குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, April 9, 2008

52.ஒகேனக்கல்-பைத்தியக்காரக் கூச்சல்களுக்கு நடுவே ஒரு தெளிவின் குரல்

ஒகேனக்கல் தொடர்பாக இரு மாநிலங்களிளும் பைத்தியக்காரர்களைப் போல அரசியல்வாதிகளும்,பேட்டை ரவுடிகளும் உளறிக் கொண்டிருக்கையில்,கர்நாடகத்திலிருந்து ஒரு தெளிவான குரல் !!!!!!
*************************************************************************************
ஏற்கெனவே 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்ட ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தைத் தமிழக அரசு உடனே நிறைவேற்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இரு மாவட்ட மக்களுக்கும் குடிநீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகத்தில் முன்னாள் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எச்.என். நஞ்சே கௌடா வலியுறுத்தியுள்ளார்.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக தேவையின்றி இரு மாநில மக்களும் மோதிக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இரு மாநிலங்களிலுமே போராட்டம் நடத்துகின்ற யாருக்கும் அத் திட்டத்தைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்கிறார் நஞ்சே கெüடா.

பெங்களூர் குடிநீர்த் திட்டம் மற்றும் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் ஆகிய இரண்டுக்கும் 1998-ல் அனுமதி அளிக்கப்பட்டபோது, இரண்டில் எந்த மாநிலமும் மற்றதன் குடிநீர்த் திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டே அனுமதி அளிக்கப்பட்டது, ஏனென்றால் இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் ஆகும்.
குடிநீர்த் திட்டங்களை இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்னையாகக் கருதக் கூடாது என்று தேசிய நதிநீர்க் கொள்கை திட்டவட்டமாக வரையறுத்துள்ளது.
இந்தக் கொள்கையின் அடிப்படையில் பார்த்தால், குடிநீர்த் திட்டம் என்ற வரம்பை ஒகேனக்கல் திட்டம் மீறாத வரையில், அது பற்றி இரு மாநிலங்களிலுமே எந்த வகையிலும் கவலை கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நஞ்சே கெüடா கூறினார்.
இப் பிரச்னை குறித்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி விவரம்:

இரு மாநிலங்களையும் கலந்து ஆலோசித்த பிறகே, கர்நாடகம் அதற்கு ஒப்புக்கொண்ட பிறகே 1998-ல் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கு மத்திய அரசு "ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ்' வழங்கி இருக்கிறது என்கிறபோது, இப்போது எதற்காக கர்நாடக மக்கள் அத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர்?
நஞ்சே கெüடா: அத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்களுக்கு அத் திட்டத்தைப் பற்றி ஏதுவும் தெரியவில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.
ஒரு நதியானது இரு நாடுகள் அல்லது மாநிலங்களுக்கு இடையிலான எல்லையாகப் பாய்கிறது என்றால், அந்த நதியின் நடுப்பகுதியே இரு நாடுகள் அல்லது மாநிலங்களுக்கு இடையிலான எல்லைக்கோடாகக் கருதப்படும் என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும்.
நதிநீரைப் பொருத்தவரை குடிநீருக்கான பயன்பாட்டுக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விதியாகும். அதற்கு அடுத்த முக்கியத்துவம் பாசனத்துக்கும், அடுத்ததாக மின்னுற்பத்திக்கும், இறுதியாக போக்குவரத்துக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பது நியதி.
ஒகேனக்கல் திட்டம் குடிநீர்த் திட்டம் என்பதால் அதற்கு எந்த மாநிலமும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. இப்போதுள்ள நிலையில் அத் திட்டம் குறித்து நமக்கு (கர்நாடகத்துக்கு) கவலை ஏற்பட வேண்டிய அவசியமும் இல்லை. எனவே, போராட்டம் நடத்த வேண்டிய அவசியமும் இல்லை.

ஒகேனக்கல்லில் குடிநீர்த் திட்டத்தைப் பயன்படுத்தி நீர்மின் திட்டத்தையும் செயல்படுத்த தமிழகம் திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?
எனக்குத் தெரிந்தவரை, 1998-ல் வழங்கப்பட்டுள்ள ""ஆட்சேபமில்லாச் சான்றிதழா''னது குடிநீர்த் திட்டத்துக்குத்தானே தவிர, நீர்மின் திட்டத்துக்கு அல்ல. எனவே நீர்மின் திட்டத்துக்காக அணையை தமிழ்நாடு கட்ட முடியாது.
அணை கட்டுவதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்திருக்குமானால், கர்நாடக அரசுக்கும் ஓர் அறிக்கையை அது அனுப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால், எனக்குத் தெரிந்த வரையில், அப்படி ஏதும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, அணை கட்டுவதற்காக மண் தோண்டும் வேலைகளை தமிழ்நாடு மேற்கொண்டால், உச்ச நீதிமன்றத்துக்கு நாம் செல்ல முடியும்; ஏனென்றால் அத்தகைய திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாகத் தெரியவில்லை. அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு சமர்ப்பித்து, அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தால்தான் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும்.
எனவே, நான் மீண்டும் கூறுகிறேன், இப்போதைய நிலையில் தமிழகமோ, கர்நாடகமோ கவலைப்பட்டு எந்த நடவடிக்கையிலும் இறங்க எந்த அவசியமும் இல்லை.

அப்படியானால், ஒகேனக்கல் விவகாரத்தில் நடந்துவரும் நாடகங்கள் குறித்து என்ன கூறுகிறீர்கள்?
முதலில், இந்தத் திட்டத்துக்கு எதிராக ஆவேசமாகக் குரல் எழுப்புவோரிடம் "அவர்கள் போராட்டம் நடத்துவதற்கான காரணம் என்ன?' என்று கேட்க வேண்டும். அவர்களுக்கே அது தெரியவில்லை என்பது அப்போது உங்களுக்குப் புரிந்துவிடும். தமிழக முதல்வர் பேசிய ஆத்திரமூட்டும் பேச்சுக்குத்தான் தமது எதிர்ப்பை அவர்கள் தெரிவிக்கின்றனர் என்பது விளங்கும்.
இந்த விவகாரத்தில் தண்ணீர்ப் பிரச்னை ஏதும் இல்லை. அப்படியே இதில் ஏதாவது இருக்குமானால், அது, ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றின் நடுவில் உள்ள 700 ஏக்கர் பரப்புள்ள தீவு யாருக்குச் சொந்தம் என்ற எல்லைப் பிரச்னையாக மட்டுமே அது இருக்க முடியும். ஆனால் அதைப் பற்றி இப்போது யாரும் பேசவில்லை.
இப்போதைய பிரச்னைக்கு கருணாநிதியும் கர்நாடக ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூருமே காரணம் என்றே நான் குற்றம் சாட்டுவேன். கருணாநிதி இந்த நாடகத்தைத் திட்டமிட்டு அரங்கேற்றி, வேண்டுமென்று பதற்றத்தை உருவாக்குகிறார். அவர் பொறுப்பில்லாமலும் ஆத்திரமூட்டும் வகையிலும் பேசிக்கொண்டிருக்கிறார்.


ராமேஸ்வர் தாக்கூரைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
"தண்ணீர் உயிர்ப் பிரச்னை. எனவே, கிருஷ்ணா, காவிரி அல்லது எந்த நதிநீர்ப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றைத் தீர்க்க, நிபுணர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத்தில் முக்கியமானவர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும்' என்று ஆளுநருக்கு இரு கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன். அப் பிரச்னைகள் தொடர்பாக அந்தக் கமிட்டியுடன் ஆளுநர் பேசி, அது தொடர்பாக விழிப்புணர்வை மக்களுக்கு அவர் ஏற்படுத்த வேண்டும். நானே அதைக் கூற முடியும். ஆனால், சொல்ல வேண்டியவர் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வந்தால்தான் அது பெரிய செய்தியாகும்; மக்களும் புரிந்துகொள்வார்கள்.
ஆனால், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதில்தான் ஆளுநர் ஆர்வமாக இருக்கிறார். அவர் ஒரு நிர்வாகியைப்போல செயல்பட வேண்டும்; வெளிப்படையாக பிரச்னைகளை அணுக வேண்டும். மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். அது அவரது கடமை.


கர்நாடகத்தில் தேர்தல் முடியும் வரை ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்திவைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதே, அதற்கு அர்த்தம் என்ன?
என்ன மடத்தனம் இது! 10 ஆண்டுகளுக்கு மேலாக அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது. இப்போதோ மேலும் ஒரு மாதம் நிறுத்திவைக்கப் போவதாக அவர் கூறுகிறார். அவர் என்ன நம்மை தாஜா செய்கிறாரா?
பத்து ஆண்டுகளில் செய்யாத எதை அவர் இந்த ஒரு மாதத்தில் செய்துவிடப் போகிறார்? உண்மையில், இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுமாறும், இரு மாவட்ட மக்களுக்கும் குடிநீரை வழங்குமாறும்தான் நாம் அவரைக் கேட்டுக்கொள்ள வேண்டும். தருமபுரியில் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர்; அவர்கள் செல்வாக்கிழந்துவிட்டனர்; அதைப்போலத்தான் அவரும். எனவே, இந்த நடவடிக்கை மூலம் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற அவர் முயற்சி செய்கிறார் என்பது எனது எண்ணம்.
அதோடு, மக்களவை விரைவில் கலைக்கப்படக்கூடும் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, ஒருவேளை ஜெயலலிதாவை முந்திக்கொள்ள அவர் நினைக்கிறாரோ என்னவோ?


மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழக முதல்வர், கர்நாடக ஆளுநர் இருவரையும் பிரதமர் அழைத்து கண்டிக்க வேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் மக்களின் நலன்களைக் காக்குமாறும் அறிவுறுத்த வேண்டும். உண்மையான விவரங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுமாறு ஆளுநருக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும்.

போராட்டம் நடத்துபவர்களைப் பற்றி.....
தவறாக வழிகாட்டுபவர்கள் பின்னால் செல்லாதீர்கள் என்று நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடாதீர்கள்; சுயநலமிக்க எந்த அரசியல் கட்சியின் தவறான வழிகாட்டுதலையும் பின்பற்றிச் செல்லாதீர்கள். நாமெல்லாம் சகோதரர்கள். எனவே, சகோதரர்களைப் போல நாம் நடந்துகொள்ள வேண்டும் என்றார்
நஞ்சே கெüடா.

Aknowledgements: Express Press Groups

10 comments:

  1. //இரு மாநிலங்களிளும் பைத்தியக்காரர்களைப் //
    இது தவறு. நஞ்சே கவுடா என்ன சொல்லியிருக்கிறாரோ அதையேதான் தமிழகத்தில் பலரும் சொல்லுகிறார்கள்; ஜெயலலிதா உட்பட. மொத்தமாக எல்லொரையும் பைத்தியக்காரத்தனம் என்று கூறுவது தவறு.

    ReplyDelete
  2. ஞாயிறு,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    ஜெ,சரத்குமார் போன்றவர்கள் இன்றைய மாலை செய்திகளில்,தமிழக அரசு திட்ட செயல்பாட்டில் இறங்கவேண்டும் என்க் கூறியிருக்கிறார்கள்;ஆனால் அவர்கள் கூறுவதற்கு அரசியல் காரணங்கள் இருக்கின்றன.
    ஆனால் நஞ்சே கவுடா கூறுவது முழுக்க குடிமக்கள் நலன் நோக்கில்,எனவேதான் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  3. தமிழ் நாட்டில் எந்த அரசியல்வாதி சொன்னாலும் அதை நீங்கள் அரசியல் என்று சொல்லிவிடுவீர்கள். போங்க பொழச்சுப் போங்க :)

    ReplyDelete
  4. மயூரன்,
    தமிழரங்கக் கட்டுரையையும் உங்கள் பதிவையும் பார்த்தேன்.
    மும்பையின் நீரா ஆற்றின் விவகாரத்தின் விவரங்கள் எனக்கு இல்லை;இது பற்றிய அச்சங்கள் நியாயமானவையாகவே தோன்றுகின்றன.
    ஆனால் நந்நீர் அரிய பொருளாக அறியப்பட்டு விட்ட உலகச் சூழலில் இது போன்ற நதியை விற்கும் சூழல் எல்லா நேரத்திலும் நடக்க இயலாதெனவே நான் நம்ப விரும்புகிறேன்.
    இந்த பயங்களை மீறி இவை நடக்கும் என்றால்,தேசியமோ,மாநிலமோ எல்லாம் பொய்யெனவாகும்.

    ReplyDelete
  5. ஞாயிறு,
    தமிழக் அரசியலில் முதலவர் முதலில் முஷ்டி மடக்கினார்;அவருடன் பின்னணியில் சண்டைக்காகவே அரசியல் செய்தனர் யாவரும்.அந்த நேரத்தில் எந்த தமிழக அரசியல்வாதியும்,நஞ்சேகவுடா சுட்டியிருப்பது போன்ற பொதுநலன்/மக்கள்நலன் கோரிக்கைகளை சுட்டி,திட்டம் அக்காரணங்களுக்காக நடைபெற வேண்டும் என அறிவிக்கவில்லை.
    மாறாக கன்னடர்களுக்கு எதிர்வாதம் செய்யவே கூடிக் கலைந்தார்கள்.
    எனவே இப்போது முதல்வர் அரசியல்,அவரின் கட்சி/கூட்டணி காரணங்களுக்காக பின்வாங்கியிருப்பதாக நம்பப்படும் வேளையில்,திட்டம் நடைபெற்றாக வேண்டும் எனச் சொல்வது அவர்கள் சார்ந்த மாநில அரசியலுக்காக எனச் சொல்கிறேன்.
    காட்டாக,முக'இட்திட்டம் இப்போதைக்கு தள்ளிவைக்கப்படுகிறது என அறிவிக்கப் படுவதற்கு முன்பாகவே,நஞ்சேகாவுடாவிடம் இந்த பேட்டி எடுக்கப் பட்டிருந்தாலும் அவர் இதே பதில்களையே சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன்.
    எனவே,என் கருத்தில் 'நான் பிழைத்துப் போவது' நியாயம்தான் !
    :-)

    எல்லாவற்றிற்கும் மேலாக ஜெ.பதவியில் இருந்திருந்தால்,இப்படி பின்வாங்க மாட்டார் என்றும் சிலர் நம்புகிறார்கள்,ஆனால் அது முழுக்க ஊக அடிப்படையானதே !

    ReplyDelete
  6. Kuppan says: Hi Arivan

    Last week Kumudham issuela Gnaani miga Thelivaaga solli irukkiraar. Jayalaitha aatchi kaalathil oru thurumbai kooda etuthu poda villai for Ohenakkal plan.


    Kalaignarum panam illai endru solla mudiyaathu , because ohenakkal plan requires Rs.650 crores but for free televisions scheme they spent Rs.780 crores.

    Idhu chumma Karnataka election kku kidacha oru issue. Cine frield peoplekkum oru time pass.

    Satyaraja spoke like a 3rd rated person.

    ReplyDelete
  7. கர்நாடகத்தில்ருந்து ஒரே ஒரு ஆசாமி, மொழி வெறி பிடித்து முட்டாளதனாமாக கூச்சலிடாத காரணத்திற்காக அவர் (அதிலும் நேர்மையின்றி) சொன்னதை தெளிவான குரல் என்பதெல்லாம் மகா அபத்தமாக மட்டுமில்லாமல் அநியாயமாகவும் தெரிகிறது.

    கலைஞர் அப்படி என்ன ஆத்திரமூட்டும் வகையில் சொன்னார்? தங்களுக்கு உரிமையுள்ள விஷயத்தை, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாத விஷயத்தை எப்பாடு பட்டாவது நிறைவேற்றுவோம் என்று பேசுவது எப்படி ஆத்திரமூட்டுவது ஆகும். மேலும் முதலில் பிரச்சனையை துவக்கியது யார்? கர்நாடகத்தில் இதை வைத்து முட்டாளதனமான வாதங்களுடம் அரசியல் செய்ய முனைந்த போது பதில் தராமல் வேறு என்ன செய்ய வேண்டுமாம்?

    தங்கள் மாநிலம் பிரச்சனையை அபத்தமாகவும் அயோகியத்தனமாகவும் துவங்கியிருக்க, மொழி வெறியுடன் தமிழர்களை தாக்கி, சேனல்களை தடை செய்திருக்க, இந்த நஞ்சு கௌடா கருணாநிதி பிரச்சனையை துவக்கியதாக பொய் சொல்கிறார்; தங்கள் ஊர் மொழி வெறியர்களை புரிதல் இல்லாமல் செய்வதாக செல்லமாக தட்டி கொடுக்கிறார். இந்த நேர்மையற்ற பேட்டியை பாராட்ட, தமிழர்களுக்கு எதிரான மிக பாரபட்சமான ஊடகத்திற்கு காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கு எல்லாம் என்ன வந்தது?

    ReplyDelete
  8. குப்பன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    //////Last week Kumudham issuela Gnaani miga Thelivaaga solli irukkiraar. Jayalaitha aatchi kaalathil oru thurumbai kooda etuthu poda villai for Ohenakkal plan.


    Kalaignarum panam illai endru solla mudiyaathu , because ohenakkal plan requires Rs.650 crores but for free televisions scheme they spent Rs.780 crores.///////

    நீங்கள் சொல்வது சரி,ஜெ.இதில் எந்த முனைப்பும் காட்டவில்லை.

    பணம் இல்லை என மகள் மூலமாக முதல்வர் மு.க.கூறுவதும் ஏற்புடையதல்ல,மருத்துவர் ராமதாசு சரியாகவே கேட்டிருக்கிறார்.
    ஆனால் எவரும் பதில் சொல்ல மாட்டார்கள்.

    ReplyDelete
  9. ரோசாவசந்த்,
    வாங்க,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
    எனக்கொன்றும் முதல்வர் மு.க. விரோதியல்ல.
    இந்த விதயத்தில்,முதலில் தேவையில்லாத நிலையில்,கன்னட வெறியர்கள் எப்படி எதிர்வினை செய்வார்கள் என்பதெல்லாம் அறிந்தும்,முண்டா தட்டினார்.
    காட்டாக,வீரப்பன் நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியபோது-இத்தனைக்கும் அதுவும் சட்டவிரோதமான காரியம்தான் - அவ்வளவு பதமாகவும்,இதமாகவும் நடக்கத் தெரிந்த முதல்வர்,இப்போது ஏன் இப்படி அவசரக் கோலத்தில் பேசியிருக்க வேண்டும் ?

    இரண்டாவது,அரசியல் காரணங்களுக்காக பின்னர் பின்வாங்கியது அதனினும் கேவலம்.

    மொத்த விவகாரத்திலும் அவர் ஒரு கட்சித் தலைவராகவும்,பெருமைமிகு தந்தையாகவும் செயல்பட்டதே,முதல்வராக செயல்பட்டதை விட முன்னிற்கிறது.

    ஆனால் கன்னடர்கள் கிறுக்குப் பிடித்து ஆடும்போதும்,சென்ஸிபிளாகப் பேசும் கவுடா பாராட்டப் பட வேண்டியவர்.

    அதுவே நான் சுட்ட விரும்பியது.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...