குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, June 1, 2012

144.ஆனந்த் அளித்த ஆனந்தமும்,வேறு சில ஆனந்தங்களும்...



இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக செஸ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.


2012 ல் சாம்பியன் ஆன போது...
இம்முறை அவரை எதிர்த்து விளையாடிய போரிஸ் கெல்ஃபாண்ட்'ஐ ரஷ்ய ஊடகங்கள் பெரிதும் உயர்த்திப் பிடித்திருந்தன.அதோடு விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திர் மாஸ்கோவின் செஸ் விளையாட்டு விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் அனைத்தும் ஆனந்த் காலம் மலையேறிவிட்டது; அவரது விளையாட்டுத் திறன் கடந்த காலத்திய ஒன்று; கெல்ஃபாண்ட் தான் உலக சாம்பியனுக்குத் தகுதியானவர் என்ற அளவில் காட்சி ஊடகங்களில் உதார் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

கெல்ஃபாண்டுடன் விளையாட்டு...
ஆயினும் தோற்ற கெல்ஃபான்ட் இயல்பாகவே பேசியிருக்கிறார்.இஸ்ரேலியரான அவர் வென்றிருந்தால் தனது நாட்டில் செஸ் விளையாட்டு மேலும் புகழ் பெற்றிருக்கும் வாய்ப்பு தவறி விட்டதாக வருத்தப் பட்டிருக்கிறார்.

எனக்கு முதன் முதலில் ஆனந்த் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற போது தமிழகத்தில் எழுந்த செஸ் ஆட்டத்தின் எழுச்சி நினைவுக்கு வந்தது.

ஆனந்த் ஆழ்ந்த செஸ் ஆட்டத்தோடு அவரது மின்னல் வேக விளையாட்டுக்காகவே பெரிதும் சிலாகிக்கப் பட்டவர்;அப்படிப்பட்டவரின் விளையாடும் ஸ்டைல் சிறிது மாறி இப்போது நிதானமாக விளையாடுகிறார்.

இந்தப் போட்டியிலும் கூட டை பிரேக்கர் முறையில்தான் முடிவு எட்டப் பட்டது. எனவே அவர் மீதான விமர்சனங்கள் அதிகமாக முன் வைக்கப் பட்டன.

ஆனால் எப்போதும் சாதாரணர்களுக்கும் அசாதாரணத் திறனாளர்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. க்ளாஸ் ப்ளேயர்ஸ் என்று சொல்லப்படும் அசாதாதாரணத் திறனாளர்கள் சில சமயம் திறனில் வெளிறிப் போவது போல் தோன்றினாலும், நெருக்கடியான சூழலில் ரிஃப்ளெக்ஸ் ஆக்ஷன் போல் இயல்பாக மிளிர்வார்கள்.

ஆனந்தின் இந்தப் போட்டியும் அந்த வகையைச் சார்ந்தது.

அவரை வாழ்த்துவோம் !!
அம்மாவின் ஆனந்தம் !




இந்தத் திறனாளரை முதன் முதலில் இனம் கண்டு கொண்ட அவரது முதல் குருவான இந்தப் பெண்மணியும் வாழ்த்துக்கு உரியவர்.அவர் ஏற்கனவே மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்,ஏனெனில் அவர் ஆனந்தின் அம்மா !!!

திருமதி சுசீலாவுக்கு சல்யூட்ஸ் !


ஆனந்த் : ஒரு க்ரோனோக்ராஃபி


  • 1983-ம் ஆண்டு தேசிய அளவிலான சப்-ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார் ஆனந்த். இதுதான் தேசிய அளவிலான போட்டிகளில் அவர் பெற்ற முதல் வெற்றி.
  • 1984-ம் ஆண்டு தனது 15-வது வயதில் சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் இளம் செஸ் வீரர் என்ற பெருமைக்குரியவரானார்.
  • தனது 16-வது வயதில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.
  • 1987-ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றி கண்டார். இதில் வெற்றி கண்ட முதல் இந்தியர் ஆனந்த்.
  • 1988-ல் கோவையில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி கண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
  • 1991-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்றார். அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷியாவின் அலெக்ஸீ கிரீவை வென்ற ஆனந்த், காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார்.
  • 1995: ஃபிடே உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் அமெரிக்காவின் கதா காம்ஸ்கியிடம் வீழ்ந்தார்.
  • பிசிஏ உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கேரி காஸ்பரோவிடம் தோல்வி கண்டார்.
  • 1997: ஸ்விட்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெற்ற ஃபிடே உலக செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கார்போவிடம் தோல்வி கண்டார்.
  • 2000: ரஷியாவின் அலெக்ஸீ ஷிரோவை வீழ்த்தி முதல் முறையாக உலக செஸ் சாம்பியன் ஆனார்.
  • 2001: உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் உக்ரைனின் இவான் சுக்கிடம் தோல்வி கண்டார்.
  • 2005: அமெரிக்காவின் சான் லூயிஸில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் பல்கேரியாவின் வேஸிலின் டோபாலோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
  • 2007: மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் ஆனார்.
  • 2008: ஜெர்மனியில் நடைபெற் உலக செஸ் போட்டியில் ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
  • 2010: பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் உள்ளூர் நாயகனான வேஸலின் டோபாலோவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
  • 2012: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.




* * * * * * * * *

இந்த ஆனந்தங்களோடு தினமணி மதி கார்டூன்கள் மற்றும் ஃபோட்டூன்கள் மூலம் அளித்த சில ஆனந்தங்களும் .... :)




பேச்சுத் திறனுக்காகவும், பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் அவர் பேச்சில் காண்பிக்கும் லாகவத் திறனுக்காகவும் ஒரு காலத்தில் பெரிதும் சிலாகித்துப் பாராட்டப் பட்டவர் திமுக தலைவர்...



எப்படி இருந்த நான்ன்ன்ன்........இப்பிடி ஆயிட்டேன் ! தான் நினைவுக்கு வருகிறது.

* * * *

அப்புறம் திருவாளர் பரிசுத்தம் ! சுத்தம் !!!
80 களின் திருவாளர் பரிசுத்தம் மீள் நினைவில் வருகிறார் !!



-தினமணி பத்திரிகை மற்றும் மதிக்கு நன்றியுடன்


6 comments:

  1. நாட்டின் நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது நண்பரே!

    ஆனந்தின் வெற்றி போன்ற தென்றல் அவ்வப்போது வீசி கொஞ்சம் சந்தோஷம் தருகிறது. தீக்குளிக்கக் கூட பெட்ரோல் கிடைக்காதுங்க!

    ReplyDelete
  2. மோகன்ஜி
    உண்மை.
    இதற்காகவெல்லாம் தீக்குளிக்க முடிவெடுத்தால் நம்மை ரத்தத்தின் ரத்தங்களாக டிக்ளேர் செய்து விடுவார்கள் ! :)

    ReplyDelete
  3. நானும் வாழ்த்துகிறேன் நம்ம ஆனந்தை

    ReplyDelete
  4. நன்றி திரு அன்பு...

    அன்பைத் தேடிச் செல்லாதீர்கள் அன்பு..அன்பை வழங்கினால் அன்பைத் தேடி வருபவர்கள் தன்னால் வருவார்கள் !!

    :))

    ReplyDelete
  5. நானும் ஒரு சதுரங்க ரசிகன். எனவே ஆனந்த் விசிறி.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...