குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (4) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (7) விளையாட்டு (3)

Sunday, January 20, 2008

40.யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும்

தெகா யோகா பற்றிய ஒரு பதிவு போட்டு,பாரி அரசு முதலான சிலர் அதற்கு சில எதிர்வினைகள் செய்ய,நானும் எனது கருத்துக்கள் சொல்ல,ஒரு பெரிய பின்னூட்டப் போட்டியும், ‘உம் பேச்சு கா’ போன்ற வகையான எதிர்-எதிர் வினைகளும் வர,சொல்ல விரும்பியவற்றை விளக்கமாகவே சொல்லி விடலாம் என்று இந்தத் தனிப் பதிவு.

இதில் யோகம் பற்றி நான் படித்து அறிந்தவைகளும்,நான் அனுபவித்து அறிந்தவகைகளும் பெரிதளவாகவும்,அதனைப் பற்றிய எனது மேலதிக கருத்துக்கள் சிறிதளவும் உண்டு.

கருத்து 1:
யோகப் பயிற்சி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்களைப் போன்ற பலன்களை எளிதாகத் தருகிறது.

நானறிந்தது:

யோகப் பயிற்சி உடற்பயிற்சி செய்வதால் கிடைப்பது போன்ற பலன்களைத் தருவதில்லை;அதைவிட சிறந்த பலன்களைத் தருகிறது.ஏனெனில் உடற்பயிற்சி செய்வதால் உடலின் தசைநார்கள் கசக்கப்பட்டு முறுக்கேற்றப் பட்டு கெட்டித்தன்மை அடைவதோடு தேவையற்ற உபரி தசைகள்,கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் வடிவுடன் கூடிய தசைக்கட்டமைப்பைப் பெறுகிறது.
நாளாவட்டத்தில்,உடற்பயிற்சி செய்வது குறைந்தால்,அல்லது நின்றுவிட்டால் மீண்டும் அதிகப்படி எரிக்கப்படாத சக்தி கொழுப்பாக தசைகளில் சேகரிக்கப்பட்டு,எந்தெந்த உடலின் பகுதிகள் அதிக அசைவோ கசக்கப்படலோ இல்லாமல் இருக்கின்றனவோ(ஆண்களுக்கு பெரும்பாலும் அடிவயிற்றில் ஆரம்பித்து,மேல்வயிறு வரை வயிற்றின் மூன்று பாகங்கள்,மற்றும் இடுப்பு,பிருஷ்டம்,அந்த நிலையையும் தாண்ட,தொடைகள்,கழுத்து,கன்னங்களுக்குக் கீழ்ப்பகுதி மற்றும் மார்பு,பெண்களுக்கு முதலில் பிருஷ்டம்,இடுப்பு,வயிறு,தொடைகள்,மேல் கைப்பகுதி ,கழுத்து,கன்னங்களின் கீழ்ப்பகுதி என்ற வரிசையில்..)அங்கு தசைக்கூட்டம் சேர்கிறது.

உடற்பயிற்சி அதிக அளவு சக்தி/கொழுப்பை எரித்து தசைகளின் சமசீர்த் தன்மையை நிலைநிறுத்துகிறது.ஆனால் அது உடலின் உட்கருவிகளில் எந்த முன்னேற்றத்தையோ,சிறப்பான உபயோகத்தன்மையையோ தூண்டுவதில்லை;எடுத்துக்காட்டாக சிறுநீரகங்களையோ,பித்தப்பையையோ சிறப்பாக வேலை செய்ய வைத்து அவற்றின் ஆரோக்கியத்தை நிலை நிறுத்துவதோ,உச்ச பட்ச திறனிலோ-optimized utility value status- வைப்பதில்லை.

யோகப்பயிற்சியோ 25 சதம் வெளிப்புற தசைகள் மற்றும் 75 சதம் உட்புற கருவிகள்,சுரப்பிகள் முதலியவற்றில் செயல் புரிகிறது.எனவே முதலில் உடலின் உட்கருவிகளின் உச்சபட்ச செயல்பாட்டுத் திறன் காக்கப்படுகிறது;பின்னரே உடலின் தசைகளின் மேல் யோகப் பயிற்சி செயல்படுகிறது.

எனவே தொடர்ச்சியாக யோகப் பயிற்சி செய்வோரின் உடலியக்க நிலை optimized status ல் இருக்கிறது.

இதன் காரணமே உடற்பயிற்சி செய்பவர்கள் கூட சிலநேரம் நீரிழிவு போன்ற நோய்களுக்குள்ளாவது நேரிடுகிறது;ஆனால் தொடர்ச்சியாக சர்வாங்காசனம் செய்துவரும் ஒருவருக்கு சாதாரணமாக-அவர் தன்னுடலை விரும்பிக் கெடுத்துக் கொண்டாலொழிய-நீரிழிவு வர வாய்ப்பில்லை.

எனவே யோகப் பயிற்சி உடற்பயிற்சியை விட பல மடங்கு நல்லது.
ஆனால் யோகப் பயிற்சியையும் உடற்பயிற்சியையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது;காரணம் உடற்பயிற்சியின் நோக்கமும் செயல்பாடும் முழுக்க முழுக்க இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி,சக்தியை எரிக்கச் செய்து,அதிகப்படி கொழுப்பைக் கரைப்பதே;ஆனால் யோகத்தில் சில நேரம் அதிக சுவாசமும்,சில நேரம் மட்டான நிதான சுவாசமும்,செய்யும் ஆசனங்களைப் பொறுத்து பரிந்துரைக்கப் படுவதால்,இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வதால் இரத்த ஓட்டத்தில் ஒத்திசைவு பாதிக்கப்படும்.எனவேதான் அதைத் தவிர்க்கும் ஆலோசனை.

கருத்து 2:
யோகப்பயிற்சி,மூச்சுப்பயிற்சி,தியானம் இவற்றின் வரிசைக்கிரமம்:
முதலில் மூச்சுப்பயிற்சி,பின்னர் யோகப்பயிற்சி அதன்பிறகு தியானம் என்பதே சரியான வரிசை.

நானறிந்தது:
யோகப் பயிற்சிக்கு நல்ல காற்றொட்டமுள்ள,ஆனால் தூசிகள் நிலவாத,நேரடி வெயிலில் இல்லாத சூழல் ஏற்றது.
மூச்சுப்பயிற்சியும் யோகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை;ஏனெனில் இரண்டும் உடலியக்கத்தின் பாற் பட்டவை.தியானம் என்பது மனோ இயக்கத்தின்பாற் பட்டது;எனவே யோகப் பயிற்சியோடு தியானப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது தேவையற்றது.ஆனால் தொடர்ந்த யோகப்பயிற்சி மனதை,சிந்தனையை எளிதான தியான நிலைக்கு அழைத்துச்செல்ல உடலை ஏதுவாக்குகிறது.

இனி வரிசைக்கிரமத்தில் யோகப் பயிற்சி (சூர்ய நமஸ்காரம் போன்ற) எளிய ஆசனங்களுடன்ஆரம்பித்து சிரசாசனத்தில்(பொதுவாக) முடிந்து,பின்னர் மூச்சுப்பயிற்சி அல்லது பிராணாயாமம்,அதன்பின் சவாசனம்-அதாவது உடலை முழுதாக சவம் போன்ற நிலைக்கு கொண்டு செல்லல்- என்ற வரிசையே யோகத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
காரணம் எளிய ஆசனங்கள் முதல் கடின ஆசனங்கள் வரை உடலின் பல கருவிகளும்,சுரப்பிகளும் தூண்டப்படுகின்றன;கடைசியாக செய்ய வேண்டிய சிரசாசனம்-தலை கீழாக நிற்றல்- உடலின் ரத்தம் முழுமையையும், புவியீர்ப்பு விசையைத் தனக்கு உதவி செய்ய வைத்து,மூளையை நோக்கி செலுத்தி,சாதாரண நிலையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேலே செல்ல வேண்டிய ரத்தம் மூளையின் சகல நரம்பு மண்டலத்திற்கும் செல்வதில் இருக்ககூடும் ஏதேனும் சிறுசிறு குறைகளையும் தகர்த்து மூளையின் சகல நரம்புகளிலும் முழுதான ரத்த ஓட்டத்தைத் தருகிறது.

இதன்பிறகு பிராணாயாமம் அல்லது மூச்சுப்பயிற்சி செய்யும் போது,யோகப் பயிற்சியின் போது அந்தந்த ஆசனங்களின் காரணமாக நடந்த விரைவு ரத்த ஓட்டம்,மெதுவான ரத்தஓட்டம் ஆகியவை சமன்செய்யப் பட்டு,இரத்த ஓட்டம் சீரடைகிறது.

பின்னர் செய்யப் படும் சவாசனம் ,மூச்சு விடுதலைத் தவிர,உடலின் சகல இயக்கங்களையும் நிறுத்தி உடலை ஆசுவாசப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

சில மேலதிகக் குறிப்புகள் :

*யோகப் பயிற்சியின் மூலம் குடலை நேரடியாகச் சுத்தம் செய்யும் முறை,நன்கு மழுப்பப்பட்டு,எண்ணை தடவப்பட்ட,ஒரு மூங்கில் குழாய்(ஆசனவாய் மூலம் எனிமா கொடுப்பது போல) உதவி கொண்டு யோகத்தின் மூலம் ஆசனவாயின் மூலம் தண்ணீரை பெருங்குடல் வரை உள்ளிழுத்து,நாள்பட்ட மலச்சிக்கல்களினால் ஏற்பட்டிருக்கும் கசடுகளையும் வெளியேற்றும் வழி கூட பரிந்துரைக்கப்படுகிறது.இதைக் கேட்டு தற்காலத்தில் பலர் சிரித்து எள்ளக் கூடுமெனிலும் இது உண்மை.யோக நிபுணர்கள் இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சாதாரணமாக செய்து கொண்டிருந்தார்கள்.

*பிறவிக் குறைகளான இரத்த சோகை,பெற்றொரிடமிருந்து பெற்ற நீரிழிவு,கண்பார்வைக் கோளாறுகள்,ஈஸ்னோபீலியா என்றழைக்கப்படும் மூக்கடைப்பு சார்ந்த இளைப்பு,கண்களுக்கு மேல் நீர் கட்டுதல்,பெண்/ஆண் மலட்டுத்தன்மை (உரிய மருந்துகளின் உதவியோடு) போன்ற நோய்கள் முற்றாகக் குணமடையும் வாய்ப்புகள் உண்டு;ஆனால் பொறுமையும்,விடாமுயற்சியும் அவசியம்.

*யோகப் பயிற்சியில் ஆசனங்கள் சொல்லியிருக்கும் நிலையை-position- முற்றாக அடைந்தால்தான் பலன் உண்டு என்பதல்ல;முழு நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்பதோடு,எந்த அளவில் முயற்சி செய்தாலும் யோகத்தின் பலன் உண்டு.எனவே முதல் நாளே ஹலாசனத்தில் கால்கள் செங்குத்தாக மேல்நோக்கி நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை;சிறுகச் சிறுக பழகலாம்,பழகிய அளவில் பலன் உண்டு.

ஆர்வமுடையவர்கள் திரு யோகாச்சார்யா சுந்தரம் அவர்கள் எழுதிய சுந்தர யோக சிகிச்சையை நாடலாம்;ஆசனங்கள் செய்யும் வழிமுறைகள்,உடலியக்க 'அரசியல்'(அப்பாடா,நானும் 'சூப்பர்' வலைப்பதிவர்!) ஆகியவற்றை விளக்குவதோடு,பெரும்பாலான தீர்க்க முடியாதவை எனக் கருதப்படும் நோய்களுக்கும் யோக சிகிச்சைத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ள மிக அருமையான புத்தகம்.புத்தக ஆர்வலர்களின் வாழ்நாள் சேகரிப்புக்கான பரிந்துரை.


(அப்பாஆஆஆ,,,போதுமடா சாமி,ரொம்பக் கண்ணக் கட்டுது !!!!!!!!!)

9 comments:

 1. Hi அறிவன்

  nice article very useful for your point of view is correct becasue I study yoga in University.

  please you write more article of yoga thank you share with you

  yours
  siva
  pondicherry
  sivayoga123@yahoo.co.in

  ReplyDelete
 2. திரு. அறிவன்,

  மிக நீண்ட விளக்கங்களுக்கு நன்றி. என்னுடைய பதிவிலும் உங்களுடைய இணைப்புள்ளதால், எந் நேரத்திலும் என் பதிவில் குழப்பிக் கொண்டவர்கள் இங்கே தாவி வந்தால் முடிந்து விடும் அவர்களின் குழப்பம்.

  //(அப்பாஆஆஆ,,,போதுமடா சாமி,ரொம்பக் கண்ணக் கட்டுது !!!!!!!!!)//

  இதுக்கே கண்ணைக் கட்டுதுன்னா, இன்னமும் எவ்வளவோ இருக்கே... :)

  மீண்டும் நன்றி, தனிப்பதிவாக இட்டமைக்கு.

  ReplyDelete
 3. சிவா,
  வாங்க,வருகைக்கும்,கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
  கட்டாயம் முடிந்த அளவு எழுதுகிறேன்.

  தெகா,

  உங்களின் பல நன்றிகள் என்னை பனிக்க வைக்கின்றன;உண்மையில் சில நல்ல தகவல்களை பதிவுலகத்திற்கு அளிக்க ஏதுவாக இருந்த உங்கள் பதிவுக்கே நன்றி.

  //////என் பதிவில் குழப்பிக் கொண்டவர்கள் இங்கே தாவி வந்தால் முடிந்து விடும் அவர்களின் குழப்பம்////////

  குழப்பம் தீர்ந்தால் மகிழ்ச்சிதான்.

  யோகம் மட்டுமல்ல,வாழ்வியல் சார்ந்த பல நுண்கலைகளிலும் எனக்கு உள்ள இயல்பான ஆர்வமே,இப்பதிவு சம்மந்தமாக எழுந்த பல தவறான புரிதல்களை நீக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

  //////இதுக்கே கண்ணைக் கட்டுதுன்னா, இன்னமும் எவ்வளவோ இருக்கே... :)///////

  வாங்க,வாங்க,வாழ்ந்து பாத்துடுவோம் !

  ReplyDelete
 4. ஸ்ரீராம்,சென்னைJan 21, 2008, 7:48:00 PM

  மிக அருமையான பதிவு...
  குட்டைகள் குழப்பிய பலரின் எழுத்துகளுக்கு தெளிவான விளக்கம்..

  Please write such more posts in future.

  ReplyDelete
 5. வாங்க ஸ்ரீராம்,
  நன்றி,கருத்துக்கும் பாராட்டுக்கும்.

  பொதுவாக தமிழ் வலையுலகில் எதையும் முழுதாகப் புரிந்து கொள்ளாமல்,அனைத்தும் தெரிந்து புரிந்தது போல ஜெர்க் விடுதலே நிறைய இருக்கிறது.
  எனவே நன்றாகத் தெரியும் பட்சத்தில் நாம் தெளிவுபடுத்த வேண்டியவர்களாகின்றோம்.

  நிச்சயம் எழுத முயற்சிக்கிறேன்.

  மீண்டும் நன்றிகள்.

  ReplyDelete
 6. மிகவும் நல்ல பதிவு!

  //எனவே முதல் நாளே ஹலாசனத்தில் கால்கள் செங்குத்தாக மேல்நோக்கி நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை//

  என்ன சொல்கிறீர்கள்?! கால்களை செங்குத்தாக நிறுத்துவது ஹலாசனத்தில் இறுதி நிலை அல்லவே! வான்பார்த்துப் படுத்த நிலையிலிருந்து, முழங்கால்களை மடக்காமல் இரு கால்களையும் மேலே கொண்டு சென்று, அத்துடன் செங்குத்தாக நிறுத்தாமல், முழங்கால்களை மடக்காமல், தலைக்கு மேல் கால்களைக் கொண்டு சென்று, கால் கட்டைவிரல்கள் தரையைத் தொடுவதல்லவா முழுமையான ஹலாசனம்?

  எங்கோ குழப்பம்! :(

  -முத்துஸ்வாமி.

  ReplyDelete
 7. நண்பர் முத்துஸ்வாமி,
  நன்றி.
  ஒரு எடுத்துக்காட்டில் சொன்னேன்.ஹலாசனத்தில் மெதுவாக முடிந்தவரை கால்களை கொண்டு செல்லலாம்;செய்த வரைக்கும் பலன் உண்டு என்பதைக் குறிக்கவே சொன்னேன்.

  ReplyDelete
 8. இது போன்ற பதிவுகள் வரவேற்கப்படவேண்டும்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • பறக்கும் தட்டு - ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்ட...
  1 week ago
 • ராமதுரை காலமானார் - அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார். இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பத...
  3 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  1 year ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  1 year ago