என்ன நடக்கிறது தமிழகத் தேர்தல் களத்தில்?
கடந்த வாரம் அதிமுக தன்னிச்சையாக 160 இடங்களுக்கு போட்டியிடும் ஆட்களை அறிவித்த போது, அதிமுக கட்சியுடன் கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் விகாந்திடம் ஓடினார்கள்.
ஜெ.யின் வீட்டில் நடந்த குழப்படிகளால் அந்தப் பட்டியல் தவறாக வெளியிடப் பட்டது என்றும் கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக வினரை ஜெ.தொலைபேசியில் அழைத்து மீண்டும் பேசுகிறார் என்றும் சனி,ஞாயிறுகளில் செய்திகள் வந்தன.
ஆனால் கடைசிவரை மதிமுக தலைவர் வைகோ அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஜெ. தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்த போது ஏதோ ஒரு முடிவுடன்தான் அறிவித்திருக்கிறார் என்பது இப்போது நிச்சயமாகி விட்டது.வைகோ கழற்றி விடப்பட்டிருக்கிறார்.
வைகோ செயற்குழு என்று கூட்டி மேலும் ஏதாவது பட்டாசு விடப் போகிறாரா என்று பார்த்தால் அவர் கூத்தில் கோமாளி என்பது போல தேர்தல் புறக்கணிப்பு என்று முடிவெடுத்திருக்கிறார்.
ஜெ.யின் அந்த முடிவின் பின்னணியில் சோவும் ஸ்டெர்லைட் மற்றும் விஜய் மல்லையாவின் குழுமங்களும் இருக்கின்றன என்று ஒரு வதந்தி பத்திரிகைகளில் நிலவுகிறது.முதல் நிறுவனம் அவர் மீது தொழில் ரீதீயான போட்டியும் இரண்டாவது நிறுவனம் இலங்கையிலிருந்து இயக்கப்படுவதாகவும் மேலதிக செய்திகள் சொல்கின்றன.
கடைசி நேரம் வரை இழுக்கடிக்கப்பட்ட பின்னர் கழற்றி விடப் பட்டிருக்கும் வைகோ விற்கு வேறு சாத்தியங்களும் இல்லை;இவருக்காக சண்டை பிடித்து விகாந்து வெளியே வந்தால் அவர்,வைகோ மற்றும் கம்யுனிஸ்டுகள் சேர்ந்த மூன்றாவது அணி அமைந்திருக்கலாம்.ஆனால் அம்மா அதற்கெல்லாம் இடம் கொடுக்க வில்லை.
சரியான ப்ளேஸ்மெண்ட் ஷாட் ஆக அமைந்தது அவரது புறக்கணிப்பு.வைகோ வால் இதை முன்னரே ஊகித்திருக்க முடியவில்லை என்பது அவரது அரசியல் தெளிவின்மைக்கு இன்னொரு (சமீபத்திய)எடுத்துக்காட்டு.
தேர்தல் முடிந்தபிறகு அவரவர் பெறும் சீட்டுகளின் அடிப்படையில் மீண்டும் ஒரு கூட்டணிப் பேச்சு நடக்கும்;அப்போது இப்போதைய கூட்டணியிலிருந்து பலர் மாறும் சாத்தியங்களும் இருக்கின்றன.
அவ்வாறான ஒரு சாத்தியத்தை மனதில் இருந்தி தெலுங்கு பேசும் வைகோவும் விகாந்தும் ஏதாவது திரைமறைவு உடன்படிக்கைகளில் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை;அப்படி இல்லாத பட்சத்தில் வைகோ வின் இந்த தேர்தல் புறக்கணிப்பு முடிவு என்பது….
மன்னிக்க முடியவில்லை..முட்டாள்தனமானதுதான் என்று சொல்லத்தான் தோன்றுகிறது.
ஆனால் அவருக்கு வேறெதுவும் வழி இருக்கவில்லை என்பதும் உண்மை ! தெளிவாகத் தெரிவது ஒன்று மட்டும்தான். எதுகாரணம் பற்றியும் திமுக மறுபடி வெல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
ஆனால் திமுக வின் தலைவர் மிகவும் தந்திரசாலி;வைகோ வுக்கான தூண்டில் இன்று கி.வீ மூலம் வீசப்பட்டிருக்கிறது..
இந்த அரிதார நாடகத்தில் இன்னும் என்னென்ன காட்சிகள் மாறும் என்று தெரியவில்லை.
()
இதற்கிடையில் திமுக வின் தேர்தல் அறிக்கை வெளிவந்திருக்கிறது,எதிர்பார்த்தபடி பல இலவசப் பொருள்களுக்கான அறிவிப்புகளுடன். இது போன்ற இலவசங்களுடன்,அதாவது அதிகாரப் பூர்வமாகவே அறிவத்து விட்டு நடைபெறும் தேர்தல்கள் சனநாயகத்தின் கேலிக்கூத்தாகத் தெரிகிறது.இவற்றை சட்டம் அனுமதிக்கிறதா என்ன?
இது பற்றிய தினமணியின் தலையங்கமும், இந்தப் பதிவும் வரிக்கு வரி ஒத்துக் கொள்ளப்படவேண்டியவை.
இந்தக் கார்ட்டூன் மற்றும் போட்டூன்களும் !
First Published : 21 Mar 2011 11:40:05 AM IST
ஹைய்யா... ஐய்யா... சத்தம் மூச் காட்டாதீங்க... மிக்ஸியில எதிரணி அரைபட்டுடிச்சி... கிரண்டர்ல எல்லாம் மாவாயிட்டாங்க. அரைச்ச மாவையே அரைக்கணுமான்னு அவங்க திண்டாடிட்டிருக்காங்க... இலவசங்கிற காத்துல அவங்க எல்லாம் இலவம்பஞ்சா பறக்கிறாங்க... அதுனால ஒண்ணு செய்யலமா...? எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கெல்லாம் இலவசம் ஏதாவது அறிவிச்சிட்டா என்ன..?!
()
தெகல்காவின் இந்தக் கட்டுரை திராவிட இயக்க வரலாறை தெளிவாக(!) சொல்கிறது.
தமிழ் வாரப் பத்திரிகைகளில் இது போன்ற ஒரு கட்டுரை வர வாய்ப்பிருக்கிறதா ?!
சோதனை
ReplyDeleteதெஹல்காவின் கட்டுரையைக் குறிப்பிட்டு இது மாதிரியான கட்டுரை தமிழ் வாரப்பத்திரிகைகளில் வர வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டிருந்தேன்...
ReplyDeleteஇந்த இதழிலேயே ஆனந்த விகடனில் இது போன்ற அல்லது இதை 70 சதம் தமிழ்ப்படுத்திய ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது...
விகடன் குழுமங்களின் பல இதழ்களில் சமீப காலத்திய கவரேஜ்கள் திமுக சறுக்கும் விதயங்களை எடுத்து வைப்பதாக இருக்கிறது என்பதை எளிதில் எவரும் அவதானிக்கலாம்.