தேர்தல் நேரம் நெருங்கி விட்ட தமிழகத்தில் பல கட்சிகளும் பல நாடகக் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.
இம்முறை முதலில் கூட்டணி முயற்சிகளை எடுத்து ஜெ. தேமுதிக வின் விசயகாந்தை உள்ளே கொண்டு வந்தார்.அவர் வி.காந்தை குடிகாரன் என்று விமர்சித்திருந்தார் என்பதெல்லாம் வி.காந்துக்கு மறந்து விட்டது;எப்படியாவது தனது மற்றும் தன் மச்சினர் சுதீஷ் ஆகியவர்களின் அரசியல் குறிக்கோள்கள்-அதாவது பதவி,மற்றும் சினிமாவில் பருப்பு வேகாமல் போகும் சூழலில் செய்ய ஏதாவது வேலை,பிழைப்பு வேண்டும் போன்ற காரணங்கள் உயிர் வாழ வேண்டுமெனில் அவர் அரசியலில் பிழைத்திருக்க வேண்டும;அதற்கு முதலில் செய்தியில் இருக்க வேண்டும்,செய்தியில் இருக்க வேண்டும் எனில் பதவி இருக்க வேண்டும்.
பதவி இல்லா விட்டால் விகாந்தை ஊடக விபசாரக் குழுக்கள் கழற்றி விடும் அபாயமும் இருந்தது; தங்கள் பிழைப்புக்கு ரஜினியை கொம்பு சீவி சீவிப் பார்த்து கைசலித்துப் போன நேரத்தில் அவர்களுக்கு மாட்டியவர் விகாந்து. ஆரம்பத்தில் விகாந்து முழங்கியது சிறிது வித்தியாசமாக இருந்தது;கூட்டணி இல்லை என்று உறுதியாக நின்றது தமிழக அரசியல் அரங்கத்தில் எடுபட்டது.அதனாலேயே அவருக்கு 10 சதம் வரை ஓட்டுகளும் விழுந்தன.ஊடக வியாபாரம் அவரை வைத்து நன்றாக நடந்தது.அவரும் ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.
தெளிவான ஒரு திட்டம் வைத்திருப்பதாக விகாந்து குறிப்புகள் காட்டினார்;தமிழக அரசியில் சூழலில் மாறுதலை எதிர்பார்த்திருந்த பெருவாரியான 'கழக' சார்பற்றவர்கள் அவரை வரவேற்கத் தயாராக இருந்தார்கள்.நானும் என்னுடைய முந்தைய பதிவுகளில் சரத்குமாரை விட விகாந்து வரவேற்புப் பெற வாய்ப்பிருக்கிறது என்றே கருதினேன்.
இந்த சூழல் 2006 தேர்தல் சூழல்.
ஆனால் 2011 ல் காட்சிகள் பெருமளவு மாறி விட்டிருக்கின்றன.ஊடக சார்பு, மற்றும் அரசியலில் மிதந்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றால் கூட்டணி முடிவுக்கு விகாந்து வந்திருக்கலாம்;ஜெயும் அவரை உள்ளே கொண்டு வருவதுதான் வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கு நல்லது என்று நினைத்து,கொடுத்து அவரை உள்ளிழுத்திருக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
விகாந்து பிழைப்பாரா அல்லது இன்னொரு ராமதாசு ஆவாரா என்பது இந்தத் தேர்தலில் தெரிந்து விடும் !
திமுக வைப் பொறுத்த வரை 2006 ல் இருந்த நிலை வேறு;அப்போது போல் இப்போது திமுக வட்டாரம் பலமாக இருப்பது போலத் தெரியவில்லை.மிகு வயதாகி விட்டிருக்கும் முக'வே இன்னும் கள முடிவுகள்-ஸ்ராட்ட்டஜி டெஷிசன்- எடுக்க வேண்டியவராக இருக்கிறார்.அலைக்கற்றை ஊழலில் அவரது மகள் மற்றும் மனைவி விசாரிக்கப் படலாம் என்ற சூழல் நிலவுகின்ற நேரத்தில்,காங்கிரசும் அவரது மிரட்டல்களுக்கு மசிய முடியாத நிலையில் இருப்பது போல் தோன்றுகிறது.தெஹல்கா வெளியிட்ட ஒரு கட்டுரை, திமுகவின் வல்லடிக் கோரிக்கையான 'விசாரணையிலிருந்து குடும்பத்திற்குப் பாதுகாப்பு' செல்லுபடியாக வில்லை என்று சொல்கிறது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் முன் தாமஸ் நியமனம்,காமன்வெல்த் ஊழல்,வீட்டுக் குடியிருப்பு கட்டிட ஊழல் போன்ற பல விதயங்களில் செருப்படி வாங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, முக'வின் குடும்பப் பாதுகாப்புக் கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
எனவேதான் பூச்சாண்டி காண்பித்துப் பார்த்தும் காங்கிரஸ் மசியாததால், 'காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்பது நியாயமா?' என்றெல்லாம் பஞ்சாயத்து வைத்த முக, திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று மிரட்டிப் பார்த்த முக, எதற்கும் காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒன்றும் சமிஞ்கைகள் வரவில்லையாதலால், எப்படியாவது கூட்டணியில் இருந்தால் போதும் என்ற நிலையில் கையைக் காலைப் பிடித்து,63 இடங்களைக் கொடுத்து கூட்டணியில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தினமணியின் இந்தத் தலையங்கம் உறுதிப்படுத்துகிறது.
என்ன விலை கொடுத்தாவது சமாதானம் என்று ஒருவழியாகத் தப்பி வந்திருக்கும் திமுக வை எந்த அளவுக்குக் காங்கிரசால் காப்பாற்ற முடியும் என்பதும் கேள்விக்குரியது.உச்ச நீதி மன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் சிபிஜ விசாரணையில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு குறிப்பிட்ட தேதியைக் குறித்திருக்கிறது உநீமன்றம்.சிபிஜ இன்னும் உநீமன்றத்தில் குட்டு வாங்கத் தயாராக இருக்கிறதா என்பதும்,உநீமன்றம் இதே அளவு கண்டிப்புடன் அலைக்கற்றை விசாரணை வழக்கைக் கொண்டு செல்லுமா என்பதும் தேர்தல் காலத்தில் பொறுத்திருந்து பார்க்க வேண்டியவை.
இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளிடையே ஒன்றையொன்று களத்தில் கவிழ்க்கும் உள் வல்லடி வேலைகள் பெறுமளவில் நடக்கும் என்பது கண்கூடு.எனவே அந்தந்தக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் வெற்றிபெற 'முடிந்ததை' செய்வார்கள்.தமிழக முட்டாள் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை இந்த முறை அதிக விலைக்கு விற்கலாம் !
* * * * *
இந்தத் தேர்தலின் கூத்துக்கள் முழுதாக தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகுதான் நடக்கும் என்பதும் என்னுடைய ஊகம்.அந்தந்தக் கட்சிகள் வென்ற இடங்களைப் பொறுத்து அணி மாற்றக் கூத்துகள் நடக்கும்.அது இப்போது நடக்கும் கூட்டணிக் காட்சிகளை விட மிகவும் தமாஷாக இருக்கும்.
* * * * *
திமுக,காங்கிரஸ் உறவு நிலைக்காது என்ற ஊகம் பரவலாக இருந்ததிலிருந்து இப்போதைய நிலை மாறியிருப்பதால் மாற்றணியில் சிறிது அமைதி நிலவுகிறது.ஜெ'யைப் பொறுத்த வரை பாமக போனால் போகட்டும் என்று விட்டு விட்டுத்தான் விகாந்தைப் பிடித்திருக்கிறார்.
விகாந்தின் அரசியில் நிலைப்பாடு என்னவென்று அவர் வாயால்தான் சொல்ல வேண்டும்;வாக்காளர்களிடம் சொல்ல அவர் என்ன வைத்திருக்கிறார் என்பதும்,அவரது நம்பகத் தன்மை எந்த அளவு மக்களிடம் இனி செல்லுபடியாகும் என்பதும் கவனிக்க வேண்டியவை.மக்களிடம் மட்டுமே என் கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்த அவர்,ஆரம்ப காலத்தில் அதிகம் விமர்சித்த ஜெ.யைக் கூட்டணித் தலைவராக முன்னிறுத்த வேண்டிய சூழலில் எப்படி வாக்காளர்களை எதிர் கொள்வார் என்பதும், வாக்காளர்கள் அவரை எந்த நிலையில் வைப்பார்கள் என்பதும் கவனிக்க வேண்டியவை.
ஜெயைப் பொறுத்த வரை திமுக,காங்கிரஸ் இடையேயான உள்ளடி வேலைகள் அவருக்கு சாதகமாக இருக்கும் என்ற கணக்கீடும் இருக்கலாம்!
* * * * *
2011 சட்டசபைத் தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டிருக்கிறது.
* * * * *
சோதனை
ReplyDeleteநல்ல அவதனிப்பு
ReplyDeleteநன்றி கோவி கண்ணன்...இரத்தினச் சுருக்கமான கமெண்ட்..
ReplyDeleteஉங்களது அதிரடி அரசியல் பதிவுகள் ஒன்றும் காணோம் !?
அன்புள்ள அலங்காரம்..
ReplyDeleteஉன் மின்னஞ்சல் அனுப்பு. தவிர, நீ எனக்கு அனுப்பியதாகச் சொன்ன மின் மடல் வந்து சேரவில்லை நண்பா.
editorgowtham@gmail.com
என்ன விலை கொடுத்தாவது சமாதானம் என்று ஒருவழியாகத் தப்பி வந்திருக்கும் திமுக வை எந்த அளவுக்குக் காங்கிரசால் காப்பாற்ற முடியும் என்பதும் கேள்விக்குரியது.//
ReplyDeleteஐயா காலிலை விழுந்திட்டாரா? விஜகாந்துக்கோ, சரத்குமாருக்கோ வெற்றி வாய்ப்புக்கள் இருந்தாலும் அவர்கள் செய்யப் போவது ஒரே வேலை தானே? மக்கள் நலனற்ற சுய நலச் சேவைகள் தானே?
உங்களின் அரசியல் அலசல் நடை முறைத் தமிழக்த்தைச் சுட்டி நிற்கிறது.
நன்றி நிரூபன், வருகைக்கும் கருத்துக்கும்..
ReplyDeleteஆம்.இன்றைய அரசியல் நடைமுறை நிகழ்வுகளை வைத்துத்தான் நடக்கிறது...
கொள்கைகள்,இலக்குகளை நாங்கள் குழிதோண்டிப் புதைத்து ரொம்பக் காலம் ஆகிவிட்டது..
:((