தீபாவளிக்கு வந்த இரு படங்கள் 7'ம் அறிவு மற்றும் வேலாயுதம்.
பொதுவாக நட்சத்திரமாக அறியப்பட்ட பின் நமது தமிழ்க் கதாநாயகர்கள் நடிக்கும் படங்கள் ஒரு வட்டத்திற்குள் அடங்குவது வழமையானது.சென்றைய எம்ஜி இராமச்சந்திரனிலிருந்து சிறிது காலம் நிலைத்த ஜெய்சங்கரிலிருந்து நேற்றைய ரஜினியிலிருந்து இன்றைய விஜய் வரை இதற்கு விதிவிலக்கில்லை.(என்ன எல்லாருடைய பெயர்களிலும் ஜி வருகிறது! சூப்பர் ஸ்டாராவதற்கு இன்னொரு வழி,நடிகர்கள் கவனிப்பார்களாக...).இவர்களின் படங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்குமாறு தயாரிக்கப்படும்,அரைத்த மாவையே அரைப்பது போல் இருந்தாலும் குறிப்பிட்ட நடிகரின் ரசிக சிகாமணிகள் சளைக்காது பார்த்து அப்படங்களை ஓட்டி விடுவார்கள்..
ஆனால் விஜய்'க்கு இந்த விதியிலிருந்து விதிவிலக்கு அளித்து ரசிகர்கள் அவருடைய படங்களை ஓட ஓட 'ஓட்டி'யதும் நடந்தது! எனவே சிறிது உஷாராக இருந்த நிலையில் ஜெயம் ராஜாவின் கதை அவருக்கு உவப்பாக இருந்ததில் வியப்பில்லை.
ஒரு திரைப்படமாக ஆக்கத்தில் 7'ம் அறிவு மிக வித்தியாசமாக இருப்பதாக ஒரு கதை பரப்பப்பட்டாலும்,படம் எதிர்பார்த்த அளவுக்கு ஆக்கத்தில் வியப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்;(இதையேதான் தன்னுடைய தம்பி நடிகர் கார்த்தி சொன்னதாக நடிகர் சூர்யா ஒத்துக்கொண்டார்,அவர் வேறு வார்த்தைகளில் சொன்னதாலும்!)ஆயினும் வசூலைப் பொறுத்த வரை முதலிடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.இந்தப் படமும் ஒரு வேறுபாடான கோணத்தில் என்னுடைய கருத்தைக் கவர்ந்தது.
வேலாயுதம் திரைப்படம் ஆக்கத்தின் வழி எந்த வித்தியாசமும் இல்லாத ஒரு இன்னொரு விஜய் படம் ! எந்த வேறுபாடும் இல்லாத ஒரு இன்னொரு மசாலா என்றுதான் கருத வேண்டும் என்று கருதியிருந்த நிலையில் நுட்பமான ஒரு வழியில் ஒரு வேறுபாட்டை வெளிப்படுத்தியது ஒரு வியப்பான மகிழ்ச்சி.
7 ம் அறிவைப் பொறுத்தவரை படம் சொல்ல வந்த கருத்தில் இருந்த தனித்தன்மை என்னைக் கவர்ந்தது....
இன்றைய உலகில் நிலவும் பலவகை நுண்கலைகள் மற்றும் வாழ்வியலின் பல தளங்களில் பயன்ப்படும் கலை நுட்பங்களை தமிழ் மொழிதான் உலகுக்கு அளித்தது என்று ஆணித்தரமாக பல அறிஞர்கள் நிறுவிவிட்ட போதிலும் உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என்று நகையாடும் புதுமைப்பித்தன் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்காப்புக் கலையான மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் சுயபாதுகாப்பு முறை-கவனியுங்கள் அது தாக்கி அழிக்கும் முறையாக,தமிழர்களால் அறியப்படவில்லை,தற்காப்புக் கலையாகத்தான் அறியப்பட்டது- தமிழகத்திலிருந்தான் சீன தேசத்திற்குச் சென்றது என்று வரலாற்றுக் கருத்தை இந்தப் படம் முன்வைக்கிறது;இதை சீனர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.இந்தப் படம் பற்றிய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சில சீனர்களும் அழைக்கப்பட்டிருந்ததும்,அவர்களும் போதிதர்மன் என்ற நபரே சீனத் தற்காப்புக் கலையின் மூலம் என்றும் ஒத்துக் கொண்டார்கள்.வலிந்து தாக்கி அழிப்பதை விடத் தற்காப்புக்கும் வேறு வழியற்ற நிலையிலேயே எதிராளிக்கு ஊனம் அல்லது உயிர்நீக்கத்தைப் பற்றி எண்ண வேண்டும் என்ற கருத்தாகத்தில் அமையும் வீரம் என்ற பொருண்மையின் பழந்தமிழ்ப் பொருளும் பல காட்சி வழியிடை இந்தப் படத்தில் துலக்கப்பட்டதும் மகிழ்வைத் தந்தது..
அதோடு படத்தின் கதாநாயகன் வழி இலங்கையில் நடந்த நிகழ்ச்சி பற்றிய அழுத்தமான அறிவித்தலும்(ஒருத்தன ஒம்போது நாடு சேந்து கொன்னா அதுக்குப் பேரு சண்டையோ வீரமோ இல்லை,துரோகம்!) போகிப் பண்டிகை பற்றிய வித்தியாசமான நோக்கத்தில் அமைந்த ஒரு சிந்தனையும் நமது பழமையில் இருந்து இப்போது திரும்பிக் கூடப் பார்க்கப்படாத பல நுண்மைப் பொருள்களில் சிந்தனை செல்ல வேண்டும் என்ற தூண்டுதலும் இந்தப் படத்தின் மூலம் ஒரு சிறிது நடந்தாலும் அதற்காக இந்தப் படத்தின் இயக்குனரை நான் பெரிதும் பாராட்டுவேன்.
இக்கருத்தை தமிழறிஞர்களோ,நுட்பவியல் திறனாளர்களோ கரடியாகக் கத்தி அறிவித்தாலும் தமிழர்களின் ஆதார வழிகாட்டியாகத் தற்போது திகழ்ந்து தொலைக்கும் திரைப்படத்தின் வாயிலாக இது தெரிவிக்கப்பட்ட போது அதைப் பற்றிய சிந்தனை பெருவாரியான பொதுமக்களுக்கு ஒருவேளை ஏற்படலாம் என்பதற்கான சாத்தியக் கூறு இருப்பது நிச்சயமான பலன் !
இன்னொரு படமான விஜயின் வேலாயுதம் படமும் வழக்கமான விஜய் படத்திற்கான மசாலாப் படம் எனினும் உங்களுக்குள் இருக்கும் காப்பாளரையும் போராளியையும் நாமேதான் கொண்டு வர வேண்டும்;எவராவது மீட்பர் வந்து நம்மை மீட்பார் என்று மீட்பர்களை வெளியே தேடிக் கொண்டிருக்கும் எண்ணற்ற பொது சனங்களுக்கு ஒரு சேதியைச் சொன்னது.அந்த வகையில் ஜெயம் ராஜாவையும் பாராட்டலாம்.
நினைத்து நினைத்து நொந்து கொள்ள வேண்டிய விதயம் இவற்றையெல்லாம் மனதில் பதியவைக்கக் கூட சினிமா என்ற கருமம்தான் தேவைப் படுகிறது என்பது ! இந்த நேரத்தில் களவானி,கொலவெறி பற்றி ஞாநி எழுதியுள்ள பத்தியை ஒவ்வொரு வரியையும் கன்னா பின்னாவென்று வழி மொழிகிறேன் என்றும் அறிவிக்கிறேன்.

சோதனை
ReplyDeleteபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.