ச்சிக்கும் அத்தாட்சி.

  2. குஜராத் தேர்தல் முடிவு பாரதீய ஜனதா கட்சிக்கு உத்வேகம் அளித்திருப்பது உண்மை தான் என்றாலும், இது தேசிய அளவில் பாரதீய ஜனதாவுக்குப் பெரிய பலன் அளிக்கும் என்று மனக்கோட்டை கட்டினால் அது மணல் கோட்டையாகவே இருக்கும். மத்தியப் பிரதேசத்திலும். ராஜஸ்தானத்திலும் அக்கட்சியின் ஆட்சி நல்லபடியாக நடக்கவில்லை என்பதன் எதிரொலி அடுத்தத் தேர்தலில் தெளிவாகத் தெரியும்.

  3. மோடியின் வளர்ச்சி அத்வானியைப் பாதிக்கும் என்றெல்லாம் சிலப் பத்திரிகைகள் எழுதுவது வெறும் பிதற்றல். கம்யூனிஸ்ட் கட்சி அளவுக்குக் கட்டுப்பாடு இல்லாவிடிலும், காங்கிரஸ் அளவுக்கு 'தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரர்கள்' ஆகும் நிலை இன்னும் பாரதீய ஜனதாவுக்கு வரவில்லை. மேலும், தேசிய அளவிலான பெரிய பொறுப்புக்கு மோடி தயார் ஆவதற்கு முன் மக்கள் தயார் ஆக இன்னும் சில பல ஆண்டுகளாகும்.

  ReplyDelete
 5. கருத்துக்கு நன்றி லக்ஷ்மி நரசிம்மன்.
  மோடியின் கழுத்தைச் சுற்றிய பாம்பாக இருப்பது 2002 நிகழ்ச்சிகளில் அவரின்,அல்லது அவருடைய அரசின் ஆக்கபூர்வ அல்லது அழிவுபூர்வ பங்கு என பலர் வாதிடுகிறார்கள்.
  அவர் இதனைப் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கை கொடுத்தால்,'இதுவும் கடந்து போகும்' என்பது போல அவர் வேறு உயரங்களை அடைய வாய்ப்பிருக்கிறது...

  ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • பறக்கும் தட்டு - ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்ட...
  1 week ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  3 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  1 year ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  1 year ago