சென்ற பதிவில் விவரித்தபடியான சாகச' நடைக்குப் பின்னர் ட்.டா.வாக் பாலத்தில் நுழைந்தோம்.
இப்பாலம் கீழ்ப்புறம் மரச்சட்டங்கள் இணைத்த கம்பிகளால் இழுத்துக் கட்டப்பட்ட தொங்கு பாலம்.நடுவில் அமைக்கப் பட்ட உயரத் தூணும் இரண்டு பக்கமும் நிலப்பகுதியில் அமைந்த பிடிமானமும் உள்ள பால அமைப்பு;நடுப்புறம் சுமார் 150 மீட்டர் பள்ளமும் அடர்ந்த மரக்கூட்டமும் உள்ள நில அமைப்பு.
பாலத்தின் அகலம் சுமார் 2 1\2 அடி மட்டுமே,இருவர் நெருக்கியடித்துக் கொண்டு அல்லது ஒருவர் சுகமாக நடக்கலாம்;அதிக எடை ஒரு இடத்தில் குவிவதைத் தடுக்க இவ்விதம் அமைக்கப்பட்டிருக்கலாம்...
பாலத்தின் நடுவில் நிற்பது அற்புதமான அனுபவம்.காற்று ஆளைத்தூக்குகிறது,கீழ்ப்புறம் நெடு நெடு பள்ளமும் மரங்களும்;இயற்கையின் மடியில் நிற்பது போன்ற உணர்வு.கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மரங்கள்,மரங்கள்,செடிகொடிகள் மட்டுமே!
********
சுமார் 20 நிமிடங்கள் நின்று அந்த இடத்தின் அமைதியான அழகை அனுபவித்தோம்.நடுவில் நின்று கீழ்ப்புறம் அமைந்த ஒரே தாங்கும் அமைப்புதான் படத்தில் காண்பது.
கீழேழேழேழேழேழ மரக்கூட்டங்களின் பார்வை.சிறிது நேரம் நின்று ரசித்து விட்டுக் கிளம்பினோம்.
***************
திரும்பவும் பழனி மலையில் இருந்து இறங்குவது போல் சுமார் 1 கி.மீ.க்கு மரப்படிகள் மற்றும் பாதை.அதில் நடப்பதும் சுவாரசியமாக இருந்தது;இருபுறமும் செடிகொடிகள் உடலில் உரச நடக்க வேண்டிய நடை.ஆனால் நல்லவிதத்தில் பராமரிக்கப்படும் பாதை.
*********
எங்கள் கிராமத்தில் ஐயா வீட்டுக்குச் செல்லும் போது தினமும் நடந்து செல்லும் வயலுக்குச் செல்லும் பாதை போன்ற உணர்வு பத்தாண்டுகளுக்குப் பின்னர் எனக்கு ஏற்பட்டது;ஐயாவும்,வயல்களும் இப்போது அணுக்கத்தில் இல்லை,அனுபவங்கள் மட்டுமே இருக்கின்றன.
இறங்கி வந்து திரும்பவும் ரேஞ்ச் நிலையம் என்றழைக்கப்பட்ட இளைப்பாறும் இடத்திற்குச் செல்ல மீண்டும் ஒரு 3 கி.மீ.நடக்க வேண்டும்;நடந்தோம்.
தண்ணீர மற்றும் கழிப்பறை வசதிகளுடன் இருந்த அந்த இடத்தை அடைந்து சிரம பரிகாரம் செய்து கொண்டு தயிர் சாத மூட்டையை அவிழ்த்தோம்.குரங்குகள் தூரத்தில் அமர்ந்து எப்போது உணவுப் பாத்திரத்தைக் கவரலாம் என்னும் வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தன;அவற்றிற்கும் உணவைப் பகிர்ந்து விட்டு உண்ணலாம் என்று எண்ணிய போது பாத்திரம் பறி போகும் அபாயம் எழுந்தது.எனவே ஒரு குச்சியைத் தயார் செய்து கொண்டு-நல்ல வாகான தடிமனான சுமார் 1 மீ நீளம் உள்ள குச்சி,அனுபவம் தந்த பாடம்-வந்து பக்கத்தில் வைத்துக் கொண்டே உணவை முடித்துக் கொண்டோம்.நிச்சயம் மீதம் இருக்கும் என்ற அளவில் கொண்டு சென்ற உணவு உண்மையில் சரியாக இருந்தது.நடையும் களைப்பும் தந்த பசியில் உணவு போன இடம் தெரியவில்லை.பசித்தீ என்று சிலம்பு ஆதிரைக்காதையில் சொல்வதன் பரிமாணங்கள் புரிபட்டன.
உணவு முடித்ததும் சிறிது ஓய்வு கொண்டு விட்டு கிளம்பும் வழிவகைகளை ஆராய்ந்த போது திரும்பவும் ஒரு பகீர்..திரும்ப புறப்பட்ட இடத்திற்கே செல்ல வேண்டும் என்றால் 7 கி,மீ.நடக்க வேண்டும்.அல்லது 3 கி.மீ.நடந்து இன்னொரு வழியாகச் சென்று-அங்கு ஒரு கார் நிறுத்தும் இடம் இருக்கிறது,விளக்கம் முடிவில்-அப்பர் தாம்சன் தெருவைப் பிடிக்கலாம்;எனவே அந்த வழியைத் தேர்ந்தெடுத்து நடந்தோம்.
வழியில் சுமார் 75 வயதுக்கும் மேல் மதிக்கத்தக்க ஒரு பெற்றோரும் அவர்களது மகன் மற்றும் 2 வயதுக் குழந்தை-கை வண்டியில்,தள்ளப்பட்டு-சென்று கொண்டிருந்தார்கள்.இந்த வயோதிக நிலையிலும் அவர்களின் ஆர்வம் ஆச்சரியப்படுத்தியது;சொல்லத் தேவையன்றி அவர்களும் ஐரோப்பியர்களே!இத்தனைக்கும் அந்தப் பெண்மணிக்கு நடப்பது சிரமமாக இருந்தது பார்க்கையிலேயே தெரிந்தது;தாத்தா கட் கட்டென்று குழந்தை வண்டியையும் தள்ளிக் கொண்டு விடு விடு வென்று முன்னால் சென்று விட்டார்.நாங்கள் களைப்பிலும்,சொட்ட வியர்த்த வியர்வையிலும் உணவு உண்ட களைப்பாலும் மெல்ல மெல்ல நடந்து தெருவுக்கு வந்து இணைந்தோம்.
அங்கு இருந்த நிழலில் மேலும் கொஞ்சம் இளைப்பாறி விட்டு கொண்டு வந்த லெமன் டீ டின்களைக் காலி செய்து விட்டு வீடு திரும்பினோம்.
கிளம்புகையில் பயணம் எப்படி இருந்தது என்று ரங்ஸைக் கேட்டேன்.அவரின் பதிலை விட செயல்தான் மிகவும காமெடியாக இருந்தது...ஏதோ ஒரு படத்தில வடிவேலு அவரது விரலையே தன் புருவ மத்தியை நோக்கி நீட்டிக் கொண்டு சொல்வாரே 'உனக்குத் தேவையா இது?' என்று,அந்த வசனத்தை ரிபீட்டினார் ரங்ஸ்.கூடவே 'இனிமே வெளியில கூட்டிகிட்டுப் போன்னு கேப்பே?' என்ற அடிஷனல் டயலாக்கும் வந்தது.வெடித்துக் கிளம்பிய சிரிப்பில் சிறிது நேரம் கழிந்தது.
ஆனாலும் அடுத்த வாரம் மொண்ட் ஃபேபரில் இதே போல் இன்னொரு இடம் இருக்கிறது போகலாமா என்று கேட்டவுடன் உடனடி எஸ்,போகலாம் போகலாம் என்று வந்த பதில் திருப்தியைத் தந்தது.
இது போன்ற பயணங்கள் சிறிது ஆயாசமாக இருந்தாலும் மனத்திற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தருகின்றது என்றே நான் நம்புகிறேன்;மேலும் இயற்கைச் சூழலில் செல்லும் போது அது,நகரக் கட்டட மனித நெரிசல்களிடையே உளைந்து வருவதைக் காட்டிலும் தனியானதொரு மகிழ்வும் திருப்தியும் தருவதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
************
திரும்பும் வழியில் நடைபாதையிலேயே ஆங்காங்கே சில பொறிக்கப்பட்ட ஸ்டீல் தகடுகள் நடப்போருக்கான குறிப்புகளையும் சில வாக்கியங்களையும் தாங்கி நின்றன;அவற்றில் ஒன்றை நெருங்கி நோக்கினேன்;இப்படி எழுதி இருந்தது-'Nature is at work,building and pulling down,creating and destrying,keeping everything whirling and flowing,allowing no rest,but in rhythmical motion,chasing everything in an endless song out of one beautiful form into another'.ஜான் முய்ர்'ன் இந்த வாசகம் இயற்கைக்கு மட்டுமல்ல,வாழ்வுக்கும் பொருத்தமானது என்று தோன்றியது.
சில குறிப்புகள்:
1.இது போன்ற அனுபவத்தை விரும்பிச் செல்பவர்கள்,கூடிய வரை எளிய பருத்தி உடைகளில் செல்லுங்கள்;கூடுமானால் அரைக்கால் ட்ராயர் மற்றும் டி ஷர்ட் மிகவும் சிலாக்கியம்.
2.தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள்;உணவும் எடுத்துக் கொள்ளுங்கள்,நடந்து விட்டு வந்தவுடன் கொலைப்பசி என்றால் என்னவென்று உணர்வீர்கள். எளிய ஆனால் உடல் சக்தியைத் தரவல்ல உலர் பழங்கள்,பாதாம் போன்றவை நல்ல தேர்வு;சீஸ் கட்டிகளும்-உருகாத வண்ணம் பேக் செய்து கொள்ளுங்கள்-நன்று.நமது பாரம்பரிய இந்திய உணவுகள் வயிற்றை அடைத்து,நடக்க மேலும் களைப்பைத் தரலாம்.
3.கூடவே தாகத்தைத் தணிக்கும் ஏதாவது பாணங்கள் எடுத்துச் செல்லுங்கள்,கார்பனேட்டட் ட்ரிங்ஸ் வேண்டாம்.எலுமிச்சை பானம் அல்லது எலுமிச்சை டீ ஆகியவை மிகுந்த சிலாக்கியமானவை.
4.மேக் ரி(ட்)ச்சி நடைக்கு குறிப்பாகச் செல்வதென்றால் நாங்கள் சென்ற பாதை சிலாக்கியமானது,லோர்னி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்து ரேஞ்ச் ஸ்டேஷனை அடைந்து,திரும்பும் வழியில் வீனஸ் ட்ரைவ் நிறுத்ததை அடைவது சரியான வழி;அல்லது மிகவும் நடக்க முடியாதவர்கள் வீனஸ் ட்ரைவ் நிறுத்தம் வழியாகவே நுழைந்து சென்று திரும்பி விடலாம்.நீண்ட தூரம் நடக்க வேண்டியதில்லை.காரில் செல்பவர்களுக்கும் இதுவே சரியான,எளிதான வழி;ஆனால் நீர்த்தேக்கதை ஒட்டிய ஆரம்ப நடை அனுபவம் கிடைக்க வாய்ப்பில்லை.பேருந்து வழி செல்பவர்கள் எந்த இடத்திலிருந்து கிளம்புகிறீர்கள்,எந்த வழி வெளியேறப் போகிறீர்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டு கிளம்புங்கள்.உள்ளே எங்கும் பேருந்துகள் பற்றிய விவரங்கள் கிடைக்காது-ரேஞ்ச் நிலையம் உள்பட.
5.புகைப்படம் எடுக்க மறக்காதீர்கள்;அலுத்துக் களைத்திருந்தாலும் அவற்றை பின்னாட்களில் பார்க்கையில் உங்கள் அனுபவம் மீள் விரிவாக எண்ணத் திரையில் விரியும்.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
Hilarious. No better marketing is possible for this place. The tips at the end are also useful. One more tip from my side - while walking, instead of sticking to our 'thayir sadam', its better to eat low volume, high calorie food like dry fruits, cheese etc. This won't bloat and weigh you down. Please write such light 'feel good' pieces more.
ReplyDeleteசொக்கா,
ReplyDeleteநன்றி.
தயிர் சாதத்திற்கு மாற்று யோசனை நல்ல யோசனையே..
ஆனாலும் ரொம்பவும் பழகிய விதயங்களிலிருந்து மாறுவது எளிது இல்லையதலால் த.சா.எடுத்துக் கொண்டு சென்றோம்.மேலும் சீஸ் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வெயிலில் நடப்பது சீஸ்'ஐ ஜீஸ் ஆக்கி விடும் அபாயமும் இருக்கிறது என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டியிருக்கிறது.
முயற்சி செய்வோம்!
பயணங்கள் அருமை, நானும் இங்கன ரெண்டு வருஷமா குப்பை கொட்டுறேன். ஒரு இடத்திற்க்கும் போனது இல்லை. படங்களைப் பார்த்ததும் போகவேண்டும் போல உள்ளது. மிக்க நன்றி.
ReplyDeleteநெறைய எழுதறீங்க...!!!
ReplyDeleteஉண்மைத்தமிழனுக்கே போட்டி மாதிரி தெரியுது எனக்கு...
உங்க யாகூ கணக்குக்கு இரண்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேனே ??? பார்த்தீங்களா ?
வாங்க பித்தனின் வாக்கு..
ReplyDeleteவார இறுதிகளில் சும்மா அப்படியே கிளம்பிப் போய் வரலாமே...நிறைய இடங்கள் பார்க்கலாம்...
நன்றி.
@ரவி,உங்களுக்கு மின்மடலிட்டிருக்கிறேன்.பாருங்கள்.
ரவி,இப்படி என்னை உ.த.போட்டி என்று சொல்லி அவரது சிறப்பை'க் கெடுக்கலாமா?
ReplyDeleteபடங்கள் அதிகரித்து விட்டதால் பதிவு பெரிதாகத் தோன்றுகிறது;உண்மையில் இல்லை.உ.த சத்தியமாக!
உலகில் ஒரு சூரியன்,ஒரு சந்திரன்,ஒரு உ.த.தான் !