ஒரு வழியாக சரத்குமாரும் கட்சி துவக்கி விட்டார்.
தமிழ்நாட்டில் அரங்கேறும் புதிய காட்சிகள் விரிவது திருப்பங்கள் நிறைந்த ஒரு திரைப்படம் போன்றே இந்நாட்களில் தோன்றுகிறது.
ஆயினும் 60 களில் இருந்து திரைத்துறையைச் சார்ந்தவர்கள் அரசியலில் கை வைத்துப் பார்ப்பது எந்த மனோபாவத்தில் என்பது ஒரு விவாதத்திற்குரிய கேள்வி.
சிறிது யோசித்துப் பார்த்தால் எனக்குப் பின்வரும் காரணங்கள் தோன்றுகின்றன.
1.தமிழ்த்திரையுலகில் திகட்டும் அளவுக்குக் திரை நட்சந்திரக்களுக்குக் கிடைக்கும் தனி மனிதத்துதி.இது அவர்களுக்கு,கடவுளுக்கு அடுத்தபடி நாம் என்ன நினைத்தாலும் நடத்திவிடலாம் என்ற துணிவைத் தருகிறது.
2.இந்த துதிபாடுதலால் கிடைக்கும் விளம்பர வெளிச்சமும்,பொது மக்களின் அருகாமையும்.
3.இந்த அருகாமை அளிக்கக் கூடிய கருத்தேற்புத் திறன்-receptiveness-அவர்கள் சொல்வது பெரும்பான்மையான மக்களுக்கு எளிதில் ஊடகங்களால் கடத்தப்படுகிறது.இந்த திரை வெளிச்ச மாயைப் புகழ் இதனை வெகுவாக எளிதாக்குகிறது.ஒரு அரசியல் பார்வையாளரோ,வேறு துறைகள் சார்ந்த வல்லுனர்களோ தத்தம் அரசியல்,தேசியம்,சமூகம் சார்ந்த கொள்கைகளை இவ்வளவு எளிதாக மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக கொண்டுசெல்ல முடியாது.(60 களில் திராவிட இயக்கப் பேச்சாளர்கள் இந்த receptiveness’ஐ அடைய வேறு ஒரு உத்தியை மிக வெற்றிகரமாக கையாண்டார்கள்.அது பெரும்பான்மையான மக்களின் வழக்கமாக சமூகத்தில் இருக்கும் ஒரு தத்துவத்தை கடுமையாக மறுதளிப்பது.இது மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வைக்கும் ஒரு மனோதத்துவ உத்தி)
இந்த அனுகூலங்கள் கிடைக்கும் போது திரை நட்சத்திரங்கள் அடுத்ததாக அரசியலையும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று இயல்பாக நினைக்கிறார்கள்.
இது(திரை நடிகர்கள் அரசியலில் ‘கை வைத்துப்’ பார்ப்பது) தவறு என்று கூறுவது என் நோக்கமல்ல.இன்னும் சொல்லப் போனால் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் போன்றோரின் வரவு ஒரு வகையில் நல்லதே.ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்த வரை இரு திராவிடக் கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகவே(அல்லது ஒரு குட்டையின்..) இருக்கின்றன.மற்ற அனைத்துக் குட்டிக் கட்சிகளும் ஜாதிக் காரணங்களை முன்னெடுத்துச் சென்றே அரசியல் முகமூடிகளை மாட்டிக் கொண்டன.இவை பெரும்பான்மையான மக்களால் இன்னும் வரவேற்கப்படாமல் இருக்கவேண்டியது தமிழகத்தின் நலன் சார்ந்த வகையில் முக்கியமான ஒன்றாகும்.
ஒரு அரசியல் கட்சி துவக்கப்படும் போது அதன் தேவையைப் பற்றிய கேள்விகள் எழவேண்டியது ஒரு நல்ல நிலையில் இருக்கும் சமூகத்தின் கூறுகளில் ஒன்று.அதற்கு அந்த அரசியல் கட்சியைத் துவக்குபவர்கள் ஒரு தெளிவான declaration கொடுப்பார்கள்.அது போன்ற declaration எதுவும் சரத்குமார் கொடுத்ததாக ஊடகங்கள் சொல்லவில்லை.விஜயகாந்த் கட்சி துவக்கிய போதாவது கட்சியின் நோக்கமாக பெரிதாக எதுவும் சொல்லவில்லை,ஊழலற்ற ஒரு நிர்வாகத்தைத் தர விரும்புவதாக சொன்னதைத் தவிர.
உண்மையில் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம் அதுதான்.தமிழகத்திற்கு தற்போது தேவையாக இருப்பது தெளிந்த,தொலைநோக்கு கொண்ட,ஒளிவு மறைவற்ற,ஊழல் இல்லாத ஒரு நிர்வாகம் மட்டுமே.
தமிழகத்தில் எந்த ஒரு கட்சி அரசியல் மூலமும் கிடைக்க வேண்டிய தேவையும் அதுதான்,ஏனெனில் 30,40 வருடங்களாக எந்த அரசியல் கட்சியும் அதைத் தரவில்லை.
மேலும் தமிழகமோ,இந்தியாவோ ஒரு பெரும் அழிவின் பிடியில் இருந்து மீண்ட சூழ்நிலையிலோ(ஒரு ஜப்பானைப் போல),நீண்டகால அடிமை ஆட்சியில் இருந்து விடுபட்ட நிலையோ(20’ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களின் இந்தியா,ஸ்ரீலங்கா,மலாயா,சிங்கப்பூர் போன்றோ),வேறு எந்தவிதமான வித்தியாசமான சூழலிலோ(அமெரிக்கா குடியரசு உருவானதைப் போலவோ,ஐரோப்பிய யூனியன் உருவானதைப் போலவோ) ஒரு சூழ்நிலையில் இல்லை.
50 களில் மலேயா,சிங்கப்பூர் நாடுகள் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட போது மலேயாவின் தேவை ,மலாய் இனத்தவர்களுக்கு ஏதுவான,கம்யூனிசம் இல்லாத ஒரு அரசு;அதுவே முன்வைக்கப் பட்டது.ஆனால் இன்று அது மலாய் இனவாத அரசாக மாறிவிடும் ஒரு விளிம்பு நிலையில் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.
சிங்கப்பூர் ஒரு சமத்துவமான,கம்யூனிசம் இல்லாத(independent,democratic,non-communist,socialist state) நாடாக விளங்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டு அது வெற்றிகரமாக நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.
இந்தியாவும் இதுபோன்ற ஒரு நிலையையே(independent,democratic,socialist state) சுதந்திரம் அடைந்தபோது எடுத்தது,ஆனாலும் எவ்வளவு வெற்றி பெற்றோம் என்பது ஆய்வுக்குரிய ஒன்று.
எனவே ஒரு புதிய திசையில் பயணப்பட வேண்டிய கருத்தாக்கங்களோ,ஒரு தேச நிர்மாணத்திற்கு தேவையான கட்டமைப்பு வழிகாட்டுதலோ இப்பொதைய தேவை அல்ல.
தேவை ஒரு தெளிந்த,தொலைநோக்கு கொண்ட,ஒளிவு மறைவற்ற,ஊழல் இல்லாத ஒரு நிர்வாகம் மட்டுமே.
இதை சரத்குமார,விஜயகாந்தர்கள் கொடுப்பார்களா என்பதே கேள்வி.
தபால்கார அப்துல்காதர் - எம். எஸ். கல்யாணசுந்தரம்
-
சென்ற வருஷம் பெர்னாட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது, “இவ்வூரில் பார்க்கத்
தகுதியானவை என்னென்ன?” என்று விசாரித்தார்.
“நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்ட...
1 year ago
I agree with every single word on this writing. I wish I could add more, but I don't think I can think of anything. This article pretty much summarizes the thoughts of all good citizens of India.
ReplyDeleteGood writing Arivu, keep it up!
நன்றி லக்ஷ்மி.
ReplyDeleteவெடிக்கும் ஆதங்கம்தான் வார்த்தைகளாகின்றன....