சில சென்னை நண்பர்களின் முயற்சியால் மருத்தவர்கள் ஷாலினி மற்றும் ருத்ரன் அவர்களின் உதவியுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி பற்றிய செய்திகள் நண்பர் நர்சிம்,டோண்டு ஆகியோர்கள் பதிவுகளில் வந்திருக்கின்றன.
இந்த முயற்சியைப் பெரிதும் பாராட்டும் அதே நேரத்தில் இவ்வகை கல்ந்துரையாடல் நிகழ்ச்சிகள் பற்றிய தேவைகள் எழுந்திருக்கும் சமூகசூழல் பற்றிய பார்வையில் இதை அணுக விழைகிறேன்.எனக்குத் தோன்றும் கேள்விகள்:
- இந்த வகையான கருத்தரங்கிற்கான தேவைகள் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்கின்றனவா?இன்னும் இக் கேள்வியைத் தெளிவாக்கும் போது,இவ்வகை கருத்தரங்கிற்கான தேவைகள் மெட்ரோ,சிறுநகரங்கள்,கிராமம் சார்ந்த நகரங்கள்,மற்றும் முழு கிராமப் புறங்கள் எல்லாவற்றிலும் ஒரே வகையில் இருக்கின்றனவா?
- மேற்கண்ட கேள்விக்கு வெவ்வேறு வித பதில்கள் வருமெனில் அதற்கான மூல காரணிகள் என்ன?
- 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைக்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் வேறுபாடு இருக்கிறதா?ஆம் எனில் காரணம் என்ன?
- இவை பற்றிய தேவைகள் ஏற்படும் போது,கூடுதலாக குழந்தைகளுக்கான பாலியல் கல்வி தேவையா என்ற உடன்-கேள்வி கருதப்பட வேண்டுமா?அல்லது இல்லையா?
-குழந்தைகளுக்கான பாலியல் கல்வியே அவர்களுக்கு தேவையில்லாத ஆர்வத்தை உண்டு செய்துவடும் வாய்ப்பிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.இதை எப்படி எதிர் கொள்வது?
இவற்றை அலசும் போது என் பார்வையில் மெட்ரோ நகரங்களில் இவ்வகையான எச்சரிக்கை கருத்தரங்கங்களுக்கும்,குழந்தைகளுக்கான அறிவுறுத்தல்களுக்குமான தேவைகள் மெட்ரோ நகரங்களில் தேவைப்படும் அளவுக்கு கிராமப்புறம் சார்ந்த இடங்களில் தேவைப்படாது என்று நினைக்கிறேன்.இதற்கான புள்ளி விவரங்கள் என்னிடம் இல்லையெனினும் எனது அவதானிப்பைக் கொண்டு பார்க்கும் போது கிராமப்புறத்தின் குழந்தைகள் பெற்றோர் அல்லது குடும்ப கவனிப்பாளர்களின் பார்வையில்தான் இருக்கிறார்கள்.ஆனால் பெருநகரங்களின் வாழ்க்கை முறை குழந்தைகள் நெருங்கிய குடும்ப நபர்கள் அல்லாத பலரின் அருகாமையில் எளிதான தின வாழ்க்கையில் இருக்கிறார்கள்.சற்று சிந்தித்துப் பாருங்கள்,பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ அல்லது ரிக்ஷாக் காரர் முதல் பள்ளியின் பியூன் அல்லது அட்டெண்டர்கள்,டியூசன் செண்டர்கள் அவற்றில் உலவும் எண்ணற்ற வெளியாளர்கள் ஆகியோருடன் பெருநகரக் குழந்தைகள் தங்களின் தின வாழ்வில் சில மணித்துளிகளைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
கிராமங்களில் இவ்வகை அயலார்களின் அருகாமை குறைவு.
சரி,இது சரியென்று எடுத்துக் கொண்டால்,பெருநகர வாழ்க்கையை முற்றாக நாம் ஒதுக்க வேண்டுமா?ஒதுக்க முடியுமா?வாழ்வெனும் ஓட்டத்தில் பலசாலியாக பெருநகரங்களின் வாழ்வு தரும் வாய்ப்புகள் மிகவும் தேவையாக இருக்கின்றன.பெருநகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருவருக்கு நான் சொல்லும் இந்தக் காரணிகள் வித்தியாசமாகவும் ஒத்துக் கொள்ள இயலாததாகவும் இருக்கலாம்.ஆனால் கிராமத்தில் பிறந்து வளர்ந்து,பெருநகரில் அனுபவப்பட்ட என்னைப் போன்ற சிலர் இந்த வேறுபாட்டை அறிய-அல்ல-உணர முடியும்.
இந்த சூழலில் குழந்தைகளூக்கு சொல்லித் தருகிறேன் பேர்வழி என்று அவர்கள் திசை திரும்பும் வாய்ப்புகளும் இருக்கின்றன.இதைப் பற்றிய கேள்விக்கு விரிவான பதிலை மருத்துவர் ஷாலினி கூட அளிக்க வில்லை என்று டோண்டு குறிப்பிட்டார்.ஏனெனில் இதற்கான அறுதியிட்ட பதில் இருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலவரம்.
இவற்றை எதிர் கொள்வதற்கான சரியான வழிமுறை குழந்தைகளுக்கு பெற்றோர் மிகவும் அணுக்கமாக தோழமையுடன் இருப்பதும் அவர்களின் உலகத்தில் தவிர்க்க இயலாத நபர்களாக பெற்றோர் விளங்குவதும் முக்கியம்.இந்த சூழலில் குழந்தைகளின் செயல்களிலிருந்து நண்பர்கள் வரை அனைவரது விவரமும் நமக்குத் தெரியவரும்.
நெருங்கிய குடும்ப நபர்களே குழந்தைகளுக்கு வினையாக அமைந்தால் என்ன செய்வது என்பது துர்பலமான ஒரு சூழல்.சொல்லத் தேவையன்றி மிகக் கவனமுடன் கையாள வேண்டிய விதயமே.அப்படிப்பட்ட நெருங்கிய நபர்கள் குடும்பத்தில் இருக்க வேண்டியது அவசியமா எனபதே இதில் என் கேள்வி !
இதைப்பற்றிய கருத்துக்களை யோசிக்கும் போதே அதனுடன் கூடுதலாக இணைக்க வேண்டிய ஒரு கலந்துரையாடல் தலைப்பு குழந்தைகளுக்கு பாலியல் கல்வி தேவையா என்பதும்.
இதுவும் மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வியே..என்னுடைய கணிப்பில் சிறுவர்களுக்கு 12 வயது வரை அவர்கள் சிறுவர்களாக இருக்க அனுமதிப்பதுதான் சரியான செயலாகத் தோன்றுகிறது.13\14 வயதளவில் பாலியல் விதயங்களைப் பக்குவமாகக் கற்றுத் தரும் அதை நேரத்தில் அவர்களுக்கு பரிசோதிக்கும் ஆவல் உண்டாகாதவாறு பார்த்துக் கொள்வதும் முக்கியம்.
இந்த விதயம் பற்றிய டோண்டுவின் பதிவில் எழுப்பிருக்கும் கேள்விகள் அர்த்தம் பொருந்தியவை என்றே நினைக்கிறேன்..அவற்றிற்கு ஷாலினி பதில் சொன்னால் இன்னும் மகிழ்வேன்...
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago