குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, August 15, 2012

* * * * * 163.நொய்,நொய் அழுத்தம்-நாளொரு பாடல் 12



ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே


நூல் : தனிப்பாடல் திரட்டு
ஆசிரியர் : இராமச் சந்திரக் கவிராயர்
காலம் : 19|20'ம் நூற்றாண்டு

முன்னோட்டம்:
நூலாசிரியர் இராமச் சந்திரக் கவிராயர் இராசு மண்டலம் என்னும் ஊரில் ( இன்றைய காஞ்சிபுரம் மாவட்டம்) பிறந்து சென்னப் பட்டனத்தில்(இன்றைய சென்னை) வாழ்ந்தவர்.

நாடகக் கவிதை நூல்கள் பல எழுதியிருக்கிறார். சித்திரக் கவி எழுதுவதிலும் வல்லவர்.சித்திரக் கவி என்பது கவிதையைச் சித்திர வடிவில் எழுதுவது.
சித்திரத்தின் எப்பக்கத்திலிருந்து படித்தாலும் கவிதை பொருள் தருமாறு எழுதப்பட்டிருக்கும்.

சித்திரக் கவிக்கு ஒரு எடுத்துக் காட்டு கீழே வருமாறு..இந்தப் பாடலுக்கான விளக்கத்தை இன்னொரு நாளொரு பாடல் பகுதியில் பார்க்கலாம்.

சித்திரக் கவி - நான்கு ஆரச் சக்கர பந்தம்


இவ்விதமான சித்திரக் கவிகள் எழுதுவதில் திறமைசாலியான கவிராயராக இருப்பினும், இன்றைக்குப் பார்க்கப் போகும் பாடல் எளிய, சுவையான பாடல்.

கருத்து:
ஆசாமியின் வீட்டின் பசு கன்று ஈன்றிருக்கிறது;
வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கிறது;
பெய்த கடுமழையில் கூரையோ, ஓடோ போட்டிருக்கும் எளிய வீடு விழுந்து விட்டிருக்கிறது;
வீட்டில் மனைவிக்கோ சுகவீனம்;
வேலைக்காரன் இறந்துவிட்டான்;
பெய்த மழை ஈரத்தில் விதை நெல்லையாவது நிலத்தில் நட்டு விடலாம் என்று வயலுக்கு விதை நெல்லை எடுத்துக் கொண்டு ஓடுகிறார் ஆசாமி;
ஆனால் வழியிலே கடன் கொடுத்தவர் மறித்துக் கொண்டு,நெல்லைப் பிடிங்கிக் கொள்ள, சாவுச் செய்தியைக் கொண்டு எதிரே ஆசாமியைத் தேடிக் கொண்டு ஒருவர் வருகிறார்;
அந்த சமயத்தில் தவிர்க்க இயலாத விருந்தினர் ஒருவர் ஆசாமியின் வீட்டுக்கு வருவதற்காக வழியில் எதிரே வருகிறார்;
அவரைப் பார்த்த சமயத்தில் ஆசாமியைப் பாதையில் போகும் பாம்பு தீண்டி விடுகிறது;
நாட்டின் அரசர் பருவத்திற்கான உழுதுண்டு வாழ்வதற்கான வரியைக் கேட்டு அரசவையிலிருந்து ஆள் வருகிறது;
அதே நேரத்தில் குருக்கள் செய்து வைத்த காரியத்திற்கு ஆசாமியிடம் வந்து தட்சிணை-காணிக்கை கேட்கிறார்..

ஆசாமியின் நிலை எப்படி இருக்கும்..

அய்யோ...சாமி என்று உட்கார மாட்டாரா அய்யாசாமி !?

:))

டிட்பிட்ஸ்:

  • பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் சிக்கலான வெண்பா வடிவங்கள் குறைந்து பெரும்பாலும் பாடல்கள் விருத்தங்களாகவே எழுதப் பெற்றன.
  • விருத்தம் எழுதிய புலவர்கள் பெரும்பாலும் கவிராயர்களென அழைக்கப்ப்பட்டார்கள்.அதாவது அவர்கள் எந்த இனத்தில் பிறந்தவராக இருப்பினும் பொதுவாகக் கவிராயர் என்றே அழைக்கப் படுவார்.
  • Chronic Pressure என்று சொல்லப் படுகிற நொய் நொய் அழுத்தம் வரும் சூழலை அழகாக எடுத்துக் காட்டும் ஒரு பாடல் இது.
  • சுஜாதா எழுதிய நொய் நொய் அழுத்தத்திற்கான ஒரு எடுத்துக் காட்டு கற்றதும் பெற்றதுமில் எழுதியிருப்பார். அதைப் படிக்கும் போது எனக்கு இந்தப் பாடல்தான் நினைவுக்கு வரும் ! :)



12  | 365



5 comments:

  1. திண்டுக்கல் தனபாலன்Aug 15, 2012 2:01:00 PM

    நொய்,நொய் அழுத்தம்-நாளொரு பாடல் 12 - படித்து அறிந்தேன்... நன்றி...

    ReplyDelete
  2. நொய் நொய் அழுத்தம் - சுவாரசியமான சொல்லாக்கம். இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
    சித்திரக்கவி அறிமுகத்துக்கு நன்றி. (தலை சுற்றுகிறது. ஆங்கில ப்ரெஞ்சு கவிதைகள் சில இதைப் போல் படித்திருக்கிறேன் - கல்லூரியில். அப்பொழுதும் தலை சுற்றும் :)
    பெயருக்கு ஏற்றார்போல் பரவலான வீச்சு. நட்சத்திர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. || நொய் நொய் அழுத்தம் - சுவாரசியமான சொல்லாக்கம். இப்போது தான் கேள்விப்படுகிறேன்.||

      நன்றி அப்பாதுரை சார்.

      ||சித்திரக்கவி அறிமுகத்துக்கு நன்றி. (தலை சுற்றுகிறது. ஆங்கில ப்ரெஞ்சு கவிதைகள் சில இதைப் போல் படித்திருக்கிறேன் - கல்லூரியில். அப்பொழுதும் தலை சுற்றும் :)||

      உண்மைதான்.இரு நாக பந்தனம் என்ற ஒரு வடிவம் இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் வடிவத்திற்குள் அமைந்த சித்திரக் கவிகள் இருக்கின்றன; அவை படிக்கவே மிகவும் கடினமாக இருக்கும்.

      எனக்கே சிந்தனை வரும்,'நமக்குப் படிக்கவே இவ்வளவு கடினமாக இருக்கிறதே, இதை எப்படி எழுதியிருப்பார்கள்?' என்று..

      சித்திரக் கவி புனைதலுக்கு ஏதாவது எளிய விதிகள்-ரூல்ஸ்- இருந்திருக்கலாம்..

      || பெயருக்கு ஏற்றார்போல் பரவலான வீச்சு. நட்சத்திர வாழ்த்துக்கள்!||

      முன்னரே(காமச்சேறில் !) சொன்னதுதான், கருவிலே அமைந்த திரு ! எனது எல்லாக் குற்றங் குறைகளுக்கும் மத்தியில் என்னிடம் ஏதாவது மிச்சம் நன்மையானது இருந்தால் அது அம்மாவிடம் இருந்து வந்தது..

      தன்யானேன்.

      வாழ்த்துக்களுக்கு நன்றி.வருக மீண்டும்.

      Delete
    2. ||சித்திரக்கவி அறிமுகத்துக்கு நன்றி. (தலை சுற்றுகிறது. ஆங்கில ப்ரெஞ்சு கவிதைகள் சில இதைப் போல் படித்திருக்கிறேன் - கல்லூரியில். அப்பொழுதும் தலை சுற்றும் :)||

      சொல்ல மறந்து விட்டேன்..இந்த சித்திரக் கவிக்கான விளக்கம் பதிவு எண் 165 ல்-இரண்டு பதிவுகள் தாண்டி- இருக்கிறது..

      ஆவீன' பாடலும், சித்திரக் கவியும் எழுதியவர் ஒரே கவிராயர் என்பதால் அங்கு குறிப்பிட வேண்டியதாயிற்று.

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...