குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, May 22, 2011

134.இரு தேர்தல்கள்;இரு முடிவுகள்.



2011 ல்  தமிழகம் தேர்தல் முழக்கத்தில் இருந்த போது சிங்கப்பூரிலும் தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்தது.ஆனால் சிங்கையின் தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல்.சென்னையை விடப் பரப்பளவில் சிறிய இடம்தான் எனினும் பாராளுமன்ற ஆட்சி முறையும் வெஸ்ட் மினிஸ்டர் என்று அழைக்கப்படும் பிரதமர் ஆட்சி முறையில்தான் சிங்கப்பூரும் இயங்கி வருகிறது.

இரு இடங்களிலும் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய அதிர்ச்சி மதிப்பு ஒரே மாதிரியானது;ஆனால் அந்த அதிர்ச்சி மதிப்பிற்கு சம்பந்தப் பட்ட அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள் காட்டிய எதிர்வினை மிகவும் வேறு பட்டது.இதனைப் பற்றிப்  இரண்டாவது பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.
()


தமிழகத் தேர்தல் பற்றி இரண்டு மூன்று பதிவுகளில் முன்பே எழுதி இருக்கிறேன்.நான் எழுதிய அப்பதிவுகளில் திமுக விற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று பல காரணிகளைக் காட்டி சுட்டியிருந்தேன்.பெரும்பான்மை மக்களின் கருத்தும் ஊடகங்களின் கருத்தும் அதிமுக வருவதைப் பற்றிய சந்தேகங்கள் இருப்பினும் திமுக வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கருதின.

இன்னும் பலர் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் அமையலாம் என்று எதிர்பார்த்தனர்.

மே 13 ம் தேதி காலை 10.30 மணிக்கே தேர்தல் முடிவுகளின் போக்கு தெரிந்து விட்டது.அந்த சமயத்தில் நான் இந்தியாவில்தான் இருந்தேன்.வாக்கு எண்ணிக்கை நாளின் காலை 11 மணிக்கே அதிமுக கூட்டணி சுமார் 145 இடங்களுக்கு மேல் முன்னணி என்று செய்தி வரத் துவங்கியிருந்தது.

அது சுவற்றில் எழுதிய எழுத்து போல-ரைட்டிங் ஆன் த வால்.
சம்பிரதாயமான செயல்கள் தான் பின்னர் பாக்கி இருந்தன.


ஜெ. முதல்வராகி விட்டார்..



எவரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக கூட்டணி 201 இடங்கள் வரை பெற்று அசுரப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருக்கின்றது.விகாந்து பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

பல, கட்சிசாராத நபர்கள் கூட அதிமுக விற்கு திமுகவை விட பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் என்று எண்ணினாலும் இந்த அளவிற்கு அசுரப் பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் மிகவும் குறைவு;ஏன் ஜெ கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் !

அதிமுகவும் விகாந்தும் மக்கள் இந்த அளவு அளித்த மக்களின் பெரும்பான்மையான ஆதரவை எப்படி கையாளப் போகிறார்கள் என்பதில் இருக்கிறது தமிழக மக்களின் எதிர்காலம்.

உண்மையில் இந்த தேர்தல் முடிவுகள் நேர்மறை முடிவுகளின் மூலம் கிடைத்த பலன்கள் என்று சொல்ல முடியாது;அதிமுக அல்லது ஜெ ஒரு சிறந்த ஆட்சியைத் தந்து விடுவார் என்று நம்பி மக்கள் வாக்களித்ததாகத் தெரியவில்லை.திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு பல காரணிகளால் ஏற்பட்டு விட்ட தறிகெட்ட கோபத்தின் விளைவுதான் இந்த தேர்தல் முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது.இது தொடர்பாக ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு பத்திரிகைத் தலையங்களைப் பார்த்தேன்.மே 14 ம் தேதியிட்ட தினமணியின் தலையங்கள் ஒவ்வொரு வார்த்தையும் ஒத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒரு தலையங்கம்;தெளிவாகவும் தீர்க்கமாகவும் எழுதப்பட்ட அது பாராட்டப்பட வேண்டிய ஒரு தலையங்கம்.இன்னொன்று திருவாளர் சோ துக்ளக்கில் எழுதியது..சொல்வதற்கு ஒன்றுமில்லை,ஒரு அதிமுக காரர் போல எழுதியிருக்கிறார்..என்னவோ ஜெ இப்படி ஒரு முடிவு வரும் என்று தெளிவாக முன்னுணர்ந்து செயல்பட்டு இந்த வெற்றியை அடைந்தார் என்பது போல எழுதி இருக்கிறார்.அபத்தம் !


தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரான பதினைந்து நாட்களில் தமிழகத்தில் பல இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை அலுவல் தொடர்பாக ஏற்பட்டது;இந்தப் பயணத்தில் பல எளிய பொது மக்களையும் சில மிகப் பெரும் பணக்கார முக்கியஸ்தர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.முக்கியஸ்தர்களை அணுகும் அதே ஆர்வத்துடனும் எளிய மக்களையும் நெருங்கிப் பேசும் குணம் எப்போதும் எனக்கு உண்டு.அவர்களிடம் பேசும் போது, கடந்த ஆட்சியின் குடும்ப ஆதிக்கம் பல துறைகளில் ஏற்படுத்தியிருந்த அழுத்தத்தின் விளைவாக சாதாரண மக்களிடம் இருக்கும் இயலாமை கலந்த கோபம் எளிய மக்களிடம் இருந்த அதே அளவுக்கு பெரும் தொழில் முனைவர்களிடமும் இருந்ததைக் காண  வியப்பு ஏற்பட்டது.பிசினஸ் மேக்னட்ஸ் என்று சொல்லத்தக்க அளவில் இருக்கும் கட்சி சாராத தொழில் முனைவர்கள் கூட கடந்த ஆட்சியின் அவலம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது அவர்களின் பேச்சில் தெரிந்தது.







ஒரு பிரபல மருத்துவர் தமிழகத்தின் நான்கு முக்கிய நகரங்களில் பல்நோக்கு மருத்துவமனை அமைத்து நிர்வகித்து வருபவர்,அவர் திமுக அனுதாபியாகக் கூட இருக்கலாம் என்று நான் பலமுறை நினைக்கத்தக்க அளவில் எப்போதும் பேசுபவர்,அவரை இம்முறை சந்திக்க நேர்ந்தது.

எளிய முறையில் நட்பாகப் பேசும் குணம் கொண்ட அவர்  இம்முறை பேசும் போது,இத்துனை நடந்த ஐந்தாண்டுகளில் முதல்வர் முக வின், குடும்பப் பாசம் அனைத்து வரைமுறைகளையும் மீறி தொழில் துறையையும் தனிப்பட்ட சிறு தொழில் செய்பவர்களையும் மிகவும் பல வகைகளில் பாதித்ததாகவும்,அந்த ஒட்டு மொத்த கோபத்தின் வடிகாலாக மக்கள் தேர்லைக் கருதியதன் பலனை அதிமுக தேர்தலில் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

அவரது கூற்று பல வகைகளில் சரியாகவே தோன்றியது.

எங்கும் எதிலும் கட்டப் பஞ்சாயத்துகள்,அனைத்து முக்கிய ஊடகத் துறைத் தொழில்களின் குடும்பத்தினரின் ஆக்டோபஸ் பிடி,திரைத்துறையில் பெரிய நட்சத்திரங்கள் கூட குடும்பத்தினர் விருப்பத்தின் படியே இயங்க வேண்டிய நிர்ப்பந்தம்,கட்சிக் காரர்களின் வசூல் கொள்ளை மற்றும் காவல்துறையின் அலட்சிய அல்லது அடாவடிப் போக்கு போன்ற பல காரணங்கள் முக செய்து ஒன்றிரண்டு நல்ல காரியங்களின் பலன்களை மழுங்கடித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் அவர் மக்களின் எண்ண ஓட்டத்தின் மையப் புள்ளியில் இருந்த வெகு தூரம் விலகி விட்டார் என்பதும்,சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களில் நாளுக்கு நாள் ஏற்பட்ட அவலத்தின் தகிப்பு அவருக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போனதா அல்லது தெரிந்தும் தனக்குத் தானே நாம் மிகு சிறப்பான முறையில் செயல் படுகிறோம் என்று வரித்துக் கொண்ட பொய்மையில் அவர் ஆழ்ந்து சூழலையே மறந்து போய் விட்டாரா என்பது புரியவில்லை;தேர்தலுக்குப் பின்னர் எந்த விதமான கருத்தையும் சொல்லத் தோன்றாது விதிர் விதிர்த்த அதிர்ச்சியில் அவர் இருப்பது,அவர் வரித்துக் கொண்ட பொய்மையில் இருந்திருக்கக் கூடும் என்றே நம்பத் தோன்றுகிறது.


இறப்பினும் மாறா-டை ஹார்ட்-திமுக அனுதாபிகளைத் தவிர வேறு எவரும் இத்தேர்தலில் திமுக விற்கு  வாக்களிக்க வில்லை என்று தோன்றுகிறது.படித்த வெகு ஜனங்கள் இம்முறை தேர்தலில் எப்பாடு பட்டும் வாக்களித்திருப்பதும்,அவர்கள் திமுகவைத் தவிர்த்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

எனது எதிர்பார்ப்பில் அதிமுக 140 வரையான இடங்களைப் பிடிக்கலாம் என எண்ணியிருந்தேன்;ஆனால் கிட்டத்திட்ட அந்த அளவு இடங்களை தனிப் பெரும்பான்மையாகவே பெற்ற ஜெ,இந்த முறை ஜாக்பாட் அடித்திருக்கிறார்.அரசு மற்றும் ஆட்சியின் அனுகூலங்கள் இல்லாத போதும் ஒரளவுக்கு மக்களின் மனநிலையை சரியாகக் கணித்து மதிமுகவுக்கு இடங்கள் ஒதுக்காமல் பெரும் அளவு இடங்களில் அதிமுக போட்டியிட ஏதுவான முடிவை அவர் எடுத்தது ஒரு டேக்டிகல் மூவ் என்று கூட இப்போது தோன்றுகிறது.தனியார்கள் மூலம் எடுத்த களக் கணிப்பு அவருக்கு இந்த முடிவுக்கு வர உதவியிருக்கலாம்.மதிமுக’வை வெளியே தள்ளிய போது எழுந்த பலத்த கண்டனங்களை மீறி அவர் நம்பிக்கையுடன் தன் முடிவு சரியானதுதான் என்று செயல்பட்டு அதில் வெற்றியும் அடைந்து விட்டார்.

பல வித சாதிய அடையாளங்கள் அல்லது பார்வைகளை முன்வைத்து அரசியல் செய்த அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து மக்களின் செயல் மகத்தானது;தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் நல்ல ஒரு பயனை இவ்வகையில் இம்முறை தேர்தல் முடிவுகள் அளித்திருக்கின்றன.

காங்கிரஸ் 5 இடங்களில் வென்றது கூட வேதனையைத் தருகிறது.ஈழத் தமிழர் விவகாரத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு மக்கள் சரியான பதிலைத் தந்திருக்கிறார்கள் என்றும் இந்த தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.கூடவே இருக்கிறது நாற்றமடிக்கும் ஸ்பெக்ட்ரம்,ஆதர்ஷ்,காமனவெல்த் ஊழல் சாதனைகள்…ஆகவே அனைத்திற்கும் சேர்த்து அற்புதமான பதிலை அளித்திருக்கும் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

பெருமளவு எதிர்மறை வாக்குகளின் மூலம் பயனடைந்து ஆட்சியைப் பிடித்திருக்கும் ஜெ.யின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.ஆயினும் காலச் சூழலில் அவருக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு பொன்னான வாய்ப்பு இது.

இதைச் சரியாகப் பயன்படுத்தி சிறந்த முதல்வராக அவர் பெயரெடுக்க முனைந்தால் அவரது நெடுநாள் கனவான தேசிய அரசியலில் கூட அவரது பங்கு குறிப்பிடத் தக்க வகையில் இருக்க காலம் அளித்திருக்கும் வாய்ப்பு இது.

அதை நல்ல முறையில் உபயோகித்து தமிழகத்திற்கும் தனது எதிர்காலத்திற்கும் நற்பலன் தேடிக் கொள்வாரா அல்லது நந்தவனத்து ஆண்டியாகப் போட்டுடைப்பாரா என்பது பொறுத்திருந்த காண வேண்டியது.

50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட முக.விற்கு தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு மீளும் வாய்ப்பை காலம் வழங்குமா என்பதும், அதற்கான வாய்ப்புகளும் அவகாசமும் அவருக்கு இருக்குமா என்பதும் கேள்விக்குறி.



அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்கும் இந்த சூழலில்,முக வின் அரசியல் வரலாற்றில் இந்த அளவிற்கு அவரது உறுதிப்பாட்டை சோதிக்கும் கணங்கள் இருந்திருக்காது.ஆனால் இன்னமும் அவருக்கு சில வாயப்புகள் இருக்கின்றன;அவற்றை எடுப்பதற்கான கடுமையான மன உறுதியும் குடும்ப பாரபட்சமற்ற தன்மையும்,கட்சியின் எதிர்காலம் மட்டுமே நோக்கமாக வைத்து முடிவுகளை எடுக்கும் திடமும் அவருக்கு இருக்க வேண்டும்.நல்ல ஒரு குடும்பியாக மட்டும் முழுதாக மாறி விட்ட,கட்சி மற்றும் பொது வாழ்க்கைத் தலைவர் முக’விற்கு,அதற்கான உள சுத்தி இருக்கிறதா என்பதைப் பொறுத்தே அவர் அண்ணா எழுதிய கழக முன்னுரைக்கு முடிவுரை எழுதுவாரா அல்லது காற்புள்ளியுடன் தப்பிப்பாரா என்பது தெரிய வரும் !!!

தொடரும்…

1 comment:

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...