குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, August 20, 2012

* * * * * 171.நோயில்லா யோகநிலை-நாளொரு பாடல்-16



சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே 
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ 
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல் 
சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே.


நூல் : சித்தர் பாடல்கள் திரட்டு

ஆசிரியர் : சிவவாக்கியர்
பாடல் எண் : 14
விளக்கம் : யோகநிலை

பதம் பிரித்த பாடல்:

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப் போதும் உளே மறிந்து நோக்கவில்லிரேல்
சாத்திரப் பை நோய்கள் ஏது சக்தி முத்தி சித்தியே

முக்கிய சொற்கள்:
மாத்திரை- கால அளவைக் குறிப்பதற்கான ஒரு சொல். ஒரு சொடக்குப் போட ஆகும் நேரம் ஒரு மாத்திரை அளவாகும். தொல்காப்பிய எழுத்ததிகாரம், குறில் மற்றும் நெடில் எழுத்துக்களை சரியாக உச்சரிக்கத் தேவையான கால அளவைப் பற்றிக் குறிக்கும் போது, மாத்திரை அளவைப் பற்றிப் பேசுகிறது

சித்தி - அடைவது, சித்திப்பது, எட்டுவது

சாத்திரப் பை- சாத்திரப் புத்தகங்களை நிரப்பிய பை, சாத்திரங்களை முக்கியமாகக் கருதும் நிலை

முத்தி - இறைவனை அடைந்த நிலை, பிறவியை ஒழித்த நிலை

முன்னோட்டம்:
சிவ்வாக்கியர் முக்கிய சித்தர்களில் ஒருவர்.
சைவ மரபினராக அறிவித்துக் கொண்டாலும் ராம அவதாரத்தைப் பற்றியும் தொழுது பாடியவர்.சமூகத்தின் மூடப் பழக்கங்கள் பலவற்றைச் சாடியவர்.
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்' என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடியவர் இவரே.
இந்தப் பாடலில் சித்தாந்த வழக்கில்,யோகநிலையின் மேலான நிலையை விளக்கிப் பாடுகிறார்.

பொருள்:
வேதங்கள்,சாத்திர நூல்களை இறைவனை அடைவதற்கும், பக்தி செய்வதற்கும் வழியாக அறிவித்து ஒயாமல் அவற்றை ஓதிக் கொண்டிருக்கும் சட்டநாத பட்டரே, உடல் நோயினால், மூச்சு கெட்டு, இரைப்பு நோய் வந்து இதயம் பலவீனமான நிலையில், வியர்வை பொங்கிப் பெருகும் போது, நீங்கள் படிக்கின்ற வேதங்கள் வந்து உங்களுக்கு உதவுமோ? ஒரு மாத்திரை கால அளவாவது, உங்கள் உடல்,எண்ணம்,சிந்தனை,மனத்தின் உள்ளே நோக்கி, சிந்தித்து, உயிரின் நிலையைப் பற்றி அறிய முயற்சித்தால்,சாத்திரங்களைக் கட்டிக் கொண்டு அழ வேண்டாம்; உடலை நோய்கள் தீண்டா ; உள்ளிருக்கும் சக்தி நிலை, பிறவாப் பெருநிலையை வழங்கி உங்களை உயர்த்தும்.

டிட்பிட்ஸ்:

  • திருமந்திரமும் சரி,சிவ்வாக்கியர் போன்ற யோக சித்தர்களின் பாடல்களும் சரி, அவற்றின் உபதேசம் உடலைச் சரியான வழியில் பேணுதல், உடலை உறுதி செய்வதன் மூலம், உயிருடன் தொடர்பு கொள்ளும் நிலையை அடைதல் ஆகியவற்றைப் பற்றியே பெருமளவு பேசுகின்றன.
  • யோக நிலையில்  மூப்பு,நோய், நரை, திரை ஆகிய உடலுக்கு நேரக் கூடிய தீங்குகளைத் தடுக்கும் வழியறிந்து, அவற்றைப் பழகி,அனுபவித்து, அந்த நிலையை அடைய முடியும் என்றே அறிவித்துச் சென்றிருக்கின்றனர்.
  • பயிற்சிகளின் மூலம் அந்த நிலையை உடல் அடையும் போது, உயிர் அல்லது ஆன்மா அல்லது சூட்சும சிந்தனையின் மூலத்தையும் தொடர்பு கொண்டு அதனை செயல்பட வைக்க முடியும் என்பதும் ஒரு இணை நிகழ்வாக-By Product-யோக நிலையில் கிடைக்கிறது.
  • இந்தப் பாடலில் வேர்த்து இரைப்பு வந்த போது' என்ற சொற்றொடரில் குறிக்கும் நோய், இந்நாளைய இதய நோயான, ஹார்ட் அட்டாக்கின், அறிகுறிகளைக் குறிப்பதைக் கவனிக்கலாம்..
  • முக்தி நிலை பற்றிப் பேசும் போது உடலும் நோய்கள் அணுகாது நிற்கும் என்று சொல்வதையும் கவனித்துப் பாருங்கள்...
  • உடல் இறைவன் குடியிருக்கும் கோயில் என்று திருமூலர் குறித்த காரணமும், அதன் கருத்தும் இந்தப் பாடலிலும் உள்ளது.
16 | 365

2 comments:

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...