அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321 அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.
சூப்பர் சிங்கர் பற்றிய என்னுடைய கடந்த பதிவில் இறுதிக்கு யார் வருவார்கள் என்ற என்னுடைய கருத்தைக் கூறியிருந்தேன்.(நான் அந்தப் பதிவை எழுதிய நேரத்தில் அதிரடி நுழைவுச் சுற்று-வைல்ட் கார்ட் ரவுண்ட்- நடந்து கொண்டிருந்தது.).
இறுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களில் பிரகதி,சுகன்யா இருவரும் தேர்வாவார்கள் என்று அனுமானம் செய்தேன்; அடுத்த மூன்று இடங்களை ரக்ஷிதா, கௌதம், அனு, ஆஜித், யாழினி ஆகிய நான்கு பேர்களுள் மூவர் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றும் எழுதியிருந்தேன். ஆஜித்'ம், யாழினி'யும் டார்க் ஹார்ஸ் வகையில் வருவார்கள் என்றும் எழுதியிருந்தேன்.
இறுதிச் சுற்றுக்குத் தேர்வான அதிரடி சுற்றிலேயே ஆஜித் மற்றும் யாழினியின் கட்டுக்கடங்காத திறன் எல்லைகளை விரித்துப் பிறந்தது; அதிலும் ஆஜித் இரண்டு பாடல்களிலும் பின்னியெடுத்தான். அதைக் கேட்டவுடனேயே அவன் இறுதிச் சுற்றில் கட்டாயம் இருக்கிறான் என்ற நம்பிக்கை வந்தது.
எதிர்பார்த்த படி முதல் இருவரைத் தவிர கௌதம், யாழினி, ஆஜித் மூவரும் பங்கு பெற்ற இறுதிச் சுற்று அணி ஐவரணியாக மாறியது.
தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற்ற காமம் எளிதாகியிருக்கிறது என்றும், இது நகர்ப் புறத்தில் மட்டுமல்ல கிராமங்களில் கூட எஸ்.எம்.எஸ் எனப்படும் செய்திச் சேவை வழி கூட முறையற்ற காமம் பரவ ஏதுவாகியிருக்கிறது என்ற ஒரு பார்வையை, அதன் நீதி அல்லது அநீதி பற்றிய எந்த நிலைப்பாட்டிலும் பட்டுக் கொள்ளாமலும் எந்தக் கருத்தாகத்தையும் முன்வைக்காமலும்
எழுதப் பட்டிருக்கிறது.
எழுதியவர் தன்னைப் பத்திரிகைகளில் எழுதிப் பரிச்சயம் உள்ளவராகச் சொல்கிறார்; விவரிக்கத் தேவையன்றி இந்தப் பதிவிலும் 'அந்தப் பயிற்சி' தெரிகிறது.பதிவர் எந்தக் கனவில் இருக்கிறார் என்று தெரியவில்லை. கிராமத்தில் அறிமுகமற்ற பெண்ணுக்கு அறியாதவர் ஒருவர் கைத் தொலைபைசியில் அழைத்து, ராங் கால் என்று சொன்னால் கூட முதல் முறை மன்னிப்பார்கள்; இரண்டாம் முறை ஆள்வைத்து விசாரித்து, கம்புடன் வந்து கதவிடிப்பார்கள் !
நமது மேன்மை தங்கிய நிதியமைச்சர் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சீர்திருத்தங்கள் (ரீஃபார்ம்ஸ்), காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இன்னும் இரண்டாண்டுகளுக்குத் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் நிதிச் செயலர் கெய்ட்னர் இந்தியா இப்போது சரியான பொருளாதார வளர்ச்சி திசையில் நடைபோடுகிறது என்று பகழாரம் சூட்டியிருக்கிறார்.(இதே அமெரிக்க அரசும், அமெரிக்கப் பத்திரிகைகளும் சிறிது காலம் முன்பு வரை, இந்தியப் பிரதமர் செயல்படாத பிரதமர், இந்தியா திவாலாகும் திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று தமது பத்திரிகைகள், கருத்தாக்கங்கள் வாயிலாகப் பயமுறுத்தும் கட்டமைப்பைச் செய்து கொண்டிருந்தன என்பதை இந்த இடத்தில் நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்; குறிப்பாகச் சொல்வதென்றால் இந்தியாவின் காங்கிரஸ் அரசு சில்லரை விற்பனையில் அந்நிய முதலீட்டைத் திறந்து விடுவதற்கு முன்னால் வரை!.
இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட உடன் காலங்கள் மாறும்; காட்சிகள் மாறும் என்ற வகையில் அமெரிக்காவின் அரசு நிர்வாகமும், ஊடகங்களும் இந்தியவைப் பற்றிய கருத்துக்களில், தலைகீழ்த் திருப்பத்தில்-யூ டர்ன்- அசத்துகின்றன ! இதன் பின்னாக இருக்கும் நுண்ணிய விவரங்கள் சாதாரண மக்களுக்கு எளிதில் புரிந்து விடாது என்பதுதான் முக்கியமான விதயம்.
சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு பற்றிப் பலர் எழுதி விட்டார்கள்.இதில் வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் என்று அறியப் பட்ட பதிவர்கள் அந்தந்த நோக்கிலேயே எழுதியிருக்கிறார்கள்; இதில் வியப்பு இருக்கப் போவதில்லை.(எடுத்துக்காட்டு-பத்ரி சேஷாத்ரி அரசின் இந்த முடிவை வரவேற்று எழுதியிருப்பது மற்றும் வினவு இந்த முடிவை எதிர்த்து எழுதியிருப்பது).
எனக்கு என்னமோ பண்ணுது...சந்திரமுகி!!!
பதிவுலகைப் பொறுத்த வரை பலர் இதைப் பற்றி எழுதியிருந்தாலும், புரூனோ வின் பதிவும் சரியான கருத்தை எடுத்து வைத்தது(சற்று நீளமாக இருந்தாலும்). சுருக்கமாக அவர் சொன்னது, சில்லரை விற்பனையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விதயத்தையும் 1991 ன் பொருளாதார சீர்திருந்தங்களையும் ஒப்பிட்டு, முன்னதை வரவேற்ற பலர் பின்னதை எதிர்ப்பது ஏன்?' என்ற கேள்விக்குப் பதிலாக அவர் சொல்லியிருந்தது: முன்னதில் நாம் பயனாளர்(Service Provider, we provided some service and got benefited); பின்னதில் நாம் வாடிக்கையாளர்.(We are consumers, we consume and pay for the consumption).
இந்திய மைய அரசு சில்லரை வணிகத்தில் 51 சதவிகித வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது என்ற கொள்கை முடிவை அறிவித்த 24 மணி நேரத்தில் மமதை பானர்ஜி மைய அரசுக்கான தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கிறார். உடனை, ஆகா,இந்தியாவில் சிலர் மக்கள் நலன் பற்றிச் சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், உங்களைக் கோமாளி ஆக்கும் படி மமதை ராணி சொன்ன காரணம், காங்கிரஸ் மைய அரசு தன்னுடைய கட்சியை,இரண்டாவது பெரிய கூட்டு பொரியல் இன்கிரிடியென்ட் என்ற அந்தஸ்தில் மதித்து தன் கருத்தைக் கேட்டு முடிவை அறிவிக்கவில்லை' என்பது.
அவருடைய கருத்தைக் கேட்டு அறிவித்திருந்தால் பேசாமல் இருந்திருப்பாராயிருக்கும் !
காங்கிரஸ் மைய அரசு முக்கியமான கொள்கை முடிவுகளை இப்படித் தான்தோன்றித் தனமாக அறிவிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்; நாடாளுமன்ற கூட்டத் தொடர் இனி சனவரியில்தான் வருகிறது. நியாயமாக அரசின் கொள்கை முடிவுகள் கூட்டத்தொடரின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டு அறிவிக்கப்படவேண்டும்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்...
இந்த தலைப்பில் ஏற்கனவே சில அசட்டுப் பதிவுகள் வந்து விட்டன; இருப்பினும் இந்த நிகழ்ச்சியை நேற்று இரவு பார்த்த போது எழுந்த சிந்தனைகளைப் பகிரலாம் என்பதால் இந்தப் பதிவு.
இப்போது முதல் 5 போட்டியாளர்களுக்கான தேர்வுக்கான சுற்று நடைபெறுகிறது.(இந்தியாவில் இந்த சுற்று முடிந்திருக்கலாம்;சிங்கையில் இப்போதுதான் போய்க் கொண்டிருகிறது!)
இறுதிப் போட்டியின் வடிவம் எப்படி என்று தெரியவில்லை.ஆனால் அன்ப்ளக்ட் சுற்று முடிந்ததில் ஜயந்த் போட்டியில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.ஆனாலும் சிறப்பான சலுகையாக அதிரடி சுற்று வாய்ப்பாக-வைல்ட் கார்ட் ரவுண்ட்- இறுதிப் போட்டியில் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டிருகிறார்.
2000"ங்களில் தொழில் நுட்பம் மூலம் பயனாளர்களில் உலகின் பெரும் பகுதி மக்களைப் பாதித்த பொருட்களைப் பட்டியலிட்டால் அதில் ஆப்பிள் பொருள்களின் பங்கு பெரியது.முதலில் சிறிய ஐபாட் 2002\3 ல் வந்ததிலிருந்து பின்னர் ஐபேட், ஐபோன், ஐபாட் டச், ஐமேக் என்ற ஐந்தே பொருள்களைத் தயாரித்த ஆப்பிள் நிறுவனம் இன்றைய தேதியில் உலகில் மிக மதிப்பு வாய்ந்த நிறுவனம் என்ற உச்ச நிலையை ஜீலை\ஆகஸ்ட் 2012 ல் அடைந்தது.(coveted position of Most vlauable company in terms of market capitalisation-around 650 billions in USD terms)
பெரும்பாலும் வாரத்தில் ஆறு நாட்களிலாவது உடற்பயிற்சிக்கோ அல்லது ஓட்டத்திற்கோ செல்வது எனக்கு வழக்கம். கல்லூரியில் படித்த காலத்திலிருந்து தொடரும் இந்த வழக்கம் இடைப்பட்ட காலத்தில் மூன்று நான்கு ஆண்டுகள் மட்டும் வழமையில் இல்லாதிருந்து, இப்போது இரண்டு ஆண்டுகளாக மீண்டும் தொடர்கிறது. இடைப்பட்ட சில ஆண்டுகள் தடைக்கு,அந்த காலகட்டத்தில் நான் இருக்க நேர்ந்த நாடுகளில்,
சுதந்திர இந்தியாவில் இந்தமுறை பதவியிலிருக்கும் மைய அரசைப்போல் வேறு எந்த அரசின் மீதும்,மைய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகம் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததில்லை என்றே நினைக்கிறேன்.மூன்று ஆண்டு தணிக்கை அறிக்கைகளில் மொத்தமாக கிட்டத்தட்ட எட்டு லட்சம் கோடி ருபாய் அளவில்,அதாவது 8,00,000,000,000 ரூபாய்-
இது போன்ற புகைப்படங்களிலிருந்து 'அற்புதங்களை' உருவாக்குபவர்களுக்கு ஒரு விதமான மனத் தடையும், சுய இரக்கமும் இருக்குமோ என்பது என் சந்தேகம்.சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வை, அல்லது உண்மையிலேயே நடக்காத ஒன்றைத் திரித்து, நடந்ததாச் சொல்லி,
நூல் : தனிப்பாடல் திரட்டு
ஆசிரியர் : இராமச் சந்திரக் கவிராயர்
காலம் : 19|20'ம் நூற்றாண்டு
முன்னோட்டம்:
நூலாசிரியர் இராமச் சந்திரக் கவிராயர் இராசு மண்டலம் என்னும் ஊரில் ( இன்றைய காஞ்சிபுரம் மாவட்டம்) பிறந்து சென்னப் பட்டனத்தில்(இன்றைய சென்னை) வாழ்ந்தவர்.
நாடகக் கவிதை நூல்கள் பல எழுதியிருக்கிறார். சித்திரக் கவி எழுதுவதிலும் வல்லவர்.சித்திரக் கவி என்பது கவிதையைச் சித்திர வடிவில் எழுதுவது.
சித்திரத்தின் எப்பக்கத்திலிருந்து படித்தாலும் கவிதை பொருள் தருமாறு எழுதப்பட்டிருக்கும்.
சித்திரக் கவிக்கு ஒரு எடுத்துக் காட்டு கீழே வருமாறு..இந்தப் பாடலுக்கான விளக்கத்தை இன்னொரு நாளொரு பாடல் பகுதியில் பார்க்கலாம்.
சித்திரக் கவி - நான்கு ஆரச் சக்கர பந்தம்
இவ்விதமான சித்திரக் கவிகள் எழுதுவதில் திறமைசாலியான கவிராயராக இருப்பினும், இன்றைக்குப் பார்க்கப் போகும் பாடல் எளிய, சுவையான பாடல்.
கருத்து:
ஆசாமியின் வீட்டின் பசு கன்று ஈன்றிருக்கிறது;
வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கிறது;
பெய்த கடுமழையில் கூரையோ, ஓடோ போட்டிருக்கும் எளிய வீடு விழுந்து விட்டிருக்கிறது;
வீட்டில் மனைவிக்கோ சுகவீனம்;
வேலைக்காரன் இறந்துவிட்டான்;
பெய்த மழை ஈரத்தில் விதை நெல்லையாவது நிலத்தில் நட்டு விடலாம் என்று வயலுக்கு விதை நெல்லை எடுத்துக் கொண்டு ஓடுகிறார் ஆசாமி;
ஆனால் வழியிலே கடன் கொடுத்தவர் மறித்துக் கொண்டு,நெல்லைப் பிடிங்கிக் கொள்ள, சாவுச் செய்தியைக் கொண்டு எதிரே ஆசாமியைத் தேடிக் கொண்டு ஒருவர் வருகிறார்;
அந்த சமயத்தில் தவிர்க்க இயலாத விருந்தினர் ஒருவர் ஆசாமியின் வீட்டுக்கு வருவதற்காக வழியில் எதிரே வருகிறார்;
அவரைப் பார்த்த சமயத்தில் ஆசாமியைப் பாதையில் போகும் பாம்பு தீண்டி விடுகிறது;
நாட்டின் அரசர் பருவத்திற்கான உழுதுண்டு வாழ்வதற்கான வரியைக் கேட்டு அரசவையிலிருந்து ஆள் வருகிறது;
அதே நேரத்தில் குருக்கள் செய்து வைத்த காரியத்திற்கு ஆசாமியிடம் வந்து தட்சிணை-காணிக்கை கேட்கிறார்..
ஆசாமியின் நிலை எப்படி இருக்கும்..
அய்யோ...சாமி என்று உட்கார மாட்டாரா அய்யாசாமி !?
:))
டிட்பிட்ஸ்:
பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் சிக்கலான வெண்பா வடிவங்கள் குறைந்து பெரும்பாலும் பாடல்கள் விருத்தங்களாகவே எழுதப் பெற்றன.
விருத்தம் எழுதிய புலவர்கள் பெரும்பாலும் கவிராயர்களென அழைக்கப்ப்பட்டார்கள்.அதாவது அவர்கள் எந்த இனத்தில் பிறந்தவராக இருப்பினும் பொதுவாகக் கவிராயர் என்றே அழைக்கப் படுவார்.
Chronic Pressure என்று சொல்லப் படுகிற நொய் நொய் அழுத்தம் வரும் சூழலை அழகாக எடுத்துக் காட்டும் ஒரு பாடல் இது.
சுஜாதா எழுதிய நொய் நொய் அழுத்தத்திற்கான ஒரு எடுத்துக் காட்டு கற்றதும் பெற்றதுமில் எழுதியிருப்பார். அதைப் படிக்கும் போது எனக்கு இந்தப் பாடல்தான் நினைவுக்கு வரும் ! :)
பாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக்கு அளந்து அமைக்கப்பட்டதைப் போலிருக்கும் அந்த அழகிய நாசி.ஸீஸர்,ராஜகோபாலாச்சாரியாருடவை போல கருட மூக்கல்ல.ஸீஸர் மூக்கு நடுவில் உயர்ந்து,நுனியில் கூர்மையாகி,கண்டவர்களைக் கொத்துவது போலத் தோன்றும்.பாரதியாரின் மூக்கு கடைசல் பிடித்தது போலிருக்கும்.நீண்ட நாசி. அந்த நீளத்தில் அவலட்சணம் துளி கூட இருக்காது.
பாரதியாரின் கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள்.இமைகளின் நடுவே,அக்கினிப் பந்துகள் ஜ்வலிப்பது போல பிரகாசத்துடன் விளங்கும்.அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் தெவிட்டாது.
()
பாரதியாருக்கு மீசை உண்டு.அது பார்க்க ரொம்ப நேர்த்தியாகவிருக்கும்.கண்ணைக் குத்தும் கெய்ஸர் மீசையல்ல;கத்திரிக்கோல் பட்ட 'தருக்கு' மீசையல்ல; தானாக வளர்ந்து பக்குவப்பட்டு,அழகும் அட்டஹாசமும் செய்யும் மீசை.அவரது வலக்கை எழுதாத நேரங்களிலெல்லாம் அனேகமாய் மீசையை முறுக்குவதாகத் தோன்றாது;மீசைக்கு 'டிரில்' பழக்கிக் கொடுப்பது போலிருக்கும்.
சில சமயங்களில் தாடி வைத்துக் கொண்டிருந்தார்.ஆனால் அவருடைய வாழ்க்கையில் பெரும்பகுதி மீசை மட்டும்தானிருந்தது.ஒரே ஒரு சமயந்தான் மீசை இல்லாமலிருந்தார் என்பது என் நினைவு.அவருடை நடுநெற்றியில் சந்திர வட்டத்தைப் போலக் குங்குமப்பொட்டு எப்பொழுதும் இருக்கும்.குங்குமப்பொட்டு இருப்பதில் அவருக்கு ரொம்பக் கவனம்.
()
அந்த 1910-11 ஆம் வருஷங்களில்,பாரதியாரின் பெயரும் கீர்த்தியும் நாடு முழுவதும் பரவவில்லை.
சென்னையில் ஸ்டாண்டர்ட் என்ற ஆங்கிலத் தினசரி ஒன்று நடந்து வந்தது.அதற்கு ராமசேஷையர் என்பவர் அதிபர்.இந்த பத்திரிகையைத்தான் பின்னர் நியூ இந்தியா என்ற பெயருடன் ஸ்ரீ அன்னிபெசண்ட் நடத்தி வந்தார்.ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் பாரதியாருக்கும் கும்பகோணம் புரொபஸர் சுந்தர ராமய்யர் அவர்களுக்கும் அத்வைதத் தத்துவ தரிசனத்தைப் பற்றிச் சுமார் நான்கு மாத காலம் வரையில் விவாதம் நடந்து வந்தது.
இந்த வாதத்தில் ஒரு ஸ்வாரஸ்யம்.தத்துவத்தின் வியாக்கினத்தில் இரண்டு பேருக்கும் அபிப்ராய பேதம் வந்து விட்டது.சுந்தர ராமய்யருக்கு சாஸ்திர ஆராய்ச்சிப் பழக்கம் நிரம்பவும் உண்டு.பாரதியாருக்கு அவ்வளவு பழக்கமில்லை.(அந்தக் காலகட்டடத்தில்).இவர்களுடைய வாதம் எப்படி நடைபெறுகிறது என்பதைக் கவனிக்க இந்தக் கட்டுரைகள் வரும் பத்திரிகையை எதிர்பார்த்த வண்ணமாய் நாங்கள் துடிதுடித்துக் கொண்டிருப்போம்.
சுந்தர ராமய்யருக்குப் பக்கபலம் அவருடைய நூல்பயிற்சி.பாரதியாருக்குப் பக்கபலம் அவருடைய நுண்ணிய அறிவும் மேதையும் ஆவேசமுமாகும்.இரண்டு மத்தகஜங்கள் மோதிக் கொண்டால் அது எப்படி இருக்கும்?வீரனுடைய தன்மையை இன்னொரு வீரன்தான் அறிய முடியும்.சுந்தர ராமய்யர் படித்த புலவர்; பாரதியாரோ மேதாவி.ஆச்சாரிய சங்கரருடைய தத்துவம் எளிதிலே பாரதியாருக்குப் பிடிபட்டுப் போய்விட்டது.
எவனும் ஈசுவரத் தன்மையை அடையலாம் என்பது பாரதியாருடைய கட்சி.எல்லாம் ஈசன் என்பது அய்யருடைய வாதம்.பார்வைக்கு இரண்டும் ஒன்று போலத் தோன்றும். எல்லாம் ஈசன் என்பது காகிதத் தத்துவம் என்பார் பாரதியார்.மனிதன் ஈசுவரத் தன்மையை அடைவதாவது என்று அய்யர் ஏளனம் செய்தார்.எங்களுக்குப் பாரதியாரிடம் அளவு கடந்த பிரேமை.எனவே அவர் சொல்லுவதுதான் சரி என்பது எங்களுடைய எண்ணம்.
ஆனால் தெளிந்த தெரிந்த இடத்தில் இதைப்பற்றிப் பேச்சு வந்தபோது நாங்கள் நினைத்தது சரியென்ற முடிவுக்கு வந்தோம்.அதாவது,அரவிந்தரின் பங்களாவில் இதைப் பற்றி சம்பாஷணை பிறக்கும்.சுந்தர ராமய்யருக்கு உண்மையில் அனுபூதி கிடையாது என்று அரவிந்தர் சொல்லுவார்.'தத்துவத்தை தர்க்கத்தால் காண முடியாது,அதை அனுபவிக்க வேண்டும்' என்பார் அரவிந்தர். பெரும்பாலும் நூல் பயிற்சியுள்ள பண்டிதர்களுக்கு தத்துவ அனுபவம் இருப்பதில்லை.அவர்கள் தர்க்க கஜக்கோலால்,மகத்தான உண்மைகளை அளக்கப் பார்க்கிறார்கள்.
()
பாரதியார் புதுவையிலிருந்து சென்னைக்கு வந்தபின் திருவல்லிக்கேணி கடற்கரையில் அடிக்கடி கூட்டம் போட்டுப் பேசுவது வழக்கம்.பாரதியாரின் சொற்பொழிவைக் கேட்க இளைஞர்கள் நூற்றுக் கணக்கில் கூடி விடுவார்கள்;வெகுநேரம் காத்துக் கொண்டிருப்பார்கள். பாரதியாரின் சொற்பொழிவு வெறும் பிரசங்கமா? அது சண்டமாருதமல்லவா?' என்று அவர்களில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அவ்வாறு கூட்டப்பட்ட கூட்டங்களில் ஒன்றில்,ஸ்ரீ சத்திய மூர்த்தியும் இன்னொருவரும்(அவருடைய பெயர் நினைவில் இல்லை) முதலில் பேசி விட்டார்கள்.அது பாரதியாருக்காகவே கூட்டப்பட்ட கூட்டம் என்பதைக் கூட கவனிக்காமல் சத்தியமூர்த்தி துடுக்காக 'நீங்கள் வழக்கமாகக் கேட்கும் பாரதியார் நாளைக்குப் பேசுவார்.இன்றைக்கு இத்துடன் கூட்டம் முடிவுபெற்றது' என்று அறிவித்துவிட்டுப் போய் விட்டார்.
ஆனால் கூட்டம் கலையவில்லை. பாரதியார் எழுந்திருந்தார்.ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு அழகான சொற்களில்,விதரனையாகச் சன்மானம் கொடுத்தார்.பிறகு காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவது போல,ஓயாது என்று சொல்லும்படியான கரகோஷங்களுக்கு இடையே,பாரதியார் பிரசங்கமாரி பொழிந்தார்.அன்றிரவு கூட்டம் கலையும் பொழுது மணி பதினொன்று இருக்கும்.அன்றைக்குத்தான் என்றும் உயிரோடு இருக்கக் கூடிய 'பாரத சமுதாயம் வாழ்கவே' என்ற அற்புதப் பாடலைப் பாரதியார் பாடினார்.
()
ஒரு நாள் காலை எட்டு மணி இருக்கும்.அகஸ்மாத்தாய் நான் அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பாரதியாரின் வீட்டுக்கு வந்தேன்.வீட்டின் கூடத்தில் சிறு கூட்டமொன்று கூடியிருந்தது.நடுவில் ஹோமம் வளர்க்கிறார்போலப் புகைந்து கொண்டிருந்தது.சிலர் வேதமந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்கள்.ஓர் ஆசிரமத்தில் பாரதியார் வீற்றிருந்தார்.இன்னொரு ஆசனத்தில் கனகலிங்கம் என்ற ஹரிஜனப் பையன் உட்கார்ந்து கொண்டிருந்தான்.புரொபசர் சுப்பிரமணிய ஐயர் போன்ற பல பிரமுகர்கள் இருந்தார்கள்.
என்ன நடக்கிறது என்று மெதுவாகப் புரொபசரைக் கேட்டேன்.'கனகலிங்கத்திற்குப் பூணூல் போட்டு,காயத்ரி மந்திரம் உபதேசமாகிக் கொண்டிருக்கிறது' என்றார்.'உட்கார்ந்திருப்பது கனகலிங்கம் தானே,அதிலே சந்தேகமில்லையே' என்று மறுபடியும் அவரைக் கேட்டேன். 'சாஷாத் அவனேதான்! அவனுக்குத்தான்,பாரதி காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்' என்றார் புரொபசர்.
எனக்கு ஆச்சரியாமாய் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்கு சில மாதம் முன்புதான்,என் பூணூலை எடுத்து விடும் படி பாரதியார் சொன்னார்.அவரோ,வெகு காலத்துக்கு முன்னமேயே பூணூலை எடுத்துவிட்டார்.தமது பூணூலை எடுத்து விட்டு, என்னையும் பூணூலைக் கழற்றி எறியச் சொன்ன பாரதியாருக்கு திடீரென்று வைதீக வெறி தலைக்கு ஏறிவிட்டதா என்று எண்ணினேன். மௌனமாக உட்காந்திருந்தேன்.பாரதியார் நான் இருந்த பக்கம் பார்க்கவேயில்லை.மந்திரோபதேசமெல்லாம் முடிந்த பிறகு, 'கனகலிங்கம்! நீ இன்றையிலிருந்து பிராமணன்; எதற்கும் அஞ்சாதே;யாரைக் கண்டும் பயப்படாதே;யார் உனக்குப் பூணூல் போட்டு வைக்கத் துணிந்தது என்று கேட்டால்,பாரதி போட்டு வைத்தான் என்று அதட்டியே பதில் சொல்.எது நேர்ந்தாலும் சரி,இந்தப் பூணூலை மட்டும் எடுத்து விடாதே' என்று அவனுக்கு வேறு வகையில் உபதேசம் செய்தார்.
இதைக் கேட்டு,யாரேனும் வாய்க்குள்ளாகவே சிரிக்கிறார்களோ என்று பார்த்தேன்.பாரதியார் சொன்னதை ஆமோதிப்பதைப் போல,அவர்கள் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள்.இந்த வைபவத்துக்கு வந்தவர்கள்,தாம்பூலம் வாங்கிக் கொண்டு,பாரதியாரிடம் விடைபெற்றுக் கொண்டு,போய் விட்டார்கள்.கனகலிங்கமும் போய்விட்டான்.யாரோ ஒருவனைக் கூப்பிட்டு, ' நீ கனகலிங்கத்துடன் கூடப்போய்,அவனை அவன் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வா' என்று பாரதியார் அனுப்பினார்.
எல்லோரும் போனபின் பாரதியார் தான் போட்டுக் கொண்டிருந்த பூணூலை எடுத்து விட்டார்.' என்ன ஓய்' என்று என்னைப் பார்த்துச் சிரித்தார்; 'இரண்டு பத்தினி மார்கள்,பதினாயிரம் கோபியர்கள்,இவர்களோடு லீலைகள் புரிந்த கண்ணனுக்கு நித்ய பிரமச்சாரி என்ற பெயர் வந்த கதையாக இருக்கிறதே,உங்கள் பிரமோபதேசம்?' என்றேன்.'நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு? உமக்கும் எனக்கும் வேண்டா.புதுப் பார்ப்பான் கனகலிங்கத்துக்குப் பூணூல் தேவை.எப்பொழுது நான் அவனுக்குப் பிரம்மோபதேசம் செய்தேனோ,அப்பொழுது எனக்கும் பூணூல் இருக்க வேண்டும்.அது முடிந்து விட்டது.இனிமேல் என்னத்துக்குப் பூணூல்?' என்று பேச்சை அழகாக முடித்து விட்டார் பாரதியார்.
()
அப்பொழுது ராஜாஜி,கத்தீட்ரல் ரோடு, இரண்டாம் நெம்பர் பங்களாவில் குடியிருந்தார்; அந்தப் பங்களாவில்தான் காந்தி வந்து தங்கினது.நாலைந்து நாட்கள் தங்கியிருந்தார்.ஒரு நாள் மத்தியானம் சுமார் இரண்டு மணி இருக்கும்.காந்தி வழக்கப் போலத் திண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தார்.அவர் சொல்லிக் கொண்டிருப்பதைப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மகாதேவ தேசாய் எழுதிக் கொண்டிருந்தார்.
காலமான சேலம் பாரிஸ்டர் ஆதிநாராயண செட்டியார் குடகுக் கிச்சிலிப் பழங்களை உரித்துப் பிழிந்து மகாத்மாவிற்காக ரசம் தயாரித்துக் கொண்டிருந்தார்.ஒரு பக்கத்துச் சுவரில் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்து நின்று கொண்டிருந்தார்கள்.அந்தச் சுவருக்கு எதிர்ச் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார்கள்.நான் வாயில் காப்போன்.யாரையும் உள்ளே விடக் கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு.
நான் காவல் புரிந்த லட்சணத்தைப் பார்த்துச் சிரிக்காதீர்கள்.அறைக்குள்ளே பேச்சு நடந்து கொண்டிருக்கின்ற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; 'என்ன ஓய்' என்று சொல்லிக் கொண்டே,அறைக்குள்ளே நுழைந்து விட்டார்.என் காவல் கட்டுக் குலைந்து போனது.
உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன்.பாரதியார் காந்தியை வணங்கி விட்டு,அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார்.அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது.
பாரதியார்: மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன்.அந்தக் கூட்டதுக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா? காந்தி: மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன? மகாதேவ்:இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நான் வேறொரு இடத்தில் இருக்க வேண்டும். காந்தி: அப்படியானால்,இன்றைக்குத் தோதுப் படாது,தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா? பாரதியார்: முடியாது,நான் போய் வருகிறேன், மிஸ்டர் காந்தி ! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசிர்வதிக்கிறேன்.
பாரதியார் போய்விட்டார். நானும் வாயில் படிக்குப் போய்விட்டேன்.பாரதியார் வெளியே போனதும், 'இவர் யார்?' என்று காந்தி கேட்டார். தாம் ஆதரித்து வரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் ஆகாது என்று நினைத்தோ என்னவோ ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை.காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபம் கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை. ராஜாஜிதான், 'அவர் எங்கள் தமிழ் நாட்டுக் கவி' என்று சொன்னார்.
அதைக் கேட்டதும், 'இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?' என்றார் காந்தி.எல்லோரும் மௌனமாக இருந்து விட்டார்கள்.
நாற்காலி இல்லாத இடத்தில் பாரதியார் நின்று கொண்டு விண்ணப்பம் செய்து கொள்கிறதா? ராஜாஜி போன்றவர்கள் பாரதியார் வந்ததும்,அவரை அழகாக, காந்திக்கு அறிமுகப் படுத்தியிருக்க வேண்டுமல்லவா? அவர்களுடைய மௌனத்திலிருந்தும், அனாயாசமாகப் பாரதியார் உள்ளே நுழைந்ததிலிருந்தும் காந்தி கூடுமான வரையில் சரியாக பாரதியாரை மதிப்பிட்டு விட்டார்.
()
'நாட்டின் விடுதலைக்கு முன், நரம்பின் விடுதலை வேண்டும்; நாவுக்கு விடுதலை வேண்டும்; பாவுக்கு விடுதலை வேண்டும்; பாஷைக்கு விடுதலை வேண்டும்' இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனார்.வெறும் சொல்லடுக்காகச் சொன்னதல்ல என்று இப்பொழுது நன்றாக எனக்குப் புலனாகிறது. விடுதலை என்ற சொல்லை நாட்டிற்கு உபயோகப்படுத்தி நான் முதலிலே கேட்டது பாரதியிடந்தான்.
()
அருவி வெளியீடாக வந்திருக்கும் வ.ரா. எழுதிய பாரதியைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. பாரதியார் என்ற கவிஞரின் ஆக்கங்கள் நமக்குத் தெரியும்.
காவியமான கவிதைகளை எழுதிய ஒரு கவிஞன், விடுதலை வேட்கையும், பொங்கும் உணர்ச்சியும்,மானுட நேசமும், மங்காத தமிழும் நிரம்பிய ஒரு மனிதன் எப்படி நித்தியப் படி வாழ்த்திருக்கக் கூடும் என்ற சிந்தனைகளுக்கான அழகிய தரிசனம் இந்தச் சிறிய புத்தகம்.
பாரதியாரின் ரசிகர்களுக்கும், தமிழார்வலர்களுக்கும் தவறாத வாசிப்புப் பரிந்துரை இந்த நூல் !!!
புத்தகம் : மகாகவி பாரதியார்
ஆசிரியர்: வ.ரா.
வெளியீடு: அருவி
நூல் : தனிப்பாடல் திரட்டு
ஆசிரியர் : பலர், இப்பாடலுக்கு காளமேகப் புலவர்
முக்கியக் குறிப்பு : சிலேடைப் பாடல் வகையைச் சேர்ந்தது.
பதம் பிரித்த பாடல்:
வெம் காயம் சுக்கு ஆனால், வெந்த அயத்தால் ஆவதென்ன
இங்கு யார் சுமந்து இருப்பார் இச் சரக்கை
மங்காத சீர் அகத்தைத் தந்தீரேல் தேடேன்
பெரும் காயம் ஏரகத்துச் செட்டியாரே
முக்கிய சொற்கள்:
வெம் காயம்- வெங்காயம் மற்றும் உடல்; வெந்த அயம்- வெந்தயம் மற்றும் இரும்பைச் சேர்த்துச் செய்த சக்தி வாய்ந்த மருந்துகள் ; சரக்கு- கடைச் சரக்கு மற்றும் உடல் ; சீர் அகம்- சீரகம் மற்றும் ஆன்மாவின் உய்வு ; ஏரகத்துச் செட்டியார் - கடைச் செட்டியார் மற்றும் முருகப் பெருமான்
கருத்து: கடைச் சரக்கு நோக்கில் -
கடைச் சரக்கை விற்கும் ஏரகத்துச் செட்டியாரே,
வெங்காயம், வெந்தயம் போன்ற பொருள்கள் வாங்கி வைத்திருக்கையில், வெங்காயம் வாடி வதங்கிப் போய் விட்டால், அந்த இரண்டு சரக்கினாலும் பயன் இல்லை, எனவே யாரும் அவற்றைச் சுமந்திருக்க மாட்டார்கள். எப்போதும் கெட்டுப் போகாத சீரகத்தைத் தந்தால், பெருங்காயம் கூடத் தேவை இல்லை...
உள்ளார்ந்த நோக்கில் -
ஏரகம் என்னும் சுவாமிமலை நாதனான முருகப் பெருமானே,
வெம்மை பொருந்திய தன்மையுடைய உடலானது, தளர்ந்து சுக்கைப் போல வற்றிய காலத்தில், அந்த உடலுக்கு (அயக்காந்த செந்தூரம் போன்ற) நல்ல மருந்துகளால், உடலானது மேலும் பழுது பட்டுச் சிதையாமல், காக்க முடிந்தாலும், அதனால் விளையும் பயன் ஒன்றும் இல்லை; உடலில் உலவும் உயிரானது நன்மை நிலையை அடைந்து, வீடு பேறு கிடைக்கும் எனில், இவ்வாறு சுக்காக வற்றிய உடலைத் மேலும் நிலைநிறுத்தும் வண்ணம் தேடாது, உன் கருணையால் உய்வேன்..
டிட் பிட்ஸ்:
முருகன் வள்ளியைத் தேடி வந்த காலத்தில் வளையல் விற்கும் செட்டியார் உருவில் வந்ததாகப் புராணக் கதைகள் இருக்கின்றன. எனவே முருகனைச் செட்டியாரே என்று அழைக்கிறார் புலவர்.
மங்காத சீரகம் என்ற சொலவடை உயிர் மீண்டும் உலகியலில் பிறந்து இழைந்து மங்காத நிலையான வீடுபேற்றை அடைவதைக் குறிக்கிறது.
வீடுபேறு கிடைக்கும் நிலையில், நிலையற்ற உடலைப் பேணும் தேவை இருக்காது, எனவே பெருங்காயத்தைத் தேட மாட்டேன் என்கிறார்.
உடல் வற்றித் தளர்ந்து செல்லும் காலத்து, உடலை நிலைநிறுத்த பல காயகல்ப மருந்துகள் தேவைப் படுகின்றன. ஆன்ம உயர்நிலையை அடைய உடல் வடிவம் தேவைப் படுகிறது. எனவே உடல் நல்ல நிலையில் இருக்கும் போதே, ஆன்ம நிலையிலும் தேர்ச்சி அடைய முயல வேண்டும் என்பது உள்ளார்ந்த கருத்து.
பட்டியலிடப் பட்ட கடைச் சரக்குகளில் சீரகம் கெடாமல் இருக்கும் என்பதும், அகம்(உயிர்) சீர் பெற்றால், பிறவிக்குப் பயன் கிடைக்கும் என்பதும் சுட்டிய பொருள்.
வணக்கம்.
இந்த வார நட்சத்திரமாக தமிழ்மணம் அன்புடன் அழைத்திருக்கிறது; இது இரண்டாவது முறையாக நட்சத்திரமாக இருந்த எழுதக் கிடைத்த வாய்ப்பு.
ஒரு வித்தியாசமான ஒற்றுமையை நான் இந்த அழைப்பில் பார்த்தேன். சென்ற அழைப்பு நான் சுமார் 80 பதிவுகள் எழுதியிருக்கும் பொழுது வந்தது; இப்போது கிட்டத்திட்ட 160 பதிவுகள் எழுதியிருக்கிறேன், இரண்டாவது வாய்ப்பு !
2008 வாக்கில் வந்த முதல் வாய்ப்பின் காலக் கட்டத்தில் நட்சத்திரமாக எழுதக் கிடைக்கும் வாய்ப்பைச் சிறிது பெருமையுடனே ஏற்று நாங்கள் எழுதினோம்; இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் என்னுடைய இயக்கம் பதிவுலகில் விறுவிறுப்பானது கிடையாது,இன்னும் சொல்லப்போனால் 2007-2008 கால கட்டத்தை விட, இப்போது நான் எழுதும் பதிவுகள் ஆண்டுக் கணக்கில் பார்த்தால்,மிகக் குறைவானவையே. எனினும் தமிழ்மண நிர்வாகம் இரண்டாவது வாய்ப்பை நல்கியிருக்கிறது.
பதிவுலகில், பதிவு எழுதுகிறவர்களில் மிகச் சிறுபான்மையினர் வர்க்கம் ஒன்று உண்டு; அவர்கள் எழுதும் பதிவுகள் மிகக் குறைந்த அளவில்,ஆனால் பெரும்பாலும் கனமான விதயங்களைத் தொட்டு இருக்கும். நான் அந்த வகை வலைப்பதிவாளன். இவர்கள் எழுதுவது அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கவும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்; ஆனால் அவை அனைவருக்கும் தேவையானதாக இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
இருப்பினும், தமிழ்மண நிர்வாகம் அன்பினில் வைத்த அழைப்பை, முன்னர் போலவே, எழுத்தின் அடக்கத்திற்குக் கிடைத்த வாய்ப்பாகவே நான் கருதிக் கொள்கிறேன்.
தமிழ் மண நிர்வாகத்திற்கு நன்றிகள் !
படித்து, ஊக்கமளித்து, உரையாடப் போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் !
()
எனக்கு முன்னர் கிடைத்த நட்சத்திர வாய்ப்பின் காலத்திற்கும், இப்போதைக்கும் இடையில்,என்னுடைய வலைப்பதிவு சார்ந்த இயக்கத்தில், எழுத்தில் பெரும் வேறுபாடுகள் ஏதும் இல்லை, பின்வரும் வார்த்தைகள் தவிர.
...எந்த மாற்றமுமில்லை, பதிவுகளில் எழுதுவது குறைந்து,படிப்பது மேலும் அதிகரித்திருக்கிறது என்பதைத் தவிர.
எப்போதும்,எதையாவது,எவருக்காவது அறிவித்துக் கொண்டிருக்க வேண்டியிருப்பது, இருத்தலியல் சார்ந்த ஒரு நோய் என்று சமீப காலங்களில் மனதிற்குப் படுகிறது.
ஆயினும் சொல்லித்தானாக வேண்டிய செய்தியோ,தேவையோ எழும் போது, அதை எப்போதும் மானுடக் கடமையாகவை நினைக்கிறேன்.
நல்ல வாசிப்பை அளிப்பதற்கு எப்போதும் போல இப்போதும் முயற்சிப்பேன்.
வாய்ப்புக்கு தமிழ்மணத்திற்கும்,வாசிப்பதற்காக உங்களுக்கும் நன்றி ! வாசிப்பைத் தொடர்ந்த தளங்களில் உரையாடல் நிகழ்ந்தால்,உரையாடல் வழங்கிய சிந்தனைகள் கிளர்ந்தால் அதுவே எழுதுவதன்,படிப்பதன் பயனும் வெற்றியும் !
நன்றி மீண்டும்.
()
ஒரு quick recap ஆக, சென்ற வாய்ப்பில் எழுதிய நட்சத்திர வாரப் பதிவுகளைப் பற்றிய சிறிய ஒரு அறிமுகம். பதிவுலகில் புதிதாக வந்திருக்கும் நண்பர்களுக்கு எளிதாக மீண்டும் ஒரு பார்வை,பார்க்க ஏதுவாக !
1.***** 71.எது அறிவு ??????
எது அறிவு என்ற கேள்வியை எழுப்பினால், அறுதியிட்டு என்ன விளக்கம் கொடுப்பீர்கள்? இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள் !
2.***** 72 - ஃபிபோனாக்கி எண் தொடரும்,மனித வாழ்வும்
பங்குச் சந்தை, நிதி வணிகம்-currency trading, ஊகவணிகம்-Futures & Options, போன்ற துறைகளில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையான செய்தியை அடக்கியிருக்கிறது, இந்தப் பதிவு. நிதித் துறைகளில்-finance domain- பணியிலோ அல்லது சுய தொழிலிலோ இருப்பவர்களுக்கும் இந்தப் பதிவு பிடித்திருக்கலாம்.
விதய ஞானத்தைத் தேடும் அனைவருக்கும் கூடப் பிடிக்கலாம்.
4.***** 74.பகுத்தறிவும்,சில நுண்கலைகளும்
நிறைய விவாதத்தைக் கிளப்பிய ஒரு பதிவு.
நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் பதிவுகளில் எழுப்பப் பட்ட பின்னூட்டங்களுக்கும், இப்போது எழுப்பப் படும் பின்னூட்டங்களுக்கும், பளிச்சென வெளித்தெரியும் ஒரு வேறுபாடு உங்களுக்கு இந்தப் பதிவைப் படிக்கும் போது தோன்ற வேண்டும் !
இல்லையெனில் நீங்களும் ஜோதியில் ஐக்கியமாகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். :))
6.***** 76.ஒரு நடிகரின் பேட்டி
இந்தப் பேட்டி 60 களின் மத்தியில் வெளிவந்தது.
பேட்டியளித்த நடிகர் ஏன் அவ்வளவு ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார் என்பது அவரது இந்தப் பேட்டியைப் படிக்கும் போது புரியும் !
8.***** 78.மறுபாலின நட்பும்,கார்த்திக் பட கிளைமாக்ஸும்
என்னைப் பொறுத்த வரை, ஒரு சாதாரணப் பதிவு. இதை எழுதிய போது, இதுவும் விவாதங்களைக் கிளப்பலாம் என்று எதிர்பார்த்தேன்..ஆனால் அமைதியாகக் கரையைக் கடந்தது இது.. :))
9.***** 79.நட்சத்திர வாரத்துக்கான ஒரு பருந்துப்பார்வை
இது நட்சத்திர வாரத்திற்கு முன்னால் வரை, நான் எழுதிய பதிவுகளில் எனக்கே திருப்தியும், மகிழ்ச்சியோ,நெகிழ்ச்சியோ கொடுத்த பதிவுகள். அவற்றை படிக்காதவர்களுக்காக ஒரு தொகுப்பு.
இப்போது படிக்கும் உங்களுக்காகவும்..
10.***** 80.பாரதியின் - கண்ணம்மாவும்,செல்லம்மாவும்
பாரதியின் மனிதக் காதலிக்கும்,கனவுக் காதலிக்குமான ஒரு ஒப்பீடு.
இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இல்லாவிட்டால் ஏன் என்று கூறுங்கள் !
இந்தப் பதிவுகளை ஏன் இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் என்று சிலருக்குக் கேள்வி வரலாம்; மேலும் பலருக்கு இது விளம்பர உத்தியோ என்று எண்ணம் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
நட்சத்திர வாரத்தில் பதிவெழுதும் நபருக்கு, தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் அனைத்துப் பதிவுகளையும் காட்டி, ஒரு மரியாதை செய்கிறது; அந்த வாரத்தின் நட்சத்திரம் எந்த வகைப் பதிவுகளை எழுதுவார், எந்த விதப் பதிவுகளை அந்தப் பதிவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்பது போன்ற ஒரு Curtain Raiser இந்தப் பதிவு.
இந்த முறையும் இதே போன்ற பதிவுகளே வரும் என்று அர்த்தமல்ல. இதே போன்ற பதிவுகளாகவும் இருக்கலாம், அல்லது முற்றிலும் வேறானதாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
நீங்களே பாருங்களேன், பொறுத்திருந்து !
படித்து, வாக்களித்து, விவாதிக்கப் போகும் அனைவருக்கும் நன்றி.
தமிழ்மண சேவையை காசியிடம் இருந்து பொருள் கொடுத்து வாங்கி, தமிழ் வலைப் பதிவர்களுக்கு ஒரு நல்ல திரட்டியாகத் திகழும் வண்ணம் முயற்சியெடுத்து நிலைநிறுத்தியிருக்கின்ற நண்பர்கள் குழுமமான, தமிழ்மண நிர்வாகத்திற்கும், தமிழ்மண சேவைக்காக தனியான நன்றிகள்.
முக்கிய சொற்கள்:
பண் - இசை ; இன்மொழியாள்-இனிய மொழியை உடையவள் ; உன்மத்தம்- பித்துக்குளித்தனம் ; உரம்-மார்பு ; கண்-கண்கள் ; கருமஞ்ஞை-நீல மயில் ; பொழில் - நீர்ப் பொய்கை,வீழ்ச்சி ; வரி வண்டு - நீர்ச் சோலைகளில் திகழும் ஒரு வகை வண்டு ; முரல் - இசை பாடுவது
கருத்து:
இசையுடன் கூடிய பண்கள் போன்ற பேச்சை உடைய இனிய மொழியினளாகிய தேவி, அச்சப் படத்தக்க வகையில், கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த, பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்து அடக்கிய பின், அவனுக்கே அருள் செய்தவனாகிய சிவபெருமான் இருந்து அருள் பாலிக்கும் கோவிலைக் கொண்டும்; பல கண்கள் நிரம்பிய தோகைகளை உடைய நீல மயில்கள் நடனமாடும் இடமாகவும்;(கடற்கரைக்கு அருகில் இருக்கும் காரணத்தால்) கடல் முழங்கவும், வானளவிற்கு பொங்கிப் பெருகும் பொழிலில், வரி வண்டுகள் இசைபாடவும் திருவெண்காடு விளங்குகின்றது.
டிட்பிட்ஸ்:
இந்தப் பாடல் அமைந்த பதிகம் திருவெண்காட்டுப் பதிகம்
இப்பதிகத்தை பக்தியோடு ஓதி அம்மையப்பனை வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் தவறாது கிடைக்கும் என்பது நம்பிக்கை
பேயடையா பிரிவு எய்தும் என்று ஒரு பாடல் இந்தப் பதிகத்தில் இருக்கிறது.அதில் மகப்பேறும், மற்ற எல்லா செல்வங்களும் தவறாது வாய்க்கும்,சிறிதும் ஐயம் வேண்டாம்' என்று டிக்ளேர் செய்கிறார் சம்பந்தர்.
முக்கிய சொற்கள்:
தாளாளன்-முயற்சியைக் கொண்டிருப்பவன் ; வேளாளன் - உதவி செய்பவன், பயிர்த்தொழில் புரியும் ஒருவன் ; கோளாளன் - ஒற்றாடல் திறனில் வல்லவன்,பிறரின் காரியங்களை மனதில் கொண்டவன் ; கேள் - நட்பு
கருத்து:
முயற்சியை ஆளக் கூடிய திறமையுடைய ஒருவன் தான் பிறருக்கு கடன்படாது வாழ்பவன்; பயிர்த்தொழில் புரிந்து,சமூகத்திற்கே உதவியாக இருப்பவன், விருந்தினர் வந்து காத்திருக்க, தான் மட்டும் தனியே உண்ணாதவன்; ஒற்றாடலில் சிறந்தவன்,பிறரின் காரியங்களை,கருத்துக்களை அறிந்து சொல்பவன், சிறிது கூட மறதிக் குணம் இல்லாதவனாக இருப்பான்; ஆகிய இம்மூன்று இயல்புடையவர்களும் தனக்கு நண்பர்களாக கிடைக்கப்பெற்று வாழும் ஒருவன் இனிமையான வாழ்வைப் பெற்றிருப்பான்.
டிட் பிட்ஸ்:
திரிகடுகம் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
திரிகடுகம் என்பது தமிழ்நாட்டில் மக்கள் எளியமுறையில் தயாரித்து,பயன்படுத்தும் ஒரு நல்ல மருந்து.
சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருள்களையும் சேர்த்துத் தயாரிக்கப்படுவது திரிகடுகம்.உடலுக்கு வல்லமையும்,முத்தோஷத்தையும் நீக்கும் வல்லமையும் உடைய மருந்து
அதுபோலவே மூன்று ஒத்த அல்லது ஒரே நியதியில் அமைந்த கருத்துக்களைக் கூறி, அதனுடம் தொடர்புடைய அறிவுரை அல்லது வாழ்க்கையைப் பற்றி அறிவுறுத்துவதால்,இந்தூல் திரிகடுகம் என்று பெயர்பெற்றது.
ஆசிரியர் ஆதனார், தொல்காப்பியரின் பரிச்சயம் உடையவர் என்பது தொல்காப்பியத்தின் சில எழுத்ததிகாரச் செய்யுள்களில் ஆதனாரின் பெயரும் குறிப்பிடப்படுகிறது.
வேளாளன் என்ற சொல்லுக்கு உதவி செய்பவன் என்ற பொருளும் அகராதியில் கிடைக்கிறது; உலகம் அனைத்திற்கும் தேவையான உணவுப்பொருளை விளைவித்து, அனைவருக்கும் உதவி செய்யும் தொழிலைக் கொண்டிருப்பதால், வேளாளருக்கு அந்தப் பெயர் வந்திருக்கிறது !
நல்ல முயற்சி என்பது கடன்படாது வாழ்வதும்,சிறந்த உதவி என்பது வீட்டுக்கு வந்த விருந்தினரைப் உபசரித்துப் பராமரிப்பதும்,ஒருவர் தனக்குச் சொன்ன செய்திகளை மறவாது சிந்தையில் வைத்திருப்பதே நல்ல சிந்தை என்பதும் கூற வந்த கருத்து.
முன்னோட்டம்:
ஞானசம்பந்தப்பெருமானும்,திருநாவுக்கரசு சுவாமிகளும் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள்.நாவுக்கரசர் முதிய பிராயத்தில் 60 வயது அளவில் இருந்தபோது,பிள்ளையாருக்கு பால வயது.
பிள்ளையாரின் அருமை பெருமைகளை உணர்ந்த வாகீசர்,அவரைத் தேடி வந்து அளவளாவி, இருவரும் சில காலம் பல தலங்களுக்குச் சேர்ந்து சென்று வழிபட்டனர்.அக்கால கட்டத்தில் திருவிழிமிழலைப் பகுதியில் இருவரும் தங்கியிருந்த போது ஊரில் பஞ்சம் நிலவியதால்,அடியார்களுக்கு உணவிடும் பொருட்டு,சிவபெருமான் பிள்ளையாருக்கும் வாகீசருக்கும் தினமும் ஒவ்வொரு பொன் படிக்காசு,கோவிலின் கிழக்கு, மேற்கில் அமைந்த விருட்சப் படியில் வழங்குவதாக கனவில் அருளி,தினமும் காசு வழங்கலானார்.
இதில் பிள்ளையாருக்கு வழங்கிய காசு சிறிது மாற்று குறைவாக இருந்ததால்,அவருக்குப் பொற்காசின் மூலம் கிடைத்த பொருள் சிறிது குறைவாகக் கிடைத்தது.
பிள்ளையார் இறைவரிடம் வருந்தி வேண்டி,இந்தப் பதிகம் பாட இருவருக்கும் நல்ல மாற்றில் பொற்காசு கிடைக்கப் பெறலானது.
வாசி- உயர்வு தாழ்வு, மாசு- குற்றம், ஏசல்-ஏசுவது,நிந்திப்பது
குற்றமில்லாத மிழலையில் எழுந்தருளியிருக்கும் ஈசரே, நான் கூறுவது பழிப்போ,குற்றமோ,நிந்தனையோ அல்ல;ஆனால் எனக்கு வழங்கும் காசில் உயர்வு,தாழ்வு நீங்குமாறு,குற்றமற்ற காசை கொடுப்பீராக..
2
இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.
கறை கொள்- குற்றமுள்ள, முறைமை- ஒழுங்கு செய்தல்
நீரே இறைவராக இருக்கின்றீர்,வேதநெறிகளோடு இருக்கும் மிழலையில் நீரே இறைவராக இருக்கிறீர்..குற்றமுடன் அளிக்கப் படும் காசை,சரி செய்து முறைப்படுத்தி,தூய பொற்காசாக வழங்குவீர்..
3
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே.
செய்ய-சிவந்த ; மெய்கொள்- உண்மை நிரம்பிய ; பை - படம் ; அரவு - பாம்பு ; உய்ய- உயர,மேல்நிலையடைய,
படம் எடுத்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு,சிவந்த மேனியைக் கொண்டு,உண்மை நிரம்பிய மக்கள் வாழும் மிழலையின் இறைவரே, நான் உய்யுமாறு குறைவற்ற காசை வழங்குவீர் !
4
நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே.
நீறு- திருநீறு ; ஏறு- எருது(ஆநேறு); கூறு- கூறப்படும்,புகழப்படும்; பேறு- பெரும் செல்வம், வீடுபேறு என்னும் முக்தி
திருநீறு அணிந்து எருதின் மேலேறித் திகழ்கின்ற, பெரும் புகழ் படைத்த, மிழலையின் இறைவரே, (குறைவற்ற காசை நல்குவதோடு) எனக்கு வீடுபேறையும் அருளிச் செய்வீர்.
5
காமன் வேவ ஓர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.
காமன்- மன்மதன்; தூமம்- புகை; தூமக்கண்- புகையுடைய தீக்கண்ணான நெற்றிக்கண் ; நாமம்-பெயர்,புகழ் ; சேமம்-பாதுகாவல், ஷேமம் என்பதன் திரிபு என்றும் ஒரு பாடபேதம் இருக்கிறது
மன்மதனை எரித்த, தீஞ்சுடரை உடைய நெற்றிக்கண்ணை உடைய, புகழ் பொருந்திய மிழலையின் இறைவரே, (குற்றமற்ற காசை வழங்குவதோடு) எமக்குப் பாதுகாவலும்,அரணும் வழங்கி எம்மைப் பாதுகாத்தருள்க..
நெரிதர- அகப்பட்டு நெரிய ; பரக்கும்- எங்கும் புகழ் பரவிய ; கரக்கை- வஞ்சம்
இராவணன் மலைக்கு அடியில் அகப்பட்ட நெரிபடும் போது அவனுக்கு இரக்கம் காண்பித்தீர், எங்கும் புகழ் பரவிய மிழலையின் இறைவரே, எமக்கு வஞ்சம் செய்வதைத் தவிர்த்து (குறைவற்ற காசை நல்குவீர்).
9
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே.
அயன்-நான்முகன் ; மால்-திருமால் ; முயலும்-முயற்சித்த ; முடி - அடியும்,முடியும்(குறிப்பால் அமைந்த சொல்) ; இயலும்- அனைவருக்கும் இயலும் நிலையில் ; பயன் - பிறவியின் பயனான வீடுபேறு
திருமாலும் நான்முகனும் தேடி அடைய முயன்றாலும் முடியாத அடியையும் முடியையும் கொண்டிருந்தாலும், (உனது அடியவர்களுக்கு) எளிதில் அடையத்தக்க நிலையில், மிழலையில் எழுந்தருளியிருக்கும் இறைவரே, எமக்கு பிறவியின் பயனான வீடுபேறை அருளுவீர் !
பறிகொள் - முடியைப் பறித்துக் கொண்ட நிலையில் ; அறிவது- அறிய வேண்டிய ; அறிகிலார் - அறிய மாட்டார் ; வெறி - மணம் ; பிறிவது-பிறவாக இருப்பது, பிரிவது ; அரியது- கடினமானது
தலைமுடியைப் பறித்து கொண்ட நிலையில் தலைகளையுடைய சமணர்கள், அறிய வேண்டிய உண்மைகளை அறிய மாட்டார்; மணம் பொருந்திய மிழலையின் இறைவரே, உம்மைப் பிரிந்து இருப்பது இனி மிகக் கடினமானது.
சீர்காழியில் தோன்றி வாழ்ந்த சம்பந்தனான அடியேன், திரு விழீமிழலையில் வீற்றிருக்கும் இறைவரைத் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகள் இவை.
டிட் பிட்ஸ்:
திருவீழிமிழலையில் திருமால் சக்கரம் வேண்டி ஈசனைப் பூசிக்கும் போது,ஒரு மலர் குறைந்தால்,தன் கண்ணை மலராக ஈசனுக்கு சமர்ப்பித்ததால், திருவிழிமிழலை என்ற பெயர் பெற்றது.
பிள்ளையார் அம்மையின் அருளைப் பெற்றுத் திகழ்ந்ததால், ஈசனுக்கு மகவு போன்ற உரிமையும், திண்மையும்,வலிமையும் உடையப் பெற்றவராக விளங்கினார். அவரது பாடல்களிலும் அந்த உரிமையும், சக்தியும் திகழ்ந்ததாக அறிஞர் போற்றுவர்
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிறந்த மறைமொழிதானே மந்திரம் என்ப என்பது தொல்காப்பிய வாக்கு.இறைவனின் அருள் பெற்ற குற்றமற்ற சொற்களையுடைய மனிதர்களின் வாக்கு, மந்திரத்திற்கு ஒப்பானதாகும் என்பது விளக்கம்.
இன்றைய நாளில் வழக்கு மன்றங்கள் அல்லது அரசிடம் ஒரு தனிமனிதர்,தமது உண்மை நிலையை அறிவிக்க நேரும் போது,பிரமாணப் பத்திரம்-affidavit - தாக்கல் செய்வது சட்டப்படி தேவையான ஒன்று.அதில் நான் கூறுவனவற்றை நாமே, உண்மை என்று சான்று அளிக்க வேண்டும்; அவ்வாறு சான்று அளித்தபின், சான்று அளித்தவர் அவரது கூற்றிலிருந்து பின்வாங்க அரசோ, சட்டமோ அனுமதிப்பதில்லை. அது போலவே பிள்ளையாரின் பதிகங்களில் கடைசிப் பாடலான பதினொராவது பாடல், பதிகத்தின் பலனை உறுதியாக அறிவிக்கும் படியான டிக்ளரேஷன் பதிகங்களாகவை அமையப் பெற்றிருக்கும். இதனை சம்பந்தப் பெருமானின் அனைத்துப் பதிகங்களிலும் பார்க்கலாம்.
இறைவனின் பூரண அன்பும், சொல்லும் வாக்கெல்லாம் மந்திரமாகவும் திகழ முடிந்ததனாலேயே அவரால் அவ்வாறு உறுதி கொடுக்க முடிந்தது என்பதும் முடிந்த முடிவு-டிரைவ்ட் ட்ரூத்.
அதனாலேயே பிள்ளையாரின் பதிகங்கள் மந்திரமொழிகள் என்றே அறியப் படும்
இந்தப் பதிகத்தை பக்தியும் அன்பும் கொண்டு ஓதி வழிபடுவோருக்கு செல்வச் செழிப்பு ஏற்படுவதோடு, உலக வாழ்வில் சேர்த்த பொருள் அழியாது வளரும் வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அருளும் செல்வமும் வளர்க எந்நாளும் !
இந்தப் பதிகம் பாடல் வடிவில். பாடல் அடியேன்..அவ்வப்போது இவ்வித பயங்கரவாத செயல்கள் பதிவில் நடக்கலாம் என்ற எச்சரிக்கையையும் இப்போதே வைக்கிறேன். :)
முன்னோட்டம்:
இந்த வரிகளில் சிலவற்றை அவ்வப்போது எங்காவது நீங்கள் கேட்டிருக்கலாம்;இவற்றில் சில சொற்றொடர்களைப் பொருள் தெரியாமலேயே இன்றைய மேடைப் பேச்சுகளில் பலர் அள்ளி விடுவார்கள்.
இந்தப் ஒரு வரிக் கவிதை வடிவப் பாடல்களை எழுதியவர் ஔவையார்.
நமக்குத் தெரிந்த ஔவைப் பாட்டி... :))
இப்போது பாடல் வரிகளும் பொருளும்:
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்னை-தாய்,பிதா-தந்தை
ஒருவருக்கு தாயும் தந்தையும்தான் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய,அறிவிக்கப் பட வேண்டிய தெய்வங்கள்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஆலயம்-கோவில், சாலவும்- மிகவும்
கோவிலுக்குச் சென்று தொழுவது மிகவும் நல்லது. இறை சித்தமும்,ஆன்மிகமும் பண்புகளும் வளர்வதோடு, நடைப் பயிற்சியாகவும்,மனிதர்களைச் சந்திப்பதற்காகவும்,சமூக்கதின் அங்கமாக இழைவதனாலும் கூட ஆலயம் தொழுவது மிக நல்லது !
இல்லற மல்லது நல்லற மன்று
இல்லறம்- அறவழியிலான குடும்ப வாழ்வு
அற வழியில் அமைத்துக் கொள்ளப் படும் இல்ல வாழ்வு,திருமண வாழ்வு, அல்லாதது எதுவும் நல்ல அறமாக அறியப் படாது.
இந்தக் கருத்தை வலியுறுத்தும் அழகிய குறள் ஒன்றும் இருக்கிறது.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிப்
போஒய்ப் பெறுவது என்
துளசி டீச்சரின் 38 வது திருமண நாளப் பதிவில் கூட இந்தக் குறளை எழுதியே வாழ்த்தினேன். நாவலருக்கு நன்றியுடன் ! [ நெடுஞ்செழியனுக்கு என்று அன்பர்கள் நினைத்து விடாதிருப்பார்களாக :)) ]
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
ஈயார்- கொடுக்காதவர்,ஈகை இல்லாதவர், தேடு|தேட்டை-செல்வத்தை
பிறருக்குக் கொடுக்காமல் சேர்த்து வைக்கும் செல்வமானது சேர்த்து வைத்தவர்களுக்குப் பயனளிக்காமல்,தீயவர்கள் கைக்கே செல்லும்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு
உண்டி-உணவு, சுருங்குதல்- குறைத்தல்
உணவைத் தேவையான அளவிற்கு மட்டும் உண்டு,குறைந்த அளவில் உண்பது,பெண்களுக்கு அழகை அதிகரிக்கும்.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஊருடன்- வாழும் சமூகம்,சுற்றம் பகை-எதிர்ப்பு
தாம் வாழும் சமூகத்தையும் சுற்றத்தையும் பகைத்துக் கொண்டு வாழ்வது வாழ்வின் அடிப்படையையே கெடுத்து விடும்,
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
எண்- எண்கின் மூலம் கிடைக்கும் கணித அறிவு,எழுத்து- எழுத்துக்களை அறிவதால் கிடைக்கும் மொழி அறிவு
கணித அறிவும் மொழி அறிவும் ஒருவருக்கு இரண்டு கண்கள் போன்றவை. சமூகம்,வரலாறு,அறிவியல் போன்ற துறைகளில் அறிவும் பயிற்சியும் இருந்தால் நல்லது.ஆனால் இன்றியமையாது அவசியம் இருக்க வேண்டியது மொழியறிவும்,கணித அறிவும் ஆகும்.
ஏவா மக்கண் மூவா மருந்து
ஏவா- ஏவுதல் இல்லாத, அறிவுறுத்தல் இல்லாத, மூவா- மூப்பு இல்லாத அமிர்தம் உண்டது போல
தம் பிள்ளைகளுக்கு, இதைச் செய்,அதைச் செய் என்று அறிவுறுத்த வேண்டிய தேவை இல்லாத அளவில் வளரும் பிள்ளைகள் இருப்பது, பெற்றோர்களுக்கு அமிர்தம் உண்டு வாழ்வது போன்ற மருந்தாகும்
ஐயம் புகினுஞ் செய்வன செய்
ஐயம்-பிச்சை
பிச்சை எடுத்து வாழும் நிலை வந்தாலும் செய்யத் தகுந்த காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்;செய்யத் தகாத செயல்களைச் செய்யக் கூடாது.
ஒருவனைப் பற்றி யோரகத் திரு
ஒருவனை-நல்லவனான,அறிவாளியான,திறமைசாலியான ஒருவன், பற்றி- துணையாகக் கொண்டு, ஓரகத்து- ஓரிடத்தில்
அறிவும் திறமையும் முதிர்ச்சியும் கொண்ட ஒருவனைத் துணையாகக் கொண்டு ஒரு இடத்தில் வசிக்க வேண்டும்.
அந்தணர்கள்,வேதத்தின் வழி நிற்பவர்கள் என்று அறியப்பட்டவர்கள் வேதங்களைப் படித்து அறிதலினும் முக்கியமானது, ஒழுக்கமான வழியில் வாழ்வது.
படிப்பதை விடப் பயிற்சி செய் என்ற சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். Better pratice than preaching !
ஔவியம் பேசுத லாக்கதிற் கழிவு
ஔவியன்-பொறாமை பேசுதல், ஆக்கம்- உயர்வு, செல்வம், முன்னேற்றம்
மற்றவர்களைப் பற்றிப் பொறாமை பேசும் குணமானது, பேசுபவர்களின் செல்வம்,முன்னேற்றம்,உயர்வு ஆகியவற்றை அழித்து விடும்.
முருகப் பெருமான் வித் ஔவை..
டிட் பிட்ஸ்:
ஒரு காலகட்டத்தில் வாழும் கற்றறிருந்தவர் அனைவரிலும் சிலர் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள்.அத்தகைய சிறந்தவர்களுக்கு ஒரு பொதுவான குணம் உண்டு.அது அவர்கள் காலத்திய,இனி வரப்போகும் காலத்தில குழந்தைகளைப் பற்றிய அக்கறை.
அக்குழந்தைகள் நல்ல அறிவை,நல்ல பழக்க வழக்கங்களை,நல்ல அறிவுரைகளை,நல்ல குணங்களைப் பெற்று,வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஓயாத அக்கறை அவர்களுக்குள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.
தன்னுடைய அடுத்த தலைமுறையை,அவர்கள் வாழும் சமூகத்திற்கான ஒரு சிறந்த பரிசாகத் திகழும் அளவில் தயாரித்து விட்டு விட்டுச் செல்பவர்கள்தான் எப்போதும் உலகத்தை,வாழ்க்கையை மேன்மைப் படுத்தியிருக்கிறார்கள்.
அந்த வகையில் குழந்தைகளின் குண நலன்களை மனதில் வைத்து அவர்களுக்கான அறிவுரை வடிவமாகப் பல அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார்.இவற்றில் சில எங்களுக்கு சிறுவயதில் இரண்டு,மூன்றாம் வகுப்புகளில் தமிழ்ப் பாடத் திட்டத்தில் இருந்தன.பாடத்திட்டத்தில் இல்லாதவை சிலவற்றையும் அம்மா,முதலில் அடித்தும் படிக்கவும்,பின்னர் பிடித்ததால் படிக்கவும் வைத்தார்.
நான் மனிதனாகப் பிறப்பெடுத்தது முதற்காரணம் முதல்,பலப்பல காரணங்களுக்காக நன்றியுடன் தொழுது வழுத்த வேண்டிய அம்மாவுக்கு, இந்தக் கொன்றை வேந்தனைச் சிறுவயதிலேயே படிக்க வைத்ததற்காகவும் கூடுதலாக கடப்பாடு சேர்ந்திருக்கிறது.
இந்தக் கடப்பாடுகளைத் தீர்க்க எத்தனை பிறப்புகள் வேண்டும் என்று தெரியவில்லை!!!
குழந்தைகள் படிப்பதற்கு அவர்களுக்கும் ,குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு பெரியவர்களுக்கும் பயன்படலாம் என்பதால் கொன்றை வேந்தனையும் இப்பகுதியில் இணைத்திருக்கிறேன்.
திருமந்திரம் திருமுறைகளின் தொகுப்பில் பத்தாம் திருமுறையாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது.
திருமுறைகளின் மற்றைய ஆசிரியர்களின் காலம் நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகே வருகிறது.ஆனால் திருமந்திரம் திருக்குறளின் காலத்திற்கு முந்தையதாகவே இருக்க வேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
காரணம் திருமந்திரக் கருத்துக்களில் இருக்கும் ஆழமும், திருமூலர் ஒரு சித்தராகவும் அறியப்படுவதால். திருமூலர் நரை,மூப்பு,திரை( தலை நரைத்தல்,உடம்பு மூப்படைதல்,கண் பார்வையிர் திரை விழுந்து பார்வை குறைதல்) ஆகியவை இல்லாமல் பல நூற்றாண்டுகள் வாழ்ந்ததாகவும், ஆண்டுக்கொரு பாடலாக 3000 பாடல்கள் இயற்றியதாகவும் ஒரு கூற்று உண்டு.
இன்றைய கருத்தில் இவற்றை மறுதளிப்பார்கள் இருப்பினும்,திருமூலர் பல பாடல்களில் காலத்தை வென்று வாழும் முறைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.இது அவ்வகைப் பாடல்களில் ஒன்று.
பொருள்:
உடம்பு அழியும் போது,அந்த உடம்பைப் பற்றி நின்ற உயிரும் இறந்து அழிந்து செயலின்றி நிற்கிறது.
எனவே உடம்பு அழியும் போது,உயிர் இயங்கி அடைய வேண்டிய குறிக்கோள்களான தவமாகிய துணையைப் பெறுதல்,மற்றும் இறையுணர்வை அடைதல் ஆகியவை இயலாத காரியமாகி விடுகின்றன.
எனவே நான் உடம்பு அழியாது நிலைபெற்று நிற்பதற்கான வழிகளை அறிந்து,உடலை வளர்ந்து அழியாது நிலைபெறச் செய்வதன் மூலம்,உயிர் அல்லது ஆன்மாவினை வளர்த்து நிலைபெறச் செய்து,ஆன்மாவின் குறிக்கோள்களை அடைய எத்தனிக்கிறேன்.
டிட் பிட்ஸ்:
ஒரு மனிதன் முதலில் அடையாளப் படுத்தப் படுவது அவனது தோற்றம் மற்றும் உடம்பால்.பின்னர் அவரது குணநலன்கள்,அறிவு,திறமை போன்றவை அந்த நபரின் இயல்பு,குணநலன்களாக அறியப்படுகின்றன.
அந்த மனிதரின் உடம்பு அழியும் போது,அந்த நபர் இறந்ததாக|அழிந்ததாக அறியப்படுகிறார்.
அவரின் அறிவு,திறமை,குண இயல்புகள் அந்த நபரது உடம்பில் இயங்கிய உயிர் அல்லது ஆன்மாவுடன் இணைகிறது.இவற்றில் கல்வி மட்டுமே ஏழு பிறப்புகளுக்கு அந்த ஆன்மாவுடன் பயணம் செய்கிறது என்கிறது தத்துவ நூல்கள்.
மற்ற அனைத்து குண நலன்களும் உடம்பு அழியும் போது,அந்த உடம்புடன் சேர்ந்து அழிகின்றன.
உடம்பு அழியும் போது ஆன்மாவின் இலக்கான மெய்ஞானத்தை அடையும் குறிக்கோள்-task- தடைபடுகிறது.அவ்வாறு தடைபெறாமல்-திடம்பட என்று கூறுகிறார்-உறுதியாக ஆன்மா அதன் இலக்கில் நிலைத்திருக்க,உடம்பு நிலைத்திருத்தல் அவசியம்.
உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் என்பதன் மூலம்,உடம்பை அழியாது நிலைநிறுத்தும் உபாயத்தை,தந்திரத்தை அறிந்து விட்டதாகவும்,அதை செயல்படுத்தி விட்டதாகவும் திருமூலரே கூறுகிறார்.
உடம்பை வளர்த்தேன்-உயிர் வளர்த்தேன் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் ஒரு candid statement ஆக, உறுதியாக,ஒப்புக் கொள்கிறார் திருமூலர்
தொடங்கும்கால் துன்பமாய் இன்பம் பயக்கும் மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடுங்காமம் முன் பயக்கும் சில நீர இன்பத்தின் முற்றிழாய் பின் பயக்கும் பீழை பெரிது
நூல்: மூதுரை
ஆசிரியர்: ஔவையார்
பாடல் எண்: 3
முக்கிய சொற்கள்:
தொடங்கும் கால- தொடங்கும் பொழுது
மடம்-அறியாமை
நெடுங்காமம்- நெடிது காமத்தில் திளைத்திருத்தல்
பீழை-துன்பம்
முற்றிழாய் - முடிந்த தொழில்களையுடைய நகைகளை அணிந்திருக்கும் பெண்(அழைப்பு விகுதி)
பாடல் பொருள் :
நகைகளை அணிந்த, வினைகளை முடித்திருக்கும் பெண்ணே, கல்வியானது கற்கத் தொடங்கும் போது துன்பமாக இருப்பது போல் தோன்றினும் பின்பு இன்பம் கொடுக்கும்;அதுவல்லாமலும் அறியாமையை அகற்றி அறிவைக் கொடுக்கும்; ஆனால் காமம் தொடக்கத்தில் தரக் கூடிய சிறிதளவே நிலவும் இன்பத்தைக் கொடுப்பினும்,இன்ப நுகர்ச்சிக்குப் பின்னால் தரக் கூடிய துன்பம் மிகப் பெரிது.
டிட் பிட்ஸ்:
கல்வி கற்காது,காதல்,காமம் என்று பொழுதைப் போக்கும் வழக்கம் எக்காலத்திலும் இருந்திருப்பதை இப்பாடல் சொல்கிறது. :)
காமத்திலும் காதலிலும் இன்புற்று கல்வியை மறப்பவர்களுக்கு,காமத்தை எடுத்துக் காட்டி கல்வியை வலியுறுத்தும் விதமாக உள்ள பாடல்.
கல்வி கல்லாது,திருமணத்தை நாடும் பெண் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது இந்தப் பாடலின் விளிப்பு.
அறியாமை(மடம்) நீங்கவே அதுனுள்ளிருந்து அறிவு வெளிப்பட்டு ஒளிவீசும் என்ற குறிப்பையும் தருகிறது.
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி என்று தருங்கொ லெனவேண்டா-நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால்
நூல்:மூதுரை
ஆசிரியர்:ஔவையார்
பாடல் எண்:1
பதம் பிரித்த பாடல்:
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும்கொல் என வேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்
முக்கிய சொற்கள்:
நன்றி-உதவி,நன்றி
செய்தக்கால்- செய்வதால்,செய்யும் பொழுது
தருங்கொல்-திரும்பக் கிடைப்பது,தருவது
தளரா-சோர்வில்லாது
தெங்கு-தென்னை
தாள்-அடி
கே.பி.எஸ்...ஔவையாக
கருத்து:
ஒருவருக்கு ஒரு உதவி செய்யும் போது,அந்த உதவிக்குக் கைம்மாறாக,பதிலாக,உதவி பெறுபவர் எப்போது திரும்ப உதவி செய்வார் என்ற எண்ணத்திலேயே,சந்தேகத்திலேயே நாம் அந்த உதவியை அவருக்குச் செய்யக் கூடாது; எப்போதும் நின்று,சோர்வில்லாது வளரும் தென்னை மரமானது,தன் வேர்களின் மூலம் தான் எடுத்துக் கொண்டு வளர்ந்த நீரை,தன்னுடைய தலை வழியாக இனிமையான இளநீராக தான் தருவதைப் போல,உதவி செய்ய வேண்டும்.
டிட் பிட்ஸ்:
தென்னை தளராது பிறருக்கு பயனாய் தன்னுடைய இருப்பை அமைத்துக் கொள்வதைப் போல,நாமும் பிறருக்கு உதவிகரமாய் வாழ வேண்டும் என்பது குறிப்பால் சொல்லும் பொருள்.
ஒருவற்கு என்ற சொல்,நற்குணமுடைய ஒருவருக்கு என்ற குறிப்பையும் தருகிறது;நற்குணம் என்பது பெற்ற உதவியை மறக்காதிருப்பதும்,செய்தவருக்கு உதவி தேவைப்படும் காலத்தில்,அவர் கேட்காத நிலையிலும் தானே முன்வந்து அவர்களுக்கு உதவி செய்வது என்பதும் குறிப்பால் விளக்கப்படுகிறது.
காலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும்
நூல்: நீதி நெறி விளக்கம்
ஆசிரியர்:குமரகுருபரர்
பாடல் எண்:52
பதம் பிரித்த பாடல்:
காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய் வினையின்
மூலம் அறிந்து விளைவு அறிந்து- மேலும் தாம்
சூழ்வன சூழாது துணைமை வலி தெரிந்து
ஆள்வினை ஆளப்படும்
முக்கிய சொற்கள்:
மூலம்- வேர்,காரணம்,நோக்கம்
வலி-வலிமை,திறமை
ஆள்வினை-முயற்சி
ஆளப்படும்-செய்யப்படும்
கருத்துரை:
நாம் ஒரு காரியத்தை முயற்சிக்கையில்,அக் காரியத்தின் நோக்கம் மற்றும் பயன் ஆகிய இரண்டையும் ஆராய்து,அக் காரியத்தை முடிக்க ஏதுவான நேரம் எது என்று ஆராய்ந்து, அதனை செய்து முடிக்க வல்ல இடம் எது என்பதையும் ஆய்ந்து தேர்ந்து, அவ்வினையைச் செய்வதற்கான துணையாக வருபவர்களின் திறமையும் வலிமையையும் ஆராய்ந்து, அக்காரியம் செய்ய முயற்சிக்கையில் நிகழக் கூடிய சுற்றுப் புற சூழலையும்,மக்களையும் ஆராய்ந்து, பிறகு முயற்சி செய்தால்,அந்த முயற்சியானது தடைகளின்றி நிறைவேறும்.
டிட் பிட்ஸ்:
பொதுவாக விணை செய்யும் முறைக்கு இந்தப் பாடல் எடுத்துக் காட்டாகக் கொடுக்கப் பட்டாலும், போர் செய்யும் சூழலில் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிய விதயங்களைக் குறிப்பிடும் பாடல் இது.
காலம் அறிந்து என்ற பொருள்,தனக்கு உகந்த காலம் என்பதோடு,அவ்வினையை எவரிடம் அல்லது எவரை வைத்து முடிக்கப் போகிறோமோ அவருடைய சூழல் என்ன என்பதையும் ஆராய வேண்டும்.
இடம்-வினை முடிக்க வேண்டிய இடத்தை முடிவு செய்வது இரண்டாவதாக முக்கியமான செயல்.
சூழ்வன சூழாது- நமது வினைக்கு ஊறு விளைவுக்கும் காரணிகள் ஏதும் சூழ நேருமா என்பதை ஆராய வேண்டுவதும் இன்றியமையாதது.
துணைமை வலி- தமது துணைவர்கள் மற்றும் தனது எதிரில் நிற்பவர்களின் வலிமையும் எடை போட்டுப் பார்க்க வேண்டிய தேவையை வலியுறுத்துவது.
மூலம்- அவ்வினை செய்வதற்குரிய நோக்கம் சரியானதா என்பதை ஆராய வேண்டும் என்ற கருத்து
ஆகிய அனைத்தையும் ஒரு வினை செய்யப் புகுமுன் ஆராய வேண்டும் என்பது விளக்கம்.
பதம் பிரித்த பாடல் :
தூயவாய்ச் சொல் ஆடல் வன்மையும்,துன்பங்கள்
ஆய பொழுது ஆற்றும் ஆற்றலும்-காய இடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்மையும் இம் மூன்றும்
சாற்றும் கால் சாலத் தலை.
முக்கிய சொற்கள்:
வன்மை - குணம்
வண்மை என்றும் சில நூல்களில் காணப்படுகிறது. வண்மை-திறம்
ஆய பொழுது- வரும் பொழுது
ஆற்றும் ஆற்றல்- தளர்வடையாமல் செயல் படும் திறம்
காய- வெறுப்பு
வேற்றுமை- பகை,வெறுப்பு,வேறுபாடு
சாற்றும்-கூறும் பொழுது
கருத்து:
நல்ல கருத்துக்களை,குற்றமில்லாமல் சொல்லும் திறமும்,வாக்கு வன்மையும்; துன்பங்கள் நேரும் போது தளர்வடைந்து மயங்கி நிற்காமல்,ஊக்கமுடன் செயலாற்றும் திறமும்;தம் மீது வெறுப்பும்,பகையும் கொண்டு வருபவர்களிடமும் வேறுபாடோ,வெறுப்போ,கோபமோ இல்லாத நிலையும்; ஆன இவை மூன்றும்,சொல்வதெனில்,மிக உயர்ந்த குணங்களாகும்.
டிட் பிட்ஸ்:
நல்ல கருத்துக்களை அறிதல் மட்டும் அறிவன்று;அவற்றைத் திறம்பட குற்றமில்லாமல் எடுத்துச் சொல்லும் ஆற்றலும் வேண்டும்.அதுவே அறிவின் விளைவு.
நீட்டோலை வாசியா நின்றான் நெடுமரம்- என்பது தமிழ்க் கூற்று. அக்காலத்தில் ஓலையில் எழுயிருக்கப் படும் ஒரு பத்தியை அல்லது செய்யுளை,இக்காலத்தில் புத்தகத்தை வாசிப்பது போல எளிதில் வாசித்து விட முடியாது.ஓலைகளில் எழுதிய எழுத்துக்களில் சில காலம் ஒற்றெழுத்துக்கள் தனியாகக் புள்ளி வைத்து எழுதாத காலமும் உண்டு. அப்போது எழுதி இருக்கும் கருத்தை சந்தேகமின்றிப் புரிந்து கொள்ள, நல்ல மொழி அறிவும்,கருத்துத் தெளிவும் அவசியம்.
அவ்வளவு தெளிவு கொண்டவர்கள் எந்த ஓலையில் எழுதியிருக்கும் பாடலையும் தெளிவாக,அப்பாடல் என்ன சொல்கிறது என்ற கருத்தை,பிழையில்லாமல் வாசித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.
இதை கருத்தில் கொண்டே, அப்படி வாசிக்கத் தெரியாதவர்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள் என்ற சொல்லாடல் எழுந்தது.(இந்த வரிகள் ஔவைப் பாட்டியின் பாடலில் இருந்து வந்தது என்று நினைவு)
சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' என்பது குறள் வாக்கு. துன்பங்கள் வரும் போது தளர்வடையாமல் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தையே அந்தக் குறளும் குறிப்பிடுகிறது.(பெருக்கத்து வேண்டும் பணிதல்..)
ஒரு அவசிய முன்னுரையும்,எச்சரிக்கையும்(!?) : இந்தப் பதிவுத் தொடரை என்னுடைய இன்னொரு வலைமனையான மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற பக்கத்தில் எழுதுவேன் என்றே முதலில் அறிவித்திருந்தேன். ஆனால் அதில் சில தொழில்நுட்பப் பிரச்னைகளால் திரட்டிகளில் இணைப்பதில் சங்கடங்கள் தோன்றின. எனவே எனது முக்கிய வலைப் பக்கமான சங்கப்பலகையிலேயே தினமொரு பாடல் வெளிவருகிறது. ரசிப்பதோ,தவிர்ப்பதோ உங்கள் கைகளில் ! :)) நன்றி. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- _________________________________________________________________________________
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. - திருக்குறள் 1-1
நூல்: திருக்குறள் அதிகாரம்-கடவுள் வாழ்த்து பாடல் எண்-1
சொற் பொருள்: அகரம்- தமிழ் மொழியின் எழுத்துக்களின் முதல் எழுத்தான 'அ' ஆதி பகவன்-முழுமுதற் கடவுள்
பொருள்: எழுத்துகளுக்கெல்லாம் அ'கரம் எவ்வாறு முதலாக விளங்குகிறதோ,அது போல இந்த உலகம் கடவுளை முதலாகவும் அடிப்படையாகவும் கொண்டிருக்கிறது.
டிட் பிட்ஸ்: தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழிகளுள் ஒன்று.சொல்லப்போனால் உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே என்பதற்கான புறச்சான்றுகளையும்,விவாதச் சான்றுகளையும் எளிதாகக் காண இயலும். இது பற்றி விளக்கமாக கந்தையா,பாவாணர்,மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் பலர் பல நூல்களில் விளக்கி எழுதியிருக்கிறார்கள்.
தமிழ் மொழியின் மொழி அமைப்புக் கட்டு வியக்க வைப்பது. தமிழின் இன்றைக்குக் கிடைத்த முதல் நூலாகக் கருதப் படும் தொல்காப்பியமே ஒரு மொழிக்கான இலக்கண நூல்.
எழுத்து,சொல்,பொருள் என மொழியின் அடிப்படைகளுக்கான விதிகளை தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கும் ஒரு நூல்,இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் காலத்தால் மிக முந்தைய நூல்.
அத்தகைய எழுத்துக்களுள் முதன்மையான, உயிர் எழுத்துக்களில்,இன்னும் முதன்மையாக,முதல் எழுத்தாக வருவது அ' என்ன அகரம்.
அகரம் என்ற சொல்லே வியந்து பார்த்து ஆய்வுக்குட்படுத்த வேண்டியது. மெதுவாக இச்சொல்லை எழுத்து எழுத்தாக உச்சரித்துப் பார்த்தால்,சில ஆழ்ந்த பொருள் உங்களுக்கு விளங்கும்.
மனிதன் ஓசை எழுப்பும் விதம் வாய்,நாக்கு,தொண்டையில் உள்ள குரல்நாண் போன்ற உடற்கருகவிகளின் மூலமே.இதில் அ என்ற எழுத்து, மிகுந்த முயற்சியன்றி, தொண்டைக்கு அருகில்,குரல்நாணில் இருந்து எழுப்பப் படும் சப்தம்;அடுத்ததாக உள்ள க' மூக்கின் அடிப்பாகமான உள்நாக்குக் கருகில் உள்ள இடத்திலிருந்த எழுப்பப் படும் சப்தக் குறியுடன் விளங்குவது.அ என்ற எழுத்தை நோக்க இன்னும் சிறிது அதிக முயற்சி தேவைப் படும் உச்சரிப்பு,க' எழுத்துக்கு வேண்டும். அடுத்த எழுத்தான ர' வாய்க்குள் இன்னும் சிறிது முன்வந்து,நாக்கின் மேலண்ணத்தில் மேல் பற்கள் வரிசைக்கு சிறிது மேல் புறத்திலிருந்து எழும் ஓசைக்குரியது.க'வை உச்சரிப்பதை விட இன்னும் சிறிது முயற்சி ர'வை உச்சரிப்பதற்கு வேண்டும். கடைசி எழுத்தான ம்' வாயின் வெளிப்புறமான உதடுகள் மூடிய நிலையில் வெளிப்படும் ஓசை.
ஒரு மொழியின் எழுத்துகளின் வரிசையைப் பொதுவாகக் குறிக்கும் அகரம் என்ற சொல்லின் உச்சரிப்பிலேயே, தொண்டையின் குரல் நாண்,உள்நாக்கு,மேலண்ணம், நுனி நாக்கு மற்றும் உதடுகள் என ஓசை எழுப்பும் கருவிகள் அனைத்தும் சிறிது சிறிதாக, ஒத்திசைந்து எழுப்பப்படும் ஓசைகளைக் கொண்டதாக அமைந்திருப்பது எவ்வளவு விந்தை?!
இன்னும் அகரம் என்ற சொல்லின் எழுத்துக்களான அ-உயிர் எழுத்து க-மெய்-வல்லினம் ர-மெய்-இடையினம் ம்-மெய்-மெல்லினம்
என்றும் அழகாக எழுத்துகளின் வகைப்படுத்தல்களில் ஒவ்வொரு வகைக்கும் ஒரு எழுத்தைச் சேர்த்துக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் சொல் அகரம்.
இவ்வளவு நுணுகிய அமைப்புச் சிறப்புடன் கூடிய மொழி உலகில் எங்காவது உண்டா??
இது போன்ற பல ஆய்வு விளக்கங்கள், தமிழே, பேசத் தெரிந்த மனிதன் ஆக்கிய உலகின் முதல் மொழி, என்று நிறுவப் போதுமானவையும் துணையானவையும் ஆகும்.
பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
-
தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில்
நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும்
போகாமல், கும்பக...
மீட் அண்ட் க்ரீட்
-
ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில்
இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து
சேரும். செக்யூர...
அப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்
-
டாக்டர் அப்துல் கலாம் (1931-2015)
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு டிசம்பரில் வங்கதேஷ் போர் நடந்து
கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செ...