குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, December 24, 2008

86.சூடான இடுகைகள்-எனது இரண்டு பைசாக்கள்

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் பற்றி பதிவர்களிடையே நடக்கும் அமளிதுமளிகள் அனைவரும் அறிந்ததே.இதில் நான் நல்லவன் அவன் கெட்டவன் மற்றும் நான் ரொம்ப நல்லவன் அவன் ரொம்பக் கெட்டவன் வகையான பதிவுகளும் வந்து கொண்டிருக்கின்றன.

சில பதிவர்கள் அதனால் என்ன,எங்களுக்கு ஒன்னும் ஃபீலிங்ஸ் இல்லை...த்ஸொ...த்ஸொ என்ற வகையிலும் சில பதிவுகள் எழுதினார்கள்.

ஒரு பொது விதியாக சூடான இடுகையில் இடம் பெற வேண்டுமெனில் சில குறிச்சொற்கள் இருந்தால் போதும் என்ற வகையில்தான் சில நாட்களாக நிலைமை இருந்தது.

இது சரி செய்யப் படவேண்டும் எனவும் உண்மையில் சிறந்த வகையில் எழுதப் படும் பதிவுகள் பலரின் பார்வைப் புலம் செல்ல வேண்டும் எனத் தமிழ்மணம் நினைக்கிறது என சில தகவல்களால் அறிகிறேன்.எனவே நடப்பவை நல்லதற்கே எனவும் சொல்லத் தோன்றுகிறது.

இவ்வாறு குறிப்பிட்ட குறிச்சொற்கள் போட்டு எழுதி சூடான இடுகைக்கு இடம் பிடிக்கும் உத்தி மறுதலிக்கப் படுவது வருத்தப் பட வேண்டிய ஒரு விதயம்.எனவே சூடான இடுகை எழுத வேறு விதமான வழிகள் சீக்கிரமாக் கண்டறியப்பட வேண்டும்.

இந்த நிலையில் எளிதாக சூடான இடுகைப் பகுதியில் உங்கள் பதிவுகள் செல்ல என்னாலான ஒரு நல்ல ஆலோசனை சொல்லி விலகுகிறேன்.

உங்கள் பதிவை ஒரு குறிப்பிட்ட முறையில் எழுதினால் அது உண்மையில் எந்த ஐயமுமின்றி சூடான இடுகையாக இருக்கும்.

எப்படி எழுத வேண்டும் என்று உண்மையில் அறிய விரும்புபவர்கள் மட்டும் பின்வரும் எழுதும் வழிமுறையை அறிந்து பயன்பெறுங்கள்..

கவனிக்கவும்!இது சூடான இடுகைகள் எழுத விரும்புவோர் மட்டும் பார்க்க வேண்டிய குறிப்பு,அனைவருக்கும் பொதுவானதல்ல !!!!

சூடான இடுகையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கான குறிப்பு....

Tuesday, December 2, 2008

85.மும்பை தாக்குதல்-பாக்'கின் விஷ(ம)ப் பிரச்சாரம் !

மும்பையில் நடந்த கோரத் தாக்குதல் பற்றய பல பதிவுகள் வந்த விட்டன.அது பற்றிய சில செய்திகளை என்னுடைய சென்ற பதிவில் சொன்னேன்.

இந்த தாக்குதலுக்குப் பின் ஒரு செய்தியாளர் ஒபாமாவிடம் வினவிய கேள்வி:

இந்தியா இந்தத்தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா இரட்டைக் கோபரத் தாக்குதலின் போது செயல்பட்டதைப் போல பாக்கின் மீது குண்டுவீச்சு நடத்தினால் அதை அமெரிக்கா எவ்விதம் எதிர்கொள்ளும் ?

ஒபாமாவின் பதில்:

ஒவ்வொரு நாடும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட உரிமையுள்ளது.


ஏற்கனவே அமெரிக்க ஊடகங்களில் இந்தியா பாக்’கின் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகங்கள் எழுதப் படுகின்றன.

இது போன்ற சூழலில் பாக் ஊடகங்கள் இவ்வித செய்திகளை எப்படி பாக் மக்களுக்குக் கொண்டு செல்கின்றன என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.

மாதிரிக்கு இந்த 4 யூ ட்யூப் ஒளிக் காட்சிகளைப் பாருங்கள்.

இவை பாக்'கின் முக்கிய டிவி சானலில் ஒளிபரப்பப் பட்டவை;பங்கு பெற்று பதில் சொல்பவர் பாக் ராணுவ ஆய்வாளர்-defence analyst.

பாகம் 1:





பாகம் 2 :




பாகம் 3 :




பாகம் 4 :





பாகம் 5 :




கல்வி அறிவற்ற பாக் மக்கள் பலர் இந்த ஊடகச் செய்திகளைப் பார்த்துவிட்டு மும்பை தாக்குதல் பற்றி எந்த விதமான முடிவுகளுக்க வருவார்கள் என்பது கவலைப்படவைப்பதுப் ஆய்வுக்குரிய ஒன்றுமாகும்.



ஏன் பாகிஸ்தான் இப்படி ஒரு நாடாக இருக்கிறது என்பதும் எப்படி மும்பைக்குத் தாக்க வந்த இளைஞர்கள் போன்ற இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப் படுகிறார்கள் என்பதும் விளங்கும்.



இது போன்ற பரப்புரைகளை செய்யும் பாக் மீடியாவை இந்தியா எவ்விதம் எதிர்கொள்ளப் போகிறது?

Monday, December 1, 2008

84,மும்பை பயங்கரவாதமும் அது பற்றிய சில செய்திகளும் எண்ணங்களும்



தீவிரவாதிகள் கடல்மார்க்கமாகத்தான் வந்தருக்கிறார்கள் என்பதும் கராச்சியிலிருந்துதான் வந்திருக்க முடியும் என்ற புலனாயவு உண்மையும் வெளிவந்திருக்கின்றன.

செப்டம்பர் இறுதியில் அமெரிக்க சிஐஏ நிறுவன இந்திய கிளை ரா’வுடன் ஒரு அவசர சந்தப்புக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் அந்த சந்திப்பில் லக்ஷர் இ தொய்பா மும்பையின் மீது ஒரு தாக்குதல் நடத்தலாம் என்ற ஊகம் இருப்பதாகவும் செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த தாக்குதல் கடலிலிருந்து நடக்கக் கூடும் என்ற ஊகமும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உளவுத் தகவல்கள் வேறுசில ஏஜென்ஸிகளில் இருந்தும் உறுதிப் படுத்தப் பட்டிருக்கின்றன.

செப்டம்பர் 24 வாக்கில் இந்திய உளவுத்துறை சில உறுதிப் படுத்த முடியாத தகவல்களைப் பெற்றிருக்கின்றன.அவை:

-ல இ தொ.கராச்சியில் மும்பையை கடல் மார்க்கமாகத் தாக்கும் வழிகளுக்கான பயிற்சிகளை சுமார் மூன்று மாதமாக அளித்துக் கொண்டிருக்கிறது.
-ல இ தொ.வின் செயல் நிர்வாகத் தலைவன் பங்களாதேஷ் நிர்வாகப் பிரிவிடம் பன்னாட்டு உபயோக சிம்கார்டுகளை தயார் செய்யப் பணித்திருக்கிறான்.
-இந்தப் பணி(!)க்கான பயிற்சி சாச்சா என்றழைக்கப் படும் ல இ தொ’வின் ஆஸ்தானப் பயிற்சியாளனிம் மேற்பார்வையில் நடந்திருக்கிறது.

()

இந்திய உளவுத்துறை கடலிலிருந்து தாக்குதல் வரலாம் என்ற நிலையில் அது தாஜ் ஒட்டலின் மீது இருக்கலாம் என்றும் எதிர்பார்த்ததாகச் சொல்லப் படுகிறது.நவம்பர் 18 அன்று கோஸ்ட் கார்ட் என்றழைக்கப்படும் கடலோரக்காவல் படைக்கு குறிப்பான தகவலாக கராச்சியிலிருந்து வர வாய்ப்பிருக்கக் கூடிய பாகிஸ்தான் கலங்களின் மீதான கண் வைக்கும்படி செய்தி அளிக்கப் பட்டிருக்கிறது.


ஆனால் புத்திசாலித்தனமாக செயல்பட்ட பயங்கரவாதிகள் ஆழ்கடலில் மீன்பிடிக்குச் சென்ற குபெர் என்ற படகைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்;அதில் இருந்த அறுவரில் ஐந்து பேரைக் தலையை வெட்டி கடலில் எறிந்த அவர்கள் அமர்சிங் சோலங்கி என்ற ஒருவனை மட்டும் மும்பைக்கு வழிகாட்டி அழைத்துச் செல்ல ஏதுவாக விட்டு வைத்திருக்கின்றனர்;மும்பை கடல் எல்லைக்குள் நுழைந்து கரையை நெருங்கும் சமயம் அவனுக்கும் பரலோகப் பிராப்தி அளித்துக் கடலில் வீசி விட்டனர்.

கரையோரக் காவல்படை சினிமா போலீஸ் மாதிரி பாக் படகுகளுக்காகக் காத்திருக்க திவிர வாதிகள் எப்போதோ இந்திய மீன்பிடி படகு மூலம் வந்து கரையேறி தாஜிலும் மற்ற இடங்களிலும் சென்று அளித்த பணியை துவக்கி விட்டனர் !


()

கடல் காவல் படையினர் அந்த மீன்பிடி படகில் இருந்து ஒரு ஜிபிஎஸ் சாதனத்தைக் கைப்பற்றி இருக்கின்றனர்.அதில் கராச்சியிலிருந்து மும்பைக்கும் பின்னர் மும்பையிலிருந்து கராச்சிக்கு செல்லவும் இரு கடல் வழிப் பாதைகள் நிறுவப் பட்டிருக்கின்றன(செட்).இது தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு திரும்பிச்சென்று விடும் நோக்கத்தில் இருந்திருக்கலாம் என்ற நோக்கில் புலனாய்வாளர்களை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கின்றது.

ஆனால் தீவிரவாதிகளுக்கு திரும்பி விடலாம் என்ற ஒரு பொய்யான நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகக் கூட இது செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பவும் இடம் இருக்கிறது.

அல்லது உண்மையிலேயே அவர்கள் தாக்கிவிட்டு திரும்பிவிடும் திட்டத்தில் இருந்திருந்தால் அதில் தாவூத்தின் பங்கு இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தையும் இது கிளப்பி இருப்பதாகத் தெரிகிறது.


()


கரையை நெருங்கிய தீவிரவாதிகள் இரண்டிரண்டு பேராக பிரிந்து ஜோராக வேலையை ஆரம்பித்ததை உளவுத்துறை பல்குத்திக்கொண்டு வேடிக்கை பார்த்ததை நாம் அறிவோம்!


()

தாக்குதல் ஆரம்பமான சில மணித்துளிகளேயே,அதாவது களத்தில் நுழைந்த 10 நிமிடங்களுக்குள்ளேயே தீவிரவாத எதிர்ப்புக்குழுத் தலைவரும் மற்றும் எண்கவுன்டர் திறனாளரும் கொல்லப் பட்டு விட்டதாகத் தெரிகிறது.

இது உண்மையில் எவ்வாறு நடந்தது என்பதில் தெளிவில்லை.அவ்வளவு தீவிரமான தாக்குதல் தளத்துக்குள் நுழைந்த அவர்கள் எப்படி அவ்வளவு அலட்சியமாக இருந்திருக்க முடியும் என்பது வியப்பான ஒரு விதயம்;அல்லது அவர்கள் குற்றவாளிகளை மிகவும் குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும்.

அவர்களின் உயிர்த்தியாகம் தவிர்த்திருக்கப் படக்கூடியது,அவர்கள் மேலும் சிறிது எச்சரிக்கையாக இருந்திருந்தால் !


அவர்கள் குறிவைத்துக் கொல்லப் பட்டிருப்பது,தீவிரவாதிகள் தெளிவான செயல் திட்டத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

()


நாரிமன் கட்டடத்தில் மீட்கப் பட்ட பிணையாளர்களின் உடல்கள் விவரிக்க இயலா சித்ரவதைக்குப் பின்னர் கொல்லப் பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

விவரங்களை சொல்ல மறுக்கும் அவர்கள் மும்பையின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்த அளவுக்கு சிதைத்துக் கொல்லப் பட்ட உடல்களை இப்போதுதான் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

()


தீவிரவாதிகள் எதிர்பார்க்காத ஒரு விதயம் உயிரோடு ஒருவன் மாட்டியிருப்பது.சிறிது புத்திசாலித்தனம் காட்டிய காவலர்களால் இது சாத்தியமானது.மேலும் விவரங்கள் வரும்போது பல முடிச்சுகள் அவிழலாம்.


இந்த சூழலில் பல 'தியரிகளை' அவிழ்த்து விடும் சில முஸ்லிம் நண்பர்களின் பதிவுகள் அவர்களின் உத்தேசங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன்.

()


சிதம்பரம் உள்துறைக்கு மாற்றப்பட்டிருப்பதும்,பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உயர் அதிகாரியை அனுப்புவதிலிருந்து பின்வாங்கியதும்,பாக் படைகள் எல்லையில் குவிக்கப் படலாம் என்பதும் மேலதிக செய்திகள்.


இந்த மயான சூழலில் அப்பாவி மும்பைக்கர்களும் மும்பைக்குச் அடிக்கடி செல்லும் தேவையிருப்பவர்களும்தான் தாங்க முடியாத உள்ளக் கொதிப்பில் இருக்கிறார்கள்.

ஒரு ட்வின் டவர் தாக்கப் பட்டவுடன் உலகம் முழுக்க சந்தேகப் பட்ட இடங்களில் எல்லாம் குண்டு மழை பொழிந்தார் அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு ஜோக்கர் பிரசிடெண்ட் என்று கருதப் படும் புஷ்;ஒரு பேருந்து நிலைய,ரயில் நிலையக் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தீவிரவாதிகளுக்கெல்லாம் ஆப்படித்து வைத்திருக்கிறது இங்கிலாந்து; 12 முறை மும்பையும் நாட்டின் பல பகுதிகளும் தாக்கப் பட்டபோதும் மமோசிங் மட்டும் தாடியைத் தடவிக் கொண்டு டிவியில் அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறார்.

வெட்கத்தில் நாம் நாமே தூக்கு மாட்டிக் கொள்ளலாம் !


குண்டடி படாமலாவது சாவோம் !!!!



-அவுட்லுக் மற்றும் ரீடிஃப் தளங்களுக்கு நன்றியுடன்

Tuesday, November 25, 2008

83.மறந்த பெயரும் மறக்காத சாதியும்

அண்மையில் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் பற்றிய புன்னகை வரவழைக்கும் ஒரு நிகழ்ச்சி உண்டு.

அவர் செய்தி வாசிப்பில் முத்திரை பதித்தவர் என்பதும் இந்திய சுதந்திரச் செய்தியைத் தமிழில் சொன்னது அவருடைய குரல் என்பதும் பலருக்குத் தெரிந்த செய்தியே.

ஆனால் அவர் முதலில் செய்தி வாசிக்க ஆரம்பித்தது ஒரு எதேச்சையான நிகழ்ச்சியால் என்பதும் அதில் நடந்த குளறுபடியுகளும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன நடந்தது என்பதை அவரின் வார்த்தைகளிலேயே கேட்போம்:


ஆகாசவாணியின் தமிழ்ச் செய்தி அறை.
நேரம் - காலை ஏழு மணிக்கு மேல் எத்தனை
நிமிடமோ!
செய்தி அறிவிப்பு நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. தலைப்புச்
செய்திகள் மொழி பெயர்ப்பாகிக்கொண்டு இருந்தன. மற்ற செய்திகளையெல்லாம் உரிய
வரிசையில் அடுக்கியும் வைத்து விட்டோம். ஆனால், செய்தி அறிவிக்க வேண்டியவரைத்தான்
காணவில்லை. என்ன கோளாறோ? ஒருவேளை தூங்கிப்போய்விட்டாரோ, என்னவோ!
கடைசி நிமிடம்
வரை காத்திருந்து பார்ப்பது என்று ஒன்று உண்டே... அந்த அற்புத சித்தாந்தத்தின்படி,
நண்பருக்காகக் காத்திருந்தோம். ஆனால், கடைசி நிமிடம் வரை என்றால், எந்தக் கடைசி
நிமிடம் வரை? ஏழே காலுக்கு, 'ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...' என்று
ஆரம்பித்தாகவேண்டுமே! மணி ஏழு பத்தாகிவிட்டது. 'இனிமேல் காத்திருப்பதில் பலன்
இல்லை' என்ற கட்டாய முடிவுக்கு நாங்கள் அதிக தாமதமின்றி வந்துவிட்டோம் என்பது
மகிழ்ச்சியுடன் அறிவிக்கவேண்டிய செய்தி!
நாங்கள் என்றால், யார் யார்? நான்,
என்னைப் போலவே மொழி பெயர்க்கவும், ஒலிபரப்பவும் லைசென்ஸ் பெற்ற இன்னொரு நண்பர்,
மொழி பெயர்க்க மட்டுமே ஒப்பந்தமாகியிருந்த 'குரலற்ற' நண்பர் ஒருவர் - ஆக மூன்று
பேர்!
கடைசியில் நான்தான் செய்தி வாசிப்பது என்று தீர்மானமாகி விட்டது. இனி,
ஒரு கணம் கூட 'வேஸ்ட்' பண்ணமுடியாது. மேஜையில் அநாதையாய்க் கிடந்த செய்தி அறிக்கையை
அள்ளிக்கொண்டு ஸ்டூடியோவுக்கு ஓடினேன். அப்போது மணி ஏழு பதினாலு. நல்லவேளை, ஏழு
பதினைந்தைத் தாண்டிவிடவில்லை.
படிப்பதற்காக 'மைக்'கின் ஃபேடரைத் திறந்து படிக்க
ஆரம்பித்தேன்.
''ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...''
அட பாவி! செய்தி
படிப்பது யார் என்பது கடைசி வரையில் நிச்சயமாகாமல் இருந்ததால், தலைப்புச் செய்திகளை
எழுதிக் கொடுத்த 'அனுகூலச் சத்ரு', வாசிப்பவரின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில்
வெறும் புள்ளிகள் போட்டிருந்தார். நான் அந்தப் புள்ளிகளைப் பார்த்தவுடன் சரக்கென்று
பிரேக் போட்டேன். ''வாசிப்பது...'' என்று சொல்லியாகிவிட்டது; அடுத்தாற் போல் என்
பெயரைச் சொல்ல வேண்டியதுதானே? எதற்காக பிரேக்? ஆனால், பாழாய்ப்போன என் பெயர் ஞாபகம்
வந்து தொலைத்தால்தானே சொல்வதற்கு?
நம்பமுடியாதுதான்! சொந்தப் பெயர் எப்படி
மறக்கும்? ஆனால், மறந்துவிட்டதே! அதுவும் எப்படிப்பட்ட சமயத்தில்..!
நான் யார்?
காலம் தோன்றியது முதல், யோகியரும் ஞானியரும் அறிய முயன்று தோற்றுப்போன விஷயம்;
கல்ப கோடி காலம் தவம் செய்தும் அறியமுடியாத உண்மை... இப்போது ஆகாசவாணியின்
மைக்குக்கு எதிரே தலையைப் பிய்த்துக்கொண்டால் புலனாகிவிடுமா என்ன?
எதிரே
கடிகாரம் 'டிக்... டிக்...' என்று நேரத்தை விநாடி விநாடியாக என் கண்ணில் காட்டிக்
காட்டிப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருந்தது.
நான் யார்..? நான் யார்..?
தவியாய்த் தவித்தேன். நினைவுக்கு வரவில்லை. ''நான் யார்?'' என வாய்விட்டே
கத்திவிடுவேனோ என்ற பயத்தில் ஃபேடரை' மூடி, மைக்கின் வாயை அடைத்தேன். மூளையைத்
துருவித் துருவி ஆராய்ந்தேன். என் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை என்ற கொடுமையோடு
அணி அணியாக வேறு எத்தனையோ பெயர்கள் போட்டி போட்டுக்கொண்டு என் நினைவில் வந்து
மோதின.
செய்தி அறிவிப்பில் என் உற்ற தோழர்களாயிருந்த நாகரத்தினம், பஞ்சாபகேசன்,
(அன்று வராமற்போன) நாராயணன், வேங்கடராமன், சாம்பசிவன், இசக்கி... இவர்கள் தவிர,
எங்கெங்கோ எப்போதோ சந்தித்த கணக்கற்ற நண்பர்களின் பெயர்களும்-தென்காசி ஆமல்
ராவுத்தர், அம்பாசமுத்திரம் சாமு வாத்தியார், பத்தமடை சுப்பய்யா இப்படிக்
கணக்கில்லாத நபர்களின் பெயர்களும் என் நினைவுக்கு வந்து குழப்பியடித்தன. இந்த
மாபெரும் பெயர்க் கூட்டத்துக்கு நடுவே, நான் என்னையே தேடித் தேடிக்
களைத்துப்போனேன்.
எதிரே கடிகாரம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்தக் கடும் குளிர்
நாளில், என் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வியர்த்துக் கொட்டியது.
நான் அழ
ஆரம்பிப்பதற்குள் ஸ்டுடியோ கதவு திறந்தது. எஞ்சினீயர் பாலு பரபரப்புடன் உள்ளே
வந்தார். என்னைப் பெயர் சொல்லி அழைத்து, ''அரை நிமிஷ மாகக் குரலே வரலையே! மைக் கைத்
தவறுதலாக மூடிவிட்டீர் கள் போலிருக்கிறது. முதலிலிருந்தே படியுங்கள்'' என்று
சொல்லி, 'ஃபேடர்' பக்கம் கையைக் காட்டிவிட்டு, வந்த வேகத்திலேயே மறைந்தார்.
அரை
நிமிடம்தானா? எனக்கு அரையுகமாகப் பட்டதே! அது இருக்கட்டும்... பாலு என் பெயரைச்
சொன்னாரல்லவா? அப்பாடா! நான் யார் என்பதை எனக்குப் புரிய வைத்த பாலுவை மானசிகமாக
வாழ்த்திக்கொண்டு மறுபடியும் ''ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது பூர்ணம்
விசுவநாதன்'' என்று ஆரம்பித்தேன்.

சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த அவரது சக வானொலியாளர் சரோஜ் நாராயணஸ்வாமி,சிறந்த நகைச்சுவை எழுத்தாளரான விஸ்வநாதனையே இந்த நிகழ்ச்சியை விவரித்து எழுத வேண்ட,அவர் ஆ.வி.யில் 1969 ல் எழுதிய பகுதிதான் மேலே நீங்கள் படித்த கட்டுரை.

()

சமீபத்தில் சட்டக் கல்லூரி வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை பற்றியும் அதனுடைய நியாய,அநியாயங்கள் பற்றியும் பலரும் எழுதி விட்டார்கள்.மத்தியில் பல உண்மை அறியும்’ அறிக்கைகளும் வந்தன.


கல்வியறிவு இல்லாத சிந்திக்க இயலாத கிராம மக்கள் சாதீயத்தின் கூறுகளை விடாமல் பிடித்துக் கொண்டு சமுதாயத்தில் பல வேண்டத்தகாத நிகழ்வுகளை நடத்திக் கொண்டிடிருப்பது நாம் புரிந்து கொள்ளக் கூடியதே.

ஆனால் படித்த சிந்திக்க முடிந்த சட்டம் பயிலும் மாணவர்களும் சாதீயக் கூறுகளை முன்னெடுப்பதும் அதிகார,ஆட்சி,அரசியல் வர்க்கங்களின் கூறுகள் அவர்களைப் பின்னாலிருந்து இயக்கி சாதீயக் கூறுகள் முனை மழுங்கி விடாமல் கவனித்துக் கொள்வதும்,அரசியலில் பார்த்து,முதலில் பயந்து,பின்னர் சலித்து,இப்போது அரசியலின் கூறுதான் அது’என்ற சுரனை கெட்டத் தனத்துடன் நாம் ஏற்றுக் கொண்ட வன்முறை வன்மம் மாணவர்கள் அளவில் செயல்படுத்திக் காட்டப்படுவதும் எதிர்கால சமூகத்தைப் பற்றிய பயங்களை மனதில் விதைக்கின்றன.

இந்த சமுதாய சூழலில்தான் நமது குழந்தைகள் வளரப் போகின்றன என்பது திகில் தரக் கூடிய ஒரு நிதர்சனம் !

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...