குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, December 14, 2007

31- ^^^ ஐடி'யாளர்களின் பார்வை சரியா,தவறா?

குறிப்பு: இக்கட்டுரை திண்ணை இதழில் மீள்பதிவாக பிரசுரிக்கப் பட்டிருக்கிறது.


இன்றைய ஹைடெக் நகரங்கள் என சொல்லப்படும் இந்திய தகவல்தொழில்துறை சார்ந்த நகரங்களில் ஏற்பட்டிருக்கும் வேகமான மாற்றங்கள் மற்றவர்கள் பார்வையில் வெறுப்பையும்,அந்த நகரங்களில் வாழும் மற்ற துறைகளைச் சார்ந்த மக்களின் பார்வையில் ஐடி துறையாளர்களைப் பொறாமையுடனும்,விரோத மனப்பான்மையுடன் பார்க்கும் மனோபாவமும் வளர்ந்து வருகிறது எனச் சொல்கிறது அவுட்லுக் இதழின் ஒரு கட்டுரை.
அது அளிக்கும் புள்ளி விவரங்களின் படி பெருவாரியான தூண்டப்படாத தாக்குதல்கள்,அடிதடி சண்டைகளில்-சுமார் 65 % க்கும் அதிகமான,பதிவான வழக்குகளில்(Unprovoked assaults) ஐடி யாளர்களே இலக்காக இருந்திருக்கிறார்கள்.
இதற்கான காரணங்களாக அது பட்டியலிடுவது எட்டமுடியா நிலைக்குப் போய்விட்ட வீடு,வணிக இடத்துக்கான வாடகை நிலை,இதன் காரணமான நடுத்தர வாசியின் சிதைந்து விட்ட ‘அரையடி அகல சொந்தவீடு’ கனவு;எல்லாப் பொருள்களிலும் உள்ளாகியிருக்கும் விலை ஏற்றம்-இதற்கு ஐடி யாளர்கள் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது எனினும்,இந்தியா போன்ற ஒரு under developed தேசத்தில் ஒரு சாரார் எளிதாக சம்பாதிக்கும் 30000,40000 ஆன மாத சம்பளம்,நாட்டின் பொருளாதாரத்தில் பாய்ச்சப்படும் போது,சந்தையின் பண உள்வரவு அதிகமாகிறது,அது இயல்பான பணவீக்கத்திற்குக் காரணமாகிறது என்னும் நிலை;
இவை எல்லாமே ஓரளவு ஒத்துக் கொள்ளக் கூடிய வாதங்களாகவே இருக்கின்றன.
இன்போஃசிஸ் மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ஒரு சமூக ஆர்வலர் என்பது நமக்குத் தெரியும்,அவர் விரித்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி இதற்கெல்லாம் ஒரு உரைகல்.அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே பெங்களூருவில் ஒரு பூ விற்கும் பெண்மணி ஒரு ஐடி’யாளருக்கு பூ விற்கையில் அப்போதைய நிலவும் விலையை விட சுமார் 35 சதம் அதிகம் விலை சொல்லி விற்றிருக்கிறார்,சுதா அப் பூப் பெண்மணியிடம் ‘ஏனம்மா இப்படி அதிகவிலை சொல்கிறாய்’ எனக் கேட்க, ‘நீ சும்மா இரு,அவர் ஐடி கம்பெனியில் இருக்கிறார்(அந்த இளைஞர் தன் அலுவலக கழுத்துப் பட்டையை அணிந்திருந்திருக்கிறார்,பெரும்பாலான ஐடி’யாளர்கள் இதை பெருமையுடன் செய்கிறார்கள்),இவ்வளவு சம்பாதிக்கும் போது அவர்கள் கொடுக்கலாம்,உன் வேலையப் பார்த்துக் கொண்டு போ’ என்ற பதில் கிடைத்திருக்கிறது.
இந்த நிலை வந்ததற்கு,பெருவாரியான இதர சக சமூக மக்கள் ஐடி’யாளர்களை எதிரி மனோபாவம் கொண்டு பார்க்கும் நிலைக்கு,யார் காரணம்? உடனே,அவர்களின் சம்பாதிக்க இயலாத,பொறாமைதான் காரணம் என்று buck passing முறையில் நம்மில்(நானும் ஐடி துறையில்தான் இருக்கிறேன்)பலர் பதில் கூறலாம் எனில்,அது இன்னும் பொது சமூகத்திலிருந்து நம்மை வேறுபடுத்துமோ என்ற எண்ணம் தோன்றுவது தவிர்க்க இயலாததாயிருக்கிறது.

நான் பிறந்தது ஒரு கிராமும் இல்லாத,டவுனும் இல்லாத ஒரு இரண்டும்கெட்டான் ஊரில்.பள்ளிப் படிப்பெல்லாம் ஊரில்தான்,கிராமம் சார்ந்த கல்வி,இளங்கலை கணிதம் மதுரை விவேகானந்தாவிலும்,பட்டயக் கணக்காளர்-Chartered Accountant-கல்வி கோவையிலும் படித்தேன்.
90 களின் ஆரம்பத்தில் சிஏ முடித்தவர்கள் அப்போதைய நிலவரத்தில் கம்பெனிகளில் நல்ல வேலை கிடைத்தால் வருடம் 5 லட்சம் அல்லது 6 லட்சம் ஆண்டு வருமான அளவில் கிடைக்கும்,இது இந்திய அளவில் முதன்மைத் தர வரிசைகளில் வந்தால்.இல்லாதவர்கள் ஆனாலும் நல்ல கல்வித் தகுதியுடன் இருப்பவர்கள் சுமார் 4.5 லட்சம் அளவில் கிடைக்கும்.
பொறியாளர்கள் போன்ற மற்ற துறையாளர்கள், 90 களின் ஆரம்பத்தில் ரூ.4000 மும் அதற்குக் குறைந்த சம்பளத்திலும் வேலை செய்ய தயாராய் இருந்தார்கள்.
ஆனால் இப்போது ஒரு பொறியியல் பட்டம் பெற்றவர்,சரியான முன்னேற்பாட்டுடன் முயற்சி செய்தால் ஐடி துறையில் ஆரம்ப சம்பளம் 30000 வாங்க முடிகிறது.இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் 4 கம்பெனிகள் தாண்டுவதன் மூலம் 8 லட்சம் அளவுக்கு வந்து விடுகிறார்கள்.ஆனால் இன்றும் கல்லூரி விரிவுரையாளர்,கணக்காளர்,மருத்துவர் என அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் இந்தவித வேகமான சம்பாத்திய வழிமுறை இல்லை.இன்னும் மெட்ரோ தவிர்த்த மற்ற ஊர்களில் நகர்களில் சாதாரண மக்களின் நித்த வருமானம் ரூ200 க்குள் இருப்பது சாதாரணம்.

இந்த வேகமான,எளிதான சம்பாத்தியமே ஐடி’யாளர்களின் சமூகம் சார்ந்த பார்வைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறதோ என்பதும் என் எண்ணம்.

இந்த எளிதான பணம் வாழ்க்கையின் சகல திக்குகளையும் உரசிப் பார்க்கும் சோதனை மனோபவத்தை அளிக்கிறது;பெரும்பாலான ஐடி’யாளர்கள் வேலையின் பொருட்டு பெற்றோரை விட்டு தள்ளி வசிக்கும் இன்றைய சூழ்நிலையில் ‘எதையும் ஒருமுறை’ முயற்சித்துப் பார்க்கும் இளமை மனோபாவம் எந்தவித கட்டுறுத்தல்களோ,தடுமாற்றமோ இன்றி Pub, Party சார்ந்த வாழ்க்கைச் சூழலுக்கு எளிதாக மாறிவிடுகிறது.
மத்திய 90 களில் நான் கணக்காளராக பணி புரிந்த நாட்களில் நான் தங்கியிருந்த மேன்சன் என்றழைக்கப்படுகிற விடுதிகளின் 20 அறைகளில் மிஞ்சினால் 2 அறைகாரர்கள் பீர் மட்டும் திரவ வகைக் காரர்களாக இருப்பார்கள்;ஆனால் இன்றைய நிலை அப்படியா என எண்ணினால் நமக்குக் கிடைப்பது ஆயாசமே.
அது அவரவர் உரிமை,அவர் சம்பாத்தியம் அவர் குடிக்கிறார்,அவரால் சமூகத் தொந்தரவு ஏதும் இல்லை என வாதிடலாம்; ஆயினும் வாழ்வின் விழுமியங்கள் எனக் கருதப்பட்ட விதயங்கள் இன்று எளிதாய் புறந்தள்ளப் படுகின்றன என்பது கண்கூடு;இதன் பிற் சேர்க்கையாக எவையெல்லாம் நல்லன என நாம் வாழ்ந்த சமூகம் சொன்னதோ அதையெல்லாம் ‘ஹெ’ என எள்ளும் ஒரு பார்வையும் வந்தாயிற்று,சமீபத்திய ஒரு பதிவின் பின்னூட்டங்களைப் பார்த்த போது திருமுறைகள் பற்றிய சில பதிவாளர்களின் எள்ளல் விமரிசனங்கள் கண்ணில் பட்டன;இந்தவகை விமர்சனங்கள், திருமுறைகள் பற்றிய முழுமையான அறிவும் அந்த காலகட்ட வரலாறு,சமூகப் நிலைகள் பற்றிய முழுமையான அறிவுக்கு அப்புறம் வந்தால் அது ஓரளவு புரிந்துகொள்ளப் பட வேண்டியதே;எதையுமே முழுக்க அறியாமல் வரும் இவ்வகை விமர்சனங்களின் காரணம் மேற்சொன்ன எள்ளல் மனோபாவமே,வாழ்வை-அதாவது பிழைக்கும் வழியை-வசப்படுத்திவிட்ட எனக்கு எல்லாம் எளிதானவையே என்ற ஒரு பார்வையின் விளைவு.
நம்மைச் சுற்றிய சமூகத்தில் இன்னும் ஒரு நாளில் 50 ரூபாய் சம்பாதிக்க நாள் முழுதும் மண் வெட்டும் தொழிலாளியும் இருக்கிறார்,அவரையும் உள்ளடக்கியதுதான் இந்த சமுதாயம்,நாமும் அந்த சமுதாயத்தின் ஒரு அங்கமே என்ற எண்ணம் நம்மில் வருவதையும் அந்த எள்ளல் மனோபாவமே தடுக்கிறது.
இதன் ஒட்டு மொத்த தாக்கம் நிச்சயம் சமூக வாழ்வில் இருக்கும்,நாம் நம்ப மறுத்தாலும் கூட !

26 comments:

  1. Posted by அறிவன் /#11802717200764379909/ at

    உங்கள் வலைப்பதிவில் உங்கள் பிலாகர் எண்ணை போடச்சொன்னது யார் ?

    டோண்டு ராகவன் அப்படி போடுவார்.

    நிறைய பேர் அதை வெறுக்கிறார்கள்.

    நீங்கள் அதை எடுத்துவிடுவது நல்லது.

    பெயர் மட்டும் இருந்தால் தான் உங்களை ஒரு வலைப்பதிவர் என்று நம்புவார்கள்.

    இல்லை என்றால் டோண்டு அவர்கள் உருவாக்கிய போலிப்பதிவு என்றே நினைப்பார்கள்

    ReplyDelete
  2. அநானி,
    வருகைக்கு நன்றி.
    ராகவன் அப்படிப் போடுகிறார் என்பதாலேயே நான் அதை எடுத்துவிட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்?
    அவரின் கருத்துக்கள் அவரோடு,எனது படைப்புக்கள்,எண்ணங்கள் என்னோடு! எனது கருத்துக்களை கருத்துக்களுக்காக மட்டுமே பார்ப்போர்,படிக்க வேண்டும் என நினைப்பவன் நான்.
    மற்றபடி பிளாகர் எண்ணைப் போடுவதின் வசதி எனக்குப் பிடித்திருப்பதால் போடுகிறேன்.
    இந்நிலையில் போனால்,ராகவன் உபயோகிக்கும் டெம்ப்ளேட்டை நீங்கள் உபயோகிக்காதீர்கள்,ராகவன் உபயோகிக்கும் பிளாகரில் நீங்கள் எழுதாதீர்கள் என்றெல்லாம் கருத்துக்கள் வரும்.
    மற்றபடி பிளாகர் எண்ணைப் போடுவதாலேயே என்னை ராகவன் என் நினைக்கும் அளவுக்குப் பதிவர்கள் முட்டாள்கள் அல்ல என்றே நான் நம்புகிறேன்.

    ReplyDelete
  3. //ராகவன் அப்படிப் போடுகிறார் என்பதாலேயே நான் அதை எடுத்துவிட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்?
    அவரின் கருத்துக்கள் அவரோடு,எனது படைப்புக்கள்,எண்ணங்கள் என்னோடு! எனது கருத்துக்களை கருத்துக்களுக்காக மட்டுமே பார்ப்போர்,படிக்க வேண்டும் என நினைப்பவன் நான்.
    மற்றபடி பிளாகர் எண்ணைப் போடுவதின் வசதி எனக்குப் பிடித்திருப்பதால் போடுகிறேன்.
    இந்நிலையில் போனால்,ராகவன் உபயோகிக்கும் டெம்ப்ளேட்டை நீங்கள் உபயோகிக்காதீர்கள்,ராகவன் உபயோகிக்கும் பிளாகரில் நீங்கள் எழுதாதீர்கள் என்றெல்லாம் கருத்துக்கள் வரும்.
    மற்றபடி பிளாகர் எண்ணைப் போடுவதாலேயே என்னை ராகவன் என் நினைக்கும் அளவுக்குப் பதிவர்கள் முட்டாள்கள் அல்ல என்றே நான் நம்புகிறேன்.//

    நச்...

    ReplyDelete
  4. சீனு,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. Really thoughtful and great writeup. Let all IT members read this

    ReplyDelete
  6. சிங்கப்பூர் வடுவூர் குமார் பாப்பார கம்னாட்டிதான் இந்த பதிவை எழுதுவது என்று எல்லாருக்கும் தெரியும்!

    ReplyDelete
  7. வடுவூர் குமாருக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்பு?
    கருத்தியலுக்கு வழியற்ற ஒரு பெட்டைக் கம்னாட்டியின் பின்னூட்டத்தை எவரும் பொருட்படுத்த வேண்டாம் என் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. படிப்பவன்,பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  9. சிறப்பானதொரு கட்டுரை. பாராட்டுகள்.
    உங்கள் பின்னுட்ட பதிலில் ஒருவரை பெட்டை கம்னாட்டி என திட்டுகிறீர்கள் 'மானுடக் காதலன்' என்று சொல்லிக்கொண்டு :) ஆண் பெண் சமம் என பேசும் இக்காலத்தில் இப்படி ஒரு பிற்போக்குத்தனம்.

    ReplyDelete
  10. சிந்திப்பவன்,கருத்துக்கு நன்றி.
    உண்மையில் மானுடத்தை நேசித்ததால்தான் ஒரு பொய்மையைக் கண்டு இகழ்ந்தேன்.ஆனாலும் ஒளிந்து கொண்டு,சம்பந்தமில்லாத ஒருவரைப் பற்றிய,கேவலக் கருத்தை கூறுபவன் பேடிதான்.
    மேலும் பெட்டை என்ற சொல் பெண்மையை இகழும் பயன்பாட்டில் இங்கு கையாளப்படவில்லை என்பதை சிறிது சிந்தித்தாலேயே உணர்வீர்கள் என நம்புகிறேன்.
    இன்னும் சமூகத்தில் சிலருக்கு அவர்களின் மொழியில்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  11. /உண்மையில் மானுடத்தை நேசித்ததால்தான் ஒரு பொய்மையைக் கண்டு இகழ்ந்தேன்./
    பொய்மையை இகழுங்கள். ஆனால், உங்கள் உத்தி 'மானுடத்திற்கு' எதிரானது.
    /மேலும் பெட்டை என்ற சொல் பெண்மையை இகழும் பயன்பாட்டில் இங்கு கையாளப்படவில்லை என்பதை சிறிது சிந்தித்தாலேயே உணர்வீர்கள் என நம்புகிறேன்./
    என் சிந்தனைக்கு எட்டவில்லை. நீங்களே சொல்லுங்கள்.

    ReplyDelete
  12. சிந்திப்பவன்,
    மானுடம் வெல்லும் என்று சொன்ன கம்பனும் கூட வாலி,இராவணன் போன்ற கதாபாத்திரங்களின் முடிவைச் சித்தரித்த விதம்,'மானுடத்'தின் வரையறையைச் சொல்லும்.நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன்,நீ மானுடத்தை நேசிப்பவன்,என்னை எதுவும் கூறக்கூடாது என வருபவர்கள் களத்திலேயே நிற்கவொண்டாது நீக்கப் பட வேண்டியவர்கள் என்பது என் துணிபு.
    பெண்மையைப் போற்றுதும்' என்ற சொல்லாடலும்,பேடியைத் தூற்றுதும் என்ற சொல்லாடலும் ஒரே வகையில் பெண்மையைக் குறிக்கிறது என்று நீங்கள் 'சிந்தித்தால்' நான் இதை பற்றி சொல்ல ஒன்றுமில்லை.
    இவ்வளவு வாதங்களையும் உங்கள் பதிவர் பெயரில் நீங்கள் நிகழ்த்தியிருந்தால்,உங்கள் வாதத்திற்கு சிறிதேனும் உண்மைத் தன்மைவரும்.
    மற்றபடி பதிவின் கருத்துக்கு தொடர்பில்லாத,யாரோ முகமற்ற பேடியின் சொல்லுக்கு இவ்வளவு வாதப் பிரதிவாதங்கள் தேவையற்றது என்பது என் எண்ணம் ஆகையால்,பதிவின் கருத்து குறித்த பின்னூட்டங்கள் மட்டுமே இனி வெளியாகும் என அன்புடன் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  13. மின்மடலில் சொக்கலிங்கம்:

    Congratulations for getting your writing published in a magazine.
    If it is the first time you are published, then double congrats!

    I've been reading your blogs quite regularly and I think you have
    all the talent to shine as a writer. Keep it up ..

    Regards,

    Chocka

    ReplyDelete
  14. மின்மடலில் எம்.ஆர்.லக்ஷ்மி நரசிம்மன்:

    Dear Arivu,

    Thanks for the note. I did read this and other articles you have posted since your return from India. As always, a great job! Some articles kindled my thoughts and some kindled my heart (the one about life & parenting involving your grandpa). I have set up the automatic feed for your blogspot and regularly read your articles (and my wife too). I missed your writing while you were away in India. My wife too has become a good fan of yours.

    Hope you and your wife are doing well.

    Take care & Best Regards,

    M.R.Lakshmi Narasimhan

    ReplyDelete
  15. மின்மடலில் பாண்டித்துரை:

    hi அறிவன்,

    இந்தவார பதிப்பில் திண்ணையில் தங்களின் கட்டுரை படிக்கநேர்ந்தது. நன்றாக இருந்தது

    தோழமையுடன்
    பாண்டித்துரை
    சிங்கப்பூர்.
    www.pandiidurai.wordpress.com

    ReplyDelete
  16. The post "IT Jobbers Viewpoint - Is it Correct or Wrong ?" makes a good reading of the current challenges in the society due to the increase in the number of people taking the jobs in the information technology industry. The topic strives to put across the need for the IT persons to shed the superiority complex and to consider themselves as a part and parcel of the society in a more humble manner. But this notion is the need of the hour not only from the IT persons but also from the people in other proffessions. Frst of all, it should be understood that the quantum leap in the IT jobs in India in the last few years was due to the relocation of these jobs from countries such as US and Europe. Before the current trend, most of the IT persons, if not all, have been going overseas and remitting their earnings to India. But currently, the same IT persons get employed and paid in our country itself. So as it is, there is not much change in the money circulation in India due to the salaries earned by the IT persons. On the otherhand, since the IT companies or offices have relocated to India, the need for the office space and accomadation of the executives have gone up leading to a hike in the land prices as well as the rentals. But as a spin-off of relocation of these IT companies, employment in the service sector such as hotel, entertaintment, transportation have increased thus causing a good earnings for the non-IT people in these sectors also. So the arguement that the high salaries of the IT persons is the cause for inflation does not hold good. Now-a-days banks are giving loans with not much difficulty and also see the share market, a lot of non-IT people are earning very well. Who said the teachers do not earn a high salary? Take the case of Mumbai or Delhi, don't the teachers there earn a lot from tuitions apart from the regular jobs? Similary the people in the other proffessions also earn a very good salary now-a-days. It is true that in '90s the starting salary for a engineer was about Rs.3000 but in the current days, it is about Rs.8000 to 9000. But why to blame the IT persons if they earn a higher salary than an engineer or an accountant? It is not the fault of any person to join a IT company. The salary which they get matches for the stress and challenges they face in the employment. Also to enter a IT job, people have to go through specialised training for which they need to pay a high fee from their pockets. Additionally unlike other jobs, IT employees cannot sit back and just relax once they enter any job. They have to be a life-long learners to face the changing technologies in the IT field. With the high salary which they earn, they also are assessed for high income taxes.

    If we dwell at the illustration mentioned in the post that a flower vendor was over-charging a person employed in IT company, don't you find it as unfair and discriminatory that the prices not fixed for the goods or services but vary from customer to customer. Same is the case in Chennai. Locals there say that the auto-rickshaw drivers demand high fare because the persons from IT companies just pay whatever fare the auto-rickshaw drivers demand. But is it the fault of the IT persons and due to not following the approved or metered fares by the locals. Most of the locals themselves do not ask the drivers to put-on the fare meter but bargain for the pre-fixed fare while taking a auto-ride.

    If the persons from the IT industries booze, then I do not think it is because of the over-supply of money. Rather it is due to the easy availability of liquor now-a-days compared to a decade ago. Do you think that Tasmac is running a good business only due to the IT persons? What about in Kerala? Even before the IT buzz, booze was easily available there. Even though IT persons may be earning a good salary but no one will throw away the hard-earned money just like that.

    Let the debate contine.........

    ReplyDelete
  17. KK,
    Thanks for a lengthy analysing comment.
    If you read carefully,I am just dwelling on the mindset of the people working in IT sector(including me),that we need to remind ourselves that we are part and parcel of the bigger picture as for as the soceity is concerned.
    It is also VERY TRUE THAT IT SECTOR is making GOOD MONEY EFFORTLESSLY COMPARED TO THE EFFORT LEVEL OF OTHER SECTOR PEOPLE TO EARN THE SAME MONEY.
    This is a fact,I accept myself even at personal level.
    This easy financial growth,titls our minds to approach every aspects as life easily,including buying things effortlessly without caring for their real value,boozing & everything.
    If there is a scenario comes in India that there is NO MORE NEED OF PEOPLE WITH IT KNOWLEDGE AT GLOBAL FORUM,then there will be big social unrest & confusion will arise because of the shock that the IT sector people will be thurst on,for sure.
    MY PRIMARY AIM OF IS TO HIGHLIGHT THAT POINT OF 'ATTITUDE'.

    ReplyDelete
  18. Kuppan says:

    IT ITES BPO jobs- Youth get Rs.20000 per month starting salary

    I will install Tamil font ASAP.

    There is a wrong perspectivbe that call centre/Software staff get Rs.20000 per month as starting salary and within 2 years they reach salary of Rs.50000 per month.

    You people do not see the other side of the coin. ITES staff have to work 12 to 14 hours in a day. There is no 9 to 5 job., Any time any day client will send mail and ask output within 2 minutes. (Like Baba film, IPPO Raamasay, IPPO IPPO Ingaye they want deliverables.)

    The client or boss will fire, irrirtate, abuse like anything.

    There is no line of management or unity of command. The boss will bypass you and your assistants will by pass you.

    For all these things you have to be quiet and silent observer.

    There is no standardised company policy or procedure like a manufacturing company. In IT, ITES industry everyhting is individual based and need based.

    Less qualified and inefficient fellow may be paid more than you.


    All of a sudden you may be asked to report to a boss who will be agewise, experience wise, qualification wise junior to you, but you have to bear all those things.

    All these nonsenses are there. To adjust these things only you are compensated with 5 digit salary.


    Nandrikaludan

    Kuppan-2007

    ReplyDelete
  19. Kuppan,
    Anyway,at the end of all you get a 5 digit salary.
    My aim was to point out the apprehesive change in the mind sets of IT sector people because of that 5 digit salary.
    I am NOT saying,they SHOULD NOT be paid 5 digit salary...
    Hope you understand the difference...

    ReplyDelete
  20. After so many postings, Arivan has come to the conclusion that the change in the mindset of the IT sector people is apprehensive. It is true that the rise in the income levels will bring change in mindsets but whether the change is heading for better or worse will depend more on the society than the individuals. If the society has got good customs and traditions, then whatever the wealth a person possesses, will not change his/her mindset for worse. But look at the present scenario. The person who is corrupt is considered wealthy and a person who is anti-social is considered mighty. How many people are ready to take vow that they will not support corruption in any form ?
    The first posting mentioned that even for a hard day's labour, a manual worker gets about 50 rupees only. But is it not a concern for all of us that even after 60 years of independence that we are not able to eradicate the poverty ?

    ReplyDelete
  21. /////////After so many postings, Arivan has come to the conclusion that the change in the mindset of the IT sector people is apprehensive.//////////

    Not after so many postings,but the basic idea of this post is on the mindsent because of the easy earning of IT sector people.
    You(and many others in IT sector also !) see the soceity as something different from you and you say since soceity is bad,some X or Y from IT sector will behave in such a way.
    I see myself as part & parcel of the soceity and that makes the difference between views and thought process !
    Apart from that, I do accept and infact hightlighted in my previous posts as well about stand against corruption,political gundaism etc...

    ReplyDelete
  22. அறிவன்..

    சமுதாய எற்றத்தாழ்வுகள் பற்றிய என் கருத்து.

    நாட்டில் உள்ள அனைத்து ஏற்றத்தாழ்வும் எப்படி ஒரே தொழில்துறை போக்க முடியும்?. முன்னேற்றம் என்பது அனைவருக்கும் ஒரே சமயத்தில் ஏற்பட முடியாது. சில வருடங்கள் இந்த ஏற்றத்தாழ்வு இருக்கும், இது தவிர்க்க முடியாதது என்பது என் கருத்து.

    ReplyDelete
  23. மேலும் இன்று ITல் மொத்தமாக பணி புரிபவர்கள் 20 லட்சம் பேர்தான்.

    இவர்களால் எப்படி 114 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் விலைவாசி ஏறும்.

    மற்ற தொழில்களிலும் இன்று சம்பளம் அதிகம்தானே..

    ReplyDelete
  24. IT யில் பணிபுரிபவர்களால் தான் விலைவாசி ஏற்றம் என்றும்
    குறை கூறுகின்றன
    இங்கு குறை கூறுபவர்களுக்கு ஒரு கேள்வி
    இன்று சாமானிய மக்களுக்கும் IT மக்களுக்கும் உள்ள சம்பள விகிதம்
    அதிகமாக உள்ளது இதே வித்தியாசம் 80, 90 களில் இருந்தது அரசாங்கத்தில்
    வேலை பார்ப்பவர்களுக்கும் இருந்து வந்தன
    ஆனால் அப்பொழுது வராத விலை ஏற்றம் இப்பொழுது ஏன் வந்தது
    அப்பொழுது இருந்த அரசாங்கம் அரசாங்க ஊழியர்களுக்காக தனியாக
    குடியுருப்பு அமைத்து குடுத்தன ஒரு பெரிய தொழிற்சாலை உறவாக்கும் பொழுது
    அதற்கென தனியாக குடியுருப்புகளை உருவாக்கியது
    அதனால் விலைவாசி அந்த பகுதிகளில் மட்டும் உயர்ந்து தான் இருந்தது
    ஆனால் இன்று எந்த கம்பெனியும் குடியுருப்பு பகுதிகளை உருவாக்கவில்லை
    அரசாங்கமும் அதற்கென எந்த திட்டமோ, நடவடிக்கையோ, எண்ணமோ
    இருப்பதாக தெரியவில்லை
    விலைவாசி ஏற்றத்திற்கு முழு முதல் காரணமும் அரசாங்கம் தான்

    ReplyDelete
  25. வழிப்போக்கன்,வளர் வருகை/கருத்துக்கு நன்றி.

    நான் இங்கு குறிப்பிட்டது மனப்பான்மையைத் தானே தவிர அவர்களில் சம்பாத்தியத்தை அல்ல.
    ஆம் நீங்கள் சுட்டுவது போல அரசின் பங்கும் இதில் இருக்கிறது.
    ஆனால் சமூகத்தில் மற்ற அங்கத்தினரோடு உறவாடுவது நாம் தானே தவிர அரசு அல்ல.

    ஐடி'யாளர்கள் எளிதான,இயல்பான வாழ்க்கைக்குள் இருக்கும் வரை சமூகமும் அவரைக் கூர்ந்து கவனிப்பதில்லை.

    அதிகப் பணம் சமூக அர்ரொகன்ஸை கொண்டுவரும் போது,சமூகமும் அதே விதமாகவே அவரைப் பார்க்கிறது.

    இந்த நினைவு அடிமனதில் நமக்கு இருந்து கொண்டேயிருக்க வேண்டும் !

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...