குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, August 17, 2012

* * * * * 166.மதத்தினால் விளையும் மனச்சிக்கல்கள் !



நண்பர் கோவி.கண்ணன் தனது காலம் பதிவில் பதஞ்சலி பாம்பின் அற்புதம் என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வுப் பதிவு எழுதியிருந்தார்.

இது போன்ற புகைப்படங்களிலிருந்து 'அற்புதங்களை' உருவாக்குபவர்களுக்கு ஒரு விதமான மனத் தடையும், சுய இரக்கமும் இருக்குமோ என்பது என் சந்தேகம்.சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வை, அல்லது உண்மையிலேயே நடக்காத ஒன்றைத் திரித்து, நடந்ததாச் சொல்லி,
அதனை ஒரு தத்துவம் அல்லது நம்பிக்கையின் மீது ஏற்றி, அந்த நம்பிக்கை அல்லது தத்துவத்திற்குப் புகழையைம் பின்பற்றுவோரையும் உருவாக்குகிறோம் என்ற நினைப்பில், அவர்கள் செய்வது சுத்த கோமாளித்தனம் !

கோவி கண்ணன் பதிவில் எடுத்துக் காட்டியது போல ஒரு தலைப் பாம்பு, மூன்று தலையாகி, பின்னர் ஐந்து தலையாகி, பதஞ்சலி ஆகி விட்டது..பாவம் பாம்பு, அதற்கு எளிமையாக தலைகீழாக மரத்தில் ஏறக்கூட முடியுமா முடியாதோ தெரியவில்லை..அதில் பதஞ்சலி முனிவரை ஏற்றி...பதஞ்சலி பாவம்.

அந்தப் பதிவில் மேலும் எழுதும் போது கண்ணன் பின்வருமாறு எழுதியிருந்தார்.

'பாம்பு, இருட்டு இதற்கான அடிப்படை அச்சம் ஒவ்வொரு மனிதருக்குமே உண்டு, பாம்பு, இருட்டு (எமன்) இவைகள் தெய்வமாக மாறியதற்குக் காரணமே அதன் மீது இருக்கும் அடிப்படை பயம், அதைப் போற்றிவிட்டால் அது நம்மை அச்சப்பட வைக்காது அல்லது அச்சமின்றி இருக்கலாம் என்ற உளவியல் காரணங்களால் இவைகள் தெய்வமாயின, நாகம் என்று வாய் சொல்லாகச் சொன்னால் கூட ஏற்படும் அச்சத்தைப் போக்கிக் கொள்ள 'நல்ல பாம்பு' என்று கூறிவருகிறோம்...'

இது போன்று விலங்குகளை இறைவடிவங்களின் மீது ஏற்றியதன் நோக்கம், அவற்றைப் போற்றி விட்டால் நாம் அச்சமின்றி இருக்கலாம் என்பதால் அல்ல. கடவுள் தன்மை என்ற ஒன்றின் வடிவமாக கடவுளர்களின் வடிவங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.அந்த கடவுளர்களின் வடிவ உருவங்களில், பெரும் அச்சமேற்படுத்தும் விலங்குகள் கட்டுப் பட்டு, வாகனம் அல்லது ஆபரணமாக கடவுளர் வடிவங்களில் சேர்க்கப் பட்டிருப்பது, பயபக்தி என்பதன் பாற் பட்டே.

வழிபாடு முதன் முதலில் நிகழ்ந்தது பயத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்திருக்க முடியும்.ஆதி மனிதனைக் காட்டில் பரவிய தீ, கூட்டமாக அழித்த போது, அது அச்சப் படத் தக்க வேண்டிய ஒரு பொருளாயிற்று, அந்த அச்சப் படத் தக்க வேண்டிய பொருளை, கடவுள் வடிவத்தில், உருவகப் படுத்தி, கடவுளர் கைகளில் தீ அடக்கமாக எரிவதாக, காட்டியதன் மூலம், கடவுளின் மீதான பயபக்தியை வளர்த்திருப்பார்கள், இவ்வாறே தென்னிந்திய சமயங்களில் இருக்கும் அனைத்துக் கடவுளர் வடிவங்களுடன், பெரும் அழிவை நிகழ்த்த வல்ல வடிவங்களான, நெருப்பு, நீர், சிங்கம், புலி, பாம்பு போன்றவை உருவகப் படுத்தப் பட்டன.

பக்தி என்பது பயத்தின் அடிப்படையில் தோன்றி, நம்பிக்கையின் அடிப்படையில் நிலை பெற்று, தத்துவத்தின் அடிப்படையில் வளர்ந்து, பண்பட்டு, அன்பின் அடிப்படையில் முழுமை பெறும் ஒன்று.

பக்தியின்  முடிவு நிலையான அன்பு நிலையை, ஆத்திகர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் கூட நூற்றில் இருபது சதவிகிதமானவர்களே எட்டுகிறார்கள் என்பது எனது அனுமானம்.
ஆரம்ப நிலையிலான பய நிலையில் இருப்பவர்கள், கடவுள் தன்மைக்கு எதிரான ஒன்றாகக் குறிப்பிடப் படும் ஒன்றைப் பொதுவாக எந்த மனச்சிக்கலும் இல்லாமல் செய்வார்கள்; ஆனால் அவர்களுக்கு உலகியல் ரீதியான துன்பங்கள் வரும் போது, எவராவது அவர்களது நடவடிக்கைகளைச் சுட்டினால், பயத்தின் அடிப்படையில் அதைச் சிலகாலம் செய்யமாலிருப்பார்கள். முட்டக் குடிப்பவர்கள், புலால் உணவு அருந்துபவர்கள், சபரிமலைக்குச் செல்லும் போது 'சாமி' என்று அழைத்துக் கொள்வதும், குடும்பத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், புலால் உணவை நிறுத்துவோரும் இந்தக் கூட்டத்தில் எளிதாக வருவார்கள். இவர்களது பக்திக்கு அடிப்படை பயம். பயம் நீங்கி விட்டால் பக்தியும் நீங்கி விடும் !

அடுத்த நிலை நம்பிக்கை நிலை. பெரும்பாலான ஆன்மிக வாதிகள் நம்பிக்கை நிலையிலேயே நின்று விடுகிறார்கள். நம்பிக்கை நிலையில் கேள்வி கேட்பது தடை செய்யப் பட்டிருக்கும். நம்புபவர்கள் கேள்வி கேட்பது தவறு என்ற எண்ணம் புகுத்தப் படும். அவர்களும்  வருடங்களாகக் அறிவுறுத்தப்பட்ட பழக்கம் மற்றும் நம்பிக்கையின் வழி பக்தியை அணுகுவார்கள்.

உலகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மத நூல்களில் தீர்வு இருப்பதாக நம்பும் நண்பர்களும் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள். கண்ணனின் பதிவில் தொழுகை மற்றும் சூரிய நமஸ்காரநிலைகளுக்கு நண்பர் சுவனப் பிரியனின் விளக்கங்கள் இந்தப் பிரிவில் எளிதாகச் சேரும்.



நண்பர் இக்பாலின் சுட்டி மேலும் சிரிப்பூட்டியது. சாதாரண உடற்பயிற்சியினாலும், உணவுக் கட்டுப்பாட்டாலும் அடையக் கூடிய தீர்வைக் கூட, மத நூல்களில் தேடும் சிந்தனை, மலச்சிக்கல் மட்டுமல்ல, மனச்சிக்கல்களையும் ஊக்குவிக்கும்.


:)


இதனை அடுத்த நிலை தத்துவ நிலை. நம்பிக்கை நிலையையும் தாண்டியவர்கள் தத்துவ நிலையில் எதையும் ஆய்வுக்குட் படுத்துவார்கள்; பக்தியை கோட்பாட்டு நிலையில் அணுகுவார்கள், அதைப் பற்றிய பல தத்துவங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.இவர்களது வாழ்வு முறை, தத்துவக் கோட்பாடுகளை அறிந்து கொண்ட காரணத்தால் மாற்றம் பெறுமேயன்றி, பயத்தினாலோ அல்லது நம்பிக்கையினாலோ மாறாது.

பக்தி அல்லது ஆன்மிகத்தின் தத்துவ நிலையையும் தாண்டிய நிலை அன்பு நிலை. இந்த நிலையையும் தத்துவக் கோட்பாடுகளே உணர்த்துகின்றன. அன்பு நிலையை எட்டியவர்கள் பித்து நிலையையும் எட்டுவார்கள் என்பது எனது அனுமானம். இந்த நிலையை எட்டியவர்களை இக்காலத்தில் காண்பது எளிதா என்பது எனக்கும் கேள்வியே..

இப்போது, 'பதஞ்சலி பாம்பி'ற்கு வருவோம்.

அந்த புகைப்பட 'வித்தை'க்குப் பின்னால் இருப்பவர்கள் பெரும்பாலும் முதல் நிலையான பய நிலையில் இருப்பவர்கள். தான் ஆன்மிகப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற நினைவும், அந்தக் கட்சியில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதன் மூலமே, தன்னுடைய இருப்பு பயமற்றதாக, பெருவாரியானதாக இருக்கும் என்ற பயம் மற்றும் நம்பிக்கைக் கோட்பாடுகளே, இது போன்ற செயல்களில் அவர்களைத் தூண்டுகின்றன.

ஆன்மிகத்தை உண்மையில் ஆராய்பவர்கள், அனுபவிப்பவர்கள் தத்துவ மற்றும் அன்பு நிலையில்தான் இருப்பார்கள் என்பது எனது துணிபு.

7 comments:

  1. சில தளங்களில், சில நண்பர்களின் கருத்துகளையும் படிப்பதுண்டு... பதில் எழுதலாமா என்று தோன்றும்... பிறகு என் தள Profile -க்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்... அவரவர் எழுத்துகளிலேயே அவர்களின் குணம் தெரிந்து விடுகிறது... அவரவர் உணர்ந்தால் அதை விட சிறப்பேது...? (கூகுள்ளாண்டவர் 'blogspot' நிறுத்தினால் எல்லாமே அம்பேல்...!(என் தளமும்))

    /// ஆன்மிகத்தை உண்மையில் ஆராய்பவர்கள், அனுபவிப்பவர்கள் தத்துவ மற்றும் அன்பு நிலையில்தான் இருப்பார்கள் ///

    சிறந்த கருத்து...

    மற்றவர்களிடம் நம்மை காண்பது தான் உண்மையான ஆன்மிகம்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      || சில தளங்களில், சில நண்பர்களின் கருத்துகளையும் படிப்பதுண்டு... பதில் எழுதலாமா என்று தோன்றும்... பிறகு என் தள Profile -க்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்... அவரவர் எழுத்துகளிலேயே அவர்களின் குணம் தெரிந்து விடுகிறது... அவரவர் உணர்ந்தால் அதை விட சிறப்பேது...? ||

      பிறரை நேசிப்பது என்பது வேறு; தவறான கருத்தையோ, செயலையோ பார்க்கும் போது, படிக்கும் போதோ அதைத் தவறு என்று சுட்டிக் காட்டுவது வேறு.

      பின்னது, நேர்மையான மனிதர்களின், நல்ல சமுதாயத்தை விரும்பும் மனிதர்களின் கடமை.
      வேறு எதற்காகவும் அந்தக் கடமையை விட்டு விடக் கூடாது என்பது என் கொள்கை..

      இதில் சிலர் நம்மை வெறுக்க நேரிடலாம்;ஆனாலும் சமூக நன்மைக்கான சரியான செயலைச் செய்வதில் தயக்கம் இருக்கக் கூடாது என்பதுதான் நேர்மையின் அளவுகோல்.

      நான் நண்பர்களை இழந்து விடுவேன் என்று சொல்லி, தவறான மனிதர்களுக்கும், தவறான கருத்துக்களுக்கும் துணை போவது தவறு.

      எனவே ஊருக்கு நல்லது சொல்வோம்' என்ற கவிதையின் கருத்தே முக்கியம்.
      :))

      Delete
    2. சுட்டிக் காட்டாமல் இல்லை ஐயா...

      மனம் நோகாதபடி சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறேன் ஐயா... என் பதிவுகளிலும் அப்படித் தான்... என் தொழிலும் அது தான்... (பொது வாழ்விலும், நேரம் கிடைக்கும் போது, சிறு உலகமான இந்தப் பதிவு உலகத்திலும்... நன்றி ஐயா...

      Delete
    3. மிக்க நன்றி நண்பர் தனபாலன்.. உங்களைச் சுட்டிக் காட்டும்படி பொருள் வந்தால் வருந்துகிறேன்.. எனது பொதுவான கருத்தைச் சொன்னேன்.

      ஐயா என்ற விளிப்பு சிறிது கூச்சமாக இருக்கிறது..நானும் கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் சுயபரிசோதனை செய்து கொள்வதில் விருப்பமிருக்கின்ற ஒரு எளிய மனிதனே..நன்றி.. :))

      Delete
  2. அந்த புகைப்பட 'வித்தை'க்குப் பின்னால் இருப்பவர்கள் பெரும்பாலும் முதல் நிலையான பய நிலையில் இருப்பவர்கள். தான் ஆன்மிகப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற நினைவும், அந்தக் கட்சியில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதன் மூலமே, தன்னுடைய இருப்பு பயமற்றதாக, பெருவாரியானதாக இருக்கும் என்ற பயம் மற்றும் நம்பிக்கைக் கோட்பாடுகளே, இது போன்ற செயல்களில் அவர்களைத் தூண்டுகின்றன.//

    உண்மைதான். ஆர்வக்கோளாறும் இது போன்ற நிகழ்வுகளை அதிகம் கேள்விப்படாதவராகவும் இருந்திருக்க வேண்டும். பயம் நீங்கி மேம்பட வாழ்த்துவோம்.

    அவசியமான இந்த கருத்துபகிர்வுக்கு நன்றி அறிவன் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் நிகழ்காலத்தில் சிவா..முதல் வருகைக்கும் நன்றி.

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...