அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக அடி வாங்கி வருவதும்,அதன் டாலர் மதிப்பு உலகின் பெரும்பாலான நாணயங்களுக்கெதிராக குறைந்து வருவதும் நாமெல்லோரும் அறிந்ததே.இதன் விளைவாக இந்திய ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 29 சதத்திலிருந்து 22 சதமாக குறையலாம் என்று கணிப்புகள் சொல்கின்றன.
இந்த மோசமான சூழலுக்கு,சரிந்துவிட்ட சந்தை விற்பனை முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது;விற்பனை சரிவு மக்களின் கைகளில் செலாவணி/பணம் இல்லாத நிலையால் வருகிறது.
இதன் விளைவாக அமெரிக்க குடியிருப்புக் கட்டுமானத் துறை,கடுமையான விளைவுகளைச் சந்தித்து விலைகள் சரிந்து கொண்டு இருக்கின்றன.
இன்னொரு புறம் கனிம எண்ணையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான விலையேற்றம்;ஒரு கேலன்/பேரல் அளவில் சுமார் 46 டாலராக இருந்த எண்ணை விலை இப்போது 91 டாலராக இருக்கிறது.இந்த விலையேற்றம் உற்பத்தித்துறையை கடுமையாகப் பாதித்து லாப விகிதங்களை பெருமளவு குறைப்பதோடு,சந்தை விலையையும் ஓரளவிற்கு ஏற்றுகிறது;விளைவு உபயோகிப்பாளர் கையிலும் பண இருப்பு குறைகிறது,முதலாளிகளும் குறைந்த லாபமே பார்க்க முடிகிறது;முதலாளிகள் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு விலை ஏற்றவும் முடியாது,ஏனெனில் விற்பனை ஏற்கனவே சரிந்து கிடக்கிறது.இப்படி ஏகப்பட்ட சிரமதசையில் இருக்கிறது பெரியண்ணன் வீடு !
அமெரிக்க நாட்டின் தலைமை மற்றும் அரசின் வங்கிக்கு ஃபெடரல் வங்கி என்பது பெயர்.கிரீன்ஸ்பான் என்ற மகானுபவர்,அவர் ஓய்வடைந்த(2005 என நினைக்கிறேன்) காலம் வரை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஃபெடரல் வங்கியின் தலைவராக இருந்தார்.அமெரிக்க தேசத்தின் பொருளாதார உச்சங்கள் மற்றும் வீழ்ச்சிகளைக் கடந்து வந்த அவரின் பொறுப்புக் காலம்,அவருக்கு ஒரு உச்ச பிம்பத்தைக் கொடுத்திருந்தது;வட்டி விகிதங்கள் மாறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சமயங்களில் அவர் தும்மினால் கூட பங்குலகமும்,டாலர் மதிப்பும் ஏறி,இறங்கி பில்லியன் டாலர்கள் கணக்கில் பலருக்கு லாபமோ,இழப்போ ஏற்பட்ட சூழல்கள் உண்டு.
சுமார் 2 சதவிகிதமாக இருந்த அமெரிக்க வட்டி விகிதத்தை சுமார் 6 சதம் வரை உயர அவரின் பணிக்கால கடைசி ஆண்டுகளின் நடவடிக்கைகளும் காரணம்.
அமெரிக்காவில் ஃபெடரல் வங்கியின் தலைவர் வங்கி எடுக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்காகவும்,பொருளாதார நிலை பற்றியும் குறித்த இடைவெளிகளில் அமெரிக்க காங்கிரஸ்-செனட் சபை-க்கு விளக்கம் அளிக்க வேண்டும்;அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்களின் சந்தேகங்கள்,அச்சங்கள் பற்றிய வினாக்களை எழுப்பி ஃபெடரல் தலைவரின் கருத்துக்கள்,முடிவுகளைக் கேட்பார்கள்.இந்நேரங்களில் ஃபெடரல் வங்கி தலைவர்கள் அளிக்கும் ஒவ்வோரு வார்த்தையிலும் பங்கு மற்றும் செலாவணி சந்தை பல குட்டிக்கரணங்கள் அடிக்கும்.
தற்போது ஃபெடரல் வங்கித் தலைவராக பென் பெர்னாக்கி(கே) இருக்கிறார்.முக்கால் வழுக்கைத் வெளுப்புத் தாடிக்காரரான இவர் நேற்றிரவு அமெரிக்க காங்கிரஸுக்கு அளித்த உரையில், சரிந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தை சீர் செய்ய சில அவசரகால நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.மேலும் வட்டி விகிதங்கள் சுமார் 0.5 சதத்திலிருந்து 0.75 சதம் வரை ஒரே வீச்சில் குறைக்கப்படலாம் என்ற வதந்திகள் உலவுகின்றன.சாதாரணமாக வட்டி விகித மாற்றங்கள் 0.25 சத பரிமாணங்களில்தான் மாற்றப்-அதிகரிக்கவோ,குறைக்கவோ-படும்,என்பதை கருதும் போது ஃபெடரல் வங்கி எத்தகைய ஒரே வீச்சு-sweeping action- நடவடிக்கைகளை யோசித்துக் கொண்டிருக்கிறது என்பது புரியும் !!!
பொருளாதார மந்தநிலை சற்றேனும் சீராக வேண்டுமெனில் மக்களின் கைகளில் புழங்கும் பணத்தைக் கூட்டியாக வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கிறது அமெரிக்க உள்நாட்டு வர்த்தக நிலை.
சுமார் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வரிகளில் வெட்டு போன்ற நடவடிக்கைகளை, பதவியின் கடைசிக்காலத்தில் இராக்,ஆப்கன் போன்ற ஏகப்பட்ட தலைவலிகள்,திருகுவலிகளில் அகப்பட்டிருக்கும் புஷ் யோசித்துக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்கப் பொருளாதார நாடகத்தில் புதிய காட்சிகளின் அரங்கேற்ற வேளை இது !
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
அறிவன், அங்கே நம் நாட்டுப் பிள்ளைகளும் பிழைப்புக்காகப் போயிருக்கிறார்களே.
ReplyDeleteஅவர்கள் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும்:((
வாங்க வல்லிசிம்ஹன்,
ReplyDeleteஉங்க எதிர்பார்ப்பும்-பொதுவாகவே பெரும்பாலான இந்தியர்களின் எதிர்பார்ப்பு இந்த வகையில்தான் இருக்கும்.
ஆனால் சேவைத் துறை அவ்வளவு மோசமாக அடிவாங்குவதாகத் தெரியவில்லை;எனவே ரொம்ப பயம் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.
ஏனெனில் அமெரிக்க பொருளாதாரத்தில்,முக்கியமாக சேவைத்துறை வெளிநாடுகளின் மனிதவளத்தை நம்பித்தான் இருக்கிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் !
அறிவன் அவர்களே!
ReplyDeleteவட்டி வீத அதிகரிப்பு என்றால் என்ன?
நாங்கள் வங்கியில் இருந்து பெறும் பணத்திற்கான வட்டியா? அல்லது நாங்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்திற்கான வட்டியா?
இந்த வட்டி மாற்றம் எவ்வாறு பங்குச்சந்தயைப் பாதிக்கிண்றது?
அறிவன் அவர்களே!
ReplyDeleteவட்டி வீத அதிகரிப்பு என்றால் என்ன?
நாங்கள் வங்கியில் இருந்து பெறும் பணத்திற்கான வட்டியா? அல்லது நாங்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்திற்கான வட்டியா?
இந்த வட்டி மாற்றம் எவ்வாறு பங்குச்சந்தயைப் பாதிக்கிண்றது?
Kuppan_2007 says
ReplyDeleteUS economy is basically war based economy and so we could expect another war (probably with Iran or Kenya).
The presidential election is also approaching and hence we could expect another war at any time.
Economic recession and recovery will be in different forms in different period. The recession & recovery need not be same as happened 5 or 10 years ago.
Newspapers & TV & internet Media got a good topic for next 6 months.
Chennai or Madurai il ulla suppanukkum, munusamykkum endha economy valarndhaalum iranginaalum oru effectum vara povadhu kidayaathu.
Vaazthukkaludan
Kuppan_2007
குப்பன்,
ReplyDeleteநன்றி,வருகைக்கும்,கருத்துக்கும்..
மதுரையில் உள்ள குப்பன்/சுப்பனின் மகன்,மகள் யாராவது அமெரிக்க உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களில் பணி செய்தால் அவ்வாறு வாளாவிருக்க முடியாதே?????
அனானிப் புள்ளி,
உங்கள் கேள்வி நல்ல கேள்வி.
பார்வையாளர் எவரும் பதில் கொடுக்கிறார்களா பார்ப்போம்;இல்லையெனில்
சிறிது பொறுத்து வந்து விரிவாகவே விளக்குகிறேன்.