ஆ.வி. யில் வந்த ஒரு செய்தியை எவ்வளவு பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை;வலைப்பக்கங்களில் எந்த ஒரு குறிப்பிடலோ எதிர்வினையோ இல்லை.எனவேதான் இந்தப் பதிவு.
அமெரிக்காவைச் சேர்ந்த கி.வெ என்ற மேற்குறிப்பிட்ட ஒரு மருத்துவர் ஒரு புதிய கண்டுபிடிப்பைப் பற்றி விரைவில் அறிவிக்கப் போகிறார் என்கிறது செய்தி.
அது முழுக்க,முழுக்க ஆய்வகத்திலேயே உருவாக்கப் பட்ட ஒரு செயற்கை க்ரோமோசோம் பற்றிய செய்தி.
உயிரின் உருவாக்கத்தில் க்ரொமோசோம்களில் பங்கு நாம் அறிந்த செய்தி;ஆனால் கிரெய்க் செயற்கையாக க்ரோமோசோமை உருவாக்கி இருக்கிறார்.
இந்த க்ரோமோசோமை ஒரு செல்லில் செலுத்தி உயிர்ப் பெருக்க நடவடிக்கைகளைத் தூண்டி விட்டு எந்த உயிரையும் உருவாக்கலாம் என்பது அவர் அளிக்கும் சித்தாந்தம்.
க்ளோனிங் இதற்கு எந்த வகையில் மாறுபடுகிறது என்பது அறிவியல் ரீதியாக எனக்கு இன்னும் விளங்கவில்லை;என் புரிதலில் க்ளோனிங்'கிற்கு உருவாக்கப் பட வேண்டிய உயிரியின் ஒரு உடல் செல் தேவை என்றே படித்ததாக நினைவு.ஒரு உயிரியை உருவாக்க இந்த க்ரோமோசோமும் ஒரு செல்லில் செலுத்தப்பட வேண்டும் என்கிறார் க்ரெய்க்.
ஆயினும் க்ரோமோசோமை முற்றிலும் செயற்கையாக பரிசோதனைச் சாலையில் உருவாக்க முடிந்திருப்பது ஒரு புரட்சியான சாதனை என்றே தோன்றுகிறது.
க்ரெய்க் குளோபல் வார்மிங்'கை சமாளிக்க கார்பன் - டை - ஆக்சைடை உட்கொள்ளும் பாக்டீரியாக்களை உருவாக்குவதுதான் முதல் லட்சியம் என்கிறார்.
ஆயினும் அவர் சொல்லுகிற வகையில் இந்த கண்டுபிடிப்பு வேலை செய்தால் படைப்புத் தத்துவம் ஒரு மிகப் பெரிய ஆட்டம் காணும் வாய்ப்பிருக்கிறது.
உலகெங்கிலும் பலத்த எதிர்ப்பும் இக் கண்டுபிடிப்பிற்குத் தோன்றியிருக்கிறது.
க்ரெய்க்'கிடம் எதிர்ப்பைப் பற்றிக் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பதில் ஒரு அழகிய முரண் நகை, "கடவுளையே எதிர்க்கும் ஆட்கள் இவ்வுலகில் இருக்கும் போது என் கண்டுபிடிப்பை எதிர்ப்பது எம்மாத்திரம்?"
இவ்வேளையில் சுஜாதா எழுதிய ஒரு விஞ்ஞானச் சிறுகதையில், முழுக்க சோதனைச் சாலையில் உருவாக்கி,ஒரு விஞ்ஞானியால் (ரகசியமாக)வளர்க்கப்படும் ஒரு கொழகொழத்த வடிவற்ற உயிரியும்,அந்தக் கதையின் சுவாரசிய சுஜாதா ப்ராண்ட் முடிவும் எண்ணத்தில் மீள்வதை தவிர்க்க இயலவில்லை.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
thanks for news..
ReplyDeleteகுளோபல் வார்மிங்'கை சமாளிக்க கார்பன் - டை - ஆக்சைடை உட்கொள்ளும் பாக்டீரியா
good
but side effect?
>>>>
ReplyDeleteசுஜாதா எழுதிய ஒரு விஞ்ஞானச் சிறுகதையில், முழுக்க சோதனைச் சாலையில் உருவாக்கி,ஒரு விஞ்ஞானியால் (ரகசியமாக)வளர்க்கப்படும் ஒரு கொழகொழத்த வடிவற்ற உயிரியும்
<<<<
THE BLOB என்னும் ஆங்கிலப் படத்தில் அந்த உயிரியை பார்க்க முடியும்.
ரசிகன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteக்ரெய்க் அவ்விதம் சொல்கிறார்.விளைவுகள் பின்னே தெரியும்..
அனானி,நன்றி.
ReplyDeleteசுஜாதாவின் கதை 1980 களில் எழுதப் பட்டது என நினைக்கிறேன்.
The Blob எப்போது வந்தது?