குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, August 20, 2012

* * * * * 172. வேருக்கு நீரூற்றி விதைகளைப் பேணுவோம் !



பெரும்பாலும் வாரத்தில் ஆறு நாட்களிலாவது உடற்பயிற்சிக்கோ அல்லது ஓட்டத்திற்கோ செல்வது எனக்கு வழக்கம். கல்லூரியில் படித்த காலத்திலிருந்து தொடரும் இந்த வழக்கம் இடைப்பட்ட காலத்தில் மூன்று நான்கு ஆண்டுகள் மட்டும் வழமையில் இல்லாதிருந்து, இப்போது இரண்டு ஆண்டுகளாக மீண்டும் தொடர்கிறது. இடைப்பட்ட சில ஆண்டுகள் தடைக்கு,அந்த காலகட்டத்தில் நான் இருக்க நேர்ந்த நாடுகளில்,
தங்கியிருந்த சூழல் ஒட்டத்திற்கோ, உடற்பயிற்சிக்கோ ஒவ்வாத இடங்களாக இருந்திருந்தது ஒரு முக்கியக் காரணம்.

ஆனால் சிங்கை போன்ற நாடுகளில் மக்கள் நலம் பேணும் அரசு, மக்களுக்கான அமைதியான நல்வாழ்வில் பெரும் அக்கறை செலுத்துவதால், உடல் மற்றும் நடைப் பயிற்சிக்கான களங்களும்,நீச்சல் குள வசதிகளும் பிரமாதமானவை.

பெரும்பாலும் பூங்காவை ஒட்டிய ஒட்டப்பயிற்சிக்கான பாதையும், உடப்பயிற்சிக்கான உபகரணங்களும் ஆங்காங்கே இருக்கும். நேர ஒழுங்கு மிகப் பேணப்படும் இந்த நாட்டில், காலைப்பொழுதில் ஓட்டத்திற்கான நேரமும் வேண்டும் எனும் போது, காலைப் பொழுதுகளின் ஐந்து நிமிடம் கூட பெரும் மதிப்பு மிக்கதாகத் தோன்றும்.இதனால் ஒட்டத்திற்கோ உடற்பயிற்சிக்கோ சென்றால், அந்த 50 நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்தை மிகப் பயன்பாடான வழியில் கழித்து வீடு திரும்பவே நேரம் சரியாக இருக்கும்.

சென்ற வார இறுதி நாளில் ஒரு ஞாயிறில், பூங்காவின் ஒரு ஓரத்தில்,சிறார்களுக்கான, தரைவிரிப்பு அளிக்கப்பட்ட-caprpetted- ஒரு சிறிய திடலில் மத்திம வயதைக் கடந்த சில பெண்களும், ஆண்களும், சுமார் 20 பேர் அமைதியான, மெதுவான அசைவுகளில் உடல் நீட்சிப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் செய்து கொண்டிருந்தார்கள்.அந்தப் பயிற்சியைப் பார்த்தவுடனே, யோகப் பயிற்சியிலும் ஈடுபாடு இருந்ததால், அந்தப் பயிற்சிகள் யோகப் பயிற்சியினால் கிடைக்கும் பயனை எட்டுவதற்காகவே செய்யப்படுகின்ற, ஆனால் யோகப் பயிற்சி என்று சொல்லிவிட முடியாத வகையில் இருந்தன என்பதை உணர முடிந்தது.

திடலில் மூலையில், ஒரு மேசையில் அந்த பயிற்சி இயக்கம் பற்றிய சிறிவ அச்சிட்ட விவரணத்தையும் வைத்திருந்தார்கள்; அதை எடுத்துக் கொண்டு திரும்பி விட்டேன்.

FALUNDAFA என்று சீன மற்றும் ஆங்கில மொழியில் அச்சிட்ட அச்சிறு விளக்கத் தாள், A traditional self-cultivation practice to improve mind and body, என்ற அறைகூவலுடன், இயக்கம் பற்றிய நோக்கம்,பயிற்சி விவரங்கள் அவற்றைக் கூறியதோடு, அதில் சேர்ந்து பயிற்சிபெற்று, நல்ல கதியை அடைய வேண்டி அழைத்திருந்தது.(இலவசமாகத்தான்!)

அந்தப் பயிற்சி இயக்கதின் விவரங்கள் இருக்கும் இணையப் பக்க விவரமும்  அதில் இருந்தது.

இந்தப் பயிற்சி முறைகளை ஆழ்ந்து பார்த்தால் இவற்றின் அடிப்படை நமது நாட்டின் ஆசனப் பயிற்சிகளிலும், யோகப் பயிற்சிகளிலும் இருந்தே பெறப்பட்டிருக்கின்றன என்பது மிக எளிதாக விளங்கியது.(யோகத்திலும், ஆசனப் பயிற்சிகளிலும் நல்ல பரிச்சயம் இருந்ததால்).இந்தப் பயிற்சிகளை புத்தரின் வழியாகக் கடன்வாங்கிய தென்கிழக்காசிய நாடுகள், இவற்றைப் பேணி,பராமரித்து, ஒரு இயக்கமாக வளர்த்து, இந்த தலைமுறை வரை காத்துக் கொண்டு வருகிறார்கள்.


ஆனால் இவற்றை உலகுக்குக் கற்றுக் கொடுத்த நம்மில் எத்தனை பேருக்கு ஆசனப் பயிற்சிகளில் பழக்கமோ அறிவோ இருக்கிறது? நம்மில் பெரும்பான்மையோர் தினந்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது கூட இல்லை; அப்படி ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர்களும், தனது உயர்நிலை வெளிப்பாடாக-status symbol, பெரும் வர்த்தக நிறுவனங்கள் விற்கும் ட்ரெட்மில் போன்ற உடற்பயிற்சிக் கருவிகளை ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்து வாங்கி, வீட்டில் ஒரு மூலையில் போட்டு வைப்பவர்களாகவோ, அல்லது வாரத்திற்கோ, பதினைந்து நாளுக்கோ ஒரு முறை ஜிம் என்று சொல்லப்படும் குளிர்பதனப்படுத்தப்பட்ட ஒரு அரக்கத்திற்குச் சென்றுவிட்டு வருபவர்களாகவோதான் இருக்கிறோம்.


எளியமுறையில் திறந்த வெளியில் புதுக் காற்று நிரம்பிய சூழலில் ஒட்டம் பழகவோ, உடற்பயிற்சி செய்யவோ இயலாத அளவுக்கு நமது நகரங்கள் நரகங்களாகிக் கொண்டு வருகின்றன.இருக்கும் ஒன்றிரண்டு பூங்காக்களும் சமூக விரோதிகள் கூடிக் குடிப்பதற்காகவோ அல்லது வெம்பும் பிஞ்சுகள் காதல் என்ற போர்வையில் ஒதுங்குவதற்காகத் தோதான இடமாகவோ மாறிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழலில், வீட்டின் மொட்டை மாடியில்  நின்று கூட, நல்ல காற்றைச் சுவாசித்து, உடலைப் பேணுவதற்கான எளிய வழியான ஆசனப் பயிற்சிகளை மேற்கொள்வதை பெரும்பான்மையோர் சிந்திப்பதாக இல்லை; போதாதற்கு ஆசனப் பயிற்சிகள் என்று சொன்னாலே உடனே அதற்கு ஒரு குரு, பயிற்சி நிலையம், யோகா க்ளாஸ் என்று படாபடோபத்திற்குள் நுழையும் வேகமும்; அதைத் தெளிவாக,நாமே கற்றுக்கொள்ளும் வழிமுறைகள் இருக்கின்றன என்று சொன்னால், அப்படிக் கற்றுக் கொள்வது மிகவும் ஆபத்து என்று உடனே பயப்படுத்தலுமே நடக்கிறது.

நடிகர் சிவகுமார் முதல், நான் வரை நல்ல புத்தங்களின் வழி எளிதாக ஆசனப் பயிற்சிகளைப் பழகவும் அறிந்து கொள்ளவும் பயிற்சி செய்யவும் முடியும் என்பதை நம்பக் கூட பெரும்பான்மையோர் தயாராக இல்லை.யோகாசனம் பற்றிய, பல பிடிவாதமான, உள்ளீடற்ற கருத்துக்களை எதிர்கொண்டு விவாதங்களுக்கு பதில் சொன்ன அனுபவம் ஏற்கனவே இந்தப் பதிவில் நடந்தது.

நமது தென்னாட்டு வாழ்வு முறை, அனுபவங்கள் வழி, அழகிய மேன்மையான வாழ்வையும், ஆன்ம முன்னேற்றத்தையும் இரு இன்றியமையாத கொள்கைகளாகக் கொண்டு எழுப்பப்பட்ட வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறை நமக்கு என்ன விட்டுச் சென்றிருக்கிறது  என்பது நமது ஏராளமான இலக்கிய,பக்தி மற்றும் அறிவு நூல்களில் விரவிக் கிடக்கின்றன.


உடலைப் பேணுதல் என்பது உயிரையும் ஆன்மாவையும் இறுதியில் கட்டுப்படுத்தி நாம் விரும்பும் வழியில் செலுத்தும் வழிக்கான துவக்கப் பாதை என்றே திருமந்திரம் முதல் சித்தர் பாடல்களை வரை, பல ஓயாது சொல்லிச் சென்றிருக்கின்றன. அந்த இலக்கியங்களையும், தமிழின் கருவூலங்களையும் நாம் திரும்பிக் கூடப் பார்ப்பது இல்லை. நமது தொடக்கக் கல்வியிலிருந்து கல்லூரி வரை தமிழையும் தமிழ்ப் பாடல்களையும் தொடமலேயே கூட, படிப்பை முடிப்பதுதான், 'மேட்டுக் குடி வழி பயிலும் மேன்மை பொருந்திய கல்வி' என்ற மாயத்தில் நமது பெரும்பான்மையோர் இருக்கிறோம்!

நமது தலைமுறை அவற்றைத் தொடத் தகாத குப்பைகளாகக் கருதி, பரணில் மூலையில் போட்டு விட்டு,சுண்டைக் காயிலிருந்து, சூப்பர் கம்ப்யூட்டர் வரை மேற்குலத்தின் வழிகாட்டுதலில் நடப்பதே,நமது வாழ்வை மேம்படுத்தும் முறையும்,குறிக்கோளும் என்று சென்று கொண்டிருக்கிறோம்.

தமிழின் பெயரைச் சொல்லி ஆளும் வழியைப் பெற்ற நமது அரசாங்கங்களுக்கும், மக்களைச் சரியான வழியில் அறிவுறுத்த வேண்டிய கடமைகளிலிருந்து தவறி விட்டன.ஆனால் நம்மிடமிருந்து இது போன்ற அறிவுச் செல்வங்களைப் பெற்ற தென்கிழக்காசிய நாடுகளான சீனம், ஜப்பான் போன்ற நாடுகள், ஆசனம், மருத்துவம், யோகம் போன்ற கலை அறிவுகளுக்கு, வழிவழியாக மக்களுக்குச் சென்றடையும் வண்ணம் நிறுவனப் படுத்தியும், மக்களுக்கு அவற்றின் முற்றான பயனை எடுத்துச் சென்றும் வழிப்படுத்துகின்றன.

நமது வேர்களில் இன்னும் சிறிது உயிர் இருக்கிறது; அவற்றிற்கு நீரூற்றி விதைகளைப் பேணினால் நமது தொலைத்து விட்ட பொக்கிஷங்களை மீண்டும் பெற்று விடலாம்..

முடிவு நம் கைகளில்தான் இருக்கிறது.

*     *     *     *     * 

ரொம்பவும் சீரியஸ் மேட்டராகி விட்டதால், ஒரு ரிலாக்ஸ் மேட்டர் கீழே

ஒப்பனைகள் கலையும் போது ....

திரையுலகம் சார்ந்து நமது ஈடுபாடும் விருப்பமும் நூற்றாண்டுகள் தொடர்பவை..சில  முன்னணி வட இந்திய நடிகைகள் சிலரின் ஒப்பனை இல்லாத தோற்றம் கீழே...

(டைம்ஸ் இதழுக்கு நன்றியுடன்)


ஐஸ்வர்யா ராய்

ப்ரியங்கா சோப்ரா

ராணி முகர்ஜி

9 comments:

  1. விரிவான விளக்கம்...

    அங்கங்கே இணைப்பு கொடுத்ததற்கு நன்றி..

    முடிவிலே இப்படி (உண்மை ) படங்கள் கொடுத்து பல பேரின் வயிற்றை கலக்கிட்டீங்களே சார்.... ஹா... ஹா..

    வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
  2. நன்றி நண்பர் தனபாலன்..

    || முடிவிலே இப்படி (உண்மை ) படங்கள் கொடுத்து பல பேரின் வயிற்றை கலக்கிட்டீங்களே சார்.... ஹா... ஹா.. ||

    மாயை'களை உடைக்கலாம்னுதான் ! :))

    ReplyDelete
  3. உடலைப் பேணுவதற்கான முனைப்பை உருவாக்கவும் தக்கவைக்கவும் மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கிறது. நிறைய நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். சீன, மற்றும் மேற்கத்திய நாடுகளில் உடலைப் பேணுதல் தொடக்க நிலைப் பள்ளியிலிருந்து ஒரு பாடவகுப்பாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் எந்தப் பள்ளியிலும் இப்போது உடற்பேணல் வகுப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஐந்தில் வளையாத இன்னொரு கதை நம் மக்களின் உடற்பேணல் மறதி.

    ReplyDelete
    Replies
    1. 90 களின் இறுதி வரை கூட பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பும் நல்லொழுக்க வகுப்பும் இருந்தன; பின்னர் என்னவானது என்று தெரியவில்லை.

      இன்றைய நகர நரக சூழலில் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் விளையாட்டு குழந்தைத் தனத்தையே-சைல்ட்ஹூட்- மறுதளிக்கிறது..

      இதன் விளைவுதான் இளம் வயதிலேயே அதிகப்படி உடல் பருமன்! மேலும் விளையாட்டே பழகாத நிலையில் உடற்பயிற்சியும் பெரும் முயற்சி அளிக்க வேண்டிய ஒரு செயலாக மாறி விட்டிருக்கிறது..

      Delete
  4. சமீப இந்தியப் பயணத்தில் சென்னை, பெங்களூரில் அதிகாலையில் நிறைய பேர் ஓடவோ நடக்கவோ செய்கிறார்கள். சென்னை மெரீனாவில் யோகாசனம் செய்வோரையும் பார்த்தேன். இளைஞர்களைக் காணாதது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், முதியவர்களாவது தங்கள் உடலைப் பேணும் அறிவைக் கொண்டிருக்கிறார்களே என்று நிறைவடைந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இணையம் சார்ந்த முகநூல்,குருவிச் சுட்டி வந்த பிறகு இளையர்களும் யுவதிகளும் எந்த நேரத்திலும் அவை சார்ந்த பொருட்களை நோண்டுவதிலேயே பெரும் பொழுதைக் கழிக்கிறார்கள்..

      40 வயதைக் கடக்கும் நிலையில் உடலில் விளையும் உடற்பருமன் மற்றும் நோய்களின் அறிகுறிக் கூறுகள், ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும் போதில், கட்டாயப்படுத்தப் பட்ட அக்கறை வருகிறது.

      அதன் விளைவே நடை!

      நான் சென்னையில் இருந்த காலம் வரை சாந்தோம் தேவாலயத்திலிருந்து எம்ஜியார் சமாதி வரை சென்று திரும்பும் ஓட்டத்தை எதற்காகவும் நிறுத்தியதில்லை..

      உடற்பயிற்சிக்கான தூண்டுதல் சிந்தனையிலேயே ஊற வேண்டும் என்பது உண்மை; மிகப் பெரும் உள ஊக்கம்-மோடிவேஷன், இல்லையெனில் தொடர்வது சற்றுச் சிரமமே..

      Delete
  5. எனக்கென்னவோ அவர்கள் ஒப்பனை இல்லாமல் அழகாக இருப்பதாகத் தோன்றுகிறது. நடுவில் இருப்பவர் யாரென்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நேயர் விருப்பத்திற்காக பெயர்களைப் போட்டு விட்டேன்..:))

      சிலர் ஒப்பனையில் ஒரு அழகு, ஒப்பனையில்லாது ஒரு அழகு.
      சிலருக்கு ஒப்பனை இல்லாவிட்டால் தோற்றம் நம்மைப் பயப்படுத்தும் !

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...