குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Tuesday, December 2, 2008

85.மும்பை தாக்குதல்-பாக்'கின் விஷ(ம)ப் பிரச்சாரம் !

மும்பையில் நடந்த கோரத் தாக்குதல் பற்றய பல பதிவுகள் வந்த விட்டன.அது பற்றிய சில செய்திகளை என்னுடைய சென்ற பதிவில் சொன்னேன்.

இந்த தாக்குதலுக்குப் பின் ஒரு செய்தியாளர் ஒபாமாவிடம் வினவிய கேள்வி:

இந்தியா இந்தத்தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா இரட்டைக் கோபரத் தாக்குதலின் போது செயல்பட்டதைப் போல பாக்கின் மீது குண்டுவீச்சு நடத்தினால் அதை அமெரிக்கா எவ்விதம் எதிர்கொள்ளும் ?

ஒபாமாவின் பதில்:

ஒவ்வொரு நாடும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட உரிமையுள்ளது.


ஏற்கனவே அமெரிக்க ஊடகங்களில் இந்தியா பாக்’கின் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகங்கள் எழுதப் படுகின்றன.

இது போன்ற சூழலில் பாக் ஊடகங்கள் இவ்வித செய்திகளை எப்படி பாக் மக்களுக்குக் கொண்டு செல்கின்றன என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.

மாதிரிக்கு இந்த 4 யூ ட்யூப் ஒளிக் காட்சிகளைப் பாருங்கள்.

இவை பாக்'கின் முக்கிய டிவி சானலில் ஒளிபரப்பப் பட்டவை;பங்கு பெற்று பதில் சொல்பவர் பாக் ராணுவ ஆய்வாளர்-defence analyst.

பாகம் 1:





பாகம் 2 :




பாகம் 3 :




பாகம் 4 :





பாகம் 5 :




கல்வி அறிவற்ற பாக் மக்கள் பலர் இந்த ஊடகச் செய்திகளைப் பார்த்துவிட்டு மும்பை தாக்குதல் பற்றி எந்த விதமான முடிவுகளுக்க வருவார்கள் என்பது கவலைப்படவைப்பதுப் ஆய்வுக்குரிய ஒன்றுமாகும்.



ஏன் பாகிஸ்தான் இப்படி ஒரு நாடாக இருக்கிறது என்பதும் எப்படி மும்பைக்குத் தாக்க வந்த இளைஞர்கள் போன்ற இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப் படுகிறார்கள் என்பதும் விளங்கும்.



இது போன்ற பரப்புரைகளை செய்யும் பாக் மீடியாவை இந்தியா எவ்விதம் எதிர்கொள்ளப் போகிறது?

3 comments:

  1. What can we say about this? Who was there before even they came to India?

    Excerpts from Time article:
    "Still, many South Asian Muslims insist Islam is the one and only force that can bring the subcontinent together and return it to pre-eminence as a single whole. "We [Muslims] were the legal rulers of India, and in 1857 the British took that away from us," says Tarik Jan, a gentle-mannered scholar at Islamabad's Institute of Policy Studies. "In 1947 they should have given that back to the Muslims." Jan is no militant, but he pines for the golden era of the Mughal period in the 1700s and has a fervent desire to see India, Pakistan and Bangladesh reunited under Islamic rule."

    http://www.time.com/time/world/article/0,8599,1862650,00.html or Topic title "India's Muslim in Crisis"

    ReplyDelete
  2. Hi if you could translate the script to english or tamil it would be helpful to guys like me who doesnot know hindi

    ReplyDelete
  3. முழுக்க கவனித்தாலே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியும்..

    இருந்தும் முக்கியமான சில:


    -இந்த தாக்குதல் இந்திய ராணுவம் முன்னின்று நடத்தியது

    -பிஜேபி மற்றும் இந்திய ராணுவமும் இணைந்து இந்த தாக்குதலுக்கு செயல்திட்டம் வகுத்தார்கள்.

    -காரணம் இந்து திவிரவாதம் பற்றி எழுந்த சந்தேகங்களை திசைதிருப்ப இந்த செயல் நிகழ்த்தப் பட்டது

    -பாக் ராணுவம் ரொம்ப நல்லவங்க-ஒண்ணும் தெரியாத அப்பாவிங்க

    -பாக்'கில் பலுசிஸ்தானில் இந்தியா நாசவேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது;நாங்கள் என்ன இப்படி இந்தியா குற்றம் சுமத்துவது போலவா குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறோம்?

    -இப்படி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் பாக் தனது ராணுவத்தை அனுப்பி ஒன்றுக்கும் உதவாத இந்திய ராணுவத்துக்கும்,இந்தியாவுக்கும் சரியான அடி கொடுக்க வேண்டும்.

    ராம் ஜெத்மலானியின்(?) குரல்:

    இஸ்லாமிய தேசங்கள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும்.அந்த சூழலில் அவர்கள் செயல்படுவது சரியாக இருக்கும்.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...