சென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் ஒரு முன்னேற வேண்டிய நாட்டின் முறையா என்பதை நாம் கேள்விப் படுத்த வேண்டும்.
அரசாண்மை முறைகளில் தேவையான மாற்றங்கள் கொண்டு வரும் போது குறைந்த பட்சம் சாதாரண மக்கள் இந்த வழக்காடு வட்டத்தில் தங்களுக்குத் தேவையான நிவாரணத்தைப் பெறும் வழிவகைகள் இருக்க வேண்டியது கட்டாயத் தேவை. பெரும் பொருட் செலவும் செய்து விட்டு வழக்கு முறைகளில் நிலைபெற்றிருக்கும் முறையற்ற செயல்களைச் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையிலிருந்து வெளிவந்தே ஆக வேண்டிய அவசியமும் தேவையும் ஒரு சாமானியனுக்கு இருக்கிறது.

சமீபத்தில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி நீதித்துறையைக் காப்பாற்றும் படி ஒரு உணர்ச்சி கரமான வேண்டுதலைப் பிரதமர் முன்னிலையில் வைத்திருந்தார். பிரதமரும் அதற்கு இணக்கமான ஒரு பதிலையும், அந்த வேண்டுகோளைப் பரிவுடன் பரிசீலிப்பதாகவும் பதிலிறுத்திருக்கிறார். இந்த நிலையில் பொது சனமும் அவர்கள் நோக்கில் வழக்காடும் அமைப்பிலிலிருந்து judicial establishment எதிர்பார்க்கும் குறைந்த பட்ச வழக்காடும் மற்றும் நிவாரண முறைகளைப் பற்றியும் ஒரு உரத்த சிந்தனையை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.