குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, July 21, 2008

69.அணுசக்தி ஒப்பந்தம்-மேலும் சில பார்வைகள்

அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய ஞாநியின் கட்டுரையை மேற்காட்டி இட்டிருந்த் சென்ற பதிவில் நண்பர் லஷ்மி நரசிம்மனும்,தோழி கயல்விழியும் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்கள்.
அவற்றில் முக்கியமானவை:
1.அமெரிக்கா இந்தியாவுக்கு ஒரு வெற்றுக் காசோலை தரும் என்ற நினைப்பு வேண்டாம்.
2.அமெரிக்கா என்றால் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ன விதமான மூடத்தனம்?



இந்த ஒருவார காலகட்டத்தில் வேறுசில நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.
அவை,ஞாநியின் இரண்டாவது கட்டுரை,இரண்டாவது பாஜக தலைவர் மற்றும் அக்கட்சியால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் அத்வானியின் தி ஹிந்துவின் நேர்காணல்,முந்தாய்ப்பாக அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மாணமும் இன்று பிரதமர் மன்மோகனால் முன் மொழியப்பட்டுவிட்டது.


இனி அரசின் தலைவிதி எப்படியானாலும் ஒப்பந்தத்தின் நிலை என்னவாகும் என்பது விவாதத்துக்குரிய ஒன்று.


ஒருவேளை காங்கிரஸ் அரசு கவிழ்ந்து,பாஜக அரசு வந்தாலும் கூட இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்றே கருத்து நிலவுகிறது.


எனில் இப்போது என்ன பிரச்னை?ஏன் எல்லோரும் எதிரக்கிறார்கள்?

இந்த ஒப்பந்தம் அணுசக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கானது அல்ல;அப்படி தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு ஆகும் செலவும் மிகவும் அதிகம்.

எனவே அரசின் நோக்கம் அதுவல்ல என்பது ஒரு வாதம்.


யுரேனியம் கிடைப்பது குறைந்து வரும் இந்த நேரத்தில் அணு ஆயுத ஆராய்ச்சிக்கு யுரேனியத்தாது தடையின்றி கிடைக்கவேண்டும்.
இதனால் இந்த ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டும் அரசு,சில குறிப்பிடப்பட்ட அணு உலைகளை அமெரிக்கா,உலக அணுசக்தி சம்மேளனத்தின் ஆய்வுக்கு உட்படுத்தி விட்டு,அவற்றில் நல்ல பிள்ளையாய் மின் உற்பத்தி மட்டுமேசெய்து கொண்டு,மற்ற அணு உலைகளில் அணு ஆயுத ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம் என்பது ஒரு நோக்கம்.


இதனால் இந்தியாவுக்கு கிடைக்கும் பலன்கள் அல்லது சாதக அம்சங்கள்:


- அரசுக்கு யுரேனிய சப்ளை தடையின்றி நிகழ்கிறது
-மின் உற்பத்தியில் பெரிதும் ஏதும் வளர்ச்சி வந்துவிடப் போவதில்லை;ஆனால் ஒப்பந்தன் கையெழுத்தாகி விட்டால் அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க யாருக்கும் நேரமிருக்காது.
-அணு ஆயுதத் தயாரிப்பு/ஆய்வுக்கு எந்த தடங்கலும் வராது.அதனாலேயே கலாம் கூட இந்த ஒப்பந்தம் நிறைவேற வேண்டியது எனச் சொல்லியிருக்கலாம்.
-இந்த அணுகுமுறைக்கு வலு சேர்க்கும் விதயம்,இந்த ஒப்பந்தத்தை செயலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாராயணன்.இவர் மின்சாரத்துறைக்கோ,நாடாளுமன்ற விவகாரத்துக்கோ பொறுப்பு வகிப்பவர் அல்லர்,ஆனால் பாதுகாப்புத்துறையின் செயலாளர்.


சரி,அப்படியெனில் இந்தியாதானே இந்த ஒப்பந்தத்துக்கு பாடுபட வேண்டும்,ஏன் புஷ் நிர்வாகமும் இதில் ஆர்வம் காட்டுகிறது?

இதற்கு இரு கூறுகள் இருக்கின்றன.
-தனிப்பட்ட அளவில் மன்மோகனை மிக மரியாதையாக நடத்தி உச்சி குளிர வைத்திருக்கும் புஷ் நிர்வாகம்;இதனால் அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை,இதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற அளவுக்கு சென்றிருக்கும் மன்மோகன்.
-அமெரிக்கா ,அவர்களது சொந்தத் தேவைக்கு அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் முயற்சிகளை,அதன் பாதக அம்சங்களைக் கைவிட்டு மிக நீண்ட நாட்களாகிவிட்டது;இப்போது அவற்றின் மின் உற்பத்திகான அணூலை ரியாக்டர்கள் குறைந்தது 10 ஆண்டுகால பழமையான தொடில்நுட்பம் கொண்டவை.இந்த பழம் பொருட்களுக்கு இந்தியா நல்ல விலை கொடுக்கக் காத்திருக்கிறது;என்ன,அதோடு யுரேனிய சப்ளையும் நடக்க வேண்டும்.அதில் ஏதேனும் விவகாரம் வந்தால் ஹைடு ஆக்டின் படி சட்டையைப் பிடிக்கலாம் என்பது அவர்கள் இதைப் பார்க்கும் விதம்.(இந்த இடத்தில் சீனா இந்த தொழில் நுட்பத்தை அமெரிக்கர்களிடமிருந்து நீண்ட காலத்துக்கு முன்பே வாங்கி விட்டதும் கவனிக்கத்தக்கது.)


எதிர்க்கட்சியான பாஜக’வும் இதையே சுட்டுகிறது.

யுரேனிய சப்ளைக்கு(அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையாக இருப்பதால்) நமக்கு வேறு நாதி இல்லை;அதை அமெரிக்கா கொடுக்க முன்வருகிறது-provided- நாம் அவர்களின் அரதப் பழசான அணு மின்சக்தி டெக்னாலஜிக்கும் நல்ல விலை கொடுக்க முன்வரும் பட்சத்தில் !

அணுசக்தி ஒப்பந்தத்தின் கூறுகள் 123 ஒப்பந்தம் என்ற பெயரிலேயே இருக்கின்றன;இவற்றின் ஷரத்துகள் தெளிவாக இருப்பதாகத் தெரியவில்லை;
இவை 2006 இறுதியில் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டன.

ஆனால் இதற்குப் பின் அமெரிக்க நாட்டில் நிறைவேற்றப்பட்ட ஹைட் சட்டம்,123 ஒப்பந்தக் கூறுகளில் அச்சட்ட விதிகளோடு மாறுபாடு வரும் போது ஹைட் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை வரையறுக்கிறது.


அத்வானி இந்த விதயத்தை சிறிது ராஜதந்திர மொழியில் கூறியிருக்கிறார்.அவர் கூறியது:

We were against it but we reiterate that our opposition to this deal has been different from that of the Communist parties. The Communist parties feel — they may not have spelt it out that way, but I found an article in your newspaper that is quite clear on that — that we are accepting their [the United States’s] supremacy over us by becoming part of their strategic alliance. It’s not merely the 123 agreement by itself. We are opposed to the 123 agreement because it is also preceded by the Hyde Act. We do not agree with the government’s stand that ‘the Hyde Act has nothing to do with us, we are governed only by the 123 agreement.’ Whenever they have made a statement of this kind, it has been immediately rebutted by the American spokesman.
Therefore, our objection has been not to the strategic relationship, which 123 may involve. Our objection has been to the Hyde Act, which imposes a constraint on our strategic options in the nuclear field. Furthermore, I would say, it was during our period, when we were in government — we did not start the nuclear deal, as is often said — but we did start the process of strategic relationship. I for one — it was not my Ministry at all — but I said several times that India and the USA are the two major democracies of the world — one the strongest, the other the largest. It would be in the interest of the world, of these two countries themselves, if there is a relationship beyond merely friendship. If you call it a ‘strategic relationship,’ it is fine. It should be there.



So we are not against any strategic relationship with the USA. In fact, I would feel that the Communist parties, after all that has happened, also should be able to get out of that mindset. After all, during that entire period of the Cold War, we also were never very favourable to the USA. Because at that time, their relationship was entirely with Pakistan. They were hostile to us. In a way, it is America which has made even the Congress government change Pandit Nehru’s approach of utilising nuclear energy only for peaceful purposes. That was a consistent policy followed by India not only when it was under the Congress regime of Pandit Nehru but even when it came to Morarji Desai, in whose government we also were there. (Vajpayee was there, I was there.) Before going to the U.N. once, when he was to make a speech about nuclear weapons, he categorically said, ‘India will never go in for nuclear weapons.’ Categorical. He read it out to us deliberately, because he knew ours was the only party in the country which had been advocating that course of action.


So it was America which during the Indo-Pakistan war of 1971 sent its nuclear fleet here. It was this which prompted Indira Gandhi to go in for Pokhran-I in ’74. She did Pokhran-I in ’74; we completed the process in ’98. In between, efforts were made but somehow they were not completed. Preparations were made but they were not executed. I don’t want to go into all that. Once [former President R.] Venkataraman, in a book release function, publicly complimented Vajyapee-ji for what he had done, saying ‘When I was Defence Minister, this was planned but somehow we could not go forward with it. I compliment you for completing it.’
I am referring to all this because there is that basic difference between what happened in our time [and the rest]. And yet our relations with America — yes, they imposed sanctions on us. I cannot forget that Pokhran-II was criticised not only by the Leftists but even by Dr. Manmohan Singh in the Rajya Sabha. He severely criticised us. ‘Why have you done it?’ There was a very sharp exchange between my colleague K.R. Malkani, Editor of The Organiser, who was a BJP member of the Rajya Sabha, and Manmohan Singh. He said he did not buy the argument that the economic sanctions would not hurt India, ‘You do not understand what will happen to the country’s economy by what you have done!’ Malkani said, ‘Nothing will happen. You wait and watch.’ Actually nothing happened. One by one, all those restrictions were lifted. In fact, today some of those restrictions imposed after ’74 may be continuing but not those imposed after ’98.
Basically I feel, for a long time America has been wanting to make every non-nuclear country part of the non-proliferation regime, by having them sign the NPT. Even Pandit Nehru or Morarji Desai, who were not in favour of making India a nuclear weapon state, said: ‘We are not going to sign any Treaty which binds us now.’



Our complaint about this [deal] is that in the name of energy autonomy, you are surrendering our strategic autonomy. This is what we oppose.

-With acknowledgements to The Hindu.

ஆக பாஜக வந்தாலும் அவர்கள் இந்த ஒப்பந்தத்தை இழக்க மாட்டார்கள்;ஆனால் வேறு வடிவம் தர முயற்சிப்பார்கள் எனத் தோன்றுகிறது.


ஆனால் ஆளும் காங்கிரஸ்(இந்தியத்) தரப்பில்,நாம் 123 ஒப்பந்தத்துக்கே ஒப்புக்கொள்கிறோம்;ஹைட் சட்ட விதிகளுக்கும் இதற்கும் மாறுபாடு வந்தால் அது அமெரிக்கர்களின் பாடு என்கிறது.இது எந்த அளவுக்குச் சரியானது என்பதில் சிறிது குழப்பம் இருக்கிறது.

இந்த குழப்பத்தைத் தெளிவான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் தீர்க்க மன்மோகனோ,காங்கிரஸோ முன்வரவில்லை என்பதும் ஒரு புதிர்.

எனவே அமெரிக்கா என்பதால் கண்மூடித்தனமான எதிர்ப்பு இல்லை;ஒரு வேளை கம்யூனிஸ்ட் அன்பர்கள் இதைச் செய்யலாம்.மற்றவர்கள் இந்தியாவுக்கான பொறிகள்-catch- 123 ஒப்பந்தத்தில் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதைத் தெளிவு படுத்த வேண்டுகிறார்கள் என்பதுதான் விதயம் !



2 comments:

  1. //ஆக பாஜக வந்தாலும் அவர்கள் இந்த ஒப்பந்தத்தை இழக்க மாட்டார்கள்;ஆனால் வேறு வடிவம் தர முயற்சிப்பார்கள் எனத் தோன்றுகிறது.//

    ஆக ஒப்பந்தம் யாரது ஆட்சியில் என்பதுதான் மையம்.பொக்ரான்2 கூட நரசிம்மராவுக்குப் போக வேண்டியது.இவர்கள் பிந்தி முந்திக்கொண்டார்கள்.

    ReplyDelete
  2. 123 ஓப்பந்தம் பற்றிய சாதக பாதகங்களை விளக்கவும்.

    தி.விஜய்

    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...