குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)

Wednesday, December 16, 2009

111.சீனர்களின் காவடித் திருவிழா

சிங்கையில் பொதுவாக கரடுமுரடான ஆன்மிகம் இருக்காது;(என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!)எனது அனுபவத்தில் கடந்த 7 வருடங்களில் மனதைப் பதைக்க வைக்கும் ஆன்மிக நிகழ்வுகளை சிங்கையில் பார்த்ததில்லை.

மனதைப் பதைக்க வைக்கும் ஆன்மிக நிகழ்வு ! அது ஆன்மிகத்தில் இருக்க முடியுமா என்ன என்று தோன்றுகிறது இல்லையா ? தமிழகத்தில் மாரியம்மன் கோவில்களில் அளிக்கப்படும் பலிகளைப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது பக்ரீத்துக்கு வெட்டப்படும் ஒட்டகங்களின் காட்சி ??இவை போன்ற காட்சிகளுக்கான மூலகாரணமான ஆன்மிக நிகழ்வுகளை விட இவ்வித சமூக பயங்கரங்களை மனதைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளாக நினைவில் தங்கும்.

இவற்றிற்கு சற்றும் குறையாது என்னை கிறுகிறுக்க வைக்கும் ஒரு காட்சி அலகு குத்துதல்.இறைவனுக்காக அல்லது இறைக்காரணத்திற்காக தன் உடலை எவ்வித ரணத்திற்குட்படுத்தவும் தயாராக இருக்கும் ஒரு மேன்மையான நிலைதான் அது என்றாலும் அவற்றைப் பார்க்க மனம் ஒப்புவதில்லை;அதுவும் சிறுதேர் போல,சுமார் 4 அல்லது 5 அடி இருக்கும் இறை பிம்பங்கள் இருக்கும் வாகனத்தைப் பிணைத்த கயிறுகளில் மறுமுனைகளில் மாட்டப்பட்டிருக்கும் கூரிய உலோக வளைவூசிகள் முதுகு பற்றும் தோள் புறங்களின் மேல் தோலை வளைத்துக் குத்தி இழுத்துக் கொண்டுவர அந்த தேர் அல்லது வாகனத்தை இழுத்துக் கொண்டு ஊர்வலமாகச் செல்லும் பக்தர்கள்...எனக்கு காணப் பொறுக்காத காட்சி அது !

பெரும்பாலும் கார்த்திகை மாதங்களில் நடைபெறும் விழாக்களில்தான் இவ்வித பிரார்த்தனைகள் அரங்கேறும்,அதுவும் தமிழ்க்கடவுள் என்று கொண்டாடும் முருகப் பெருமான் பெயரில்தான் இவ்வளவும் நடக்கும்.

ஒரு காட்சி சிறுவயது முதலே என்னை வெலவெலக்க வைப்பது;எங்கள் ஊரில் சூரபதுமன் வதை ஒரு விழாவாகவே நடக்கும்.அச்சமயத்தில் மாலை நடக்க இருக்கும் சூரன் வதைக்கும் முன்னால் முருகப் பெருமான் வீதியுலா இருக்கும்;அந்த ஊர்வலத்தில் சிலர் அலகு குத்திக் கொண்டு வருவார்கள்,சிலர் சுமார் 2 அடி நீளத்தில் இருக்கும மெல்லிய கம்பியால் அமைந்த அம்பை இடுப்பில் இடது வலது விலாப் புறங்களில் குத்திக் கொண்டு வருவார்கள்;அதிலும் ஒருமுறை வந்த ஒரு அன்பர் சும்மா வராமல் அந்த அம்பை ஆர்மோனியம் வாசிப்பது போல் முன்னும் பின்னும் இழுத்துக் கொண்டு வந்தார்;அம்போ விலாப் புறத்தில் சதையில் கிடைமட்ட வாக்கில் குத்தியிருக்கிறது;அணிந்திருக்கும் உடையில் அங்கங்கே ரத்தக் கறைகள்...அப்பா,அந்தக் காட்சி போதுமாடா சாமி என்று நினைக்க வைத்து விட்டது.அன்று முதல் அலகு குத்தியவர்களின் ஊர்வலம் வந்தாலே நான் ஒதுங்கி விடுவது வழக்கம்,அதைக் காணப் பொறுப்பதில்லை என்பதால்!

பக்தியை இவ்வளவு குரூரமாக-ஆம்,எனக்கு குரூரமாகத்தான் தோன்றுகிறது-வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களுக்கான விதை எங்கு விதைக்கப்பட்டிருக்கும்?


தன் கையை கல்லில் உறைத்து சந்தனம் இல்லாக் குறையைத் தீர்த்த மூர்த்தி நாயனார் அல்லது பிள்ளையைக் கொன்று கறி சமைத்த சிறுத்தொண்டர் இவர்களின் கதைகள் உதாரணமாக இருக்குமோ?அல்லது அவர்கள் விளக்க வந்த தத்துவங்களை விட்டு சம்பவங்களை மட்டும் நாம் முன்னெடுக்கிறோமா? அப்படி என்றால் இவை நம் அறியாமையின் அவல விளைவுகளா? எனக்குப் புரியவில்லை!

இப்போது இவற்றின் நினைவு வந்தது சமீபத்தில் சிங்கையில் நான் பார்த்த ஆச்சரியப்படுத்திய நிகழ்ச்சி.இங்கு தைப்பூசத் திருவிழாவின் போது மிகுந்த அளவில் பக்தர் கூட்டம் கூடும் எனவும் அலகு குத்தும் நிகழ்ச்சிகள் அவற்றின் எல்லா பரிமாணங்களிலும் நிகழும் என்று கேள்வியுற்றிருந்ததால் அச்சமயங்களில் அந்த ஏரியாவையே தவிர்த்து விடுவது என் வழக்கம்.ஆனால் ஆச்சரியமாக நான் இருக்கும் பகுதியில் சீனர்களும் கலந்து கொண்ட இந்தியக் கார்த்திகை மாதக் பக்திக் கொண்டாட்டத்தை கண்ணுற நேர்ந்தது.சிறு தேர்களில் புத்தர் வீற்றிருந்தார்-அல்லது அவரைப் போல எனக்குத் தோன்றியதா தெரியவில்லை.பெரிய படங்கள் திருப்பதி வெங்கடாசலத்திற்கும்,காசி அன்னபூரணி அம்மைக்கும்.ஹோர்டிங்குகளே இருந்தன.


சுமார் 500 லிருந்து 800 பேர்கள் கலந்து கொண்ட இந்த விழா 10 நாட்களுக்கும் மேலாக நடந்தது.கடைசி நாள் ஊர்வலமும் வைத்தார்கள்.அப்போதுதான் இந்தியர்களுடன் சீனர்களும் கூட அலகு குத்திக் கொண்டு சிறுதேர் இழுத்தார்கள்..இடுப்பிலும் நாக்கிலும் அம்புகள் குத்திக் கொண்டு வலம் வந்தார்கள்.சீனர்களும் இவ்வகை தன்-வருத்தும் செயல்களில் பக்தியின் பெயர் கொண்டு ஈடுபட்டது ஒரு புதிய நிகழ்ச்சியாக இருந்தது !

8 comments:

 1. அறிவன் சார்,

  எங்க ஊரில் இது போல் காவடிகள் நடக்கும், என் தம்பி கூட அவ்வாறு எடுத்து இருக்கிறான்.

  நூற்றாண்டுகளுக்கு முன் (உயிர்) பலி இடுதல் என்னும் நிகழ்வுகள் நடந்தன. குலதெய்வங்கள் தவிர்த்து பிற சாமிகள் சைவமாகப் போனதால், சாமிகளுக்கான காணிக்கையாக தன்னைத் தானே வருத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்கும் பெரிய புராணக் கதைகளுக்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை.

  ReplyDelete
 2. நன்றி கண்ணன்,வருகைக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 3. //பக்தியை இவ்வளவு குரூரமாக-ஆம்,எனக்கு குரூரமாகத்தான் தோன்றுகிறது-வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களுக்கான விதை எங்கு விதைக்கப்பட்டிருக்கும்?//

  :)

  எதாவது சொல்லனும்னு தோணுது !

  நாம கொடுக்கும் ஆன்மிக விளக்கத்துக்கும், நம்முடைய ஆன்மிகக் கோட்பாட்டிற்குள்ளும் எல்லாமே பிட் ஆகனும்னு நினைப்பது ஞாயம் இல்லையே !

  நாட்டார் தெய்வ வழிபாடும், அதன் முறைகளும் இந்து மதத்தின் அங்கம் தான் என்று உங்களால் ஏன் நினைக்க முடியவில்லை ?
  :)

  ReplyDelete
 4. {நாம கொடுக்கும் ஆன்மிக விளக்கத்துக்கும், நம்முடைய ஆன்மிகக் கோட்பாட்டிற்குள்ளும் எல்லாமே பிட் ஆகனும்னு நினைப்பது ஞாயம் இல்லையே !}

  நான் அப்படி எப்போதும் நினைப்பது கிடையாது.எனது எண்ணத்தை மாற்றும் வல்லமை படைத்த சரியான காரணி முன்வைக்கப்படும் போது நான் என்னை மாற்றிக் கொள்வேன்;கொண்டிருக்கிறேன்..

  யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று நான் எப்போதும் வாதிடுவது கிடையாது.


  {நாட்டார் தெய்வ வழிபாடும், அதன் முறைகளும் இந்து மதத்தின் அங்கம் தான் என்று உங்களால் ஏன் நினைக்க முடியவில்லை ?
  :)}

  அப்படி நினைக்க வைக்க இலக்கிய சான்றுகளைத் தரவாக கொடுங்களேன்..

  ReplyDelete
 5. //{நாட்டார் தெய்வ வழிபாடும், அதன் முறைகளும் இந்து மதத்தின் அங்கம் தான் என்று உங்களால் ஏன் நினைக்க முடியவில்லை ?
  :)}

  அப்படி நினைக்க வைக்க இலக்கிய சான்றுகளைத் தரவாக கொடுங்களேன்..//

  இது என்ன கொடுமை, அதற்கு எதற்கு இலக்கிய சான்று. இந்தியாவில் இருக்கும் கிறித்துவம், இஸ்லாம், பவுத்தம், சமணம் சாராத அனைத்தும் இந்து மதம் சார்ந்தது இல்லையா ?

  பழந்தமிழர் வழிபாடு கொற்றவை, மாயோன்(மால்), சேயோன்(முருகன்).

  அலகு குத்துவது பற்றிய குறிப்புகள் கிடைப்பது கடினம், ஆனால் காவடி தமிழ் இலக்கியத்தில் உள்ளவைதான்.

  ReplyDelete
 6. //
  அப்படி நினைக்க வைக்க இலக்கிய சான்றுகளைத் தரவாக கொடுங்களேன்..//

  http://kannansongs.blogspot.com/2008/01/blog-post_17.html

  ReplyDelete
 7. கண்ணன்,
  கணிதத்தல் சில சமன்பாட்டு நிரூபண முறைகள் இருக்கு.

  If,x+y = z then M=z/n ன்னு இருந்தா முதல்ல x+y=Z ன்னு நிரூபிக்கனும்,இல்லையா?

  மாயோன்,சேயோன் வழிபாட்டுக்கும் பலி கொடுப்பதற்கும் தொடர்பு எங்காவது விளக்கப்பட்டிருக்கா?

  காவடி எடுத்தலுக்கும் உடலில் அம்புகளைக் குத்திக் கொண்டு முன்னும் பின்னும் இழுத்துக் கொண்டு,ரணப்படுத்துவதற்குமான தொடர்பு எங்க இருக்கு?

  காவடிச் சிந்து போன்ற சிற்றிலக்கியப் பாடல்கள் நிறைய இருக்குதான்,ஆனால் இப்படியான தனவருத்தும்' செயல்களை ஏதாவது நியாயப் படுத்துதா?

  தொடர்பற்ற அந்த சுட்டியில் எதை விளக்க வருகிறீர்கள்? நான் காவடி எடுப்பதை இல்லாத வழக்கம் என்று எங்கும் என் பதிவில் சொல்ல வில்லையே????????????

  ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • - அன்புடையீர்! பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு
  4 weeks ago
 • சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...
  1 month ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  7 months ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  10 months ago