குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Monday, April 4, 2011

129.உலகக் கிண்ண வெற்றி-சச்சினின் வெற்றியா?
இந்தியா உலகக் கிண்ணத்தை வென்றிருக்கிறது…மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும். 

வெற்றி என்பது எப்போதும் மகிழ்ச்சிக்குரியது;இன்னும் இது போன்ற விளையாட்டுகளில் வெற்றி என்பது கொண்டாடுவதற்கான வெற்றி.

 

இம்முறை சச்சின் டெண்டுல்கருக்காக கிண்ணத்தை வெல்வோம் என்று உறுதி கூறி அணி விளையாடியது;சொன்னபடி வென்றும் விட்டார்கள்.இந்த வெற்றிக்கு சச்சின்தான் காரணம் என்று கூறி அவரை மைதானம் முழுக்க அணி தோளில் சுமந்து கொண்டாடியும் விட்டது.அவரும் வாழ்வின் இந்தநாள் ஒரு பொன்னாள் என்று கூறி மகிழ்ச்சிப் பெருக்கில் நிறைந்திருக்கிறார்.

இந்தக் கொண்டாட்டப் புழுதிகள் சிறிது அடங்கிய இந்த நேரத்தில் சிறிது அலசினால் சச்சின் டெண்டுல்கர் மட்டும் இந்த வெற்றிக்கான புகழில் பெரும்பகுதியை எடுத்துக் கொள்வது அல்லது அவருக்கு அந்தப் புகழைக் கொடுப்பது தகுதியானதுதானா என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

1983 ல் இந்தியா பெற்ற வெற்றி அசாதாரணமானது.

அதைப் பற்றிய நிர்மல் சேகர் எக்ஸ்பிரஸில் எழுதியிருந்த பகிர்வு அட்டகாசமாக இருந்தது.

கிரிக்கெட் உலகில் இன்று பங்களாதேஷ்,கென்யா இருக்கும் நிலை போலிருந்த நிலையில்,1983 ல் இந்தியா இருந்தது.எவருமே ஏன்,இந்திய கிரிக்கெட் போர்டு கூட இந்தியா உலகக்கிண்ணத்தை 1983 ல் வெல்லும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது.

அந்த நிலையில் அதை சாதித்துக் காட்டியவர் கபில் தேவ் என்னும் தலைமைத்துவம் கொண்ட கிரிக்கெட்டரும் அவருக்கு அருமையான உறுதுணையாக அமைந்த சில அணி நண்பர்களும்தான்.1983 வெற்றியில் உறுதியான பங்கு கபில்தேவின் தலைமைத்துவத்திலும்,உறுதியிலும்,கலங்காத மனத்திடத்திலும் பெருமளவுக்கு இருந்தது.அணிக்கான தொழில் முறையிலான பயிற்சியாளர்கள்,வெள்ளம் போன்ற தகவல் அலசல் பிரிவு-stattistical analysis-போன்றவை எல்லாம் இல்லாத அரிதான அந்தக் காலகட்டத்தில்,சொல்லப்போனால் தொலைக்காட்சி கூட பரவலாக அனைவரது வீடுகளில் இல்லாத அந்தக் காலகட்டத்தில் கபில்தேவ் அந்த வெற்றியைச் சாதித்துக் காட்டினார் !

எனவே 1983 வெற்றியை 2011 வெற்றியுடன் ஒப்பிடுவதும் பாவம்!

ஆனால் இந்த வெற்றியிலும் மேற்பரப்பில் தெரியும் காரணங்களை விட 1983 ஐப் போன்றே சரியான தலைமைத்துவக் காரணங்கள் இருக்கின்றன.

தோனி என்னும் அருமையான தலைவனதும் மற்றும் யுவராஜின் பெரும்பங்கும் இந்த கிண்ண வெற்றியில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.


கனவு மெய்ப்பட்டது தோழா !

சச்சின் என்னும் இந்தியக் கிரிக்கெட் உலகின் சாதனைப் போர்வை பெருமளவு இந்த இருவரின் பங்களிப்பை மறைத்து அவரை முன்னிருத்தி இருக்கிறது.கிரிக்கெட் உலகின் எல்லா ரெக்கார்டுகளையும் தன்னகத்தே கொண்டும் உலகக் கோப்பை வெல்லும் ஒரு அணியின் பகுதியாக தான் இருக்க முடியாதிருந்ததன் சோகத்தை அவர் பல நேரங்களில் வெளியிட்டிருந்ததால்,அவருக்காகவாவது உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்து அதையே அணி முழுவதும் நம்பவும் ஆரம்பித்து விட்டது போல் இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் மும்பாய் நகரத்திற்கு ஒரு தனி இடம் இருக்கிறது.அவர்கள் இந்திய கிரிக்கெட்டில் எந்த ஒன்றையும் சாதிக்கும் அளவுக்கு ஆதிக்கம் கொண்டவர்களாக கவாஸ்கர் வெளிச்சத்திற்கு வந்த பின்பு மாறி விட்டார்கள்.எனவே நிறுவன மயமாக்கப் பட்ட மும்பாய் லாபி சச்சின் என்று முகமூடியையும் வெகு அழகாக காவஸ்கருக்குப் பிறகு உபயோகிக்கத் துவங்கி அதை வெற்றிகரமாக இந்திய கிரிக்கெட்டின் முகமாகவும் மாற்றி விட்டது.

பலருக்கு மேற்கண்ட பத்தி பிடிக்காமல் போகலாம்! எனக்கும் சச்சின் என்ற தனிப்பட்ட,மேதமைத் தன்மை கொண்ட கிரிக்கெட்டரை மிகவும் பிடிக்கும். இன்றும் அவரது ஸ்கொயர் ட்ரைவும்,ஆன் ட்ரைவும்,ஸ்ட்ரைட் ட்ரைவும் மறக்க இயலாத கிரிக்கெட் முத்திரைகள்.சர்வதேசக் கிரிக்கெட்டின் பெரும்பாலான சாதனைகள் அவரிடம் இருக்கின்றன.

ஆனால் அவர் இம்மாதிரி மேதமைத் தனம் நிரம்பிய,தனியாக சிம்பொனியை மழையாகப் பொழியும் ஒரு இசைக்கலைஞன் போன்ற மைதானத்தில் கவிதையாக கிரிக்கெட் எழுதும் ஒரு விளையாட்டுக் கலைஞன் மட்டுமே என்பது சில காலமாக எனக்குத் தோன்றி வருகிறது.

சிறிது எண்ணிப்பாருங்கள். சச்சின் 6 உலகக்கிண்ண விளையாட்டுகளில் விளையாடி விட்டார்.2003 ல் மட்டும்தான் இறுதி வரைக்குமாவது போக முடிந்தது.

1983 ல் உலகக் கோப்பையை வென்ற இந்தியா கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் அடுத்த உலகக் கிண்ணத்தை வெல்ல காத்திருக்க வேண்டியதிருந்திருக்கின்றது;இத்தனைக்கும் 121 கோடி பேர்கள் வாழும் ஒரு நாடு;நம்மை விட 8 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் வெளிச்சத்திற்கு வந்த ஆஸ்திரேலியர்கள் நான்கு முறை வென்று விட்டார்கள்.

Team
England
England
England
India
Pakistan
Australia
New Zealand
India
Sri Lanka
Pakistan
England
South Africa
West Indies Cricket Board
India
Sri Lanka
Bangladesh
2nd
R1
R1
1st
R1
2nd
1st
1st
1st
QF


R1
R1
S8
R1
R1


R1

R1
R1
R1
R1

SF
2nd
SF
2nd
2nd
QF
R1
R1
S8
QF
R1
R1
1st
SF
R1
SF
S6
2nd
R1
1st
S8
R1

R1
R1
SF
R1
R1R1R1

R1
R1
R1
SF
SF
R1
R1
SF
QF
SF
S6
SF
SF
R1
SF
SF
SF
1st
QF
2nd
R1
R1
SF


R1

R1

SF
QF
SF
R1
SF
QF
R1
R1
R1
R1
R1
1st
R1
SF
2nd
2nd

R1
1st
1st
2nd
R1
R1
SF
R1
R1
S8
QF


R1
R1
R1
R1
S6
S6
R1
R1


கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக அவர் கருதப்படுவது உண்மையென்றால் அவர் எப்போதோ உலகக் கோப்பையை வென்றிருக்கலாம்.அவர் தலைமைத்துவத்தை வகித்த போதும் அவரால் அதை சாதிக்க முடியவில்லை;அணி பிரமாதமாக விளையாடிய 2003 லும் அந்த வாய்ப்பு இல்லை.

தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் விளையாடும் போது அவர் விளையாட்டில் தன்னை மறந்து ஈடுபடும் உன்னதத்திற்குள் போய்விடும் குணாதிசயம் கொண்டிருப்பதால்,கிரிக்கெட் உலகின் தனிப்பட்ட சாதனைச் சிகரங்களைத் தொட முடிந்திருக்கிறது;ஆனால் கோப்பையை வெல்வதற்கு அணி முழுமையையும் வழிநடத்தும் தலைமைத்துவமும்,ஏதாவது சரியாக நடக்க வில்லையென்றால் அதை நிவர்த்திக்கும் ஆற்றலும் படைத்தவனே ஒரு தலைவனாக மிளிர்கிறான்.அந்த ஆற்றல் இல்லாத காரணத்தால் சச்சினால் ஒரு மாபெரும் கிரிக்கெட்டராக இருந்தும் உலகக் கிண்ண வெற்றி அடையமுடியாது போய் விட்டது.அதற்கு ஒரு தோனி வர வேண்டியதிருந்திருக்கிறது.என்னைக் கேட்டால் இந்த வெற்றிக்கு பெரும்பகுதி காரணம் தோனியின் தலைமைத்துவம்தான் என்பேன்;கபில் போலவே அவரும் யுவராஜ் போன்ற சாதிக்கும் திறமை இருந்தவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தினார்;சச்சின் எதில் சிறந்தவர் என்று கண்டு அவரை அதை மட்டும் செய்யச்சொன்னார்;பயிற்சாளர் கேரியுடன் நல்ல சிநேகபாவமான உறவை நிலைநிறுத்தினார்;அணியில் அனைவரும் சொதப்பி சூழல் கை மீறும் போலத் தோன்றிய பொழுதில் ஒரு சரியான தலைவனாக,நான் இதைச் சரி செய்வேன் என்று தானே இறங்கி ஒரு வழி பண்ணினார்.இந்த கடைசி ஸிக்ஸரை அடித்தபிறகு தோனியின் விழிகளை ஒரு நிமிடம் க்ளோசப்பில் காட்டினார்கள்,பார்த்தவர்களுக்குத் தெரியும் வெற்றியின் மீதான வெறி'க்கு என்ன பொருள் என்பது !கபிலின் 175 நாட் அவுட் யாருக்காவது நினைவிருக்கிறதோ?

சிறிது எண்ணிப்பாருங்கள், இவை அனைத்தையும் செய்ததால்தான் கபில் உலகக் கிண்ணத்தை வெல்ல முடிந்தது;தோனியாலும் வெல்ல முடிந்தது.

2003 இறுதிப் போட்டியின் ஸ்கோர் கார்டைப் பாருங்கள்,சச்சின் 4 ரன்களில் அவுட்.உச்சகட்டமான நேரங்களில் சச்சின் என்னும் கிரிக்கெட் காதலனுக்கு,மனம் பதறிப் போகிறது,ஆட்டத்தில் கவனம் என்ன முயன்றும்,சரிவரப் பதியாமல் போய்விடுகிறது என்பது உண்மைதான் என்று தோன்றுகிறது.

அவரைப் பொறுத்தவரை கிரிக்கெட் அவரது காதல்,இசை,கவிதை.அனர்த்தங்கள் அற்ற ஒரு பொழுதில் வெள்ளமாக அவரால் பொழிய முடியும்;நேர்த்தியும்,மேன்மையும்,அழகும்,லாகவமும்,திறமையும்,நளினமும்,இளமையும் மிகுந்த பல ஷாட்கள் பொங்கிப் பிரவாகமெடுக்கும் ஆட்டம் காணக்கிடைக்காத கவிதையாகப் பொழிய முடியும்.ஆனால் அவருக்கும் வாழ்நாள் கனவான உலகக் கோப்பையை வெல்ல நல்ல ஒரு தலைவன் தேவைப்பட்டிருக்கிறான்.


பரவசமூட்டிய தருணங்களுக்காக ஒரு கிரிக்கெட் கவிஞனுக்கு நன்றி !

அவரது அந்த மேதமைத் தனத்திற்கான பரிசாக அணியும் அவரைக் கொண்டாடி மகிழ்ந்து விட்டிருக்கிறது..நாமும் வாழ்த்தலாம்….ஆனால் இந்த வெற்றி தோனியின் தலைமைத்துவத்திற்கான வெற்றி !

வாழ்த்துக்கள் தோனி!!!


எச்சரிக்கை 1.
இந்த நேரத்தில் உண்மைத்தமிழனின் இந்தப் பதிவுக்கும் முழுமையாக என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.கிரிக்கெட் என்பது இந்தியாவின் மற்ற அனைத்து விளையாட்டுக்களையும் விழுங்கி அவை வளர்வதற்கான அத்தனை சாத்தியங்கள்,வாய்ப்புக்களை விழுங்கி ஏப்பமிடும் ஒரு பகாசுரனாக வளர்ந்து வருகிறது.இது நல்லதல்ல.

எச்சரிக்கை 2.
இறுதி ஆட்டத்தின் இறுதியில் சரத் பவாரைப் பார்த்த போது
சரவணன் எழுதி இருப்பது அத்தனையும் என் சிந்தனையிலும் வந்தது.அவருக்கு முதல் கடமை விவசாயத்துறை அமைச்சராக அவரது பணிகள்,அதில் லவலேசமும் கிழிக்க இயலாமல் பல முரண்பாடுகளுக்கிடையில் அவருக்கு இந்தக் கிரிக்கெட் கிளுகிளுப்புகள் தேவையற்ற ஒன்று.பிசிசிஜயில் இருக்கும் அளவுக்கதிகமான பணம் அவரை இழுத்து வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.


எச்சரிக்கை 3:
அவுட்லுக்கில் ஒரு வாசகர் எழுதியிருந்ததைப் படித்தேன்,அப்படியை ஒத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது....பின்வருமாறு..

Dhoni is the product of rural India...an India shunned by the urbanites as backward and hopeless, but the India which produces the best filmmakers, artists, musicians and so on. A rural India which is comfortable with urban India, but not vice versa.
Dhoni and Kapil Dev will win a world cup...Tendulkar, Gavaskar, Dravid and Kumble cannot (unless they are extremely lucky.)
Look back into the years before MS Dhoni became MS Dhoni...he started from really humble beginnings (he was employed as a 'ticket collector' in the not too distant past.) He knows he has been fortunate. But he also knows he is extremely talented. This background gives him a laissez-faire attitude...whether it is a final or a group game, it is only a damn game.
The only common element between Dhoni and Sangakkara is that they are wicketkeeper batsmen. But Dhoni believes in the 'kiss' philosophy - 'keep it simple...stupid'. Dhoni even divulged his game plan before the finals - bat first and score lots of runs - and thats a brilliant plan. Sangakkara ultimately adopted Dhoni's plan, but he overplotted (keeping Ajantha Mendis away, including Kulashekara and Randiv) and lost in the process.
When you keep it simple, your mind becomes free to focus on the task ahead. And you dont become stupid.
The final true mark of a champion is to stop playing when he/she is in the top of their game. Lets see if Dhoni can time that aspect of his career well!!!
AN
CHICAGO, USA

5 comments:

 1. யாகூ கிரிக்கெட்டில் வந்த இந்தப் பத்தி அப்படியே என் பதிவைப் பிரதிபலிப்பது போல இருக்கிறது...

  ||
  A New World Order

  It’s hard to fathom how a captain with a penchant for safety-first methods is so successful. Dhoni isn’t like the Australian or South African captains of the past, who would, in their single-minded pursuit of winning, create chances for the opposition.

  Dhoni attacks only when absolutely necessary. From the intuitive leader he was at the start, he is now a calculative, risk-free strategist. He has spread himself thin: he also has to keep wickets and bat in the middle-order. Then he has to deal with the beast called the fans’ expectations.

  Yet, in the last four years he has won nearly everything worth winning: World Twenty20, the Test No. 1 rank, briefly the No. 1 ODI rank, IPL, Champions League, and now the World Cup. In between, he also nailed other elusive wins: Asia Cup, CB Series, multiple Test wins over Australia, multiple ODI series wins in Sri Lanka, a Test series in New Zealand, to name a few.

  The risk-free approach reflects in his batting too. From the go-getter batsman six years ago, he’s become someone who doesn’t want to be caught playing the rash shot. He wants to build. He wants to be patient. While this has worked for Dhoni the captain, it hasn’t for Dhoni the batsman in recent times.

  His magnificent 91 in the final was all heart, all guts, something you would associate with the Dhoni of the old. Playing a big hand in the final would make winning it doubly special for Dhoni.

  So if there’s a wishlist for the newly crowned world champions, it is this: if they tighten up the bowling, attack a little more, and replace the non-performing ‘big-match players’, India will be truly hard to topple from their top spot.

  And skipper, please play those backfoot punches more often.
  ||

  இந்தக் கடைசிப் பகுதி மிகவும் கூராக இருக்கிறது என்பேன்..

  ReplyDelete
 2. இது "சச்சினின் கோப்பை" என்று சொல்வது முழுக்க முழுக்க உணர்வுப்பூர்வமானது...
  ஸ்கோர்கார்டுகள் மற்றும் நம்பர்களின் அனாலிஸிஸ் இதற்கு உதவாது...
  இருபத்தியோறு வருடக் காத்திருப்பு மற்றும் கடின உழைப்பு....
  ஒரு கனவு நனவான பேரானந்தம்.... இந்த உலகக்கோப்பையின் புகழின் பரும்பகுதியை சச்சின் எடுத்துக்கொள்ளவில்லை.... இந்திய‌ அணியின் இன்றைய‌ நட்சத்திரங்களுக்கு எல்லாம் ஆதர்ஷ நாயகன் சச்சின்தான்.... சச்சினுடன் ட்ரெஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்துகொள்வதையே பெருமையாக நினைப்பவர்கள்தான் தோணி முதல் அஷ்வின்வரை அத்தனைபேரும்...!! சச்சினுக்கு அவர் கனவைப் பெற்றுத்தருவோம் என்று சொன்னார்கள்.. அதையே செய்திருக்கிறார்கள்... அவர்கள் கௌரவத்தைக் கொடுத்தார்கள் சச்சினுக்கு.. சச்சின் தாவிக்குதித்து அவர்களின் தோள் மேல் ஏறிக்கொள்ளவில்லை... அவர்களே தோள்கொடுத்துத் தூக்கி வலம்வந்து மகிழ்ந்தார்கள் அவர்களின் நாயகனை..... சச்சின் இதற்குத் தகுதியானவரா என்றெல்லாம் கேள்வி எழுந்தால் புன்னகைப்பதைத் தவிர வேறெந்த பதிலும் சொல்லத் தோன்றவில்லை... :-)
  1983, 2011 உல‌க‌க்கோப்பைக‌ளை எத‌ற்கு ஒப்பிட்டுப் பார்க்க‌வேண்டும்? ஒரு ப‌ர‌ம‌ சந்தோஷ‌ம் நிறைவேறிவிட்ட‌து.... வீர‌ர்க‌ள் அடுத்து ஐபிஎல்-லுக்குத் த‌யாராகிவிடுவார்க‌ள்.... ச‌ச்சின் மீத‌மிருக்கும் சில‌ சாத‌னைக‌ளை நிறைவேற்றிவிட்டுத் த‌ன் எதிர்கால‌ வாழ்வைத் திட்ட‌மிட‌த் துவ‌ங்கியிருப்பார்.... நான் பொதுவாக‌ எந்த‌ அனாலிஸிஸிலும் ஈடுப‌டுவ‌தில்லை.... ஒரு வெற்றிக்கு உத‌விய‌ உழைப்பு அடுத்த‌ வெற்றிக்கு உதவாது... மீண்டும் முத‌லிலிருந்துதான் துவ‌ங்க‌வேண்டும் :-)
  கொண்டாடி முடித்துவிட்டேன் இந்த‌ ச‌ந்தோஷ‌த்தை திருப்தியாக‌... :-) ச‌ச்சினின் ர‌சிக‌னாக‌.... இந்தியனாக‌ எட்ச‌ட்ரா எட்ச‌ட்ரா...!! :-)

  ப‌திவைத் தொடுத்த‌மைக்கு ந‌ன்றி ந‌ண்பா.... என்னுடைய‌ ப‌திவு Campaign அல்ல‌... ஒரு ப‌கிர்வு ம‌ட்டுமே..!

  ReplyDelete
 3. Prabu,
  Thanks for the comment.

  I too love Sachin's play, underlying point here is for world cup winning Dhoni factor is more important than Sachin's contributions in this tournament.

  Overall Sachin is a cricketing genius, no doubt on that.But he neither could deliver as leader nor could realize his dream by leading from front.

  ReplyDelete
 4. அவுட்லுக்கில் ஒரு வாசகர்:


  Dhoni is the product of rural India...an India shunned by the urbanites as backward and hopeless, but the India which produces the best filmmakers, artists, musicians and so on. A rural India which is comfortable with urban India, but not vice versa.

  Dhoni and Kapil Dev will win a world cup...Tendulkar, Gavaskar, Dravid and Kumble cannot (unless they are extremely lucky.)

  Look back into the years before MS Dhoni became MS Dhoni...he started from really humble beginnings (he was employed as a 'ticket collector' in the not too distant past.) He knows he has been fortunate. But he also knows he is extremely talented. This background gives him a laissez-faire attitude...whether it is a final or a group game, it is only a damn game.

  The only common element between Dhoni and Sangakkara is that they are wicketkeeper batsmen. But Dhoni believes in the 'kiss' philosophy - 'keep it simple...stupid'. Dhoni even divulged his game plan before the finals - bat first and score lots of runs - and thats a brilliant plan. Sangakkara ultimately adopted Dhoni's plan, but he overplotted (keeping Ajantha Mendis away, including Kulashekara and Randiv) and lost in the process.

  When you keep it simple, your mind becomes free to focus on the task ahead. And you dont become stupid.

  The final true mark of a champion is to stop playing when he/she is in the top of their game. Lets see if Dhoni can time that aspect of his career well!!!

  AN
  CHICAGO, USA

  ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • பறக்கும் தட்டு - ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்ட...
  1 week ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  3 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  1 year ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  1 year ago