இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்த பொருளாதார விளைவால் கடும் பாதிப்படைந்துள்ளதாக புகார் செய்து அரசிடமிருந்து மானியம் வேண்டினார்கள்.
இந்திய நிதி அமைச்சகம் ஆரம்பநிலையில் சிறிது நிவாரணம் அறிவித்ததென நினைக்கிறேன்;ஆனால் பிறகு நிதி அமைச்சர் ப.சி. இத்தகைய நிவாரணங்களை அரசிடம் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல என்றும்,அவர்கள் இந்த விளைவுகளுக்கேற்ற தொழில் உத்திகளைக்(டாலருக்குப் பதிலாக யூரோ அல்லது பவுண்ட் கணக்கில் ஏற்றுமதி செய்வது அல்லது டாலரின் வீழ்ச்சியை கருத்தில் கொண்ட விலைத்தகவுகள்) கையாள வேண்டும் எனவும் அறிவித்தார்.
இது சம்பந்தமாக ரூபாய் மதிப்பு டாலருக்கெதிராக உயர்வது நல்லதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாததாகிறது.
இந்த நிலையில் குருமூர்த்தியின் பின்வரும் கருத்துக்கள் சிந்திக்க வேண்டியன.
கடந்த பல மாதங்களாகப் பத்திரிகைகளில் ரூபாய் மதிப்பு உயர்வு, டாலர் மதிப்பு சரிவு, டாலர் விலை குறைவதால் ஏற்றுமதி பாதிப்பு என்பது பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டாலர் விலை குறைவு என்பது,
நம் நாட்டைப் பொறுத்தவரையில் ரூபாய் மதிப்பு அதிகம் என்று அர்த்தம்.
கடந்த 2007 பிப்ரவரி மாதத்தில் ஒரு டாலர் விலை ரூ.45 என்று இருந்தது. இன்று
ஒரு டாலர் விலை, ரூபாய் கணக்கில் ரூ.39.50 என்று குறைந்திருக்கிறது. அதாவது கடந்த 10 மாதங்களில் டாலர் விலை, ரூபாய் கணக்கில் 12 சதவிகிதத்திற்கு மேல் குறைந்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவிலிருந்து ஒருவர் இங்கு வந்து எனக்கு ரூ.450 வேண்டும்; அதற்கு டாலர் விலை என்னவோ அதைக் கொடுத்துவிடுகிறேன்' என்று கேட்டால், அவருக்கு என்ன விடை கிடைக்கும்? ரூபாய் 450க்கு டாலர் கணக்கில் 10 டாலர் ஆகிறது. நீங்கள் 10 டாலர் கொடுத்தால் உங்களுக்கு 450 ரூபாய் கிடைக்கும். அதே அமெரிக்க நண்பர் இப்போது வந்து ரூ.450 வேண்டும்' என்று கேட்டால், அவர் 11.40 டாலர் கொடுக்க வேண்டும்.
ஆக, அதிக டாலர் கொடுத்து அதே அளவு ரூபாயைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால், இது நாட்டுக்கு நல்லதா, கெட்டதா என்கிற கேள்வி எழுகிறது. காரணம், டாலர் விலை குறைவு ஏற்றுமதியைப் பாதிக்கிறது.
பிப்ரவரி மாதம் டாலர் கணக்கில் ஏற்றுமதி ஒப்பந்தம் செய்து, மே மாதம் சரக்கை ஏற்றுமதி செய்தவர்களுக்கு, இடைப்பட்ட காலத்தில் டாலர் விலை குறைந்ததால், என்ன ஆயிற்று? அவர்கள் ஏற்றுமதி செய்த சரக்குக்கு ரூபாய் கணக்கில் விலை குறைவாகக் கிடைத்து, நஷ்டம் அடைந்தார்கள். இதைக் கடந்த வாரம் பார்த்தோம். இந்த சங்கடத்திற்குக் காரணம் டாலர் விலையின் மதிப்பில் திடீரென மாற்றம் ஏற்பட்டதுதான்.
டாலர் விலை ஒரே சீராக, கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து, ரூபாயின் மதிப்பு
உயர்ந்திருந்தால், இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்காது.
சந்தைக்கு வந்த அதிகப்படி டாலர்களை மத்திய அரசின் கொள்கைப்படி கொள்முதல் செய்தது ரிசர்வ் வங்கி. இதனால் டாலர் மதிப்பை செயற்கையாக உயர்த்தி, ரூபாய் மதிப்பு செயற்கையாக அமுக்கி வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், அமுக்கப்பட்ட ரூபாயின் மதிப்பு திடீரென வெடித்ததால், ஏற்றுமதியாளர்களுக்கு எதிர்பாராத பிரச்சனை உருவெடுத்தது அரசின் தவறான கொள்கையால்தான். ரூபாயின் மதிப்பு உயர்வதும் தவறு; டாலரின் மதிப்பு குறைவதும் தவறு என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
சில சமயங்களில் ரூபாய் மதிப்பு, அளவுக்கு அதிகமாக உயர்வது நாட்டின் நலனைப் பாதிக்கலாம். ஆனால் பொதுவாக ரூபாய் மதிப்பு உயர்வதும், டாலர் மதிப்பு குறைவதும் நமது நாட்டுக்கு நல்லது. இரு உதாரணங்கள் மூலம் இதை விளக்கலாம் :
உதாரணம் 1 : 2007 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் நாம் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் டாலர் மதிப்பு சரிந்து, ரூபாய் மதிப்பு
உயர்ந்ததால், நமக்கு 14,200 கோடி ரூபாய் மலிவாகக் கிட்டியது. இதன் காரணமாகத்தான் உலகளவில் டாலர் கணக்கில் பெட்ரோல் விலை கிடுகிடுவென்று உயர்ந்த பிறகும், நம் நாட்டில் அந்த மாதங்களில் பெட்ரோல் விலையை அந்த அளவுக்கு உயராமல் பார்த்துக்கொள்ள முடிந்தது.
இதன் சூத்திரம் இதுதான். பெட்ரோல் விலை டாலர் கணக்கில் 20 சதவிகிதம்
உயர்ந்தது. ஆனால் டாலர் விலை ரூபாய் 12 சதவிகிதம் சரிந்தது. அதனால் பெட்ரோலின் விலை கூட்டிக் கழித்துப் பார்த்தால் குறைவாகவே உயர்ந்தது. இல்லையென்றால், குறைந்தபட்சம் 15.20 சதவிகிதமாவது உயர்ந்திருக்கும்.
ஆனால் மார்க்ஸிஸ்ட்களோ, மற்றவர்களோ ரூபாய் மதிப்பு உயர்வினால் ஏற்பட்ட மாற்றத்தினால்தான் பெட்ரோல் விலை ஏறவில்லை என்று கூறமாட்டார்கள்.
தங்களால்தான் உயரவில்லை என்று கூறுவார்கள். ரூபாய் மதிப்பு உயர்வதால், பொதுநன்மை ஏற்படுகிறது என்பது யாருக்கும் புரிவதில்லை. ஆனால் இதுபற்றிய பெரிய வரவேற்போ, அட்டகாசமான செய்திகளோ கிடையாது.
மாறாக திடீரென்று ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் அதுவும் அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாக அது திடீரெனறு ஏற்றுமதியாளர்களைப் பாதித்ததால்
ரூபாய் மதிப்பு உயர்வு தவறு என்ற கருத்து பலமாகப் பரப்பப்படுகிறது. ரூபாய் மதிப்பு குறைவால், பெட்ரோல் விலை அதிகரிக்கும். அதன் மூலமாக பொதுவிலைவாசி உயரும். இது பின்பு ஏற்றுமதியையும் பாதிக்கும். அதற்காக செயற்கையாக ரூபாய் மதிப்பைச் சரியாமலோ, அல்லது உயர்த்தாமல் இருக்கவோ அவசியமில்லை. இப்படிச் செய்யவும் கூடாது.
உதாரணம் 2 : ரூபாயின் மதிப்பு உயரும்போது, நமது நாடு வெளிநாடுகளுக்கு டாலர் கணக்கில் கொடுக்க வேண்டிய கடன் சுமை குறைகிறது. 2007 மார்ச் 31 வரை நாம் வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை 155 பில்லியன் டாலர்கள், (அதாவது 15,500 கோடி டாலர்கள்.) ஒரு டாலருக்கு ரூ.45 என்று 2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்த நிலைப்படி இந்த கடன் ரூபாய் கணக்கில் ரூ.6,97,500 கோடி. ஆனால், அதே டாலர் கணக்கிலான கடன் இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.85,250 கோடி குறைவு. இதற்கு என்ன அர்த்தம்? நம் ரூபாய் மதிப்பு உயர்ந்தால், நாம் டாலரில் கொடுக்க வேண்டிய கடன் தொகை குறையும். இந்த நல்ல செய்தியை யார் வரவேற்கப் போகிறார்கள்! பொதுவாக நாட்டுக்குத்தானே நல்லது ஏற்பட்டுள்ளது!
எப்படி ஒரு கம்பெனியின் பங்கு விலை ஏறும்போது, அந்தக் கம்பெனிக்கு மகத்துவம் ஏற்படுகிறதோ, அதுபோலவே ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்பு உயரும்போது அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பும் உயரும். இதனால் உலகரங்கில் நாட்டின் மரியாதை உயரும்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் வளரும்போது, அதனுடைய நாணயத்தின் மதிப்பும் உயரத்தான் செய்யும். ஒரு நாட்டில் அந்நிய நாட்டின் முதலீடு அதிரிக்கும்போது,
அந்நாட்டின் நாணய மதிப்பும் உயரும்.
பொதுவிதிகளுக்கு மாறாக, நமது அரசாங்கம் வேண்டுமென்றே டாலர் மதிப்பை செயற்கையாக உயர்த்தியும், ரூபாய் மதிப்பை செயற்கையாகக் குறைத்தும்
வந்ததால்தான், நம்முடைய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு தாற்காலிகமான நெருக்கடி ஏற்பட்டது. ரூபாய் விலை உயர்வது பொதுவாக நல்லது என்பதை அவர்களும் உணர வேண்டும். திருப்பூரிலும், கரூரிலும், சூரத்திலும், லூதியானாவிலும், கான்பூரிலும், ஆக்ராவிலும் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் திடீரென்று ஏற்படும் டாலர் விலை சரிவு ஆபத்தை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? அந்த ஆபத்தை எப்படிக் கணிப்பது? அந்த அறிகுறிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1. உலக அளவில், தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருந்தால், உலக அளவில் டாலர் விலை சரிகிறது அல்லது சரியப்போகிறது என்று அனுமானம் செய்யலாம். பெட்ரோல், கச்சா எண்ணெய் விலை உலக அளவில் உயர்ந்தாலும், டாலர் மதிப்பு சரிகிறது அல்லது சரியப்போகிறது என்று அனுமானிக்கலாம். இதனால் ரூபாய் மதிப்பும் உயரும் என்றும் எதிர்பார்க்க வேண்டும்.
2. மற்ற நாணயங்கள் (யூரோ, ஸ்டெர்லிங்) கணக்கில் டாலர் விலை குறைந்தால், ரூபாய் கணக்கிலும் டாலர் விலை சரியும் என்று எதிர்பார்க்க வேண்டும்.
3. நம் நாட்டில் வெளிநாட்டு மூலதனம் அதிகமாக அதிகமாக,
அந்நியச் செலாவணி கையிருப்பு உயர உயர, ஏற்றுமதி அதிகரிக்க, அதிகரிக்க, நம்முடைய ரூபாய் மதிப்பும் அதிகமாகும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
4. அமெரிக்கப் பொருளாதாரம் சீரழிய சீரழிய டாலர் மதிப்பு குறையும். அமெரிக்கா அதிக அளவு கடன் வாங்க வாங்க, அமெரிக்க சேமிப்பு குறையக் குறைய, டாலர் விலை சரியத்தான் செய்யும்.
இந்த நான்கு வகைகளிலும் கடந்த மூன்றாண்டுகளாக நமது ரூபாய் மதிப்பு உயரும் என்பது தமுக்கம் போட்டு அறிவிக்கப்பட்டும், நம் நாட்டில் ஏற்றுமதியில் ஈடுபட்டிருப்பவர்கள் ரூபாய் மதிப்பு உயரும் / டாலர் மதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கவில்லை என்றால், அது அவர்களுடைய கவனக்குறைவே. அரசாங்கம் அவர்களை கண்ணாமூச்சி காட்டி ஏமாற்றியது உண்மை. ஆனால், அவர்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.
Acknowledgements - Gurumurthi from Thuglak.
Kuppan-2007 says:
ReplyDeleteUS $ weakens against Indian rupee.
Very good post.
As u rightly said when an economy grows its currency will improve.
India is growing because of software industrys (more software projects), BPO,KPO, call centre industry's growth and that is why Indian economy has been growing and the currency is improving.
Indian rupee is improving not only against $ but also against UK£, Oman Rial, UAE Dirham and all other currencies.
Please read here what Swaminathan Ankaleshwar Iyer of Economic Times says, that
Rupee has appreciated less than yuan -
http://economictimes.indiatimes.com/Opinion/Columnists/Swaminathan_S_Anklesaria_Aiyar/Re_has_appreciated_less_than_yuan/articleshow/2632780.cms.
For NRI (who went to save money in short term [eriod) this may be a bad news but for Indian salaried class people, this rupee strengthening is good. For employers it is good.
But please remember India's infrastructure (roads, garbages, sewage clearance...) is not improved.
In 1990-98(Gujral, Deve gowda's period) when rupee was very weak no exporter had come forward to help Indian economy or Indian political system. It is shocking that textile mill owners now ask Govt's help for rupee strengthening.
Anbudan
Kuppan_2007
Gurumoorthy is asking govt to increase the money value even 2 years before.It may be the correct time to repay the dept from worldbank. Definitely export incentives are needed for short term.
ReplyDeleteKuppan,Welcome and Thanks for the comment & appreciations.
ReplyDeleteDevelopment of infrastructure in India is responsibility of governing bodies..Outside criterian will not work for it.
SathukkaBootham,
Thanks for comment.
Yes,based on inherent strength of rupee can be allowed to apprecaite.
Export incentives need to be time bound.
One more thing. When exporers get very good profit during lower indian money value period, they should invest their profit on TECHNOLOGY/Innovation and should improve their efficiency.So that they can improve their competitiveness. I heard that most of them get the money out and invest in real estate.
ReplyDeleteசதுக்க பூதம்,
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மைதான்,அதைத்தான் நான் இந்த வரிகளில் சொன்னேன்.
////////இத்தகைய நிவாரணங்களை அரசிடம் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல என்றும்,அவர்கள் இந்த விளைவுகளுக்கேற்ற தொழில் உத்திகளைக்(டாலருக்குப் பதிலாக யூரோ அல்லது பவுண்ட் கணக்கில் ஏற்றுமதி செய்வது அல்லது டாலரின் வீழ்ச்சியை கருத்தில் கொண்ட விலைத்தகவுகள்) கையாள வேண்டும் //////////
See this link about indian cloth/shoe export industry
ReplyDeletehttp://sinnakuddy1.blogspot.com/2008/01/blog-post_08.html