தமிழே இந்திய மொழிகள் அனைத்துக்கும் மூலமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கும் சாத்தியங்களையும்,தென்னிந்திய மொழிகளான கன்னடம்,மலையாளம்,தெலுங்கு ஆகியவற்றிற்கு தமிழே மூலமொழி என்று உறுதியாகக் கருத இடமிருப்பதையும் சென்ற பகுதியில் பார்த்தோம்.
இவற்றில் கன்னடமும்,தெலுங்கும் தமிழிலிருந்து அதிக வேறுபாடுகளையும்,மலையாளம் அவற்றுடன் ஒப்பிடும் போது தமிழோடு குறைந்த அளவு வேறுபாடுகளையும் கொண்டிருப்பது கண்கூடு;இதற்கான காரணங்கள் வரலாற்று ரீதியானவை.
வட இந்தியாவில் நிலைபெற்ற ஆரியர்கள் (பிராமணர்களின் மூதாதைகள்) காலப்போக்கில் தென்னிந்தியாவிலும் குடியேறினார்கள்;இதனால் தமிழும் பிராகிருதமும் வடமொழியும் கலக்கும் நிலை கன்னட,தெலுங்கு தேசங்களில் ஏற்பட்டது.அந்தந்த வட்டாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப கன்னடமும்,தெலுங்கும் வட்டார மொழிகளாக தனிவடிவம் பெறத் தலைப்பட்டன.இதற்கேற்ப அங்கு சேர சோழ பாண்டிய ஆட்சியாளர்கள் அல்லாத வேறு வர்ணத்தவர்கள் ஆட்சியாளர்களாக இருந்ததும் இந்த வேறுபாடு மிகுந்ததற்கு ஒரு காரணம்.
ஆனால் கேரளத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு எட்டு நூற்றாண்டு முன்பு வரை(அதாவது கி.பி.1200 கள் வரை) கேரளத்தின் பகுதிகளிலும் தமிழே ஆட்சி மொழியாகவும்,கலைமொழியாகவும் இருந்தது.காரணம் சுமார் பதினைந்து நூற்றாண்டுக்கு முன் கேரளத்தை ஆண்ட மன்னர்கள் தமிழரசர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்;அவர்கள் பெருமான்கள்,பெருக்கன்மார்(சேரமான் பெருமான்) என்ற அபிடேகப் பெயர் கொண்டு கேரளப் பகுதியை ஆண்டு வந்தார்கள்.கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டபோது திருவிதாங்கூரைச் சேர்ந்த ஒரு தமிழ்ப்புலவர் தலைவராக இருந்ததற்கான் குறிப்புகள் கிடைக்கின்றன.மேலும் கிபி முதல் நூற்றாண்டு வரை கேரளப் பகுதிப் புலவர்கள் பலர் இயற்றிய பாடல்கள் தொகை நூல்களான புறநானூறு,அகநானூறு முதலியவற்றில் காணக் கிடைக்கின்றன.
சிலம்பு பாடிய இளங்கோவும் கேரளப் பகுதியைச் சேர்ந்தவரே;சேரமான் பெருமாள் நாயனார்,குலசேகர ஆழ்வார் போன்றவர்கள் கேரளப் பகுதியைச் சேர்ந்தவர்களே.இவ்வாறு கேரளம் தொன்மைமொழியான தமிழ் ஊடாடும் பகுதியாக நெடுங்காலம் இருந்ததால் மற்ற திராவிட(தென்னிந்திய) மொழிகளை விட தமிழுக்கும் மலையாளத்துக்கும் ஒற்றுமை அதிகம் காணப்படுகிறது.
அதோடு தென்னிந்தியப் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் மிக வலுவானவர்களாகவும்,கடல் கடந்து இலங்கை,பர்மா,சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா,தெனாப்பிரிக்கா,பிஜித்தீவுகள்,மொரீஷியஸ் போன்ற பிரதேசங்களில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டியதாலும் அந்த இடங்களிலெல்லாம் தமிழும் தமிழர்களும் வாழத் தலைப்பட்டனர்.
இவற்றிற்கான குறிப்புகள் தென்னகம் மட்டுமல்லாமல் இந்த வெளிநாடுகளிலும் காணக் கிடைக்கின்றன.
கிமு 10 ஆம் நூற்றாண்டின் அரசனான சாலமனுக்கு தமிழகக் கப்பல்கள் மயிற்தோகையும்,யானைத்தந்தமும்,வாசனைத் திரவியங்களையும் கொண்டு சென்றிருக்கின்றன;ஈப்ரு மொழியில் உள்ள துகி(மயில் இறகு),அஹலத்(வாசனைப் பொருள்) போன்ற சொற்கள் முறையே தோகை,அகில் ஆகிய தமிழ் வார்த்தைகளின் திரிபு.கிரேக்கத்திற்கு அக்காலத்தில்(கிமு 5’ம் நூற்றாண்டு) தமிழகம் அனுப்பிய இஞ்சியும்,பிப்பிலியுமே முறையே சிக்கிபெரஸ்,பெப்பரி(ஆங்கில ginger,pepper) போன்ற கிரேக்க சொற்களின் மூலங்கள்.அக்காலத்திய ரோமப் பேரரசின் நாணயங்கள் தமிழகப் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன;சீனத்திலிருந்து வந்த பட்டு நமது இலக்கியங்களில் கூட இடம் பெறுகிறது.
இவ்வாறு உலகின் பல பகுதிகளில் தனது மேலாண்மைத் திறத்தால் கோலோச்சிய தமிழ் இன்றைய திரிந்த திராவிட வர்க்கக் கூறுபாடுகளால்,தமிழகத்தில் கூட செழுமையான நிலையில் இல்லாத நிலை இருக்கிறது.
நமது குழந்தைகளில் பலர் தமிழை எழுதத் தெரியாமலேயே பள்ளிப் படிப்பை முடிக்கும் அவலம் நடைபெறுகிறது;இலக்கியங்களின் பரிச்சயம் இல்லாதே போகிறது;தமிழக வழிபாட்டுத் தலங்களில் கூட அருந்தமிழ்ப் பதிகங்கள் அரங்கேற மறுக்கின்றன.
ஆட்சியோ துவேஷத்தையும் வெறுப்பையும் விசிறி விடுவைதையே நிறைவேற்றியிருப்பது ஒன்றுதான் இன்றைய 'திராவிடம்' செய்திருக்கும் சாதனை என்பது எண்ணி வருந்த வேண்டிய ஒன்று.
-இன்னும் வரும்

உன்னுடைய பதிவைச் சில நாட்களுக்கு முன் தான் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.
ReplyDelete***
திராவிடக் கட்சிகள் அவை தந்த உறுதிமொழியின் எல்லைகளைத் தொடவில்லை என்பது உண்ம்மைதான். அவை செய்திருக்க வேண்டியவை இன்னும் அதிகம் என்பதும், அதனால் ஏற்படும் ஏமாற்றமும் கோபமும் கூட புரிந்துகொள்ளக் கூடியது.
ஆனால் இன்னொரு பக்கம் இது வழக்கமான திராவிட இயக்கங்களின் மேலான காழ்புணர்வினால் எழுப்பப்படும் குற்றச்சாட்டாக இருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் திராவிட இயக்கங்கள் இல்லாத தமிழ்நாட்டு தமிழ் 'தெய்வத்தின் குரல்' தமிழாக சில மடங்களிலும், ஜமீன்கள், மேட்டுக்கூடியினருக்கு கிளுகிளுப்பூட்டும் சிற்றிலக்கிய (?) புலமைகளாகவும் மட்டும் இருந்திருக்கும் என்பதற்கு இன்றைக்கும் திராவிட இயக்கங்களின் மேல் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக வெறுப்பும் துவேசமும் கொண்டு இன்றும் அத்தகைய தமிழையே புழங்கும் எச்சங்களையும் மிச்சங்களையும் கண்டால் புரிந்துகொள்ள முடியும்.
மொழி என்பது அதிகாரத்தோடும், அரசியலோடும் பெரிதும் தொடர்புடையது. இன்றைய பலகீனமான தமிழ் என்பது தமிழர்களின் பலகீனமான அரசியல்/ அதிகாரத்தையே காட்டுவதாகவே நான் புரிந்துகொள்கிறேன்.
நன்றிடா.
அன்பு தங்கமணி,
ReplyDeleteகல்லூரிக் காலங்களில் நமது மணிக்கணக்கான விவாதங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
'தெய்வத்தின் குரல்' தமிழாக நீ யாரைக் குறிப்பிடுகிறாய் எனபதில் சிறிது குழப்பம் இருக்கிறது;அது சனாதன தர்மக் கோட்பாடுகளை வளர்க்கிறோம் என்ற பெயரில் மறைமுக ஜாதி அரசியல் செய்யும் காஞ்சிமடம் போன்ற இடங்களைக் குறிப்பிடுவதாக இருந்தால்,அதில் உண்மை இருக்கிறது,ஆனால் அவர்கள் எங்கே தமிழ் வளர்த்தார்கள்???
உண்மையில் பிராமண குலத்தவர்களில் சிலர்(பரிதிமாற்கலைஞர்,உவேசா போன்ற சிலர்)தமிழுக்கு பெருந்தோண்டு செய்தவர்களாக இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்..
மற்றபடி ஆவடுதுறை மடம் போன்ற சில ஆதீன மடங்களின் தமிழ்த்தொண்டும் பாராட்டப் பட வேண்டியதாகவே என் படிப்பறிவு சொல்கிறது.
திராவிட இயக்கங்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் இன்றைய அரசியல் கட்சிகள் அடுக்கு மொழியாக மேடைகளில் பேசி மக்களை வசீகரிக்க தமிழை உப்யோகித்ததைத் தவிர தமிழ்மொழி வளர,மொழிக் கல்வித் துறையிலோ,தமிழர்களின் உண்மையான வளர்ச்சியிலோ என்ன பங்காற்றியிருக்கிறார்கள் என நீ நினைக்கிறாய்?
நேரமிருக்கும் போது எழுது..
நீயும் நானும் நமது கல்வியின் துணை கொண்டு அடைந்த இன்றைய வளர்ச்சியில் கடந்த 40 வருட தமிழக அரசுகளின் பங்கு ஏதேனும் இருக்கிறதா???????
உன்னுடனான விவாதங்கள் எப்போதும் போலவே எனக்கு மகிழ்வான தருணங்கள் !
'தெய்வத்தின் குரல்' என்று குறிப்பிட்டது 'சுதந்திர இந்தியயவில்' புதிதாக அரும்பத்தொடங்கிய தன்னை புதுப்பித்தும், புதிய அரசியல் சூழலுக்கு தகவமைத்துக்கொண்ட பார்பனீயத்தைப் பற்றியே. அந்தச்சூழலில் நீ குறிப்பிடுகிற மதநிறுவனங்கள் அப்படியான ஒரு மாற்றத்தை நோக்கி நகர்ந்திருக்கவில்லை. அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும், தமிழ் என்ற அடையாளத்தின் கீழான வேளாள சாதி மேன்மையைக் காப்பாற்ற முனைபவையாகவே இருந்தன. இதற்கு ஆரம்ப கால திரு.வி.க முதல் பல காட்டுகளைச் சொல்லலாம்.
ReplyDeleteஇந்தச்சூழலில் பெரியாரின் எழுச்சி இல்லாதிருப்பின் இந்த மடங்களின் வீழ்ச்சியை தனது உரமாக்கி 'தெய்வத்தின் குரல்' எழுந்திருக்கும்; எழவும் செய்தது. அதன் எழுச்சி என்பது இராஜாஜி 'பொருளாதாரக் காரணங்களுக்காக' மூடிய பள்ளிகள் தொடங்கி, குலக்கல்வி என்று விரிந்து இன்று கல்வியின் துணை கொண்டு என்று எழுதி இருக்கிறாயே அதை எழுத முடியாமலே (எல்லா அர்த்தத்திலும்) செய்திருக்கும். காமராஜர் அன்று பள்ளிகளைத் திறந்து சாப்பாடு போட்டு படிக்க செய்ததன் மூலப்பார்வை 'காங்கிரஸ்' கட்சிக்குச் சொந்தமானதல்ல. அவருக்கு முன்னும், பின்னும் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு அப்படியான பார்வை தமிழ்நாட்டிலோ வெளியிலோ இருந்ததில்லை. இதனால் தான் தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ், 'தெய்வத்தின் குரல்' இரண்டையும் ஒழித்த பெரியார் காமராஜருக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கினார்.
திராவிட இயக்கங்களின் நசிவு, ஏமாற்று என்பது வேறு, அரசியலலென்பது வேறு. நான் அவற்றின் அரசியலின் தேவையின் வழி இந்தப் பிரச்சனையை அணுகுகிறேன். அது மட்டுமே அணுகும் வழியல்லதான். ஆனால் நிச்சயமாக வெகுமக்கள் விரோத வழியல்ல என்பது எனது நிலைப்பாடு.
இது இருக்கட்டும். நாம் அறிவியல் ஆய்வுகளில் செய்வது போல திராவிட இயக்கங்கள் இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை ஒரு hypothetical ஆகப் பார்த்தால் அதற்கு மலையாளம் நல்ல காட்டாக இருக்கும்.
வெறும் மொழி பாதுகாவலர்கள் மட்டுமிருந்திருந்தால் தமிழ் 'தெய்வத்தின் குரல்' (சம்ஸ்கிருதமயப்பட்டு) மொழியாக இருந்திருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் இன்று தமிழின் நிலையிலேயே வலுவிழந்து (அதிகார) இருக்கும் என்பதும் கண்கூடு. இதற்கு மலையாளமே உதாரணம்.
http://www.kalachuvadu.com/issue-98/page69.asp
//மொழி என்பது அதிகாரத்தோடும், அரசியலோடும் பெரிதும் தொடர்புடையது. இன்றைய பலகீனமான தமிழ் என்பது தமிழர்களின் பலகீனமான அரசியல்/ அதிகாரத்தையே காட்டுவதாகவே நான் புரிந்துகொள்கிறேன்.
//
சென்ற பின்னுட்டத்தில் இப்படி எழுதிய பின் தான் இந்தக்கட்டுரையை படிக்க நேர்ந்தது. இதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.
எனவே தமிழின் இன்றைய நிலைக்குக் காரணம் திராவிட இயக்கங்களின் தோற்றம் என்பதை விட அவை செல்லவேண்டிய பாதையில் செல்லாததையே நான் காரணமாகக் குறிப்பிடுவேன்.
நன்றி பையா!
//நமது குழந்தைகளில் பலர் தமிழை எழுதத் தெரியாமலேயே பள்ளிப் படிப்பை முடிக்கும் அவலம் நடைபெறுகிறது;இலக்கியங்களின் பரிச்சயம் இல்லாதே போகிறது//
ReplyDeleteஇதுதான் கொடுமை...
வாங்க பாசமாலர்,
ReplyDeleteஉண்மையில் நாம் வருந்த வேண்டியதும்,கவலை கொள்ள வேண்டியதுமான ஒரு விதயம் இது.
பாரதியோ,வள்ளுவரோ யார் என்பது சாதாரணமாக ஆந்திர நண்பர்களுக்கே தெரிவதில்லை;ஏனேனில் தமிழர்கள் பலருக்கே பாரதியைபயோ,வள்ளுவரையோ பற்றிய முழுதான கருத்தோ புரிதலோ இல்லாத காரணமே.
இவை போன்ற விதயங்களில் கருத்துச் செலுத்த வேண்டியது அரசுகளின் கடமை;ஆனால் அவை 80 சதவீதம் இதில் தோல்வியுற்றதாகவே நான் உணர்கிறேன்.
ம்ணிப் பையா,
ReplyDeleteநன்றி..சிறிது பொறுத்து வந்து உன் கருத்துக்களுக்கான என் பார்வையை முன்வைக்கிறேன்.
மேலும் சில சுவாரசியமான விதயங்கள் படிக்கக் கிடைத்ததால் இத்தலைப்பில் இன்னுமெழுதலாம் என்றிருக்கிறேன்.
ReplyDelete///////அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும், தமிழ் என்ற அடையாளத்தின் கீழான வேளாள சாதி மேன்மையைக் காப்பாற்ற முனைபவையாகவே இருந்தன. இதற்கு ஆரம்ப கால திரு.வி.க முதல் பல காட்டுகளைச் சொல்லலாம்.//////////
ReplyDeleteஇது ஒரு 'ஹைபோதெடிகலான' குற்றச்சாட்டு என்று நினைக்கிறேன்.ஆவடுதுறை ஆதீனத்திற்கும்,ஆதீனகர்த்தர்களையும் நானே சந்தித்திருக்கிறேன்.அவை சாதி ரீதியான எந்த விதயத்தையும் முன்னெடுப்பதாக எனக்குத்தோன்றவில்லை.மேலும்
உவேசா'வின் என் சரித்திரத்தில் ஆவடுதுறை மடத்தில் தமிழ் வகுப்புகள் நடந்த நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடுவார்,அதைப் படிக்கக் கிடைத்தால் படிக்க வேண்டுகிறேன்.
////////அதை எழுத முடியாமலே (எல்லா அர்த்தத்திலும்) செய்திருக்கும்//////
சுதந்திர இந்திய சூழ்நிலையில்,ஆங்கில ஆட்சியில் இருந்தது போன்ற பிராமண ஆதிக்கம் ஏற்பட்டிருக்கும் என்ற உன் கூற்று நம்பத்தகுந்ததாகவும்,என்னால்(நடுநிலையில் சிந்திக்கும் யாராலும் !) ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்றெனவே தோன்றுகிறது.
//////திராவிட இயக்கங்களின் நசிவு, ஏமாற்று என்பது வேறு, அரசியலலென்பது வேறு////////
அவர்களின் அரசியலே,ஏமாற்று வேலையின் வழி என்பது என் கருத்து.அண்ணா வரை இருந்த திமுக வேறு,பின்னர் பிறழ்ந்த நிலை வேறு.
பெரியாரின் பேச்சுகளும் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாகவே இருப்பதாகவே தோன்றுகிறது.
மொழியில் மட்டுமல்லாது பல விழுமியங்களில் நேர்ந்த வீழ்ச்சி 'திராவிடக்' கட்சிகளின் ஆட்சிக் காலத்தில்தான் வேகம் பெற்றது என்பது என் கருத்து.
>தென்னிந்திய மொழிகளான கன்னடம்,மலையாளம்,தெலுங்கு ஆகியவற்றிற்கு தமிழே மூலமொழி என்று உறுதியாகக் கருத இடமிருப்பதையும்
ReplyDeleteNobody believes it outside Tamilnadu. The attitude of "linguistic imperialism" by Tamils, in thought only and not in actions, even drives malayalam more and more into the arms of sanskrit devotion. Welcome to the world, Mister.
ஆதினகர்த்தர்களை நீ சந்தித்தது 1970க்குப் பிறகே இருக்கமுடியும்.நான் திராவிட இயக்கங்கள் தோன்றிய காலப்பகுதிக்கு முன் தமிழ் என்பது சைவசிந்தாந்த நூற்பதிவுக் கழகத்தின் மொழியாக மாற்றம் பெற்று (வட்டார வழக்க்குகளை எல்லாம் ஒழித்து) வந்த காலத்தை குறிப்பிடுகிற்றேன்.
ReplyDeleteதிராவிட இயக்கத்தின் தாக்கம் திராவிட இயக்கத்தில் இருப்பவர்கள்ளையும் அதன் ஆதரவாலர்களை மட்டும் பதித்த ஒன்றல்ல; அதன் எதிரிகள்-சங்கரமடம் வரை பாதித்த, பாதிக்கிற ஒன்று. அப்படியே இந்த மடங்களையும்.
//சுதந்திர இந்திய சூழ்நிலையில்,ஆங்கில ஆட்சியில் இருந்தது போன்ற பிராமண ஆதிக்கம் ஏற்பட்டிருக்கும் என்ற உன் கூற்று நம்பத்தகுந்ததாகவும்,என்னால்(நடுநிலையில் சிந்திக்கும் யாராலும் !) ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்றெனவே தோன்றுகிறது.//
இதற்கு பதில் என்னால் எழுதமுடியவில்லை. இவ்வளவு naive ஆக இருக்கும் போது ஏற்படும் திகைப்பைத் தவிர வேறெதுவும் இல்லை.
எனவே உன்னுடைய திராவிட இயக்கம் குறித்த பார்வையை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
//மொழியில் மட்டுமல்லாது பல விழுமியங்களில் நேர்ந்த வீழ்ச்சி 'திராவிடக்' கட்சிகளின் ஆட்சிக் காலத்தில்தான் வேகம் பெற்றது என்பது என் கருத்து.//
இதற்காகத் தான் திராவிட இயக்கம் அல்லது அது போல ஒரு இயக்கம் இல்லாத மலையாளச்சூழலை ஒப்பிட்டேன். அதைச் சரியாகச் சொல்லவில்லையோ என்று நினைக்கிறேன்.
நன்றி!
///////திராவிட இயக்கத்தின் தாக்கம் திராவிட இயக்கத்தில் இருப்பவர்கள்ளையும் அதன் ஆதரவாலர்களை மட்டும் பதித்த ஒன்றல்ல; அதன் எதிரிகள்-சங்கரமடம் வரை பாதித்த, பாதிக்கிற ஒன்று. அப்படியே இந்த மடங்களையும்/////////
ReplyDeleteஇவ்வகையான பாதிப்பு நல்முறையில்,ஆக்கபூர்வமாக இருக்கும் வரையிலும் அனைவருக்கும் நல்லதே.இப்போது கூட அறநிலையத்துறையோ,அமைச்சரோ கொள்கை முடிவுகள் எடுக்கும் போது ஆதீனங்களின் கருத்தையும் கேட்பதாக அறிகிறேன்.இச்சூழ்நிலையில் நீ சொல்கின்ற 'எதிரி மனோபாவம்' இல்லையே? அப்படிப் பார்த்தால் 'திராவிடம்' ஆரியம் ஆகிவிட்டது எனச் சொல்வாயா?
நான் இந்த சூழ்நிலை வரவேற்கத் தக்கதே என்பேன்.
தி.கழகங்கள் பாசறை வைத்து கொள்கைகளைப் பரப்புவது போல ஆத்திகர்கள் அவர்களுக்கான அமைப்புகளை அமைத்துக் கொண்டு பொது நன்மைக்காக செயல்படுவது தீது அல்ல.
ஆனால சங்கர மடம் போன்ற வெறும் ஜாதி சங்கங்கள்,ஜகத்குரு பீடங்களாக உருவகம் பெற்று அதிகார மையங்களாக மாறுவது துஷ்பிரயோகம்.அவற்றின் செயல்பாட்டு டொமைன் அரசால் வரையறுக்கப் படுவதில் எனக்கு மகிழ்ச்சியே.
இந்த நோக்கில் ஜெ செயல்பட்ட அளவு துணிவுடன் முக.செயல்பட்டிருக்க மாட்டர் என்பது என் முடிபு.
அவ்வகையிலானா முதுகெலும்பில்லாத் தனமும்,தான் சமூகத்தின் ஒரு சாரார் தவிரமற்றவர்களுக்குத்தான் முதல்வர்,குறிப்பிட்ட சாராருக்கு எதிரி என்ற வகை செயல்பாடு நாகரிக சமூக மேலாண்மைக்கான அளவுகோல் அல்ல.
/////////சுதந்திர இந்திய சூழ்நிலையில்,ஆங்கில ஆட்சியில் இருந்தது போன்ற பிராமண ஆதிக்கம் ஏற்பட்டிருக்கும் என்ற உன் கூற்று நம்பத்தகுந்ததாகவும்,என்னால்(நடுநிலையில் சிந்திக்கும் யாராலும் !) ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்றெனவே தோன்றுகிறது.//
இதற்கு பதில் என்னால் எழுதமுடியவில்லை. இவ்வளவு naive ஆக இருக்கும் போது ஏற்படும் திகைப்பைத் தவிர வேறெதுவும் இல்லை.
எனவே உன்னுடைய திராவிட இயக்கம் குறித்த பார்வையை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது./////////
இவ்வகையான முன் தீர்மாண முடிவுகள் உன்னிடமிருந்து வருகிறதா !!!!!
எனது பதில் புன்னகைதான்!
நான் எதையும் அனைவருக்குமான ஆரோக்கிய சமூகம் என்ற நிலையில் பார்க்கிறேன்.
நமது பார்வையின் கோணங்களைப் பொறுத்து மதிப்பீடுகளும் மாறும்.