குறள் சிந்தனை


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321


அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.

பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவும் அவை சார்ந்த பிற பழக்கங்களும் நம்மை வந்தடையும் போது அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் பொருள்.

Saturday, March 26, 2011

128. 2011 தேர்தல்-3 - Just Enjoy !!!



இம்முறை நடக்கும் தேர்தல் சற்று வித்தியாசமானது.


தேர்தல் அறிக்கைகள் கவனமாகப் பரிசீலிக்கப் பட வேண்டிய தலைவலிகள் எல்லாம் இல்லாமல் மிகவும் நகைச்சுவையாக வெளிவருகின்றன !


பிட் நோட்டீஸ் போல மக்களுக்கு இலவசப் பொருள்கள் எதில் அதிகமாக இருக்கிறது என்று பார்த்து விட்டால் தீர்ந்தது விஷயம் !!!


தமிழகத்தின் தலையெழுத்து இப்படி ஆகவேண்டியது 'காலத்தின் கட்டாயம்'.

ஆதலால் சிரமப்பட்டு சிந்தித்து தேர்தல் பற்றிய வியாக்கியானப் பதிவுகளை விட இப்படியான கார்ட்டூன்களை ஒரே இடத்தில் பாரப்பதே மனதை இலகுவாக்கும்...

என்சாய் மடீஸ்...

தொடர்புடைய இதழ்கள் மற்றும் பதிவர்களுக்கு நன்றியுடன்...