குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Friday, July 27, 2012

149.பதிவுகள் முளைத்து,தொலைந்த காலம் !


பதிவுகள் அழியும் காலம் என்று ஒரு கதைத் தொகுதி புத்தகமாக வந்திருக்கிறது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்!

வலைப் பதிவுகளைப் பொறுத்த வரை கூகிள் நிறுவனம் இலவச பகிர்வான்-சர்வர்-சேவையை நிறுத்தினாலே,பல தமிழ் வலைப் பதிவுகள் தன்னால் அழிந்து விடும்.

காரணம் தமிழ் வலைப் பதிவுகளில் பல பதிவுகள் மிக மேம்போக்கான,சுய சொறிதலுக்கான நோக்கம் கொண்டே எழுதப் படுவன;எழுத்தில் சிறிதளவு ஆர்வமும் ஒரளவு பரிச்சயமும் இருந்த பலரும்,தன் எழுத்தை வலையில் எளிதாகப் பார்க்க முடிந்த நிலையும்தான் பலர் வலைப் பதிவு தொடங்கக் காரணம்.

பின்னர் பஸ் டிரைவரிலிருந்து,பஜ்ஜி விற்பவர் வரை எதையாவது பற்றி,என்னவாவது எழுதினால் பரந்துபட்ட வலையுலகில்,படிக்க சிலராவது மாட்டுவார்கள்;அப்படியே ஒப்பேற்றிக் கொண்டு இருக்கலாம் !

இன்றும் கூட பல ஒற்றுப் பிழைகள்,சொல்,பொருள் பிழைகளுடன்,கொச்சை நடையில் எழுதப் படும் பல பதிவுகள் எனது மேற்கண்ட கூற்றுக்கு சான்றாக,நூற்றுக் கணக்கில் இருக்கின்றன.

இந்தப் பொது சிந்தனைக்கு,நான் உட்பட,எவரும்,தொடக்ககாலப் பதிவர் நிலையில்,விதிவிலக்காக இருக்க முடியாது.

தொடக்ககாலம் என்று நான் சொல்வது-பதிவு தொடங்கி சுமார் இரண்டு ஆண்டுகள் வரை! பெருவிரல் விதியாகச்-ரூல் ஆஃப் தம்ப்-சொல்லி விடக் கூடிய ஒரு உண்மை,ஒருவர் எழுதும் பதிவுகளில்,அவருக்கே திருப்தி தரக் கூடிய,படிப்பவர்களுக்கு பயனளிக்கக் கூடிய பதிவுகள் எழுதத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே வரும் என்பது.

பலர் என்னுடன் சண்டைக்கு வரக் கூடும்;ஆனால் வலையுலகில் நேர்த்தியாக எழுதுகிறார்கள் என்று உளமாரத் தோன்றக் கூடிய எந்த ஒரு பதிவரின் பதிவுகளையும் சிறிது ஆய்வுக்கு உட்படுத்தினால்,எந்த உண்மை எளிதில் விளங்கும்.

இன்னும் சிலர்,தங்கள் இயங்கு தளங்களில் தங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக புத்திசாலித்தனமாக வலைப்பதிவுகளைப் பயன்படுத்துபவர்கள்.

தன்னுடைய இருப்பை அறிவித்துக் கொண்டேயிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் அரசியல் கழைக் கூத்தாடிகள் அல்லது அவர்களுக்கு சொம்படிப்பவர்கள், பத்திரிகையாளர்கள்,புத்தக வெளியீட்டாளர்கள், கம்பெல்லிங் விளம்பர மோகிகள் போன்ற பலரும் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள்.சொல்லத் தேவையன்றி இவர்களின் இருப்புக்கும் தொழிலுக்கும் வலைப்பதிவுகள் ஏதோ ஒரு வடிவில் உதவி செய்கின்றன.

என்னைப் பொறுத்த வரையில் எழுத்தில் பள்ளிக் காலம் முதலே பரிச்சயம் இருப்பினும் இணையம் என்னும் எளிய ஊடக வசதியும்,அதைப் பரப்புவதற்கு தமிழ்மணம் போன்ற திரட்டி வசதிகளும்,இலவசமாக பகிர்வானை கூகிள் கொடுப்பதும்,விட்டு விட்ட எழுத்தைத் தொடர முக்கியக் காரணம்.

சந்தேகமின்றி நான் முதல் வகைப் பதிவாளனாக தொடங்கிய,அதே நிலையில் ஓரளவு பரந்த வாசிப்பும் கொண்ட ஒருவன். ஆனால்
தொடக்க நிலைப் பதிவாளர்களில்  பெரும்பாலானவர்களைப் போல,பாத் ரூம் போவது தவிர்த்த, எந்த ஒரு தினப்படி நிகழ்ச்சியையும் பதிவாக்க முயன்றவன் அல்ல,நிச்சயமாக.

எனது பதிவைப் படித்த ஒருவனுக்கு துளி அளவாவது,சிந்தனையில்,செயலில் முன்னேற்ற மாற்றத்தை நிகழ வேண்டும்,படித்த எழுத்து கடுகளவாவது மனதில்,சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்பதே எப்போதும் எனது எழுத்தின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பதை நான் அறுதியிட்டுக் கூறமுடியும்.

மேலும் செல்ஃப் ஹெல்ப் குழுக்கள் போல்,நான் உனக்கு பின்னூட்டுகிறேன்,நீ எனக்குப் பின்னூட்டு என்ற சுயசொறிதல்களிலும் எனக்கு உடன்பாடில்லை. இதனால் ஐந்து வருடங்களாக எழுதிக் கொண்டிருப்பினும் நான் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை மிக சொற்பமே.

ஆனால் நிச்சயமாக, எந்த ஒரு பதிவையும் நான் திரும்பவும் படிக்க நேர்கையில்,என்ன இவ்வளவு குப்பையை,குப்பையாக எழுதி இருக்கிறோம் என்று நான் ஒருமுறை கூட உணர்ந்ததில்லை ! அந்தக் குறைந்த பட்ச நேர்மையும் திருப்தியும் என்னுடைய பதிவுகளின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

இத்தகைய சூழலில் என்னுடைய பதிவுகளைக் குறிப்பிட்டு வலைச்சரத்தில் சிலர் பாராட்ட எழுதி இருப்பதை,சில நாட்களுக்கு முன்னரே எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது.அவர்களில் சிலர் எழுதியது 2008,2009 வாக்கில்! அவற்றை இப்போதுதான பார்க்க நேர்ந்தது.

அவர்களின் பாராட்டை உரிய நேரத்திலேயே பார்க்க இயலாதிருந்த என்னுடைய நிலைக்காக அவர்களிடம் மன்னிப்பு வேண்டவும்,அவர்களின் பாராட்டுக்கு நன்றியை ஒரு பதிவின் வாயிலாகவாவது தெரிவிப்பது என்னுடைய கடமை என்று தோன்றியதாலும் இந்தப் பதிவு.

அவர்கள் எழுதிய நேரத்திலான எனது மௌனம், அவர்களுக்கே ஏன்தான் இவனைப் பற்றி எழுதினோமோ என்று கூடத் தோன்ற வைத்திருக்கலாம் !


 :))


சின்னப்பையன் - அவரது முதல் பதிவில் ஊக்கப்படுத்தி எழுதியதற்காக மட்டுமே என்னைக் குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை :)).2008 ல் எனது பதிவைக் குறிப்பிட்டிப் பாராட்டி எழுதி இருக்கிறார்..நன்றி.

மாதங்கி - சிங்கை வட்டாரத்தில் அறியப்பட்ட எழுத்தாளர் இவர்.சில புத்தகங்களும் கொண்டு வந்திருக்கிறார்.2009 ஏப்ரல்'ல் எனது வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை பதிவைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதி,வலைப்பதிவைப் பாராட்டியிருக்கிறார்.நன்றி.

ஆர்விஎஸ்-2011 சூலையில் என்னுடைய பெண் எழுத்துப் பதிவைக் குறிப்பாகச் சுட்டிப் பாராட்டி எழுதியிருக்கிறார்.நன்றி.

மோகன்ஜி - 2012 ஏப்ரலில் இவரது காமச்சேறு என்ற பதிவில் மிக நீண்ட விவாதங்களில் நான் பதில் சொல்லும்படியானது; அவரும் அவருடைய பத்தியில் எனது பங்கீடு பற்றிய குறிப்புடன் எனது பதிவுப் பக்கம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.நன்றி.

துரை டேனியல் - 2012 ஆகஸ்டில் என்னுடைய பழைய்யய்யய்யய்ய பதிவான தமிழ்ப் புத்தாண்டு பற்றிய பதிவுச் செய்தியைக் குறிப்பிட்டு பாராட்டுகளை அளித்திருக்கிறார்.நன்றி.

இவை தவிர எனது நட்சத்திர வாரப் பதிவுகள் அனைத்தும்,மற்றும் லாம்ப்ரட்டா,எனது ஐயா'வைப் பற்றிய பதிவு,தமிழும் சிவமும்(இன்னும் இது முற்றுப் பெறவில்லை!),தமிழ் இலக்கிய சுட்டியில் நான் எழுதி அனைத்தும் போன்ற பதிவுகள் எனக்கே திருப்தி தந்தவை.

வேறு எதையோ வலையில் தேடப் போகவே என்னுடைய பதிவைப் பற்றிய, நண்பர்களின் இந்தப் பரிந்துரைகள் எனக்குத் தெரியவந்தன.

இவர்களில் எவரையும் கூட நான் தொடர்ந்து படிப்பவனல்லன்;பேசியோ,மின்மடலிலோ அறிந்தவனல்லன். ஏதோ ஒரு கணத்தில் இவர்களது எண்ணத்தில்,சிந்தனையில் என் பதிவும்,எழுந்தும் மீளெழுந்திருக்கிறது,குறிப்பிட வைத்திருக்கிறது என்பது எனக்கு எப்போதுமே நிறைவான ஒன்று.

எழுதுவதன் நிறைவு அது மட்டும்தான்.

மிக்க நன்றி நண்பர்களே !!!

()

எழுத வேண்டும் என்று நினைப்பதைக் காட்டிலும் அதிக நேரத்தை படிப்பதில் செலவு செய்பவன் நான்.

படித்தவற்றைப் பற்றி நான் சிந்திந்த வற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எழுச்சி பல நேரங்களில் ஏற்பட்ட போதிலும், கொடுப்பாரில்லை அங்கு கொள்வாரிலாமையால் என்ற 'உயர்ந்த சூழலால்' பெரும்பாலும் நேரத்தைக் கொன்று எழுதுவதற்கான உந்துதல் ஏற்பட்டதில்லை.

ஆனாலும் திரு.சொக்கன்(நாகா) எழுதிய தினம் ஒரு பா- பதிவை நேற்றுக் (த்தான்) கண்ணுற நேர்ந்த போது,அவர் ஏற்கனவே அதை 365 நாட்களுக்குப் பிறகு நிறுத்தி விட்டிருந்தது தெரிந்தது.

அவரது உறுதிப்பாடு ஆச்சரியமானது. ஏன் அதை இன்னும் ஒரு 365 நாட்களுக்காவது நாம் தொடரக் கூடாது என்று தோன்றியது.

படித்தவற்றைப் பகிர வேண்டும் என்ற உள விருப்பத்தை விட, 365 நாட்கள் விடாது ஒரு தமிழ்ப் பாடலைப் பற்றிய எழுத வேண்டிய கட்டாயத்தைத் தனக்கு விதைத்துக் கொள்ளும் அந்த மனநிலை எனக்குப் பிடிந்திருந்தது;எழுத்திற்கும் கருத்திற்கும் நேர்மை செய்ய இயலும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருப்பதால், எனது இன்னொரு பதிவான மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற பக்கத்தில் இதைத் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் இதையே அழைப்பாகவும்,எச்சரிக்கையாகவும்(!?) சொல்லி வைக்கிறேன். நன்றி.

:)


8 comments:

 1. உங்களின் இந்தப் பதிவிலே எனக்குப் பிடித்த வரிகள் :

  /// எழுத வேண்டும் என்று நினைப்பதைக் காட்டிலும் அதிக நேரத்தை படிப்பதில் செலவு செய்பவன் நான். ///

  உண்மை தான்... இது தான் நம் வாழ்நாள் முழுவதும் வரும்... தேவையும் கூட... மற்றவையெல்லாம் மனிதனின் பிரச்சனைக்குரிய காரணங்கள்....
  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன்...
   நீங்கள் குறிப்பிடுவது உண்மைதான்.நிறைந்த வாசிப்பினால் மட்டுமே,அழகிய எழுத்து உருவாகும்.

   Delete
 2. Replies
  1. நன்றி கந்தசாமி அவர்களே...
   முதல் வருகைக்கு நன்றி.

   Delete
 3. //வலைப் பதிவுகளைப் பொறுத்த வரை கூகிள் நிறுவனம் இலவச பகிர்வான்-சர்வர்-சேவையை நிறுத்தினாலே,பல தமிழ் வலைப் பதிவுகள் தன்னால் அழிந்து விடும்.//
  நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் முழுவதுமாக அழிந்துவிடாது என்று கருதுகிறேன். மாற்று வழி ஒன்று நிச்சயம் உருவாகும்

  ReplyDelete
  Replies
  1. முரளிதரன்,
   இந்த அளவிற்கு சர்வர் கபாசிடி தர கூகுள்,மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களால்தான் முடியும்.

   பில் கேட்ஸ் இலவசமாக எதையும் தருபவர் அல்ல!

   :))

   Delete
 4. அனைவரும் தம் கருத்துக்களை எழுத்தில் பதியவைக்க விரும்புவர். இதில் நன்மையும் தீமையும் கலந்து தான் இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. || இதில் நன்மையும் தீமையும் கலந்து தான் இருக்கும்! ||

   பொதுவாக நான் உணர்ந்தவற்றை மட்டுமே எழுதினேன் அட்சயா..எவரையும் குறைவாக மதிப்பிட்டதால் அப்படி எழுதவில்லை.

   அல்லவை தள்ளி நல்லவை கொள்'வதுதான் என் கொள்கையே..

   :)

   Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • நெப்போலியனின் பேச்சின் வீச்சு! - *முன்குறிப்பு:* பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று மகாகவி பாரதி பாடினார். அதில் வெற்றியும் பெற்றார். பேச்சு திறத்தாலே வையத்தைப் வென்ற...
  6 days ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  2 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  1 year ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  1 year ago