குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)

Wednesday, October 15, 2008

81.கடிபடுவது நகமா,விரலா ?

சமீபத்தில்,சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னிருந்து (ச்சே,பதிவுலகில் இது ஒரு வியாதியாகவே ஆகிவிட்டதோ?) இரண்டு மூன்று வாரங்களாக நிதிச் சந்தைகளில் நடந்துவரும் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஏதோ வாணவேடிக்கை நடந்துகொண்டு இருப்பதாக உணர்வார்கள்.

பங்குச் சந்தையிலும் ஊக வணிகத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலர் நகத்தைக் கடித்துக் கொண்டோ அல்லது விரலைத் தின்று கொண்டோ இருக்க வாய்ப்பிருக்கிறது;இரண்டாவது என்றால் பெரும் பணம் காற்றில் போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த நிலைக்கு என்ன காரணம் அல்லது இது எப்படி நிகழந்தது என்பது பற்றி பல செய்தி பத்திரிகைகள் அல்லது ஊடகங்கள் அலசிவிட்டன.

கடந்த வாரத்தில் அமெரிக்க அரசு சுமார் 700 பில்லியன் டாலர்கள் (அல்லது சுமார் 3,20,000 கோடி ரூபாய்கள்) நிதியை புழக்கத்திற்கு விட அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பெர்னக்கி யோசனை வழங்கி,அதிபர் முன்மொழிந்த போது அமெரிக்க காங்கிரஸ் சபை அதை நிராகரித்து அரசுக்குப் பெரிய அதிர்ச்சியை வழங்கியது;பின்னர் புஷ் புஸ்ஸென்று கிளம்பி,அமெரிக்க கூட்டுப் பாராளுமன்றக் குழுவிற்கு விளக்கம் அளிக்க பெர்னக்கியைப் பனித்தார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர் குழுவினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தார்.

காணக் கிடைக்காத காட்சி அது !!!!

நம்மில் பலர் அமெரிக்கர்களைத் திட்டுகிறோமே,அவர்களுடைய சொந்தக் காரியங்களை அவர்கள் பார்த்துக் கொள்வது போல் நம்முடைய காரியங்களைப் பார்த்துக் கொண்டால் நாம் அவர்களைத் திட்டுவதில் அர்த்தமிருக்கிறது.

தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான அந்த கேள்வி நேரத்தில்’ ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுளுக்கெடுக்கும் கேள்விகளைக் கேட்டு பெர்னக்கியின் பதிலைப் பெற்றார்கள்.இது போன்ற காட்சிகள் இந்தியாவிலோ ஏன் ஆசிய நாடுகளிலோ நடக்கிறதா?

சிதம்பரமோ அல்லது ரிசர்வ் வங்கியின் தலைவரோ அவர்கள் எடுக்கும் கொள்கை முடிவுகள் பற்றிய திறந்த விவாதத்திற்குத தயாராக இருக்கிறார்களா?

அறிந்த பத்திரிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்குக் கூட அவர்கள் பதிலளிப்பதில்லை !

ஒருவழியாக பணத்தை சந்தையில் பாய்ச்சும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் இந்த முடிவு ஆக்கம் பெற்ற போது,ஐரோப்பிய ஒன்றியங்களும் ஜோதியில் இணைந்து வாடிக்கையாளர்களின் பணத்திற்கும்,வங்கிகளின் நிதி சுழற்சிக்கும் உறுதி அளித்த பின்னர் அதளபாதாளம் நோக்கிப் போய்க்கொண்டிருந்த பங்குச் சந்தை கொஞ்சம் சரிவிலிருந்து மீளும் அறிகுறிகளைக் காண்பித்தது.

ஆனால் இது சரியான தீர்வுதானா என்ற கேள்விகள் இப்போது நிதிச் சந்தை அறிஞர்களிடம் எழுந்திருக்கிறது.

இந்த மொத்தக் குழப்பமும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த இயலாதவர்களுக்கு கடன்களை அள்ளி வழங்கிய காரணத்தால் நிகழ்ந்தது;இதைப் பற்றி ஒரு பதிவு தெளிவாக எழுதப் பட்டிருந்தது.

இவை திவாலான காரணம் கொடுத்த கடனில் சுமார் 80 சதத்திற்கு மேல் வராக் கடனாக மாறியதுதான்.கடனுக்கான அடமான சொத்துகளை வங்கிகளும்,நிதி நிறுவனங்களும் கையகப் படுத்தினதான்;ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்ய?அவற்றை மறுவிலை கொடுத்து வாங்க ஆளில்லை.

ஒரு கட்டடம் அல்லது ஒரு வீடு என்றால் வங்கி மேலாளர் தங்கவோ அல்லது விற்கவோ முனையலாம்.ஆனால் கொடுத்த கடனெல்லாம் இப்படி செத்த சொத்துக்களாக(Non Perporming assets) மாறவும் வங்கிகளின் கையிருப்பில் பணவரவு அறவே நின்று முதலீட்டாளர்கள் வரைவோலையோ அல்லது காசோலையோ கொடுத்தால் அவர்களுக்கு திருப்பிச் செலுத்த பணமில்லா நிலையை அடைந்தன.

இதற்குத்தான் மேற்சொன்ன நிதிச் சந்தையை மீட்கும் பணியை அரசு செய்ய முன்வந்தது.
இப்போது நிதிச் சந்தை சிறிது பெருமூச்சு விட்டாலும் நீண்ட கால நோக்கில் என்ன நடக்கும்?
மேற்சொன்ன மீட்பு முயற்சி(Bailout Plan) முன்வைக்கப்பட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சொத்துக்களை அல்லது பங்குகளை அரசு வாங்கிக் கொண்டு சுமார் 250 மில்லியன் டாலர்களை அவற்றில் இன்று முதலீடு செய்திருக்கிறது.

வங்கிகள்,நிதி நிறுவணங்களின் “கையாலாகாத் தனத்திற்கு” இது போல் அரசு அந்த வங்கிகளில் முதலீடு செய்தால் சுற்றிவளைத்து அரசு அந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை நாட்டுடமையாக்குகிறது;தனியார் வசம் இருக்கும் போதே இவ்வளவு ‘தான்தோன்றித்தனமாக’ செயல்பட்ட வங்கிகள் அரசின் வசம் போகும் போது எவ்வளவு திறனுடன் செயல்படும் என்ற கேள்வி சந்தையில் எழுந்திருக்கிறது.

இது நீண்ட கால நோக்கில் மேலும் கீழ்நோக்கிய வீழ்ச்சிக்கு சந்தையை செலுத்தும் முயற்சி என்பது சில தேர்-நிதியாளர்களின்(Financial Experts) எச்சரிக்கை.

பார்க்கலாம்,எத்தனை பேரின் விரல் முழுதும் கடிபடப் போகிறதென்று !!!!!!!

3 comments:

 1. வணக்கம்
  உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

  ReplyDelete
 2. வணக்கம்
  உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

  ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • துணுக்குத் தோரணம் - *TIME **வீடு மாறிய போது...* *சமீபத்தில் பிரபல "டைம்' வார இதழ் தனது அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு, நியூயார்க்கிலேயே வேறு ஒரு கட்டடத்திற்கு இடம் பெயர்ந...
  4 days ago
 • அஞ்சலி - மா. அரங்கநாதன் - சித்தி - மா. அரங்கநாதன் மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ஆவணப்படம் ஆளுமைகள் குறித்த ஆவணப்படங்களோ, ஆளற்ற பொட்டலில் மேடைப் பேச்சு போல் பரிதாபத்துக்குர...
  2 weeks ago
 • Hidden Figures - சைஸு வாரியா நிக்கிறாங்களே ஒரு வேளை ஒபிசிட்டி பற்றிய படமாய் இருக்கோமோ என்று பச்ச மண்ணாய் சந்தேகப் பட்டேன். இந்த மாதிரி அல்ப சிந்தனைகளால் தான், என்ன தான் அன...
  3 weeks ago
 • மிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம் - வானத்துநட்சத்திரங்களைக்காண நீங்கள் மெனக்கெடத் தேவையில்லை. அவை நம்மை வரவேற்க எப்போதும் காத்திருக்கின்றன. இரவு வானில் நிலவு அல்லது மேகம் இல்லாத நாட்களாக இருந்...
  1 year ago