குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Sunday, March 2, 2008

46.கீதா சாம்பசிவம் அவர்களே ! சிதம்பரம் கோவில் பற்றி !

சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் திருமுறை பாட தீட்சிதர்கள் தடை விதிப்பது பற்றி பல பதிவுகளில் நான் சுட்டியபோது,தீர்மானமாக பலமுறையும்,வருந்தி சிலமுறையும் அதனை மறுத்தார்.
இன்றைய தினமணியின் பின்வரும் செய்தியை அவருக்கு சுட்டுகிறேன்.

சிதம்பரம், மார்ச் 1: சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைச் செயலர் கோ.சந்தானம் பிப்.29ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார்.

திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகசாமி கடந்த 852005ல் தமிழில் தேவாரம் பாடச் சென்றபோது அவர் தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். பின்னர் தீட்சிதர்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை இணை ஆணையர் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார். பின்னர் சிவனடியார் ஆறுமுகசாமி அறநிலையத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார்.

அதன்மீது விசாரணை முடிவுற்று திருச்சிற்றம்பல மேடையில் நின்று பூஜை காலங்களை தவிர பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடலாம் என 3042007ல் இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி தீர்ப்பு அளித்தார்.

அத்தீர்ப்பை எதிர்த்து பாட அனுமதியளிக்கக் கூடாது என ஆலய பொதுதீட்சிதர்கள் அறநிலையத்துறைச் செயலரிடம் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில் விசாரணை முடிவுற்று அறநிலையத்துறைச் செயலர் சந்தானம் பிப்.29ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார்.

"தீட்சிதர்கள் நடத்தும் காலபூஜையின் அங்கமாகவே தேவாரம் பாடப்பட வேண்டும். பூஜை முடிந்தவுடன் திருச்சிற்றம்பல மேடையில் நின்று பக்தர்கள் தமிழில் தேவாரம் பாடி வழிபடலாம். அவ்வாறு பாடக்கூடாது எனக் கூறுவது பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும். மேலும் சிற்றம்பலமேடையில் நின்று வழிபடுவர்களிடம் தீட்சிதர்கள் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது' என அந்த அரசாணையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஒரு விவகாரமாகி,திருமுறை விரும்பிகள் தாக்கப்பட்டு,சில ஆணையர்கள் ஒரு சார்பாக தீட்சிதர்களுக்கு மௌன ஆதரவாக இருந்ததும்,வழக்குமன்றத்துக்கு விவகாரம் சென்றதும் உண்மை.
இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது ! இனியும் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் !!!!!!!

8 comments:

 1. தீர்ப்பின் பின்புலனாக நடந்த இன்றைய நிகழ்ச்சிகளையும்,ஓதுவார்கள் தாக்கப் பட்ட சம்பவத்தையும் வசந்தம் ரவி ஒளிப்படக்காட்சியாக அவர் பதிவில் இணைத்திருக்கிறார்.

  ReplyDelete
 2. இது சம்மந்தமான ஒரு சிந்திக்க வைக்கும்ப் பதிவு.

  தில்லையில் நடக்கும் ஆயிரங்காலத்து அடாவடி!

  http://nayanam.blogspot.com/2008/03/blog-post.html

  ReplyDelete
 3. பதிவு போட்டிருக்கேன், முடிஞ்சப்போ வந்து பார்க்கவும். நன்றி, ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை, சும்மா உங்கள் பார்வைக்கு.

  ReplyDelete
 4. நண்பர் அறிவன்,

  தில்லையின்பாலும் தமிழ் மந்திரங்கள்பாலும் அன்பு கொண்ட உங்கள் கருத்துகளை என் பதிவிலும் உங்கள் பதிவிலும் கண்டு மிக்க மகிழ்கிறேன். நன்றி.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்

  ReplyDelete
 5. M.R.Lakshmi NarasimhanMar 8, 2008, 11:06:00 AM

  தில்லையில் தமிழுக்கு இடமில்லை என்ற தீக்ஷிதர்கள் நிலை மாறி, அவர்களே வரவேற்று திருச்சிற்றம்பலமேடையிலிருந்து, தேவாரமும், திருவாசகமும் முழங்கச் செய்த செய்தி உள்ளத்தைக் குளிர்வித்தது. சிதம்பரம் மட்டுமில்லாது, தமிழ் நாடெங்கும், சிவாலயங்களில் தேவாரமும், திருவாசகமும், நாள் தோறும் முழங்க வேண்டும்.

  தீக்ஷிதர்களுடைய தற்காலிக எதிர்ப்பை இனவெறியாகக் கருத மாட்டேன். இது ஒரு யூனியன் மனோபாவம். அம்பலவாணன் அருளால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது மகிழ்ச்சியே.

  ReplyDelete
 6. அறிவன்,

  விவரம் புரியாதவராகவே இருக்கிங்களே, இந்த தேவாரம் பாட அனுமதிக்காததை முன்னரே சொன்னப்போதும் இங்கே பலரும், அவர்கள் கண்ணால், காதால் தேவாரம் பாடுவதை பார்த்து கேட்டதாக சாதித்தார்கள், அவர்களிடம் இதை எல்லாம் போய் சொன்னால் உங்கள் காது தான் செவிடு என்பார்கள் :-))
  (எனக்கு சொல்லி சொல்லி சோர்வாக போய்விட்டது)

  நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லிக்கொண்டு , அதையும் சாதிக்கிறார்கள் இங்கே சிலர், இப்போவாது அவர்களுக்கு அதெல்லாம் இல்லைனு தெரிந்தால் அதுவே பெரிது , ஆனால் இப்போவும் இதெல்லாம் அரசியல் விளையாட்டு அங்கே தேவாரம் தினமும் பாடப்படுகிறது என்பார்கள் :-))

  ReplyDelete
 7. வவ்வால்.

  அங்கே பாடப்படுகிறது என்பது உண்மை தான். அதனால் சிதம்பரத்தில் பாடப்படவில்லை என்று நீங்கள் சொல்லும் போதெல்லாம் மறுத்திருப்பார்கள்; பாடப்படுகிறது என்று சாதித்திருப்பார்கள். இப்போதும் அதையே சொல்லுவார்கள்; சாதிப்பார்கள். ஆனால் இன்னும் விதப்பாக கருவறையைப் போன்ற சிற்றம்பல மேடை எனப்படும் மேடையின் மேல் பாடப்படாமல் இருந்தது என்று சொல்லுங்கள். இப்போது அதுவும் சாத்தியமாகி இருக்கிறது. சிற்றம்பல மேடையிலும் எப்போதும் யாவரும் தேவாரத் திருவாசகங்கள் பாடிக் கொண்டிருந்தார்கள் என்று சாதிக்கிறார்களா என்று பார்க்கலாம்.

  எனக்குத் தெரிந்தவரை தமிழ் சிதம்பரத்தில் ஒதுக்கப்படுகிறது என்று இங்கே வலைப்பதிவுகளில் பேசியவர்கள் எல்லாம் (நீங்கள் உட்பட) மொத்தமாக சிதம்பரம் கோவிலில் தமிழுக்கு அனுமதி இல்லை என்பது போல் தான் பேசினீர்கள். அப்போது மறுப்பாக இல்லை, நானே கோவில்லுக்கும் ஓதுவார் தேவார திருவாசகங்களைப் பாடுவதைக் கேட்டிருக்கிறேன்; தீட்சிதர்களும் பாடுவார்கள் என்ற பதில் வந்திருக்கும்; ஏனென்றால் அது உண்மை. அதனைப் புரிந்து கொள்ளாமல் 'நான் அன்னைக்கே சொன்னேன். அப்ப எல்லாம் மறுத்து சாதித்தார்கள். இப்போது அவங்களுக்கும் புரிந்திருக்கும்' என்று சொன்னால் எப்படி? எப்போதும் தெளிவாக வாதத்தை வைக்கும் நீங்களும் இப்படியா?

  குறிப்பு: நீங்கள் தெளிவாக 'சிற்றம்பல மேடையில் மட்டும் தான் தமிழுக்குத் தடை இருந்தது. கோவிலுக்குள் மற்ற இடங்களில் தமிழ் பாடப்படுகிறது' என்று சொல்லியும் 'இல்லை. சிற்றம்பல மேடையிலும் தமிழில் எல்லோரும் நடராஜரை வணங்கலாம்' என்று யாராவது சொல்லியிருந்தால் என்னுடைய இந்தப் பின்னூட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். :-)

  ReplyDelete
 8. லஷ்மி நரசிம்மன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  //////தீக்ஷிதர்களுடைய தற்காலிக எதிர்ப்பை இனவெறியாகக் கருத மாட்டேன். இது ஒரு யூனியன் மனோபாவம்.///////

  இதனோடு,இதற்கும் மேலுமான விதயங்கள் இருப்பதாகவே நான் உணருகிறேன்.கோவில்களில் வழிபாட்டுக்கு மனிதருக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு இணைப்பாளராக யாராவது இருக்க வேண்டும்;அவர்களே இறைவனுடன் பேசத்தகுந்தவர்கள் என்பதெல்லாம் பழந்தமிழ் நாட்டின் நிலை அல்ல என்கின்றன நான் படித்துக் கொண்டிருக்கும் சில புத்தகங்கள் !!!
  கோவில்களில் நுழைந்த அரசியல் பிற்கால கட்டத்தில் (இடைச்சங்க காலத்துக்குப் பிறகு) எனபதும் என் தெளிவாயிருக்கிறது.
  சமுதாயத்தின் எந்த ஒரு பிரிவும்,ஜாதியின் பெயரால் ஒதுக்கப்படவோ,புறக்கணிக்கப்படவோ கூடாது என்பதுதான் நாகரிக சமூகத்துக்கான அளவுகோல்.(அவர்கள் பிராமணரரயிருந்தாலும் சரி,தலித் என்று சொல்லப்படுகிறவ்ர்களாக இருந்தாலும் சரி)
  கோவில்களைப் பொறுத்தவரை சில சீர்திருத்தங்கள் அவசியத் தேவையாய் தோன்றுகின்றன.
  அவற்றில் சிதம்பரத்தில் இப்போது நடந்தது-நல்ல திசையில் நடந்த ஒரு மாற்றம்-அவ்வளவில் அதை வரவேற்கிறேன்.

  வவ்வால்,
  நானும் பலமுறை இக்கருத்தைக் கூறியிருக்கிறேன்;சிற்றம்பலத்தில் என்று விளக்கியும் கேட்டிருக்கிறேன்,நீங்கள் சொன்னபதில்களே வந்தன,ஆனால் 'சிற்றம்பலத்தில்' என்று commit செய்யாமல் வந்தன !!!
  குமரன்,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  சிற்றம்பல மேடையில் மட்டுமல்ல,பொன்னம்பலக் கூரையிலும்,இறைவன் கருவறையிலும் தமிழின் மாட்சி திகழ வேண்டும் என்பதுதான் எல்லோரின் விழைவு.
  இதை திராவிடக் கட்சிகளின் 'மொழி' ஆயுதப் பார்வையில் நான் பார்க்கவில்லை;திருமறைகளின் அழியாஅழகாகப் பார்க்கிறேன்.

  ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • பறக்கும் தட்டு - ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்ட...
  1 week ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  3 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  1 year ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  1 year ago