குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Thursday, March 27, 2008

50.டாடாவும்,சிதம்பரமும் - கமான் இந்தியா !!!!!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற லீ குவான் யூ கொள்கை அரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப.சி. நல்ல அடர் நீல நிறத்திலான ‘சூட்’ உடையில் காணப்பட்டார்.எப்போதும் வெள்ளை வேட்டி,சட்டையில் பார்த்துப் பழக்கமான கண்களுக்கு வித்தியாசமான உடையில் நேர்த்தியாகக் காணப்பட்டார்.

அவரின் பேச்சும் எப்போதும் போலவே நேர்த்தியுடன் அமைந்தது.

• இந்தியா இன்னும் குறைந்தது 20 ஆண்டுகளுக்காவது 9-10 சதவீத வளர்ச்சியில் இருந்தால் இந்தியாவில் ஏழ்மை என்பது ‘பொய்யாய்,பழங்கதையாய்' போகும் வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.
• பின்னொரு நாள் இன்னொரு இந்திய நிதி அமைச்சர் சிங்கப்பூரில் இவ்விதமான இந்தியாவில் வறுமை என்பது வரலாற்றில் மட்டுமே’ என்னும் நற்செய்தியைச் சொல்வார் என்றார்.
• மக்களுக்கு அளிக்கப்படும் கவர்ச்சித்-விவசாயிகள் கடன் தள்ளூபடி போன்ற- திட்டங்கள்,வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது என்றார்.
• பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து சமூகத்துக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டுவதன் அவசியத்தையும்,அவ்வாறு இருக்க கவர்ச்சித் திட்டங்களும் உதவக் கூடும் என்றும் சொன்னார்.
• வளர்ச்சி என்பது ஒரு முடிவல்ல,அது நாம் அடைய நினைக்கும் இலக்கை நோக்கிய ஒரு முயற்சியின் விளைவு என்றார்.
• Pro Americcan பார்வை உள்ளவர் என்றே பரவலாக அறியப்பட்ட ப.சி. அமெரிக்கா எரிபொருள் தேவைகளுக்காக பெருமளவு உணவுப் பொருள்களை-முக்கியமாக சோளம்- அமெரிக்கா வீணாக்குவதாகவும்,இதனால் உலக அளவில் உணவுப்பொருள் விலையேற்றம் தூண்டப்படுகிறது எனவும் குறை கண்டார்;மேலும் அமெரிக்க ஃபெடரல் வங்கி,நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வசூலில் இவ்வளவு நாள் மெத்தனமாக இருந்ததின் தாக்கத்தை இப்போது அனுபவிக்க்கிறது என்றும் கூறிய அவர்,அதற்கான தீர்வாக அவர் பார்வை என்ன எனக் கூறுவார் என்ற சுவாரசியமான எதிர்பார்ப்பை பொய்யாக்கினார்.
• ப.சி.இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிக்கையில் ஒரு பத்தியாளராக இருந்து சுமார் இரண்டாண்டுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான A view from outside- Why Good Economics Works for Everyone என்ற புத்தக வெளியீட்டுக்குத்தான் அவர் வந்திருந்தார்.
• அவர் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் எழுதிய இரண்டு ஆண்டுகளில் பத்திக்கான குறித்த நேரத்தை இரண்டு முறை மட்டுமே தவறியதாகக் குறிப்பிட்டார்.அவரின் முன்பொரு முறை அமெரிக்கப் பயணத்தைப் பதிவு செய்த ஒரு பதிவர்,அமெரிக்காவில் ஊரை சுற்றிப் பார்க்க அழைத்த போது,புன்னகையுடன் மறுத்து,’எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு பத்தி கொடுக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது,அதை எழுத வேண்டும்’ என மறுத்துவிட்டதாக நினைவு கூர்ந்திருந்தார்;ஒருவேளை பதிவரின் அந்த விருந்தோம்பலை ஏற்றிருந்தால், ‘இதுவரை மூன்றுமுறை மட்டுமே...’ எனக் கூறியிருப்பார் என நினைக்கிறேன் !!!!


**************************************************************இந்தியாவின் டாடா போட்டார்ஸ் நிறுவனம் போஃர்ட் நிறுவனத்தின் மேலாண்மையில் இருக்கும் லாண்ட்ரோவர் மற்றும் ஜாகுவார் கார் நிறுவனங்களை (JLR-Marquees) வாங்கி இருக்கிறது.இந்த பிரிட்டானிய நிறுவனங்கள் சுமார் 123 ஆண்டு கால வரலாற்றை உடையவை !

இரு நாடகளுக்கு முன்பே இந்த செய்தி ஊடகங்களில் வந்த போதும் போஃர்ட் நிறுவனம் இதனை உறுதி செய்வதை இன்றுவரை நிறுத்தி வைத்தது.இன்று செய்தி ஊடகங்கள் இதனை உறுதி செய்திருக்கின்றன.

சமீப காலங்களில் இந்திய கார்பொரேட் நிறுவனங்கள் உலக அளவில் பல பெயர் பெற்ற நிறுவனங்களை வாங்க ஆரம்பித்திருப்பது,உலக அளவில் இந்தியப் பொருளாதாரத்தின் ‘தவிர்க்க இயலா தன்மை’யை குறிப்பிடுவதாகக் கருதலாம்.இதற்கு முதல் சுழி போட்டவர் ஆர்சிலார்’ஐ வாங்கிய மித்தல்.பின்னர் டாடா நிறுவனமும் இந்த வகை Brand acquirement ல் இறங்கி கோரஸ்(ஸ்டீல்) மற்றும் டெட்லீ டீ(தேனீர்) நிறுவனங்களை வாங்கியது;கோவை மகாலிங்கம் குழும நிறுவனம் கூட ஒரு ஐரோப்பிய நிறுவனத்தை வாங்கியது.ரிலையன்ஸ் நிறுவனம் ஐரோப்பிய Giant ஆன கார்ஃபோர் சில்லரை விற்பனைக் குழுமத்தை வாங்கவோ அல்லது அதனுடன் கூட்டாக இந்திய சந்தையில் சில்லரை வணிகத்தை சந்தைப் படுத்தவோ முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.டாடாவின் ஜாகுவார் மற்றும் லாண்ட்ரோவர் நிறுவனங்களின் கைக்கொள்கை-acquirement-இந்த வரிசையில் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் மகிந்த்ரா நிறுவனமும் இருந்ததாகவும் கடைசி நேரத்தில் போஃர்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டமைப்பு டாடா நிறுவனத்தை முன்னிறுத்தியதால் டாடா நிறுவனம் இந்தப் போட்டியில் முந்தியதாகவும் பிற்சேர்க்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரிவர்த்தனை 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலானது,சுமாராக 10000 கோடி ரூபாய்கள் ! (யாருப்பா அங்க பெருமூச்சு விட்றது !!!!!!????) ஆயினும் JLR என்றழைக்கப்படுகிற ஜாகுவார்,லாண்ட்ரோவர் நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தை போஃர்ட் நிறுவனத்துக்கு ஏற்படுத்துகின்றன,என்பதில் இதில் உள்ளமைந்த செய்தி.எனில் டாடா நிறுவனம் ஏன் இப்படி நஷ்டத்தில் இயங்கும் இரணடு பிராண்டுகளை வாங்குகிறது?

பதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பரவலாக்கத்தில் – Product Diversification – ல் இருக்கிறது.இப்போது டாடா நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் விலையுள்ள ‘நானோ’ வையும் விற்கும்; சுமார் ஒரு கோடி ரூபாய் விலையுள்ள ‘ஜாகுவார்’ ஐயும் விற்கும். இனி கார்கள் சந்தையில் டாடாவின் பெயர் தவிர்க்க இயலாத ஒரு பெயராக உலக அளவில் மாறலாம்,டாடா நிறுவனம் இந்த JLR-Marquees நிறுவனங்களையும் லாப நோக்கோடு நடத்திக் காட்ட முடிந்தால் !

இவ்விதமான கைக்கொள்ளும் நிகழ்வுகளால் இரண்டு விதமான நன்மைகள் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன.
உற்பத்தித் துறையின் இவ்விதமான உலகளாவிய நிறுவனங்களில் உத்திகள்,நேர்த்திகள் இந்திய நிறுவனங்களுள்ளும் நுழைய இது ஒரு வாய்ப்பு.

இரண்டாவது இவ்வகையான உலகளாவிய புகழ்வாய்ந்த பெயர்களுக்கான சந்தையில் இந்திய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளையும் சந்தைப்படுத்தலாம்.
இரண்டுவிதமான அணுகுமுறைகளும் இந்திய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உரமிடுபவை.

Come on India !!!!!!!

11 comments:

 1. "ஏண்டா உங்க கேனப் பரதேசி,பெயரிலியும்தானேடா சட்டைய...
  (செந்தழல் ரவி)"

  மேற்கண்ட ஒரு பின்னூட்டம் செந்தழல் ரவி என்ற பெயருடனும் ப்ளாகர் எண் blogID=6558234105786219449 என்ற விவரத்துடனும் ,என்னுடைய இந்தப்பதிவுக்கு தொடர்பில்லாமல்,இங்கு வந்திருக்கிறது.இது பெயரிலி என்ற நபரை விமர்சித்திருப்பதோடு,என்னையும் கீழ்த்தர வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறது.
  என்னை சந்திக்க வேண்டும் எனப் பின்னூட்டமிட்ட அந்த அரை வேக்காட்டு அடிமுட்டாள் விரும்பினால்,எங்கும்,எத் தளத்திலும்,எவ் விதத்திலும் சந்திக்கவும்,முகரையைப் பேர்க்கும் வலிவுடனும்,வசதியுடனும் தயாராகவே இருக்கிறேன்....இந்த நபர் உண்மையில் செந்தழல் ரவிதானா என்ற சந்தேகமும் எனக்கிருக்கிறது !

  இதுபோன்ற நபர்கள்தான் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற என் கருத்தும் உறுதியாகிறது.

  ReplyDelete
 2. உன்னோட சொந்த ஊரு.....
  Anonymous)

  இன்னொரு முதுகெலும்பில்லாத அஃறினை ஜந்து சிறிது வாந்தி எடுத்துச் சென்றிருக்கிறது..

  இந்த cleaning work இந்த ஒரு பின்னூட்டத்திற்கு மட்டுமே,எவர் இவ்வித பின்னூட்டமிடுகிறார் என்ற கண்காணிப்புக்கு உதவுகின்ற வகையில் இது ஒரு பயன்பாடே.

  தவிரவும் அவை மேற்குறிப்பிட்ட பதிவிற்கு சிறிதும் தொடர்பில்லாதவை,எனவே இனிமேலான இவ்வித பின்னூட்ட வாந்திகள் நேரடியாக குப்பையில் தள்ளப்படும்!


  என்னுடைய நோக்கு,நபர்களின் பாற்பட்டதல்ல,ஆபாசமாக எழுதும் எந்த ஒரு நபரும் நீக்கப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு !

  ReplyDelete
 3. நன்றி அதிஷா,திருத்தி விட்டேன்..
  வருகைக்கும் சுட்டியதற்கும் நன்றி !

  ReplyDelete
 4. The only gracious way to accept an insult is to ignore it - Jewish Proverb

  ReplyDelete
 5. Hi Anony,
  That hold good only for insults;and these pertains to close quarters like within family.
  But what we see here in blog world is vandalism,which should be curbed by all means with available resources and tools.

  ReplyDelete
 6. Lakshmi Narasimhan MunugoorMar 29, 2008, 9:16:00 AM

  Thanks for posting Chidambaram's speech in Singapore.

  Be it this speech or the recent budget, I don't think Chidambaram is doing justice to his intellect or is reflecting his vision for India. This budget has been hijacked by political compulsions of the current government rather than investing in the future of India.

  Chidambaram is absolutely right in stating that certain sectors need populist measures in order for a fair distribution of wealth. The Rs.60,000 crore relief announced in the budget - if truly implemented fairly - will be a great help for the farmers. That takes care of the problem of today; what does the budget do for the problem of tomorrow? If we don't correct the fundamental issues which are causing the agricultural sector to bleed, the problems of today will recur tomorrow, day-after, next week, next month, next year and forever.

  If anyone wants to really address the concerns of the farming community, they need to invest in the future of farming. We need to invest in modernizing agriculture in India. We need to bring in technologies that will help the farmers. We need to drastically alter water management in the agricultural sector. We need to get away from chemical farming that is ruining the health of the soil, health of the people and the wealth of the farmers and move en masse to organic farming.

  Meaningful farm subsidies should be continued and increased even if it means violation of WTO commitments. We need a truly self-sustainable, self-sufficient agricultural sector for the country if the country needs to flourish. No amount of income from the software industry and all other industries will be of any good if we cannot make enough food grains for the people. Once we start depending on other countries for food grains, that's the worst weapon which can be used to control and blackmail us. Complaining that US is causing increase in the price of food grains worldwide is nothing more than a farce.

  Software industry will come and go; automobile industry will come and go; BPO outsourcing will come and go; manufacturing industry will come and go. If agricultural sector goes, India is gone.

  Geniuses who want to invest thousands of crores in the Sethu project that has meager or no benefits to the society should rather spend that money on interlinking rivers and reservoirs which will not only help farming, it will also help in flood-control, employment generation, energy independence, enhanced interstate relationship, fairer distribution of wealth, better social parity and a lot more. Continual poaching of local water banks in the name of development has already ruined the livelihood of crores of people and has changed the fundamental character of our country. We cannot continue this trend and expect India to be prosperous in the coming decades. Prosperity that leaves behind major portion of the society impoverished is not what we need.

  We want the visionaries in Mr. Chidambaram and Mr. Manmohan Singh in action. We need their vision translated into action with political will and leadership. If they show true leadership, they will remain in the history of India as true reformers. If they continue to restrict themselves to political correctness and compulsions, they will be just one among the many ‘leaders’ who will neither have a place in the hearts of Indians nor have a place in the history of India.

  ReplyDelete
 7. hey that vulgar anony
  is moorthi so called psycho
  moorthi aka poli dondu

  ravi is not involved in this
  ok

  ReplyDelete
 8. மிக நீண்ட கருத்துக்கு நன்றி லக்ஷ்மி நரசிம்மன்.
  இப்போது எழுதிக் கொண்டிருக்கும் என்னுடைய அடுத்த பதிவு உன்னுடைய இந்த கருத்தின் சாரத்தையும் அலசுவதாக அமைகிறது,படித்து விட்டு கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 9. அனானி அன்பரே(நீங்கள் அனானி முகத்தில் வந்த ரவியாக இருந்திருந்தாலும் சரி !)
  இந்த போலி விவகாரத்தில் எனக்கு சிறிதும் தொடர்பில்லை,எனவே போலி என்னுடைய பதிவுக்கு வரும் வாய்ப்புகள் இல்லை.
  ரவியும் என்னுடைய சில பதிவுகளில் பாராட்டி பின்னூட்ட பதிவு செய்திருப்பதாகவே எனக்கு நினைவிருக்கிறது,ஆகையினாலேயெ அது ரவிதானா என்ற ஐயம் எனக்கு இருக்கிறது எனத் தெரிவித்திருந்தேன்.

  இருப்பினும் நீங்கள் சொல்வதைக் கருத்தில் கொண்டிருக்கிறேன்.
  மேலும் சில விதயங்களை சோதித்துக் கொண்டிருக்கிறேன்.

  எப்படியாயினும் விளக்கத்திற்கு நன்றி.

  ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • பறக்கும் தட்டு - ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்ட...
  1 week ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  3 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  1 year ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  1 year ago